Subscribe:

Pages

Saturday, June 5, 2010

காதல் செய்வோம் வா!


 கையுடன் கைக்கோர்த்து
என்னை அழைத்து சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!
என் காதோர‌ம் நெருங்கி வா
மெண்மையாக‌ சொல்லிவிடு...
நான் கேட்க‌ விரும்பும்
அனைத்தையும்!

என்னை தொடு
என் இத‌ழ்க‌ளை சுவைத்திடு
என்னுள் ஆழ‌மாக இருக்கும்
உண‌ர்வுக‌ளை வெளியேற்றிடு!
காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!

அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!
என்னுடைய‌ இர‌வுக‌ளில்
 ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!
 தடைகளை தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!

உன்னுள் சிறைப்பட்டிருக்கும்
என்னை இன்னும் தெரியவில்லையா...
என் விலங்குகளை உடைத்து
விடுதலை தந்துவிடு!
மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு
இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்
காதல் செய்வோம் வா!

Tuesday, June 1, 2010

வசந்தம் வீசும் வசந்தகாலம் !

              தேதிப்படி எப்பொழுதோ  வசந்தகாலம் தொடங்கி இருந்தாலும், இங்கு இப்பொழுதுதான் குளிர் முற்றிலுமாக மறைந்து வெயில் ஆரம்பித்துள்ளது. இதை அழகாக வெளிப்படுத்தும் முதல் விஷயம்... பூக்கள்! சாலையோரம் உள்ள மரங்களில் புதியதாக துளிர் விடும் இலைகளும் பூத்துக்குலுங்கும் பூக்களும் கொள்ளை அழகு. இதுதான் சரியான சமயம் என்பதால் கடைகளில் விதவிதமான பூச்செடிகள் விற்க தொடங்கி உள்ளனர்.



மேலே... படங்களில் இருப்பது என் வீட்டு அருகில் சாலையின் ஓரமாக மலர்ந்துள்ள மலர்கள்!

கீழே... படங்களில் பூத்திருப்பது என் வீட்டில் பூத்துள்ள பூக்கள்!
 
 

   





டலிலும் மனதிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வரும் இதமான காலமும் இதுதான். குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத சுகமானதொரு காலம். குளிரிலே வறண்டுப்போன சருமம் இப்பொழுதுதான் நல்ல ஸ்கின் டோனை காட்ட ஆரம்பித்து இருக்கிறது.  குளிருக்கு விடைக்கொடுக்கும் வண்ணம் மக்கள் தங்களது ஆடைகளில் மாற்றம் கொள்ள தொடங்கி உள்ளனர். குளிருக்காக மூன்று நான்கு ஆடைகள் அனியும் கஷ்டம் முடிந்து இப்போது ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் என்று ஆகிவிட்டது. துணிகடைகளில் நியூ கலெக்ஷன்ஸ் ஆடைகள், கலர் கலராக நீச்சல் உடைகளும் வந்து குவிந்திருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து பீச் ரொம்ப தூரம் இல்லை என்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம். இப்பொழுதே சில நாட்டு சுற்றுலாவினரை பார்க்க முடிகிறது. அதனால் கடற்கரை சாலையில் உள்ள கடைகள் ரெஸ்டாரண்டுகள் (குளிர் காலத்தில் மூடப்பட்டு இருந்தது) எல்லாம் மீண்டும் திறக்கபட்டுள்ளது. கடற்கரை காற்றை சுவாசித்துக்கொண்டே உணவருந்த சாலை முழுதும் நிறைய ஓப்பன் ரெஸ்டாரண்டுகள் உள்ளது.

நேற்று அப்படிதான், சும்மா ஜாலியாக பீச்சில் சுற்றிக்கொண்டிருந்த நானும் என்னவரும் திடீரென்று எழுந்த ஆசையால் இரவு இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி அரைமணி நேரம் கடற்கரை சாலை முழுவது சுற்றி கடைசியாக ஒரு நல்ல ரெஸ்டாரண்டை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தோம். ஆச்சிரியம்.. ஆர்டர் செய்த ஐந்தே நிமிடங்களில் சாப்பாடு வந்தது. ஃபாஸ்ட் ஃப்ட் சென்டரை போல் வேகமாக இருந்ததை கண்டு வியப்பாக இருந்தது. பிரெஞ்சு சமையலை பழகிக்கொண்ட போதிலும் பொதுவாக வெளியில் சாப்பிடுவது பிடிப்பதில்லை என்பதால் எனக்கு வழக்கம்போல் பீட்ஸாதான்.

