Subscribe:

Pages

Sunday, August 29, 2010

ஒரு பெண்ணின் பெண் ஓவியம்!

               ம் தமிழ் வார பத்திரிக்கைகளில் இடம் பெறும் கவிதைகளுடன் சில நேரம் குட்டி குட்டியாக‌ பொருத்தமான படங்கள் போடுவார்களே கவனித்து இருக்கிறீர்களா?  பல சமயம் மாடர்ன் ஆர்ட் போலவே இருக்கும். படிக்கும்போதே கூட இருக்கும் ஓவியங்களையும் நான் கவனித்து பார்ப்பதுண்டு. எதையும் பார்த்தவுடன் வரைந்து பார்க்கும் பழக்கம் உள்ளதால் புத்தகங்களில் வரும் படங்களை பார்த்ததும் வரைந்துவிடுவேன்.  அதிலும் கருப்பு வெள்ளையில் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இது போல நிறைய‌ படங்களை நான் கல்லூரியில் படிக்கும் போது வரைந்திருக்கிறேன். அப்போது நான் வரைந்த படம்தான் இங்கு நீங்கள் கீழே காண்பது. வெறும் கறுப்பு பேனாவினை மட்டும் கொண்டு வரைந்தது.


இதை கலரில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்றியது. முதலில் இதே படத்தை கணினியில் ஏற்றி MS Photo Premium 10 உபயோகித்து கலர் கொடுத்தேன்.எப்போதும் என் விரல்களுக்கு வளைந்துக்கொடுக்கும் தூரிகைகளுக்கு பதிலாக இந்த முறை 'மவுஸ்' வளைந்துக்கொடுத்தது. அதனால் இந்த பெண்ணுக்கு விதவிதமாக சேலைகலரை மாற்றி ரசித்தேன்.  இதோ கணினியின் வண்ணங்கள்தான் நீங்கள் கீழே காண்பது....... ! ஆர்வம் உள்ளவர்கள் மேலே உள்ள படத்தை காப்பி பண்ணி இதே முறையில் கலர் கொடுத்து பாருங்கள்.இதையே ஆயில் பெயிண்டில் வரைந்து பார்க்க தோன்றியது. அதனால் 50X20 அளவு கேன்வாஸ் போர்டில் முதலில் பென்சிலில் வரைந்துக்கொண்டேன்.  தற்பொழுது என் வீட்டு ஹால் இன்டீரியர் டெக்கரேஷன்  ப்ளு & பிரவுன் நிறங்களில்தான் செய்துள்ளேன். இந்த இரண்டு கலரும் நல்ல காம்பினேஷனாக இருக்கிறது. அதனால் அதே நிறங்களில் முயற்சி செய்து பார்த்தேன். எப்படி இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

25 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு....ஊஊஊஊஊஊஊஊஊ...

சீமான்கனி said...

சிம்ப்ளி சுபெர்ப்...அந்த விதவிதமான சேலை கலை அசத்தல்...கணினியைவிட உங்கள் கைகளின் கவி ஓவியம் எனக்கு பிடிச்சிருக்கு...

ஜெய்லானி said...

கலரில் முதல் ஓவியத்துக்கே என் ஓட்டு .. ரியலாவே இருக்கு கலர் காம்பினேஷன். மற்றபடி சூப்பர் ஓவியம்..!!

வெறும்பய said...

ரொம்ப நல்ல இருக்கு... எப்பவுமே நிஜத்துக்கு தான் மதிப்பு அதிகம் என்பது போல நீங்க கையால வரஞ்ச கருப்பு வெள்ளை படம் அருமை..

கலர் சேர்த்த படங்களும் கண்களுக்கு விருந்தளிக்கிறது..

கலாநேசன் said...

வழக்கம் போல ஓவியம் அருமை

jagadeesh said...

மிக அருமை.

Chitra said...

You are amazing!!!! God has blessed you. :-)

பத்மா said...

அருமை பிரியா! ...பாண்டி வரும் போது சொல்லுங்கள் .....நேரிலே உங்கள் ஓவியங்களை பார்க்க வேண்டும் ...

