Subscribe:

Pages

Saturday, August 14, 2010

இன்னொரு தாயாக.....

         
                  «ம்ம்ம்மா»……… வலியில் இப்படிதான் நீ கத்தியிருக்க வேண்டும். இதோ நர்சுகள் உன்னை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைக்கிறார்கள். சில நிமிடங்களில் மருத்துவர் உதவியுடன் உனக்கு அதிகம் கஷ்டம் கொடுக்காமல் நான் பிறந்துவிட்டேன்.

தேசம் சுதந்திர தினத்தினாலும், கிறிஸ்துவர்களோ அன்னை மரியாளின் விண்ணேற்பு திருவிழாவினாலும் சந்தோஷத்தில் இருக்க நீயோ என்னை பெற்றெடுத்த ஆனந்தத்தில் மூழ்கி கிடக்கிறாய். ஆகஸ்ட் 15ல் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அன்று மருத்துவமனை பரிசுகள் வழங்க‌, அப்பாவோ நான் பிறந்த சந்தோஷத்தில் மருத்துமனையில் உள்ளவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கி கொண்டாடி இருக்கிறார்.

யார் யாரோ என்னை வந்து பார்க்கிறார்கள். தூக்கி கொஞ்சுகிறார்கள். முத்தமிட்டு மகிழ்கிறார்கள். இது பார்ப்பதை பாரேன், எவ்வளவு அழகாய் சிரிக்கிறது பாரேன் என்று மற்றவர்கள் சொல்வதை கேட்டு பூரிப்படைந்திருக்கிறாய். அதனால்தான் இப்பொழுதும் முதல் குழந்தை தரும் நினைவுகள் போல் இனிமையானது வேறெதுவும் இல்லை என்கிறாய்.

என் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்தவள் நீ. ரசித்துக் கொண்டிருப்பவளும் நீதான். உன் முதல் குழந்தையாக‌ செல்ல மகளாய் வளம் வந்தவள் நான். இன்று திருமணம் முடிந்த பிறகும் உன் செல்லமாய் நான். எனக்கு தெரியும் இனி எத்தனை குழந்தைகளை நான் பெற்றெடுத்தாலும் உனக்கு நான் குழந்தைதான்.

நான் உடுத்திய முதல் ஆடையினை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாய். என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மறக்காமல் அதை எடுத்து பார்த்து மகிழ்ச்சி கொள்கிறாய். பிறந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் பரிசாக உன் தந்தை அணிவித்த மோதிரத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறாய். என்னவனுடன் உன்னை சந்திக்க வரும்போதும் மறக்காமல் என் சிறுவயது பொருட்களை நினைவுப்படுத்தி என் முதல் ஆடையினையும் மோதிரத்தையும் காண்பிக்கின்றாய். ஆசையுடன் தொட்டு பார்க்கிறேன். மோதிரத்தை போட்டு பார்க்க ஆசையுடன் முயன்று சுண்டு விரலின் நுனியிலே நின்று விட எல்லோரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நீ மட்டும் வளர்ந்த என்னை பார்த்து பிரம்மிப்பு அடைகிறாய்.

'மோதிரத்தை நான் எடுத்துக்கொள்ளவா' என்றால், 'அது உன்னுடையது, உனக்குதான் சொந்தமாகும். உனக்கு குழந்தை பிறக்கட்டும் அதன் பிஞ்சு விரலிலே இது உன் அம்மாவின் மோதிரம் என்று சொல்லி போட்டு விடுவேன்' என்கிறாய்.

அப்பாவிடம் இருந்து, உடன் பிறந்த‌வர்களிடம் இருந்து, சொந்தங்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கிற‌ பிறந்த நாள் பரிசுகள்தான் எத்தனை எத்தனை! வாழ்த்துக்களை சுமந்து வரும் வாழ்த்து அட்டைகளும் தொலைப்பேசி அழைப்புகளும் நிறைய ! ஆனால் இவர்களை போல பொருட்களாக நீ எதுவும் வழங்கியது இல்லை. ஃபார்மலாக ஹாப்பி பர்த்டே சொன்ன‌தில்லை. ஆனால் நீ தரும் பரிசோ ஈடு இணையில்லாதது. உயிரிலே கலந்து உணர்வுகளிலே வாழ்ந்துக்கொண்டிருப்பது.


ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பேன். ச‌ரியாக‌ இர‌வு 12 ம‌ணிக்கு பிறந்த நாள் பரிசாக என் கேசம் வருடி நெற்றியில் அழுத்த‌மான‌ முத்த‌ம் ஒன்று த‌ருவாயே... இது போதாதா என‌க்கு! அன்றை நாள் முழுவ‌தும் ச‌ந்தோஷ‌முட‌ன் செல்ல‌! கண்மூடி தூக்கத்தில் இருந்தாலும் உன் முத்தத்தை உணர்ந்திடுவேனே! ஆயிரம் தேவதைகளின் ஆசிரை போல, உலகம் மக்களின் வாழ்த்துக்களை பெற்றதைப்போல உன் முத்தம் என் பிறந்த நாளை நிரப்பும். இன்றோ நினைத்தவுடன் கிளம்பி வரமுடியா தூரத்தில் நான். தொலைபேசியிலும் சாட்டிங்கிலுமாய் வாழ்த்துக்களை பெற வேண்டிய நிலையை நினைத்து ஏங்குகிறேன். என் ஏக்கங்களை போக்குகின்றவனாய் இன்று உன் இடத்தில் இருந்துகொண்டு என் பிறந்த நாளை துவங்கி வைக்கிறது என்னவனின் முத்தம்.

29 comments:

ஜெய்லானி said...

