Subscribe:

Pages

Wednesday, August 4, 2010

தொடரும் தொடர்பதிவு........

     நீண்ட நாளுக்கு பிறகு ஒரு தொடர்பதிவு, அதுவும் பேட்டி வடிவில்! கேள்விகளை படித்தவுடன் மனதில் தோன்றியவைகளையே பதில்களாக தந்து இருக்கிறேன். இந்த தொடர்பதிவுக்கு அழைத்து தோழி சுசிக்கு எனது நன்றிகள். பதிவை பப்ளிஷ் பண்ணுகிற சமயத்தில் மீண்டும் அழைப்பு இந்த தொடர் பதிவுக்கு. இம்முறை நண்பர் சீமான்கனியிடம்   இருந்து. என்னை அன்புடன் அழைத்த இருவருக்கும் எனது நன்றிகள்.1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ப்ரியா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. ப்ரியா என் செல்ல பெயர்….. ப்ரியமாக அழைப்பதற்காக வைக்கப்பட்டது ! எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுதான்.
அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் பிரெஞ்சில்.... ஏதோ நல்ல‌ பெயர்தான். ஆனால் பள்ளி பருவத்தின் போது ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்கும் போது ஈஸியா pronounce பண்ணுற மாதிரி ஏன் எனக்கு பெயர் வைக்கலைன்னு வீட்டில் வந்து புலம்புவேன். தவறாக உச்சரிப்பவர்களிடம் திருத்தி சொல்வதே என் வேலையாக இருந்தது. ஆனால் கல்லூரி வந்த பிறகுதான் என் பெயரை மிகச் சரியாக உச்சரிக்க ஆரம்பித்தார்கள். வலைபதிவில் என் நிஜப் பெயர் இல்லாமைக்கு இதுதான் காரணம்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பதிவுலகில் என்ட்ரி ஆனது என்னவோ பிரெஞ்சில்தான். ஆனால் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளபடியே எழுதிட எனக்கு தமிழ்தான் சிறந்தது என தோன்ற முதலில் என் வலது காலடியை தமிழ் வலைபதிவுலகில் வைத்தேன். ஒரு சில மாதங்களில் இன்னொரு காலடியையும் வைக்க சொல்லி என்னை உங்களில் ஒருத்தியாக தமிழ் வலை பதிவுலகம் ஏற்றுக்கொண்டது.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எதுவும் செய்யல. என்னைக்காவது எனது வலைபதிவு பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அதிகமா சொந்த விஷயங்களைதான் எழுதுகிறேன். விளைவு.... பதிவுலக நண்பர்களுடன் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பள்ளி படிக்கும் போது அபராதத்திற்கு பயந்து ஆங்கிலத்தில் பேசி.... ஆங்கில வழி கல்விபயின்று பின் அதிலேயே முதுகலை பட்டமும் பெற்று..... ஆங்கில ஆசிரியையாக‌ பணி செய்துக்கொண்டும்... தினசரி வாழ்க்கைக்கு பிரெஞ்சும் பேசிக்கொண்டு இருக்கும் எனக்கு, எங்கே தமிழ் பேச எழுத வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆசையாக எழுத ஆரம்பித்தேன். பொழுதுபோக்காகவும் இருக்கிறது மனது நிறைவாகவும் இருக்கிறது. நல்ல நட்புக்களை பெற்று தந்திருப்பதில் சந்தோஷமாகவே இருக்கிறேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு...... பிரெஞ்சில் ஒன்று, தமிழில் ஒன்று!
விரைவில் என் பெயிண்டிங்ஸுக்காக ஒரு வெப்சைட் தொடங்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இல்லை. மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதும் எழுத்துக்களை கண்டு வியப்படைகிறேன்.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதலில்……… இந்த வார்த்தையில்தான் எத்தனை சுகம் இருக்கு. அது தரும் சந்தோஷமே தனிதான். அப்படி ஒரு சந்தோஷத்தை தந்தவர் நண்பர் ஜோ ... தனக்கென தனி ஸ்டைலில் எழுதுபவர். வித்தியாசமாக எழுதும் இவரது எழுத்துக்களுக்கு ரசிகை நான். என் கவிதைகளுக்காக முதன்முதலில் கமெண்ட் எழுதியவர். அன்று முழுக்க என்னவரிடம், என் கவிதைகளையும் பாராட்டி யாரோ முகம் தெரியா ஒருவர் உலகில் எங்கிருந்தோ பாராட்டி எழுதி இருக்கிறார் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் நல்ல தோழனாய் இவருடன் நட்பு தொடர்கிற‌து.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம் சொல்லலாம்! ஆனா முந்தைய‌ கேள்விகளுக்கு சொன்ன பதில் போல இல்லாமல் இதுக்கு detailed தான் சொல்லனும். உங்க நேரத்தை வீணாக்க வேண்டாமேன்னு பார்க்கிறேன். சுருக்கமாக எப்படி எழுதுறது? சரி ஒரு சில வார்த்தைகளில்………..

