Subscribe:

Pages

Monday, May 24, 2010

என்னுள்ளே என்னுள்ளே.... மீண்டும் கலையுணர்வு!

            கொஞ்சம் தூசி படிந்து போயிருந்த என்னுடைய தூரிகைகளை நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்பொழுதுதான் எடுத்தேன். வெகு நாட்கள் கழித்து வண்ணங்களை கண்ட மகிழ்ச்சியோ என்னவோ தூரிகைகள் சற்று வேகமெடுத்தது.

 முதலில் பென்சில் டிராயிங்க்கு ஒரு அரை மணி நேரம் தேவைப்பட்டது. அதை வரைந்து முடித்து என்னவரிம் காட்டி 'எப்படி இருக்கு' என்று கேட்ட போது, 'என்ன இது கழுதையா? ' என்றார். சிரித்துக்கொண்டே 'கழுதை மாதிரி' என்று அவரிடம் சொல்லி விட்டு மீண்டும் ஒரு முப்பது நிமிடம் ரப்பர் தேய அழித்து, பின்பு ஓரளவு குதிரைகள்(மாதிரி) உருவம் பெற்றது. அடுத்த பத்து நிமிடங்களில் நான்காவது படத்தில் உள்ளபடி உருவானது. ஐந்தாவது படத்தில் இருப்பது அடுத்த முப்பது நிமிடங்களில் என்று முடிப்பதற்கு தொடர்ந்து இரண்டு மணி ஆனது. ஃபைனல் டச் எல்லாம் கொடுத்து முடிக்க மொத்தம் ஐந்து மணி நேரம் ஆகியது.
இதுவரை நான் ஏற்கனவே வரைந்த வைத்திருந்த‌ ஓவியங்களை மட்டுமே பதிவு செய்து வந்த நிலையில்...... இப்பொழுதுதான், அதிலும் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் என்னுள் கலையுணர்வு தோன்ற..... புதியதாக வரைந்து பதிவு செய்வதில் மனம் மகிழ்ச்சியாக உள்ளது.


70 comments:

LK said...

excellent priya
nice paintings. hats off to you.. carry on all the best

ஜானு... said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ப்ரியா ...

யாதவன் said...

supperb priya வண்ணங்களை கண்ட மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்

பாலன் said...

மிகவும் அழகாக உள்ளது ப்ரியா, கடவுள் கொடுத்த வரம் உங்களின் கலைவண்ணம், மேலும் தொடருங்கள்

r.v.saravanan said...

வெல்டன் பிரியா எனக்கு வர்ணிக்க வார்த்தைகளே வரவில்லை

மென் மேலும் நீங்கள் உயர எனது வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

வெல்டன் பிரியா எனக்கு வர்ணிக்க வார்த்தைகளே வரவில்லை

மென் மேலும் நீங்கள் உயர எனது வாழ்த்துக்கள்

LK said...

உங்கள் பதிவை தமிழ் மனம்/தமிளிஷ் இவற்றில் இணைக்கவில்லையா ???

அஹமது இர்ஷாத் said...

ஓவியம் சூப்பர் ப்ரியா...அசத்துங்க...

விஜய் said...

அற்புதம்

வாழ்த்துக்கள்

விஜய்

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகான ஓவியம் ப்ரியா..

ஹேமா said...

வார்த்தைகளுக்கும் வர்ணம் தேடுகிறேன் ப்ரியா.ரசித்து ரசித்துக் கீறும் உங்களை என் மனக்கண்முன் காண்கிறேன்.
காற்றின் அலகளில் கை கொடுங்கள் தோழி.
அற்புதம்.

Geetha Achal said...

ஆஹா...எவ்வளவு அழகு....வர்ணிக்க வார்த்தையில்லை...சூப்பரோ சூப்பர்ப்...அருமையாக இருக்கின்றது...

சே.வேங்கடசுப்ரமணியன். said...

நன்று.கடைசி படத்தையாவது பெரிய அளவில் போடலாமே.

padma said...