ன்னும் சில தினங்களில் இங்கு கோடைக்காலம்(ஜூன் 21 முதல்) ஆரம்பம் என்பதால் அடுத்த மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை. இதற்காகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நிறைய மாற்றங்கள். வழக்கமான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு புதியதாக ஒருசில கோடைக்கால கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இப்பொழுதே ஒளிப்பரப்பி வருகிறார்கள். முக்கியமாக சிறுவர்களுக்கென்று கார்ட்டூன் படங்கள் இளைஞர்களுக்கான தொலைக்காட்சி தொடர்கள் என்று ஒளிப்பரப்பபடுகிறது.

கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாக இப்பொழுதே ஒரு சில விழாக்கள் ஆரம்பமாகி உள்ளது. இவற்றின் தொடக்கமாக இரண்டுவாரம் முன்பு நடந்து முடிந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா.... வழக்கம்போல் இம்முறையும் தொலைக்காட்சி சேனல்கள் ந‌ம் ஐஸ்வரியா ராயை காட்ட மறக்கவில்லை. வெறும் 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் கேன்ஸ்(Cannes) என்ற போதிலும் இந்த முறை எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.

ந்த கேன்ஸ் விழாவை தொடர்ந்து இனி மூன்று மாதங்களுக்கு இங்கே எதற்கெடுத்தாலும் விழாதான். சின்ன சின்ன விஷயங்களை கூட இந்த பிரெஞ்சு மக்கள் ரசித்து கொண்டாடி மகிழ்கிறார்கள். இதோ இந்த‌ வார இறுதியில் எங்கள் ஊரில் Fête des cersies! அதாவ‌து செர்ரி ப‌ழ‌த்திற்கான‌ விழா(இது ஐம்பதாவது வருடக் கொண்டாட்டமாம். மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்). வ‌ழ‌க்க‌மாக மே மாத‌மே கொண்டாட‌ப்ப‌டும் விழா இது. ஆனால் சென்ற‌ மாத‌ம் கொஞ்ச‌ம் ம‌ழையாக இருந்ததினால் இப்பொழுதுதான் செர்ரி ப‌ழ‌ங்க‌ள் முற்றிலுமாக‌ பழுக்க துவங்கியுள்ளது.

ங்கு இப்பொழுதுதான் கல்யான சீசன். பிரெஞ்சுகாரர்களின் திருமணத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு தனியாக ஒரு பதிவு போட வேண்டும்... அவ்வள‌வு இருக்கு அதைப்பற்றி எழுத!

தோழமையில் மகிழ்வதும் இப்போதுதான். நண்பர்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு அழைத்து ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழும் அற்புதமான காலமிது. குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே அமர்ந்து உணவருந்துவதற்கும் இப்பொழுது வசந்தகாலத்தில் வீட்டின் தோட்டத்திலே நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதற்கும் எத்தனை வித்தியாசம்.... இனிமையான நிமிடங்கள் அது. சுற்றிலும் வண்ணமயமாக மாறிக்கொண்டிருக்கும் அற்புதமான நாட்களிது என்பதால் ரம்மியமான உணர்வுகளுடன் இதை எழுதுகிறேன்.

ல்லோருக்கும் பணிகளும் கடமைகளும் அவசியம்தான். அதே நேரத்தில் நம்மைச்சுற்றி நிகழும் காலமாற்றங்களும் அது கொண்டுவரும் இனிமையான மாற்றங்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே!

வெயிலோ மழையோ குளிரோ பணியோ... எந்த ஒரு கால நிலையையும்... அதனால் வரும் சின்ன சின்ன மாற்றங்களையும் ரசித்து பார்க்க பழகிக்கொண்டாலே போதும்... இந்த வசந்தக்காலம் மட்டுமல்ல, வாழ்வு முழுவதும் வசந்தம் வீசும்.