நம்மிடம் இருக்கும் புடவைகளும் இப்படி கலர் மாறிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?

ப்ளு வெள்ளை சூப்பரா இருக்கு ..அதிலும் ப்ளௌஸ் செம டிசைன் ....

enjoyed priya

அஹமது இர்ஷாத் said...

ஓவியம் நல்லாயிருக்கு ப்ரீயா.. வழக்கம்போல் கலக்கல்..

♠புதுவை சிவா♠ said...

"MS Photo Premium 10 உபயோகித்து கலர் கொடுத்தேன்"

ப்ரியா படங்களின் சேலை நிற கலவைகள் (colour combinations) அனைத்தும் சிறப்பாக உள்ளது.

வாழ்த்துகள் !

சுசி said...

அழகோவியம்..

கலர் காம்பினேஷன் சூப்பர்.. என் பையன் ரூமுக்கு ப்ளு & பிரவுன் தான் செலெக்ட் செஞ்சோம்.

Anonymous said...

nadatthunga priya.. superb

Joe

வேங்கை said...

ரொம்ப நல்லா இருக்கு

தொடர்க

Priya said...

முதலில் வந்து முதலாவதாக கமெண்ட் எழுதியது சீமான்கனிக்கு எனது முதல் நன்றிகள்!

கலர் காம்பினேஷன் ரியலாவே இருக்கா, சந்தோஷம் ஜெய்லானி!

//எப்பவுமே நிஜத்துக்கு தான் மதிப்பு அதிகம்//..... ரொம்ப நன்றி வெறும்பய!(உங்க பெயரை தெரிந்துக்கொள்ள வேண்டும், வெறும்பய என்று எழுதுவது எனக்கு என்னவோ போல் இருக்கிறது;( )

நன்றி கலாநேசன்!

நன்றி jagadeesh!

நன்றி சித்ரா!

//நம்மிடம் இருக்கும் புடவைகளும் இப்படி கலர் மாறிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?//... ஆஹா அப்புற‌மென்ன பத்மா தின‌ம் ஒன்று என‌ வித‌வித‌மாக‌ க‌ட்டி அழ‌கு பார்க்க‌லாம். ஆமா நீங்க‌ பாண்டியிலா இருக்கிங்க?

நன்றி அஹமது இர்ஷாத்!

நன்றி சிவா!

அப்படியா சுசி, நிஜமாகவே இந்த இரண்டு கலர்களும் அழகாத்தான் இருக்கிறது.

நன்றி Joe!

நிச்சயமாக தொடருவேன், நன்றி வேங்கை!

சங்கவி said...

Very Good art.........

கனிமொழி said...

WOW!!!!!
Amazing priya.....
Go on...... :)

g.aruljothiKarikalan said...

migavum arumai priya

Ananthi said...

ப்ரியா... ரொம்பவும் அருமையா வரைஞ்சிருக்கீங்க பா..
எல்லா கலரிலும் பார்க்க இன்னும் அருமை..
வாழ்த்துக்கள்.. நல்ல திறமை உங்களுக்கு.. :-))

Sriakila said...

அருமையான ஓவியம்! கலரிங் ஓவியம் அதை விட அருமை!

r.v.saravanan said...

பிரியா ஓவியம் நல்லாருக்கு நீங்கள் அதற்கு கொடுத்திருக்கும் வண்ணங்கள் இன்னும் நல்லாருக்கு வாழ்த்துக்கள்

சே.குமார் said...

ரொம்ப நல்ல இருக்கு...

கருப்பு வெள்ளை படம் அருமை..!

asiya omar said...

ஓவியம் அருமை.

கவிநா... said...

அழகோ அழகு.. அழகோவியம்... ரொம்ப நல்லாருக்குங்க ப்ரியா... அதிலும் அந்த ஆயில் பெய்ண்டிங் ரொம்ப நல்லா இருக்கு....

நிலா மகள் said...

அழகான ஓவியம்
-நிறச்சேர்க்கை
-வரைதிறன்!!!
கொள்ளையடிச்சிட்டிங்க எங்க மனசை !!

அப்பாவி தங்கமணி said...

Wow...lovely priya... I admire and envy your talent honestly

Post a Comment