இன்றுவரை அப்பா அம்மாவின் செல்ல குழந்தையாய், உடன் பிறந்தவர்களுக்கு பிரெண்ட்லியான அக்காவாய், என்னவருக்கு ஆசை மனைவியாய், உறவுகளுக்கு பாசமானவளாய், என் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியையாய்... உங்கள் அனைவருக்கும் நல்ல தோழியாய்…கனவுகளை நிஜமாக்க முயன்று கொண்டிருப்பவளாய், எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் தன்னம்பிக்கை நிறைந்தவளாய், கொஞ்சம் சோம்பேறியாய், ப‌யங்கர சென்செட்டிவாய், வாழ்க்கையில் சின்ன சின்ன விஷ‌யங்களையும் ரசித்து ஒவ்வொரு மணிதுளியும் நேசிபவள் நான்..... இப்படியெல்லாம் சொல்லனும்னுதான் ஆசை! ஆனா நானே என்னை பற்றி எப்படி சொல்லிக்க‌றது. என்னை விட என்னைப்பற்றி என் நண்பர்களாகிய உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.... நீங்களே இதற்கு பதில் சொல்லுங்களேன் !


***********

 
இவற்றை தொடர்ந்திட நண்பர் ரகுவையும்  , தோழி ஆனந்தியையும்  அன்புடன் அழைக்கிறேன்.

31 comments:

அருண் பிரசாத் said...

நல்ல பதில்கள்

வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

ஒவ்வொரு பதிலிலும் உங்கள் ரசனை தெரிகிறது .

g.aruljothiKarikalan said...

rasithu padithen priya

ரிஷபன் said...

கேள்விகளும் பதில்களும் அருமை.

♠புதுவை சிவா♠ said...

அனைத்து பதில்களும் அருமை ப்ரியா

தமிழ் மொழி மீது நீங்கள் கொண்டு இருக்கும் உணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!

சே.குமார் said...

arumai...

ungaL pathilgal anaiththum rasanai....

சீமான்கனி said...

அழைப்பை ஏற்று மின்னல் வேகத்தில் அசத்தலாய் தந்த பதிவுக்கு நன்றிகள்.சுசிக்காவும் அழைத்தார்களா??
ஓவியங்களுக்காய் ஒருதனி பக்கம் தொடங்குவது நல்ல யோசனை பிரியா.அது சரி அந்த நிஜப்பெயர் பிரெஞ்சில் வைத்த....பெயரை அப்படியே டைப்பி இருக்கலாம் நாங்களும் எங்களுக்கு ஒரு தோழி பிரெஞ்சில் இருக்காங்கனு பெருமையா சொல்லிக்குவோம்ல

அதனையும் அழகான பதில்கள் உங்கள் ஓவியம் போலவே... வாழ்த்துகள்

ஜெய்லானி said...

ரியலா இருக்கு ஒவ்வொரு பதிலும் ..!! பிரென்சில் உள்ள பெயரையும் சொல்லி இருக்கலாமே..!!

Chitra said...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பள்ளி படிக்கும் போது அபராதத்திற்கு பயந்து ஆங்கிலத்தில் பேசி.... ஆங்கில வழி கல்விபயின்று பின் அதிலேயே முதுகலை பட்டமும் பெற்று..... ஆங்கில ஆசிரியையாக‌ பணி செய்துக்கொண்டும்... தினசரி வாழ்க்கைக்கு பிரெஞ்சும் பேசிக்கொண்டு இருக்கும் எனக்கு, எங்கே தமிழ் பேச எழுத வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆசையாக எழுத ஆரம்பித்தேன். பொழுதுபோக்காகவும் இருக்கிறது மனது நிறைவாகவும் இருக்கிறது. நல்ல நட்புக்களை பெற்று தந்திருப்பதில் சந்தோஷமாகவே இருக்கிறேன்.

.....அருமையான பதில்ங்க.....உங்கள் தமிழ் உணர்வை ரசிக்கிறேன்.

சுசி said...

நல்ல பதில்கள்..

எல்லோரையும் இணைக்குது நம் தாய்த்தமிழ்

siva said...

nanthan first comment podalamnu parthen allarum potuvittanga..so repeatu...
அருமையான பதில்ங்க..

hm ungal etharthm..ungal padivin sucess endru adithu cholukiren..