பிரியா அருமை அருமை !பாராட்ட வார்த்தைகளே இல்லை .வாழ்த்துக்கள்

Chitra said...

WOW! Amazing!

ஜெய் said...

சூப்பர் ப்ரியா.. அருமையான ஓவியம்..

Madumitha said...

என் மகளுக்கும் பிடித்திருந்தது.

ஜெய்லானி said...

வாவ்......சூப்பர்.....

seemangani said...

''சவுக்கு தோப்பிலிருந்து சண்டி குதிரைகள்...'' ஆஹா...வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் ஓவியம் மீண்டும் எங்கள் கணங்களுக்கு விருந்தாய்....ரெம்ப நேரம் ரசித்தேன்...அடிக்கடி விருந்துக்கு ஏற்ப்பாடு செய்யவும்...

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப அழகா இருக்குங்க.

Mrs.Menagasathia said...

wowwwww looks very beautiful priya congrats!!

Anonymous said...

வாவ். உங்க கையில் சரஸ்வதி ஒக்காந்து இருக்காங்க போல. படத்தில் இருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை. வாவ்.

ஜெனோவா said...

stunned!!!

Best wishes!!
(ennatha solla thaniya mail panren ) ;)

ர‌கு said...

சூப்ப‌ர்ங்க‌! ஓவிய‌த்தை மட்டும் ப‌திவிடாம‌ல், உருவான‌ வித‌த்தையும் காண்பித்திருப்ப‌து...ரிய‌லி சூப்ப‌ர்ப்....அபார‌ திற‌மை உங்க‌ளுக்கு! இனி கேப் விடாம‌ அடிக்க‌டி வ‌ரைங்க‌

அஞ்சு ம‌ணி நேர‌மா?!

அப்பாவி தங்கமணி said...

ச்சே... சான்ஸ்ஏ இல்ல ப்ரியா..சூப்பர் சூப்பர் சூப்பர்... நெஜமாவே கடவுள் குடுத்த வரம்... வாழ்த்துக்கள் (உண்மைய சொல்லணும்னா பொறாமையா இருக்கு கொஞ்சம்...எனக்கு வரையறது சுத்தமா வராது...)

நர்சிம் said...

nice

அமைதி அப்பா said...

வணக்கம் மேடம்,
உங்கள் பிளாக்கை பார்த்து வியப்படைகிறேன்
உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி.

Priya said...

பாராட்டிய உங்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்! உங்களது அன்பான ஊக்கங்களினால் இனி தொடர்ந்து வரைவேன்!

காற்றின் அலைகளில் கை கொடுக்கும் ஹேமா.... நானும் உங்களை என் மனக்கண்முன் காண்கிறேன்.

சே.வேங்கடசுப்ரமணியன்.... அடுத்தமுறை கண்டிப்பாக படங்களை பெரியதாக போடுகிறேன்.

Madumitha...மகளுக்கு எத்தனை வயசுன்னு சொல்லலையே?

நம்ப முடியலையா ரகு.. உண்மையிலேயே ஐந்து மணி நேரம்தான் ஆச்சு.

♠புதுவை சிவா♠ said...

ஆகா, முழுமையான ஓவியம் வண்ணங்கள் மிக மிக சிறப்பு வாழ்த்துகள் !

"சே.வேங்கடசுப்ரமணியன்.... அடுத்தமுறை கண்டிப்பாக படங்களை பெரியதாக போடுகிறேன்"

ஆம் படம் பெரியதாக இருந்தல் screensaver- ல் வைக்க உதவியாக இருக்கும்.

நன்றி ! தோழி

Anonymous said...

ஓவியம் வரைவதே.. ஒரு இனிய கலை... அதை பற்றி இப்படி விவரித்து புகைப்படம் எடுத்து blog இல் இவ்வளவு இனிமையாக பதிவு செய்திருக்கும் உங்கள் திறமைகளை எண்ணி வியக்கிறேன் தோழி... தொடரட்டும் உங்கள் படைப்புகள்...

ஜெயா said...

