Subscribe:

Pages

Tuesday, October 27, 2009

பெண்ணாக... ஒரு ஒவியம் !

சிறு வயதில் பென்சிலில் வரைய ஆரம்பித்து, பின் sketch pens, water paints என்று தொடர்ந்து இப்பொழுது oil painting வரை, என் வரையும் ஆர்வம் தொடர்ந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது பென்சில் drawing தான். அதில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாக எனக்கு தோன்றும், அதிலும் ஓவியர் மாருதி அவர்களின் ஓவியத்தில் வாழும் பெண்களெல்லாம் எவ்வளவு அழகு! அவைகளின் inspiration னில் நான் வரைந்த ஓவியம் இது, வண்ணங்களின்றி.


Thursday, October 22, 2009

நினைத்து மகிழ்ந்திட…..




"ன் என்னை ரொம்ப பிடிக்குது"
 என்றாள் அவள்
"ஏனென்றால் நீயொரு அழகான லூசு"
 என்றான் அவன்
"ஏன் என்மேல் இவ்வளவு லவ்"
 என்றாள் அவள்
"நீ உன் லவ்வை சொல்லவே இல்லையே, அதான்"
 என்றான் அவன்
"ஏன் நான் எழுதியவைக்கு பதில் இல்லை"
 என்றாள் அவள்
"எழுதுவதை மறந்துவிட்டேன்...உன் வார்த்தைகளை கண்டப்பின்"
 என்றான் அவன்
"எதுவுமே… இடையூராக இருக்காது, நமது அன்பில்"
 என்றாள் அவள்
"யாருமே"
 என்றான் அவன்
"உன் உயிர் நான் என்றாயே, நிஜமா?"
 என்றாள் அவள்
"...... விட்டால் தெரிந்துக்கொள்வாயா…உனக்காக"
 என்றான் அவன்

 அவளாக நானும்
 அவனாக நீயும்
 நம் எண்ணங்களின்
 உரையாடல் தொடர்கிறது…..
 வேடிக்கையாகவும் வலியோடும் !

Tuesday, October 20, 2009

ஏக்கம்

மதங்களைப் பற்றி எத்தனையோ கவிதைகளை படித்திருந்தாலும், ஏக்கம் என்ற தலைப்பில், நான் மிகவும் ரசித்தது இந்த கவிதையைதான்.

ப்போது
கிடைக்கும் ?
ஒரே நூலாய்
கீதை, குரான், பைபிள் !

Saturday, October 17, 2009

தீபாவளி !!!


deepam
Montages GIF pour ton Blog

அனைவருக்கும்
என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!



Thursday, October 15, 2009

வாழ்த்துக்கள் !!!

இன்று திருமன நாள் காணும் என் பெற்றோர்க்காக..........

எனக்கு உயிர் கொடுத்த
தந்தை
எனக்கு உருவம் கொடுத்த
தாய்
பெற்றவர்களாக மட்டும் அல்ல
என் கண்முன்னே தெரியும்
தெய்வங்களாக பார்க்கிறேன் !


என்னை முழுதாக
புரிந்துக் கொண்டவர்களாக……..
என்னென்ன எனக்கு
பிடிக்கும் பிடிக்காது என்பதை
நன்கு தெரிந்தவர்களாக………
தேவை எனக்கு என்று
சொல்லும் முன்னே
நிறைவேற்றுபவர்களாக………
நல்ல கல்வி அறிவையும்
சுகமான வாழ்க்கையும்
அளித்தவர்களாக……..


என் சின்ன சின்ன
சந்தோஷங்களைக்கூட
மிக பிரமாண்டமாய்
கொண்டாடுபவர்களாக…….
என் துயர்களில்
நான் கலங்கும் முன்னே
கண்ணீர் வடிப்பவர்களாக………
இன்றும் மடியில்
சாய்ந்துக்கொள்ளும் என்னை
கொஞ்சுபவர்களாக………..
பேசும்போது
"என்னடா" "எப்படிடா இருக்க"
"சரிடா" "byeடா" என்று
வார்த்தைகளிலும் கூட
அன்பு செய்பவர்களாக……..
இவர்களிடம் இருந்து
இதுவரை கிடைக்கவில்லை
என்ற ஏக்கத்தை
எனக்கு கொடுக்காதவர்களாக………


நான் பிறந்து
தாய் தந்தையாகும் வரத்தை
அவர்களுக்கு கொடுத்திருந்தாலும்
என் அப்பாவின் கண்மணியாக,
என் அம்மாவின் செல்லமாக
செல்லம் கொஞ்சப்படும்
நான் கொடுத்துவைத்தவள்தானே !


எனக்கு உயிர்க்கொடுத்து………..
நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்து……….
சிறந்த கல்வி அளித்து………
அழகான ரசனைகளை செலுத்தி……….
அன்பான பாசத்தை ஊட்டி………
சிறுவயதில் கூட
திட்டாமல் அடிக்காமல்
அதே சமயம் சரியான நேரங்களில்
கண்டிக்க தவறாமல்………
பொக்கிஷமாக
பாதுகாத்து வளர்த்த
என் பெற்றோர்க்காக
இக்கவிதை !


