Subscribe:

Pages

Tuesday, September 14, 2010

சொர்க பூமி!!!

             கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான மக்கள் தேடி வருமிடம் கடல்களாகத்தான் இருக்கும். பூமியின் மேற்பரப்பில் மூன்று மடங்கு தண்ணீரால் அமையப்பெற்றுள்ளது இப்படி நாம் அனைவரும் அனுபவிக்கத்தானோ என தோன்றியது கடற்கரையில் குவிந்திருந்த‌ கூட்டத்தை காண்கின்ற போது. அதிலும் நாங்கள் வசிக்கும் பகுதி மிகசிறந்த சுற்றுலா தளம் என்பதற்கு அடையாளமே இந்த கடல்கள்தான்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டினருக்கு நன்கு தெரிந்த Saint Tropez எனும் ஊரும் அங்குள்ள Pampolonne Beech ம்தான். சொந்த கப்பலகளில் வந்திறங்கும் வி.ஐ.பிகளை வித விதமாக புகைப்படம் எடுத்து லட்சக்கணக்கில் காசு பார்த்திட விலை உயர்ந்த கேமராக்களுடன் காத்திருக்கும் பாப்பராஸிகள்(Paparazzi) ஒரு புறமும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பல்களை காண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் இன்னொரு புறமும் என்று கடந்த‌ இரண்டு மாதமும் ஊரே விழாகோலம் கொண்டிருந்தது. சாதாரண மக்களில் இருந்து வி.ஐ.பிகள் வரை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கடல் மகத்தானதுதான் !!!


என்னை சுற்றி சூழ்ந்துள்ள கட‌லலைகளின் தாலாட்டிலே எப்பொழுதும் நான் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக தோன்றும். தவழ்ந்து வரும் கடலலைகளில் மன‌ம் நனைய சலிக்க சலிக்க அதன் அழகினை ரசித்துவிட்டேன். ஆனாலும் மனம் மீண்டும் மீண்டும் தண்ணீரை நோக்கியே செல்கிறது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் அழகான சொர்க பூமிக்கு பயணமானோம்.

நகரத்து இரைச்சலும், செல்போல் மணியும் அலுத்து போகிற போது இப்படி ஏதாவது அமைதியான இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். எங்கள் வீட்டில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய‌ ஊர் அது. கார் பார்க்கிங்கில் இருந்து 2கிமீ நடந்து செல்ல வேண்டும். நடைப்பாதையின் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் மெல்லிய காற்றுடன் வரவேற்கிறது. கொஞ்சம் கூட மாசு படியாத சுத்தமான காற்றினை சுவாசிப்பதை உள்ளே நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே உணர முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


நகரத்து ஆரவாரமற்ற அப்பகுதியில் தூரத்தில் இருந்து எங்கோ நீர் வீழ்ச்சியின் மெல்லிய ஓசையை மட்டுமே கேட்க முடிந்தது. அதை நெருங்க நெருங்க கொட்டும் நீரின் சத்தமும் அதிகமாக‌ நம்மை நனைக்கும் சாரலை நன்றாக உணர முடிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஏதோ மலைகளின் நடுவில் வெள்ளை நிறத்தில் போடப்பட்டு இருந்த ஒரு கோடு போல தெரிந்தது.



சரியான பாதை அமைக்கப்படாததால் நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் தூரத்தில் இருந்து வந்த அருவியின் சத்தம் ஆவலை தூண்டி நடையில் வேகத்தைக் கொடுத்தது. நாங்கள் சென்ற பாதை மலையடிவாரத்தில் அழகாக ஓடிக்கொண்டு இருந்த நதியிடம் கொண்டு சேர்த்தது. சுற்றிலும் பசுமை போர்த்திக்கொண்டு இருந்ததால் தண்ணீரின் நிறமும் பச்சையாகவே காட்சியளித்தது.





அருவியினை அருகில் சென்று பார்க்கலாம், தண்ணீரில் நனைந்துவிட்டு வரலாம் என ஆவலுடன் அதை நெருங்கும் பாதையில் நடந்து சென்றோம். ஆனால் அங்கிருந்த எச்சரிக்கை பலகையை பார்த்தவுடன் பெரிய ஏமாற்றமாக இருந்தது. மலை பாறைகள் சரிவதாலும் அதனால் சிறு சிறு கற்கள் கீழே விழுவதாலும் அங்கே சரியான பாதை அமைக்க வேலை நடந்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக அத‌ன் வழியை தடைசெய்து கம்பிகளை கொண்டு மூடி இருந்தார்கள்.

நாமெல்லாம் என்னைக்கு விதிகளை கடைப்பிடித்து இருக்கிறோம் என்பதை போல ஒரு சிலர் அந்த கம்பிகளை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு அந்த பாதையில் செல்வதை பார்த்தோம். அன்று விடுமுறை நாள் என்பதால் வேலையாட்களும் இல்லை.