//இன்றோ நினைத்தவுடன் கிளம்பி வரமுடியா தூரத்தில் நான். தொலைபேசியிலும் சாட்டிங்கிலுமாய் வாழ்த்துக்களை பெற வேண்டிய நிலையை நினைத்து ஏங்குகிறேன். என் ஏக்கங்களை போக்குகின்றவனாய் இன்று உன் இடத்தில் இருந்துகொண்டு என் பிறந்த நாளை துவங்கி வைக்கிறது என்னவனின் முத்தம்.//

மனசை தொடும் வரிகள்....!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேப்பி பர்த்டே ப்ரியா...!

Be Happy..!

சி. கருணாகரசு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...... (படைப்பு சிலிர்ப்பு)

siva said...

jaihind..

BHARTH PRIYAVIRKU ENIYA PIRANTHA NALL VALTHUKKAL.

VALGA VALAMUDAN.

siva said...

மோதிரத்தை போட்டு பார்க்க ஆசையுடன் முயன்று சுண்டு விரலின் நுனியிலே நின்று விட எல்லோரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நீ மட்டும் வளர்ந்த என்னை பார்த்து பிரம்மிப்பு அடைகிறாய்.
---TOCHING LINES..
PADHIU SUPPER...

siva said...

SO CUTE PICUTRE....

HAPPY BIRTHDAY !
HAPPY BIRTHDAY !!
HAPPY BIRTHDAY !!!
PRIYA

சீமான்கனி said...

ஆரிராரோ ஆண்டவளின் நினைவுகளோடு...உயிரிலே கலந்து உணர்வுகளிலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் பிரியா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

சீமான்கனி said...

புது டெம்ப்ளேட் சூப்பர்...

Mahi_Granny said...

என் மனதில் இருந்து வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

மனசை தொடும் படைப்பு.

அன்புடன் அருணா said...

மனம் முழுக்க ஆனதமாய் இருக்கிறது படிக்க!!இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கலாநேசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சுசி said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா..

Priya said...

நன்றி ஜெய்லானி
ப்ரியமுடன் வசந்த்
சி. கருணாகரசு
சிவா
சீமான்கனி
Mahi_Granny
சே.குமார்
அன்புடன் அருணா
கலாநேசன்
சுசி

இந்த வருடப் பிறந்த நாளில் உங்களுடன் இணைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கு மீண்டும் எனது அன்பான நன்றிகள்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!

Mrs.Menagasathia said...

Happy B'day Priya!!

♠புதுவை சிவா♠ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா


பிறந்த நாள் வாழ்த்து அட்டை

"பிறந்த நாள் பரிசாக என் கேசம் வருடி நெற்றியில் அழுத்த‌மான‌ முத்த‌ம் ஒன்று த‌ருவாயே..."

கன்னத்தில் முத்தமிட்டால்

மகி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா!

பாலன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ப்ரியா, இனி இந்தியாவின் சுதந்திர நாள் என்றதுமே ப்ரியாவின் பிறந்த நாளும் ஞாபகம் வரும் :)

Balaji saravana said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா :)

ர‌கு said...

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் ப்ரியா:)

முத‌ல் க‌மெண்ட் காணோம்:((

சாருஸ்ரீராஜ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா......

Priya said...

மேனகா
மகி
பாலன்
பாலாஜி
ரகு (எந்த கமெண்ட்?)
சாருஸ்ரீராஜ்.........மிக்க நன்றி!

Priya said...

பு.சிவா பாடலுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு தெரியுமா...எனக்கு மிக மிக பிடித்த பாடல் அது.ஏனோ அந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் மனதை ஏதோ செய்யும். என் பிறந்தநாள் பரிசாக இதை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி!

Priya said...

Dear Friends
Thank u all for sweetened my day!
Priya.

ரமேஷ் said...

ரொம்ப டச்சிங்கா இருக்குங்க உங்க எழுத்து..உங்க பழைய போஸ்டை எல்லாம் படிச்சு முடிச்சுடனும்னு நினைச்சுட்டு இருக்கேன்...உண்மைலயே மனசுல இருந்து வர வார்த்தையா இருக்கு..உங்க எழுத்து..வாழ்த்துக்கள்....

http://rameshspot.blogspot.com/

r.v.saravanan said...

ச‌ரியாக‌ இர‌வு 12 ம‌ணிக்கு பிறந்த நாள் பரிசாக என் கேசம் வருடி நெற்றியில் அழுத்த‌மான‌ முத்த‌ம் ஒன்று த‌ருவாயே... இது போதாதா என‌க்கு! அன்றை நாள் முழுவ‌தும் ச‌ந்தோஷ‌முட‌ன் செல்ல‌! கண்மூடி தூக்கத்தில் இருந்தாலும் உன் முத்தத்தை உணர்ந்திடுவேனே! ஆயிரம் தேவதைகளின் ஆசிரை போல, உலகம் மக்களின் வாழ்த்துக்களை பெற்றதைப்போல உன் முத்தம் என் பிறந்த நாளை நிரப்பும்.

மனசை தொடும் எழுத்து

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா..

Priya said...

மிக்க நன்றி ரமேஷ்! நன்றி சரவணன்!

அப்பாவி தங்கமணி said...

அழகான பதிவு ப்ரியா... அம்மாவை மிஸ் பண்ற என்னை போல் உன்னை போல் எல்லாரையும் இந்த பதிவு மனதை ஊடுருவி செல்லும்...

Priya said...

அப்பாவி தங்கமணி........ ஓ, நீங்களும் அம்மாவை விட்டு ரொம்ப தூரமாதான் இருக்கிங்களா;(

Post a Comment