ஐந்து மணி நேரத்தில் அழகான சித்திரம்..உங்கள் ஓவியத் திறமையை எண்ணி நானும் வியக்கிறேன் ப்ரியா......

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அசத்தலாக வரைந்து இருக்கிறீர்கள் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

தமிழ் said...

wow!.. wonderful priya..

சுசி said...

அற்புதமான உயிரோவியம்.

Bharathi Dhas said...

அழகான ஓவியம்.
நான் தற்போது தான் உங்கள் பக்கங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
மிகவும் நன்றாக உள்ளது.
பயணக் கட்டுரைகளும் அதுபோலவே.
உங்கள் பயணக் கட்டுரைகளை படிக்கும் போது அந்த இடங்களை நேரடியாக பார்க்க மனம் ஏங்குகிறது...!
வாழ்த்துக்கள், தொடரவும் தோழி:-)

ப்ரின்ஸ் said...

அழகான ஓவியம்.

Priya said...

நன்றி புதுவை சிவா முடிந்தால் உங்க மெயில் ஐடி கொடுங்க.. படத்தை மெயிலில் அனுப்புறேன்(பெரிய சைஸில்)

ரவிகுமார்!ஜெயா!பனித்துளி சங்கர்!தமிழ்! சுசி! Bharathi Dhas! ப்ரின்ஸ்!..... உங்கள் அனைவரது பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல!

♠புதுவை சிவா♠ said...

"நன்றி புதுவை சிவா முடிந்தால் உங்க மெயில் ஐடி கொடுங்க.. படத்தை மெயிலில் அனுப்புறேன்(பெரிய சைஸில்"

நிச்சையமாக தோழி

எனது மின் அஞ்சல் முகவரி

lollusiva@gmail.com

நன்றி!

நியோ said...

அன்பு தோழர் !
நானெல்லாம் அமீபாவையே முப்பது நிமிசத்துல வரைகிற திறமைசாலி ....
பொறாமையாத் தான் இருக்கு ....
நல்ல கவிதை சிறுகதை படிக்கும் போது என்னைக்காது ஒருநா எனக்கும் சாத்தியமாகும்னு தோணும் ...
ஆனா ஓவியம் ...
வாய்ப்பே இல்லை ...
டேமியனோட physical impossibility of death in mind of someone living மாதிரி பத்து வருஷம் கழிச்சு ஏதாவது முயற்சி பண்ணனும் ...
தூரிகை பிடித்திருக்கும் உங்களோட கையையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் ....
வருகிறேன் ப்ரியா !

அம்பிகா said...

அற்புதமான படைப்பு தோழி.
வாழ்த்துக்கள்

Priya said...

மீண்டும் வந்து பதிலளித்தமைக்கு நன்றி சிவா...மெயில் பண்ணுறேன்.

நன்றி நியோ... உங்க கமெண்டை ரசிச்சேன். பத்து வருஷம் கழிச்சாவது முயற்சி பண்ணனும்னு நினைக்கிறேங்களே, குட்.

மிக்க நன்றி அம்பிகா!

Jay said...

Hy Priya,
First time here...Amazing space you have...very interesting posts...very beautiful painting...Am of no words of appraisal...! Simply wonderful.
You are most welcome to my space.

SUFFIX said...

அற்புதமான ஓவியம், Step by Step ஆக கொடுத்திருப்பதை பார்த்தவுடன், முயற்சி செய்து பார்த்திடலாம்னு ஆர்வம் வருது, அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணுமோ?

Priya said...

Thank you Jay!

கொஞ்சம் முயற்சி பண்ணிபாருங்க‌ SUFFIX!

Valli said...

Priya...Beautiful painting...and nice pictures too..:)

Priya said...

Thanks Valli!

ஜோதிஜி said...

ரசனையும் அழகியலும் நிரம்பி வழிகின்றது.

Priya said...

மிக்க நன்றி ஜோதிஜி!

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர் பா பென்சில் ஓவியம்.

Bharathi Dhas said...

உங்களது ஓவியம் கண்ட பிறகு நானும் கலர், பென்சில் எல்லாம் வாங்கி அமர்ந்தால், LKG student color book கூட ஒழுக்கமா கலர் பண்ண முடியலங்க பிரியா.