‘இவ்வள‌வு தூரம் வந்து அருவியின் அருகில் சென்று பார்க்காமல் போவதா’ என என்னவர் என்னை அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்தார். ‘இல்லை ஆபத்து அதிகம் இருப்பதால்தான் அந்த பாதையில் செல்ல தடை செய்திருக்கிறார்கள். அதை மீறுவது பாதுகாப்பானது அல்ல, நாம் இன்னொரு நாள் வரலாம்’ என மறுத்துவிட்டேன். என்னை போல அந்த பாதையில் செல்ல விரும்பாமல் ஒரு பெண் தன் குழந்தையுடன் எச்சரிக்கை பலகையின் அருகில் நின்றிருந்தார். அந்த பெண்ணின் கணவரும் மகனும் மட்டும் அந்த பாதையில் நுழைந்திருக்க வேண்டும். அங்கேயிருந்து அச்சிறுவன் அவன் அம்மாவிற்கு "இந்த பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயம் வேண்டாம், தைரியமா வாங்க. அருவியினை அருகில் பார்க்க அழகா இருக்கு" என அழைப்பு விடுத்தான். அப்பொழுதுதான் அந்த பெண்னை கடந்து சென்றுக் கொண்டிருந்த எங்களுக்கு அச்சிறுவனின் வார்த்தைகள் காதில் விழ தானாகவே என் கால்கள் நின்றது. ஒரு நிமிடம் பக்கம் இருந்த என்னவரை ‘நாமும் போகலாமா’ என்பதை போல பார்க்க, அவரும் என் பார்வையின் அர்த்தம் புரிந்தவராய், அதற்காகவே காத்திருந்தவராய் என் கையை பிடித்துக்கொள்ள, மீண்டும் வந்த வழியே திரும்பி, அப்பகுதிக்குள் நுழைந்து, கரடு முரடான வழியில் ந‌டந்துச்சென்றோம்.

முன்னேறி செல்ல செல்ல பன்னீர் தெளித்து வரவேற்பதை போல் இருந்தது மேலே பட்ட சாரல். மிதமான வெயில், மலைகளில் இருந்து கொட்டும் தண்ணீர், அதன் மெல்லிய‌ சத்தம், நனைக்கும் சாரல்...... இப்படி அதன் இனிமையை உணர்கிற போது மனதில் ஏற்பட்ட ரம்யமான உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் சொல்வது! அது ஒரு சொர்கபூமி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சொர்கமாய் தெரிந்த அந்த இடத்தின் பெயர் இதுதான்…Sillan la cascade !

அருவியை நெருங்கியும் இதற்கு மேல் எச்சரிக்கையை மீறுவது தவ‌று என்பதால் அன்று அங்கு யாருமே தண்ணீரில் இறங்கி குளிக்க முன் வரவில்லை. மாறாக முழுக்க முழுக்க கண்களுக்கு விருந்தளித்த காட்சியினை அனுபவித்து திரும்பினர்.




எதையும் அமைதியாகவே எதிர் நோக்கும் என்னை போலவே அங்கு ஒரு பறவை அமைதியாக தனிமைமையில் யார் வரவையோ எதிர்ப்பார்த்து காத்திருந்தது.



இத்தனை ரம்யமான தருணங்களை, தண்ணீரின் இனிமையினை மனிதர்களாகிய நம்மால் மட்டும்தான் உணரமுடியமா இல்லை இல்லை அனைத்து உயிரினங்களுக்குமே பொதுவானதுதான் என தோன்றியது அந்த பறவையினை பார்த்தபோது.

 "நீரின்றி அமையாது உலகு"!!!!!



36 comments:

r.v.saravanan said...

நீரின்றி அமையாது உலகு 100% சரியான வார்த்தை

படங்கள் அருமை ப்ரியா அருவியாய் விழும் தண்ணீர் மிக அழகு நன்றி

Chitra said...

romantic place! Super!

ராமலக்ஷ்மி said...

ரம்யமான பதிவும். படங்கள் எல்லாம் கொள்ளை அழகு ப்ரியா.

//இத்தனை ரம்யமான தருணங்களை, தண்ணீரின் இனிமையினை மனிதர்களாகிய நம்மால் மட்டும்தான் உணரமுடியமா இல்லை இல்லை அனைத்து உயிரினங்களுக்குமே பொதுவானதுதான் என தோன்றியது அந்த பறவையினை பார்த்தபோது.//

அதானே:)! மிகச் சரி. பகிர்வுக்கு நன்றி.

பத்மா said...

வீடியோ அருமை பிரியா ..பகிர்வுக்கு MERCI

ஹேமா said...