Eyarkaiyin devatahi ungalkuku kudutha oviya pokisam ungalai vilikatiathu endru marupadium adithu koorukiren..ungalku nigar neengaley.

valga tamil.valga priya akka oviyam.

..110 choclate anupidanum sariya..

tata bye

siva said...

ஆங்கில ஆசிரியையாக‌ பணி செய்துக்கொண்டும்---ennathu ENGLISH MISS NEENGA....HIO HIO ENAKU ENGLISH VARATHUNGALEY..appovey enaku english teachera kondaley pidikathu..eppo paru orey thusu pusunu engllishla pesa cholli..romba kastampa..

but neenga romba nalla english miss.good moring cholikirenga..

Actually am very week in english & Maths...
tata..
byebye latea pona principal thituvar..
varata..

siva said...

தமிழ் மொழி மீது நீங்கள் கொண்டு இருக்கும் உணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட் !!!

repeatu.....

" ஒரு ராயல் சல்யூட் "PRIYA AKKA.

Ananthi said...

வாவ்.. பிரியா... உங்க பதில் அத்தனையும் சூப்பர்....உங்களை பற்றி நிறைய, தெரிந்து கொண்டேன்..
ரொம்ப பெருமையா இருக்கு... உங்க தமிழ் பற்றை பாராட்டியே ஆகவேண்டும்...!!

ரொம்ப ரொம்ப சந்தோசம்...

என்னையும் இந்த தொடர் பதிவைத் தொடர அழைத்ததற்கு....நன்றி..
சீக்கிரம் தொடர்கிறேன்... :-))))

LK said...

nalla pagirvu. ungalai patri terinthu konden

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

ஜெயா said...

அழகான பதில்கள் ப்ரியா.வாழ்த்துக்கள்....

அப்பாவி தங்கமணி said...

நல்ல பதில்கள் ப்ரியா... படங்களுக்கு தனி ப்ளாக்ஆ? சூப்பர்...சீக்கரம் ஆரம்பிங்க... லிங்க் குடுங்க... வாழ்த்துக்கள்

வெறும்பய said...

நல்ல பதில்கள்

வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

இயல்பான பதில்கள்....ஆசிரியர்...அவ்வ்வ்வ் பயமா இருக்கு...

r.v.saravanan said...

விரைவில் என் பெயிண்டிங்ஸுக்காக ஒரு வெப்சைட் தொடங்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

குட் குட் ப்ரியா நல்ல யோசனை வாழ்த்துக்கள்

பதில்களும் மிக இயல்பா நல்லா இருந்தது

கடல் said...

தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.

நன்றி.

siva said...

23

siva said...

24,inum oru run edutha pothum...

siva said...

25...hey nanthan 25th comments...

ammam engey adutha padivai kanum????

veraivi 100 adikka vendum enbathu enathu virupam.
படங்களுக்கு தனி ப்ளாக்ஆ? "yen appavi avanga onnum ungalai pola iddle podaley..."yen evlo jerk.no no..

neenga verivil padivu eluduthunga apprama same time katayam oviyam blog venum.

thank you.

ர‌கு said...

ஹிஹி..ஒரு சோம்பேறி ப‌ய‌ல‌ போய் எழுத‌ சொல்லி....ச‌ரி எழுத‌றேங்க‌ :))

யாதவன் said...

supper

பாலன் said...

உங்களைப் பற்றிய அறிமுகம் அழகாக அமைதியாக உள்ளது,:) தமிழ்மீதுள்ள பற்றுதலிற்கு எனது வணக்கங்கள், மேலும் தொடர்ந்திடுங்கள் தொடர்கின்றேன்....

siva said...

wow.............

supperrrrrrrrrrrr.

cute template..

what a pleasant surprise...

thank you .....

so nice this template..

really so beautiful like moon...

am very happy to read this blog.

Priya said...

தொடர்ந்து உங்கள் கருத்துக்களின் மூலம் ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் புகழும் அளவிற்கு அப்படியொரு தமிழ் பற்று எல்லாம் இல்லை. இங்கு வந்த பிறகுதான் நம் மொழியின் அருமை தெரிந்தது. அதாவது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை போல:)

சுசி சொன்னதை போல "எல்லோரையும் இணைக்குது நம் தாய்த்தமிழ்"... இதுதான் உண்மை.

Jaleela Kamal said...

அருமையான பதில்கள் , ஆங்கில டீச்சாரா, அப்படியே பாடம் எடுக்கலாமே/
ஸ்போக்கன் இங்கீலீஷ்

Post a Comment