Subscribe:

Pages

Tuesday, February 1, 2011

எனக்கே..... எனக்கானவனாய்!


வெளியில் அழைத்துச்செல்கையில்
ஆசையுடன் பார்த்தாலே
பிடிச்சிருக்கா எனக்கேட்டு
விரும்பும் பொருட்களை
வாங்கி கொடுக்கும் போது
தாயாகிறாய்!
வீடு திரும்பியதும்
பசிக்கிறது எனக்கேட்டு
பாசத்துடன் நான் பரிமாறுவதை
ருசித்து உண்ணும் போது
சேயாகிறாய்!

தெரியாத நல்ல விஷயங்களை
பொறுமையாய்
விளக்கி சொல்கையில்
தாயாகிறாய்!
அதே அறிந்தவைகளை
தெரிந்தும் தவறிழக்க செய்துவிட்டு
செல்ல திட்டுகள் பெற்று
முழிக்கையில் சேயாகிறாய்!

உடல் நலக்குறைவால்
சோர்ந்துப்படுக்கும் எனக்கு
உணவளித்து மருந்தளிக்கையில்
தாயாகிறாய்!
நீயோ
உடல் நலமின்றி இருக்கும்போது
பக்கமிருத்தி என்னை
அணைத்துக்கொண்டு உறங்குகையில்
சேயாகிறாய்!

சோகங்களில் கலங்குகையில்
தலைக்கோதி
மார்பினில் சாய்த்து
என் நெற்றியில் முத்தமிட்டு
ஆறுதல் புரியும் போது
தாயாகிறாய்!
என்னடா... என்னாச்சிடா என்ற‌
அன்னையின் பரிவான‌
சொல்லுக்கு ஏங்கும் குழந்தைப்போல
மனதறிந்து கேட்கையில்
என் மடியிலே கலக்கங்களை
புதைத்துக்கொள்ளும் போது
சேயாகிறாய்!

இப்படி தாயாய் சேயாய் தொடர்கையிலும்
சின்ன சின்ன குறும்புகளுடன்
உணர்ச்சிகளை தூண்டும்போதும்......
செல்ல செல்ல சீண்டல்களுமாய்
சண்டை பிடிக்கும்போதும்......மட்டும்

நீ...
எனக்கே.....
எனக்கானவனாய் இருக்கின்றாய் !

43 comments:

kasthurirajam said...

wow....beautiful!

Philosophy Prabhakaran said...

செமயா எழுதியிருக்கீங்க...

Ramani said...

ப்ரமாதம் இயல்பான வார்த்தைகளைக் கொண்டே
உச்சம் தொடுகிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்...

Chitra said...

இப்படி தாயாய் சேயாய் தொடர்கையிலும்
சின்ன சின்ன குறும்புகளுடன்
உணர்ச்சிகளை தூண்டும்போதும்......
செல்ல செல்ல சீண்டல்களுமாய்
சண்டை பிடிக்கும்போதும்......மட்டும்

நீ...
எனக்கே.....
எனக்கானவனாய் இருக்கின்றாய் !


....WOW!!!!! How romantic!!!!

வெறும்பய said...

super..

எல் கே said...

வெறுமே நன்று அருமை என்பதற்கு மீறியக் கவிதை.. காதலனை/கணவனை அடுத்த கட்டத்தில் வைத்து பார்ப்பது

sakthistudycentre-கருன் said...

Nice, Super..

ராமலக்ஷ்மி said...

மிக அருமை ப்ரியா.

Balaji saravana said...

செம சூப்பர் ப்ரியா! கவிதை முடியுமிடத்தில் அன்பு பரிபூரணமா செழிக்கிறது! நீடித்திருக்க என்றும்! :)

siva said...

எல்லாரும் எல்லாம் சொல்லிட்டாங்க..

என்ன சொல்ல தெரியவில்லை...

நல்ல இருக்குங்க...

மாணவன் said...

நல்லாருக்குங்க சகோ,

உணர்வுகளை சிறப்பாக வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்க அருமை...

S Maharajan said...

நல்லாருக்குங்க.........

சங்கவி said...

//இப்படி தாயாய் சேயாய் தொடர்கையிலும்
சின்ன சின்ன குறும்புகளுடன்
உணர்ச்சிகளை தூண்டும்போதும்......
செல்ல செல்ல சீண்டல்களுமாய்
சண்டை பிடிக்கும்போதும்.//

உணர்வுப் பூர்வமான வரிகள்... இவ்வரிகளை அனுபவிக்க அனுபவிக்கத்தான் தெரியும் இதன் அருமை... கவிதை அருமை பிரியா...

சே.குமார் said...

வாழ்க்கைப் புரிதலின் பூக்களாய் சிரிக்கின்றன கவி வரிகள்.