ரம்யமான இயற்கை வளங்களோடு அழகான பதிவு.சொர்க்கம்தான் பிரியா.

அ.முத்து பிரகாஷ் said...

ஓவியரின் புகைப்படங்களும் ஓவியங்களாய்!
முப்பத்து நான்கு வினாடிகள் மட்டுமே குளிக்க முடிந்ததில் சிறு வருத்தம்!
வருகிறேன் தோழர்!

மதுரை சரவணன் said...

படங்கள் நிஜமாய் அருவியில் குளிக்கச் செய்கின்றன... உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை ஆனால் நாங்கள் நனைகிறோம்.. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

சுசி said...

அழகா இருக்கு.. கூட்டிட்டு போய் காட்டினதுக்கு நன்றி ப்ரியா.

Anonymous said...

படங்கள் மிக அருமை..
பதிவும் கூட :)

Suresh said...

"கொஞ்சம் கூட மாசு படியாத சுத்தமான காற்றினை சுவாசிப்பதை உள்ளே நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே உணர முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாக அமைந்தது."


"நகரத்து ஆரவாரமற்ற அப்பகுதியில் தூரத்தில் இருந்து எங்கோ நீர் வீழ்ச்சியின் மெல்லிய ஓசையை மட்டுமே கேட்க முடிந்தது. அதை நெருங்க நெருங்க கொட்டும் நீரின் சத்தமும் அதிகமாக‌ நம்மை நனைக்கும் சாரலை நன்றாக உணர முடிந்தது. "

idhellam kanavulaiyum, karpanaiyilum thaan pathurukom. unmaiyil ipadi oru idathai anubavichu parpathu oru thani sugam thaan..

Unknown said...

hm nice place.

Sriakila said...

அருமையான படங்கள்! ரம்மியமான இயற்கை அழகு!

நேரிலேயே பார்ப்பதைப் போன்ற உணர்வு. அழகு! அழகு! படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!

Mahi said...

நல்லா இருக்குங்க உங்க ஊர் அருவி! போட்டோஸ் எல்லாமே அருமை!

சீமான்கனி said...

ரம்யமான படங்கள் அழகான பகிர்வு...நானும் உங்க ஊரை ஒரு சுத்து சுத்திட்டேன்...நன்றி ப்ரியா

Ahamed irshad said...

இந்த மாதிரி படத்தைப் போட்டு.....

Priya said...

ரம்மியமான இயற்கை அழகுகளை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

நன்றி சரவணன்!

ஆமாங்க சித்ரா ரொமாண்டிக்கான இடம்தான். ந‌ன்றி!

ந‌ன்றி ராமலக்ஷ்மி!

வீடியோ பார்த்திங்க‌ளா ப‌த்மா, பிடிச்சிருக்கா! ந‌ன்றி!

இய‌ற்கை வள‌ங்க‌ள் நிறைந்தாலே... சொர்க்க‌ம்தானே! ந‌ன்றி ஹேமா!

//ஓவியரின் புகைப்படங்களும் ஓவியங்களாய்//.... ஒ மிக்க நன்றி நியோ!

நன்றி மதுரை சரவணன்!

நன்றி சுசி! வாங்க இப்படி அடிக்கடி அழகான இடங்களுக்கு கூட்டிட்டு போறேன்:)

நன்றி Balaji saravana!

கனவில் காணும் இடங்களை ஒரு நாள் நிஜத்திலும் காண என் வாழ்த்துக்கள் Suresh!

நன்றி Siva!

நன்றி Sriakila!

நன்றி மகி!

நன்றி, நல்லா ஊரை சுத்திட்டீங்களா கனி!

puduvaisiva said...

இயந்தர தனமான வாழ்கையின் நடுவே
என்றம் மனதுக்கும் உணர்வுக்கும்
இளமையாக இருக்க இறைவன்
அளித்த வரம் இயற்கை !

பதிவின் மூலம் புத்துணர்வு அளித்தமைக்கு நன்றி ப்ரியா.

Priya said...

வாங்க அஹமது இர்ஷாத்
//இந்த மாதிரி படத்தைப் போட்டு.....//........போட்டு......???:)

உண்மைதான் புதுவை சிவா... இயற்கை, கடவுள் நமக்களித்தது வரம்தான்!

Menaga Sathia said...

lovely photos..

ஸாதிகா said...

அழகான படங்கள்.அருமையான பகிர்வு.

அண்ணாமலை..!! said...

பச்சைப்பசேல்-னு புகைப்படம் ஒவ்வொண்ணும்
அவ்ளோ அழகு!
ஓவியத்தோட ஃபோட்டோகிராஃபி-யும் உங்களுக்குத் தெரியுமோ??

Raghu said...

