நம் தமிழ் வார பத்திரிக்கைகளில் இடம் பெறும் கவிதைகளுடன் சில நேரம் குட்டி குட்டியாக பொருத்தமான படங்கள் போடுவார்களே கவனித்து இருக்கிறீர்களா? பல சமயம் மாடர்ன் ஆர்ட் போலவே இருக்கும். படிக்கும்போதே கூட இருக்கும் ஓவியங்களையும் நான் கவனித்து பார்ப்பதுண்டு. எதையும் பார்த்தவுடன் வரைந்து பார்க்கும் பழக்கம் உள்ளதால் புத்தகங்களில் வரும் படங்களை பார்த்ததும் வரைந்துவிடுவேன். அதிலும் கருப்பு வெள்ளையில் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இது போல நிறைய படங்களை நான் கல்லூரியில் படிக்கும் போது வரைந்திருக்கிறேன். அப்போது நான் வரைந்த படம்தான் இங்கு நீங்கள் கீழே காண்பது. வெறும் கறுப்பு பேனாவினை மட்டும் கொண்டு வரைந்தது.
இதை கலரில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்றியது. முதலில் இதே படத்தை கணினியில் ஏற்றி MS Photo Premium 10 உபயோகித்து கலர் கொடுத்தேன்.எப்போதும் என் விரல்களுக்கு வளைந்துக்கொடுக்கும் தூரிகைகளுக்கு பதிலாக இந்த முறை 'மவுஸ்' வளைந்துக்கொடுத்தது. அதனால் இந்த பெண்ணுக்கு விதவிதமாக சேலைகலரை மாற்றி ரசித்தேன். இதோ கணினியின் வண்ணங்கள்தான் நீங்கள் கீழே காண்பது....... ! ஆர்வம் உள்ளவர்கள் மேலே உள்ள படத்தை காப்பி பண்ணி இதே முறையில் கலர் கொடுத்து பாருங்கள்.

இதையே ஆயில் பெயிண்டில் வரைந்து பார்க்க தோன்றியது. அதனால் 50X20 அளவு கேன்வாஸ் போர்டில் முதலில் பென்சிலில் வரைந்துக்கொண்டேன். தற்பொழுது என் வீட்டு ஹால் இன்டீரியர் டெக்கரேஷன் ப்ளு & பிரவுன் நிறங்களில்தான் செய்துள்ளேன். இந்த இரண்டு கலரும் நல்ல காம்பினேஷனாக இருக்கிறது. அதனால் அதே நிறங்களில் முயற்சி செய்து பார்த்தேன். எப்படி இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.