சாருஸ்ரீராஜ் said...

super priya

சுசி said...

உங்களுக்கே உங்களுக்கான உங்கள் அவருக்கும், உங்களுக்கும் இனிய வாழ்த்துகள் ப்ரியா..

Sriakila said...

very nice feeling!

Anonymous said...

அழகான உணர்வை அருமையா எழுதி இருக்கீங்க ப்ரியா.
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை பிரியா..:))

ப்ரியமுடன் வசந்த் said...

;-)

பாசாங்கில்லாத கவிதை நல்லாருக்கு ப்ரியா!

மதுரை சரவணன் said...

அற்புதமானப் படைப்பு... வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ப்ரியா... ரொம்ப சூப்பர்-பா..

தாயுமானவன்.. சேயுமானவன்... ஹ்ம்ம்ம்..
ரொம்ப ரசித்தேன்.. ;-)

Priya said...

தாயாய் சேயாய் மட்டுமல்லாமல் நல்ல நண்பனாய் திகழும் என்னவருக்காக ரசித்து எழுதியவைதான் இக்கவிதை!
கவிதையை ரசித்து உங்களது கருத்துக்களாலும் பாராட்டுக்களாலும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.

Priya said...

விருது வழங்கியமைக்கு நன்றி மஹா!

வைகறை said...

ப்ரமாதமான கவிதை... வாழ்த்துக்கள்!!

அப்பாவி தங்கமணி said...

உணர்வுகள் உல்லாசமாய் பயணம் செய்யுது உங்கள் வார்த்தைகளில்... ரெம்ப அழகா இருக்குங்க பிரியா... தாயும் சேயும் வெரி லக்கி to have each other I would say....:)))

Srini said...

” வாவ்...!!
இதுல கவிதை நடைய பாராட்றதா இல்ல எடுத்துகிட்ட விஷயங்கள பத்தி பாராட்றதான்னு தெரியல...
என்னோட சில நண்பர்களுக்கு உங்க ப்ளாக்’யுடைய லிங்க்’யை அனுப்பிருக்கேன்....

r.v.saravanan said...

நல்லாருக்கு பிரியா வாழ்த்துக்கள்

g.aruljothiKarikalan said...

pennin unarchigalai... oru penne migavum azhagaai velippadutha mudiyum... super priya..

Mahi said...

அழகான கவிதை ப்ரியா! ரொம்ப நல்லா இருக்கு!

MALARVIZHI said...

வலைதளத்திற்கு வந்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி பிரியா .கவிதை மிகவும் நன்றாக உள்ளது.எனக்கு கவிதை எழுத வராது.ஆனால் ரசிக்க தெரியும்.வாழ்த்துக்கள்.

ர‌கு said...

ரொமான்டிக்கான‌ க‌விதை ப்ரியா! ர‌சித்து வாசித்தேன்

ஆயிஷா said...

நல்லாருக்கு ப்ரியா.வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

மிக அழகான கவிதை எதார்த்த வரிகளில் என்னென்னவோ சொல்லுது ரசித்து இரண்டு முறை படித்தேன்...உங்கள் ஓவியம் மாதிரியே...வாழ்த்துகள்

♠புதுவை சிவா♠ said...

"காதல் என்பது
உயிர்ப் பிரவாகம்
அதில் வெற்றி கண்டால்
வாழ்தல் என்பது
வரப்பிரசாதம்"

அழகான கவிதை பிரியா வாழ்த்துகள் !

Priya said...

தொடர்ந்திடும் பிண்ணூட்டங்களுக்கும் உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல!

தோழி பிரஷா said...

அழகான கவிதை...வாழ்த்துக்கள்..

சத்ரியன் said...

ப்ரியா,

காதலில் வாழ்தல் சுகம்.
அழகிய காதல் வெளிப்பாட்டுக் கவிதை.

கோமதி அரசு said...

கவிதையை மிகவும் ரசித்தேன்.

வாழ்த்துக்கள்.

sakthistudycentre-கருன் said...

Priya சொன்னது…

அற்புதமான சிந்தனை... வாழ்த்துக்கள்!
////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Anonymous said...

வணக்கம்


பல நினைவுகளை தூண்டும் நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் 30/11/2012 இந்த கவிதை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் உங்கள் தளத்தக்கு வருவது இதுதான் முதல் முறை எம் வலைப்பக்கமும் வாருங்கள் மின்சாரம். நேரம் இருந்தாள்
http://2008rupan.wordpress.com
பார்ப்பதற்குhttp://blogintamil.blogspot.com/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Priya said...

வணக்கம் ரூபன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. நிச்சயம் உங்களது வலைப்பக்கத்திற்கு வருகிறேன்....

Chennai to Shirdi Tour Package said...

Amazing!!!

Post a Comment