எழுத்து..ஃபோட்டோ..வீடியோ..எல்லாமே ர‌ச‌னை ப்ரியா

அருவி ஃபோட்டோஓஓஓஒ..ஹும்ம்ம்ம்ம்ம்

ஏக்க‌ப் பெருமூச்சுட‌ன்
ர‌கு

Priya said...

நன்றி மேனகா!

நன்றி ஸாதிகா!

அண்ணாமலை..!!.... புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் நிறைய ஆர்வ‌ம்தான்! ம‌ற்ற‌ப‌டி ஃபோட்டோகிராபி ப‌ற்றி எல்லாம் அதிக‌மா தெரியாது.

//ஏக்க‌ப் பெருமூச்சுட‌ன்//...கூல் ர‌கு:)

சாமக்கோடங்கி said...

அருமையான புகைப்படத் திறமை உங்களிடம் இருக்கிறது.. பிரான்ஸ் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.. சென்றால் கட்டாயம் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்... தகவலுக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை.

அழகான பகிர்வு

G.AruljothiKarikalan said...

iyarkayin arputhangal......... endrume manadhai niraikiradhu..........

Ahamed irshad said...

......போட்டு......???://

இதென்ன ரெண்டு கேள்விக்குறி.. பொறாமையா இருக்குங்க இந்த படங்களைப் பார்க்கும்போது அப்படின்னு சொல்ல வந்தேங்க.. நீங்க எப்பவும்போல கலக்குங்க FREEYA!!!

Unknown said...

எமையும் அழைத்து ஊர் சுற்றிக் காட்டியது போல ஒரு நிறைவு உங்கள் பகிர்வின் மூலமும் படத்தின் மூலமும் கிடைத்தன, நன்றி ப்ரியா!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...lovely pictures and write up... thanks for sharing Priya

Priya said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
//பிரான்ஸ் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது..//.... அப்படியா எப்போ வருவீங்க?
//சென்றால் கட்டாயம் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்//... ஆமாங்க பார்க்கவேண்டிய அற்புதமான இயற்கை அழகுள்ள இடம்.

நன்றி சே.குமார்!

நன்றி அருள்ஜோதி!

வாங்க இர்ஷாத். மீண்டும் வந்ததிற்கு நன்றி. வாக்கியத்தை முடிக்க மறந்திட்டீங்களோன்னு நினைச்சி கேட்டேன்:)

நன்றி பாலன்!

நன்றி அப்பாவி தங்கமணி!

அன்பரசன் said...

புகைப்படம் ஒவ்வொன்றும் அருமை.

Priya said...

நன்றி அன்பரசன்!

நன்றி தியாவின் பேனா!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்களோட இதுக்கு முன்னே பரிச்சயம் இல்ல.. யதேச்சையா இன்னிக்கு வேறொருத்தர் பக்கத்துல இருந்து இங்க எட்டிப் பார்த்தேன்.. சேம் பின்ச் ன்னு கிள்ளனும் போல இருக்கு :)) பயப்படாதீங்க.. நானும் ஒரு அருவி பதிவு போட்டிருந்தேன் - செப் 17 அன்னைக்கு.. நீங்க செப் 14 :) அதுலயும் ஒரு வீடியோ.. நீங்க இயற்கையோட அழகப் பார்த்து ரசிச்ச மாதிரி நான் அதோட வேகத்தைப் பார்த்து ரசிச்சேன்.. என்னமோ பகிரனும்ன்னு தோனுச்சு..

http://karuthoor.blogspot.com/2010/09/blog-post_17.html

புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு.. பார்க்கும் போதே ஜில்லுன்னு.. பதிவும் அப்படியே.. அருவிய சினிமாப் பாட்டுல எங்கயோ பார்த்திருக்கோம்ன்னு தோணுது.

Priya said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்..
//சேம் பின்ச் ன்னு கிள்ளனும் போல இருக்கு :))//..... சேம் பின்ச்!

நானும் இப்பதான் உங்க பதிவில் உள்ள வீடியோ பார்த்தேன். அப்பப்பா எத்தனை அழகு அது!

//அருவிய சினிமாப் பாட்டுல எங்கயோ பார்த்திருக்கோம்ன்னு தோணுது.//... இருக்கலாம். அவ்வளவு அழகான இடம்தான் இது.

Unknown said...

இயற்கையை ரசிப்பதே ஒரு அழகு தான் .....நகரங்களில் இரைச்சல்களில் வாழ்ந்து விட்டு அந்த அமைதியான சூழ்நிலை ....நம்மை எங்கோ கொண்டு செல்லும் ....சூப்பர் ....

Priya said...

//நகரங்களில் இரைச்சல்களில் வாழ்ந்து விட்டு அந்த அமைதியான சூழ்நிலை ....நம்மை எங்கோ கொண்டு செல்லும்//.... உண்மைதான் Murugan. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

Post a Comment