தையல் என்பது மிக அற்புதமான கலை. அதிலுள்ளவைகளோ பலவகை. இந்த தையற்கலை காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கொண்டிருந்தாலும், உடை என்ற ஒன்று இருக்கும்வரை இதற்கு அழிவில்லை எனலாம்! அற்புதமான இந்த கலையை தொழிலாக்கி இன்று வெற்றியடைந்து வருபவர்கள் ஏராளம் என்றாலும் கூட பெண்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்காகவே இருக்கிறது. இந்த பொழுதுபோக்கின் மூலம் உள்ளப்பயிற்சி பெற முடியுமாம். இதைப்பற்றி அதிகம் தெரியாது எனக்கு எனினும் மற்ற கலைகளைப் போலவே தைப்பதற்கும் பொறுமை, கிரியேட்டிவிட்டி மற்றும் கலையார்வம் அவசியம் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.
இப்பொழுது இதைப்பற்றி ஏதோ கொஞ்சம் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் பள்ளி பருவத்தில் எனக்கிதை அறிமுகப்படுத்திய சிஸ்டர் கிறிஸ்டின்தான். ஆறாம் வகுப்பு முதல் தொடர்ந்து மூன்று வருடம், ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியம் கடைசி பீரியட்டில் டிராயிங் அல்லது தையல் க்ளாஸ் இருக்கும். எப்பொழுதும் வரைவதைவிட தையல் வகுப்பைதான் அதிகம் எதிர்ப்பார்ப்பேன். காரணம் ஏதோ ஓரளவிற்கு வரைய தெரிந்ததால் சீக்கிரமாக எனது டிராயிங்கை முடித்துவிட்டு மற்ற தோழிகளுக்கு உதவி செய்துக்கொண்டிருப்பேன். ஆனால் தையல் பற்றி தெரியாததால் அதை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அந்த வகுப்பிற்காக காத்துக்கொண்டிருப்பேன். சிஸ்டரும் மிக தெளிவாக சொல்லிக்கொடுப்பார்கள். என்னுள் உள்ள கலையார்வத்தினாலோ என்னவோ அவர் சொல்லிக்கொடுப்பதை அப்படியே செய்து பாராட்டைப்பெற்றுவிடுவேன். அதன்பிறகுதான் அம்மா வீட்டில் தைத்துக்கொண்டிருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். ஆர்வம் பற்றிக்கொள்ள எனது ஏழாம் வகுப்பின் வருடக் கடைசியில் தையல் வகுப்பில் சிறிய அளவில் கொடுக்கப்பட்ட துணியில் எம்பிராய்டரி போட்டு அதையே சிறிய பைப்போல தைத்துவிட்டேன். அதை வீட்டிற்கு எடுத்து வந்து என் அப்பாவுக்கு பரிசாக கொடுத்தேன். அப்பாவும் ஆசையோடு பெற்றுக்கொண்டு அதில் பைபிள் வைத்துக்கொள்ள அவருடன் எடுத்துச்சென்றுவிட்டார்(அப்பா வெளிநாட்டில் பணிபுரிந்த சமயம் அது). இதோ இன்றுவரை பைபிளை சுமந்தபடி அந்த பை என் அப்பாவிடம் பத்திரமாக உள்ளது. அந்த மூன்று வருடங்கள் மட்டுமே ஊசியும் நூல்களும் என்னுடன் உறவாடியது. அதன்பிறகு படிப்பில் கவனம் அதிகமாகவே, தைப்பதை மறந்தே போனேன்.
மறந்துப்போனதை நியாபகப்படுத்தியது சென்றமாதம் ஒரு நாள் கடையில் நான் கண்ட தையலினால் செய்த கிப்ட் ஒன்று. இதயம் வடிவில் அழகான இரண்டுவரி காதல் சொற்களுடன் இருந்த அதை எடுத்துப் பார்த்தபோதுதான் அது துணியில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது புரிந்தது. உள்ளே மறைந்திருந்த தையல் ஆர்வம் லேசாக எட்டி பார்க்க, நானும் தைப்பதற்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டேன். மறந்துப்போன சிலவற்றை நியாப்படுத்தி இணையத்தின் மூலம் இன்னும் தெரிந்துக்கொண்டு இதோ மீண்டும் ஊசியை கையிலெடுத்திருக்கிறேன். தையல் வகைகள் பற்றி அதிகம் தெரியாததால் பூக்களிலிருந்தே ஆரம்பிக்கலாமே என்றெண்ணி ஏதோ எனக்கு தெரிந்தவற்றை கொண்டு நான் உருவாக்கியவை இது.
இது எப்படி உருவானது என்பதையும் கொஞ்சம் பாருங்களேன்.
எனது பள்ளி நாட்களின் போது செய்த தையலும் இங்கு உள்ளது... இதோ, அதையும் பாருங்கள்!!!