நான் குழந்தை பெற்றும் 
அவர்களுக்கு இன்னும்
குழந்தையாகவே…….


அந்த செல்ல குழந்தையிடமிருந்து
அன்பான திருமனநாள் நல்வாழ்த்துக்கள் !!!

Tuesday, October 13, 2009

ஆசை !

வார்த்தைகளில் மறைந்திருக்கும்
என் உணர்வுகளை படித்திடும்
உன் விழி அசைவுகளை பார்த்திட
ஆசை எனக்கு !

உணர்வுகளில் உயிர்த்திருக்கும்
என் மனதினை புரிந்திடும்
உன் உள்ளத்து துடிதுடிப்பை உணர்ந்திட
ஆசை எனக்கு !

என் கவிதைகளை
படித்தும் புரிந்தும் மகிழ்ந்திடும்
உன் இதழ் புன்னகையை ரசித்திட
ஆசை எனக்கு !

Thursday, October 8, 2009

எனக்கு பிடித்தவை..........

ண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும்
பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும்
இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும்
புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்
அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்
வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும்
அதிகாலை புரிந்திடும் காதல் பிடிக்கும்
காதலுடன் இதழ்கள் இணையும் முத்தம் பிடிக்கும்
மழலையின் மொழி பிடிக்கும்
பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்


தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்
கனவில் கண்டதை கவிதைகளாய் மாற்ற பிடிக்கும்
காலநேரம் தாண்டி படித்திட பிடிக்கும்
படித்த நல்ல கருத்துக்களை செயல்படுத்திட பிடிக்கும்
மனம் விரும்பும் சமயங்களில் எழுதிட பிடிக்கும்
படைப்பதைவிட கவிதைகளை ரசித்திட பிடிக்கும்
விதவிதமாய் புகைப்படம் எடுத்திட பிடிக்கும்
எடுத்ததை சலிக்காமல் திரும்ப திரும்ப பார்த்திட பிடிக்கும்


ஜில்லென்ற மழையில் நனைய பிடிக்கும்
கரைமணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்
மின்சாரமில்லா இரவில் மெழுகுவத்தியின் ஒளி பிடிக்கும்
முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்
பட்டாம்பூச்சியின் படபடப்பு பிடிக்கும்
பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்
தாலாட்டும் ரயில் பயணம் பிடிக்கும்
பயணத்தின் போது இசை கேட்டிட பிடிக்கும்
தொலைத்தூர பயணங்களில் தோளில் சாய்ந்து தூங்க பிடிக்கும்(அம்மாவின் தோளில் மட்டும், சமயங்களில் என்னவரிடமும்)


துவும் சுத்தமாக பளிச்சென்று இருப்பது பிடிக்கும்
செய்கின்றவைகளை நேர்த்தியாக செய்திட பிடிக்கும்
வாழ்வில் சின்ன சின்னதாய் மாற்றங்கள் பிடிக்கும்
முயற்சிகளை விடாமல் முயற்சிப்பது பிடிக்கும்
புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுப்பது பிடிக்கும்
கோபங்களை புன்னகையால் வென்றிட பிடிக்கும்
தனிமையில் நினைவுகள் பிடிக்கும்
நினைவுகளால் சிந்திடும் கன்ணீர்த்துளி பிடிக்கும் !

Tuesday, October 6, 2009

உயிர் பெறும் ஓவியங்கள் !

டிப்பதும் எழுதுவதும் எனக்கு பிடித்தமானவை, ஆனால் அதைவிட வரைவது மிகவும் பிடிக்கும். “A picture is worth a thousand words” என்பதைப் போல் என் வார்த்தைகள் மொழியிழக்கும் போது அவை ஓவியங்களாக மாறுவதுண்டு.

காதல் கோபம் கொண்டால்.....

காதல் மகிழ்வுண்டால்........

காதல் கண்ணீரில்...........

என்  ஓவியங்களின் முதல் ரசிகரான என்னவரின் கமென்ட் இது “உன்னை போலவே இருக்கு”. உடனடியாக எனக்கு நியாபகம் வந்தது Henry Ward Beecher  அவர்கள் சொன்னதுதான்: “Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures”.

Friday, October 2, 2009

மவுன ராகம் !

விதைக்குள் மரம்
கருவுக்குள் உயிர்
மனதுக்குள் நீ !

விடியும்போது பகல்
மடியும்போது இரவு
இரவும் பகலும் நீ !

வேர்கள் வெளியே
கிளைகள் உள்ளே
என் காதல் கனிமரங்கள் !

வாசமுள்ள வார்த்தைகள்
ஆனால்
ஓசைகள் இல்லை
இது ஒரு
மவுன ராகம் !

Thursday, October 1, 2009

கேட்டதில் ரசித்தது !!!

ளிமையான வார்த்தைகள் ஆனால் ஆழமான அர்த்தங்கள் நிறைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பொக்கிஷம், எனக்கு மிகவும் பிடித்த இதோ அந்த கவிதையான காதல்வரிகள்……


நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மவுனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உன்னை சொல்வேனே
நான் உன்னிடம், உயிர் நீ, என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய்சுகம் !

அன்புள்ள மன்னா
அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒலியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட !