Subscribe:

Pages

Tuesday, July 27, 2010

கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!!!

                  சாதாரணமாக வரைய தெரிந்திருந்தாலே போதும் உங்கள் வீட்டு வரவேற்பரை சுவரில் நீங்களே வரைந்த படத்தைக்கொண்டு அழகுப் படுத்திட முடியும். இதற்கு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. பொதுவாக எல்லோருக்கும் ஒரு சிறு பூவாவது வரைய தெரிந்து இருக்கும் இல்லையா! அதனால் அதற்கு எப்படி வண்ணங்கள் தீட்டுவது என்று பார்ப்போம்.


அதிக வண்ணங்கள் கூட அவசியமில்லை. தேவையானவை 5 அல்லது 6 நிறங்கள் அது வாட்டர் கலரா அல்லது ஆயில் கலரா என்பது உங்க விருப்பம். (இங்கே நான் பயன்படுத்தி இருப்பது ஆயில் பெயிண்ட்) 50 x 70cm அள‌வில் ஒரு பெரிய தாள் அல்லது கேன்வஸ் போர்ட், இரண்டு பிரஷ், பென்சில் கூடவே கொஞ்சம் பொறுமை நிறைய ஆர்வம்... !

செம்பருத்தியோ ரோஜாவோ அல்லது தாமரையோ முதலில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பூவை ஒன்றின் பக்கம் ஒன்றாக பெரியதும் சிறியதுமாக‌ நான்கைந்து பூக்களை பென்சிலால் வரைந்துக்கொள்ளுங்கள். இலைகள் கூட அவசியமில்லை. இங்கே நான் வரைந்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பூக்கும் ‘கொக்லிக்கோ’(Coquelicot(Fre.) - Poppy(Eng.)) மலர்கள்.


எப்போதும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் தேவை. முதலில் டார்க் கலரை கொண்டு பூக்களற்ற மற்ற பகுதியில் பெயிண்ட் பண்ணுங்க. அது உங்க வீட்டு வரவேற்பரையில் உள்ள கர்ட்டன் கலரிலோ... டேபிள் க்ளாத் கலரிலோ இருந்தால் கூடுதல் அழகை கொடுக்கும்.

வெறும் ஒரே நிறத்தைக்கொண்டு தீட்டாமல் ஓரங்களில் கொஞ்சம் கருப்பு நிறத்தையும் உட்புறமாக கொஞ்சம் வெள்ளையும் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.அடுத்து பூக்களுக்கான நிறத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். சிகப்பு, ஆரஞ்சு, பிங்க், நீலம்..... இப்படி எந்த நிறமாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் ஏற்கனவே தாளில் கொடுக்கப் பட்டிருக்கும் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் ஆக‌ இருந்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். பூவிதழ்களின் ஓரங்களில் கொஞ்சம் அழுத்தமாக, டார்காகவோ அல்லது லைட்டாகவோ வண்ணம் தீட்டினால் ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியாக தெரியும். பூத்தண்டுகளுக்கு பச்சையும் இடையிடையே கொஞ்சம் கருப்பு நிறமும் கலந்து அடித்து விடுங்கள்.

பொருத்தமாக ஃபிரேம் செய்து விட்டால், அவ்வளவுதான்.... ஒரு சிம்பிளான பெயிண்டிங் ரெடி! காசுக் கொடுத்து வாங்கும் பொருளை விட நாமே தீட்டிய ஓவியத்தைக்கொண்டு வீட்டை அழகுப்படுத்துவது சந்தோஷம்தானே! உங்களுக்குள் இருக்கும் வரையும் திறனை வெளிக்கொண்டு வரும் சிறு முயற்சியாக இது இருக்கட்டுமே.. கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!44 comments:

LK said...

hmm nalla irukku aana naan varancha .. vendam vidunga

Mrs.Menagasathia said...

mm very nice priya..

சுசி said...

அழகா இருக்கு ப்ரியா..

எல்.கே சொன்னத நானும் ரிப்பிட்டிக்கிறேன் :))))

♠புதுவை சிவா♠ said...

ஓவியத்தை அழகாக வரைய கற்று தந்தமைக்கு நன்றி ப்ரியா

மாலை நேரத்தில் பூக்கும் மலரான பவழ மல்லியை வரைந்து பார்கிறேன்.

தேவன் மாயம் said...

அழகாக வரைந்துள்ளீர்கள் பிரியா!!

சி. கருணாகரசு said...

ஓவியம் மிக அழகு .... பகிர்தலுக்கு மிக்க நன்றிங்க.

Karthick Chidambaram said...

நான் ஒரு காலத்தில் கேலிசித்திரகரானாய் ஓவியனாய் இருந்தேன் ... அந்த நினைவுகளை தூண்டி உள்ளீர்கள்.

ஓவியம் மிக அழகு .... பகிர்தலுக்கு மிக்க நன்றிங்க.

ஹேமா said...

ப்ரியா..சிரிக்காதீங்க.அழகாயிருக்கே சொல்லித் தறீங்களேன்னு கீறப்போய் கோடு போட்டா கோடு ஒரு பக்கமா இழுத்துக்கிட்டுப் போகுது.யார் யாருக்கு எது வருமோ அதையே பண்ணிக்கலாம் !

Anonymous said...

கொக்லிகோ பாடம்,படம் இரண்டும் அருமை.

கபீரன்பன்

ப்ரின்ஸ் said...

உங்க ஆயில் பெயின்டிங் மிக அழகா வந்திருக்கு ..வர்ணனையும் சூப்பர்

Chitra said...

கொஞ்சம் வரைந்து பார்த்தேன்..... வேற்று கிரகத்து alien முகங்கள் எட்டி பார்ப்பது போல வந்தது... இனிமே, ஒன்லி ரசனை.... நோ painting சோதனை!

சீமான்கனி said...

அற்ப்புதம்... அழகு...கொஞ்சமா வரைந்தது ரெம்ப அழகா இருக்கு...விளக்கமும் படிக்க எளிமையா இருக்கு ...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ஜெய்லானி said...

வாவ் சூப்பர் ...அசத்தல படம்

Madumitha said...

தூரிகை
எழுதிய
கவிதை.

r.v.saravanan said...

அற்புதம் பிரியா பகிர்தலுக்கு மிக்க நன்றி
முயற்சி செய்து பார்க்கிறோம்

சே.குமார் said...

ஓவியம் மிக அழகு.
பகிர்தலுக்கு நன்றி..!

சாருஸ்ரீராஜ் said...

பிரியா அருமையான ஓவியம்...

கனிமொழி said...

wow!! Nice painting class priya.. Surely i ll try... :)

Thanks for sharing...

அன்புடன் அருணா said...

பூ படத்துக்கு ஒரு பூங்கொத்து!!!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல முயற்சி.பேசாமல் மணிமேகலை பிரசுரத்தில் இதை ஒரு புக் ஆக்கி விடுங்களேன்

கலாநேசன் said...

அருமையான ஓவியம்

சௌந்தர் said...

நல்ல படங்கள்

g.aruljothiKarikalan said...

வரைந்து வெகு நாளாகிறது .........
முயற்சி செய்து பார்கிறென்.......

பாலன் said...

மிக எழிமையாகச் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றிகள் உங்கள் பதிவின் பின்னர் வரைந்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் உள்ளது வரைந்த பின்னர் சொல்கின்றேன், பயனுள்ள பதிவிற்கு மீண்டும் நன்றி

சுசி said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்..

http://yaavatumnalam.blogspot.com/2010/07/blog-post_29.html

siva said...

100 choclate kuduthathan
na variyavey armbipen..sariya..priyaakka.
so choclate parcel panidanum..

ok so cute paintngs priya akka....namakum paintingkum orou 100km thoram..so enaku theirnthathu orey visiam.
nalla sapdiuven..

varata..(thirumba varumula...)

Priya said...

கொஞ்சம் முயற்சிதான் செய்டுங்களேன் எல்கே!

நன்றி மேனகா!

நன்றி சுசி!

நீங்கள் வரைவீர்களா பு.சிவா?

நன்றி தேவன் மாயம்!

நன்றி சி. கருணாகரசு!

இப்பொழுது வரைவதில்லையா கார்த்திக்?

பொதுவா இப்படிதான் கோடுகளில் ஆரம்பிக்கிறது....அதனால் முயற்சி செய்யுங்க ஹேமா !