"புலிய பாத்து நாய், புலியின் வீரத்துக்கு காரணம் அதன் கோடுகள் என நினைத்து, சுடு கோலால் தன்னைத் தானே சூடு போட்டு கொண்டதாம்" அந்த கதை ஆகிவிட்டது என் கதை.

:-) :-) :-)

Priya said...

மிக்க நன்றி Jaleela Kamal !

நன்றி Bharathi Dhas!
வரையும் ஆர்வம் இருக்கும் போது... தொடர்ந்து முயற்சி செய்துக்கிட்டே இருங்க.

Anonymous said...

வாவ். அற்புதமா இருக்கு உங்க பெயிண்டிங்க். வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் பிரியா

ஓவியங்கள் - திறமை பளிச்சிடுகிறது

நல்வாழ்த்துகள் பிரியா
நட்புடன் சீனா

சத்ரியன் said...

அழகா இருக்குங்க.

Kousalya said...

really fantastic!!! super !!

மாரி-முத்து said...

cool.....
amazing art...

ராமலக்ஷ்மி said...

அற்புதம் ப்ரியா. வாழ்த்துக்கள்.

Anbuselvan said...

அருமை - விவரிக்க வேறு வார்த்தை இல்லை.
-அன்புச்செல்வன்

கவிநா... said...

அப்பா... சூப்பருங்க.... உங்களவர் கழுதைன்னு சொன்ன படமே இவ்வளவு அழகுன்னா, தொடர்ந்து
வரையுங்க... உங்களை அடிச்சுக்க ஆளே இருக்கமாட்டாங்க...
வண்ணக்கலவை ரொம்ப ரொம்ப அருமை.. பளிச்சுன்னு இருக்குங்க...

வாழ்த்துக்கள் தோழி....

ushaprashanth said...

Hi priya!
Your painting is wonderful! Keep painting and treat us all with your lovely art!

வைகறை நிலா said...

கவிஞர்கள் ஓவியம் வரையும் பொழுது அதற்கு தனி அழகு வந்துவிடுகிறது..
படைப்புகள் அனைத்தும் அற்புதம்.

Rithu`s Dad said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா.. ஆமா அது என்ன சார்?? சாதரனமா ரகுன்னு சொன்னால் போதுமே.. !!

உங்கள் வலைதளத்தை இன்று தான் பார்த்தேன்.. உங்கள் ஓவியம் பதிவு பார்த்தேன்.. உடனே பாலோ பன்ன ஆரம்பிச்சேன்..

அழகான ஓவியங்களை அருமையாக வரையும் வாய்ப்புடைத்தவர் நீங்கள்.. நன்கு நிறைய வரையவும்.. சிலருக்கு மட்டும் தான் இந்த சிறப்புகிட்டும் உங்களுக்கும் இச்சிறப்பு உண்டு.. வாழ்த்துக்கள்.

Gayathri said...

marvellous.... super painting... keep rocking...

Priya said...

பாராட்டி வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்!

Sowmya said...

wonderful painting. very nice picture, priya..

Priya said...

Thanks Sowmya!

g.aruljothiKarikalan said...

vaarthaigal varavillai ungalin oviyam paarthu. naanum kooda palamurai indha kudhirayai varaya muyarchithu thotru poyirukiren

Priya said...

நன்றி g.aruljothiKarikalan!
முயற்சி செய்துக்கொண்டே இருங்க, நிச்சயம் ஒரு நாள் நன்றாக வரும்!

prveen said...

HAI PRIYA
NANUM ENNAKKU THERINTHA MATHIRI SILA PAINTING NALLA PANREN ANNA ATHARKKU ARPPA COLOR KUDUKKA THERIYALA SILA TIPS SOLLUNGA......


PRAVEEN
TRICHY.

prveen said...

HI PRIYA TIPS SA EN MAIL KU ANUPPUNGA PLS....

PRAVEENKUMAR5620@GMAIL.COM

Post a Comment