ந‌ன்றி கபீரன்பன்!

ந‌ன்றி ப்ரின்ஸ்!

//கொஞ்சம் வரைந்து பார்த்தேன்..... வேற்று கிரகத்து alien முகங்கள் எட்டி பார்ப்பது போல வந்தது//.... வ‌ரைவ‌தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்தான் சித்ரா!

ந‌ன்றி க‌னி!

த‌க‌வ‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி sweatha!

ந‌ன்றி ஜெய்லானி!

ந‌ன்றி Madumitha!

Priya said...

நன்றி சரவணன்!

நன்றி சே.குமார்!

நன்றி சாருஸ்ரீராஜ்!

நன்றி கனிமொழி, நிச்சயம் முயற்சி செய்து பாருங்க!

ஐய்... பூங்கொத்து:) மிக்க நன்றி அன்புடன் அருணா!

சி.பி.செந்தில்குமார்.. நல்ல யோசனைதான், நன்றி!

நன்றி கலாநேசன்!

நன்றி சௌந்தர்!

வ‌ரைவ‌தை விட்டு விடாதிங்க‌ அருள்ஜோதி!

ஆவ‌ல் உள்ள‌போதே வ‌ரைய‌ முய‌ற்சி செய்யுங்க‌ள் பால‌ன்!

தொட‌ர்ப‌திவு அழைப்பிற்கு ந‌ன்றி சுசி!

வெறும் 100 சாக்லெட்ஸ் போதுமா சிவா‌:)

siva said...

Priya akka,

100 சாக்லெட்ஸ் pothum.

appram ondru cholama..kuttamatengaley..!
ok unga comments location vasika konjam sirmama erukku.oru vela words konjam dark color or vasikra alavuku eruntha nalla erukum enpathu enathu panivana karuthu.matramalai vasaganai ethirparkinren.piragu thangal virupam..

Thank you

rk guru said...

வரைந்தேன் முடியவில்லை.......நீங்கள் வரைந்ததை பார்த்தேன் அழகாக இருகின்றது. ........வாழ்த்துகள்

ராசராசசோழன் said...

நான் நேசித்த பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ நிஜம்மான பூ போல இருக்கே.. பிரியா

Priya said...

சிவா முன்பே இதற்காக முயன்று பார்த்தேன். கலர் மாற்ற முடியவில்லையே:(!

நன்றி rk guru!

மிக்க நன்றி ராசராசசோழன்!

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi!

மகி said...

பூ அழகா இருக்குங்க ப்ரியா!

♠புதுவை சிவா♠ said...

"நீங்கள் வரைவீர்களா பு.சிவா?"

சில நேரங்களில் ப்ரியா ஆனால் நீங்கள் வரையும் ஓவியத்தை பார்த்த பிறகு அதை எல்லாம் ஓவியம் என்று சொல்ல முடியாது.

:-)

Ananthi said...

ரொம்ப சூப்பரா இருக்குங்க.. பிரியா..
வாழ்த்துக்கள்..

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

நல்லாருக்கு :) உங்க வலைப்பதிவுல இன்னும் நிறைய படிக்க வேண்டிருக்கு.

Priya said...

நன்றி மகி.

//சில நேரங்களில் ப்ரியா ஆனால் நீங்கள் வரையும் ஓவியத்தை பார்த்த பிறகு அதை எல்லாம் ஓவியம் என்று சொல்ல முடியாது.//....அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சிவா.
தொடர்ந்து வரையுங்கள்.

ந‌ன்றி ஆன‌ந்தி.

ந‌ன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன்!

இராஜராஜேஸ்வரி said...

ஓவியம் மிக அழகு .... பகிர்தலுக்கு மிக்க நன்றிங்க.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

ராஜி said...

சூப்பர். ஆனா, எனக்கு இம்புட்டு பொறுமை இல்லியே!

Ranjani Narayanan said...

மிகத் திறமை வாய்ந்தவராக இருக்கிறீர்கள், ப்ரியா!
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
விவரங்களுக்கு http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html:

இளமதி said...

வணக்கம் சகோதரி!...

இன்றைய வலைச்சரத்தில்
உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்.... வாழ்த்துக்கள்!

இங்கும் உங்கள் தளத்தில் அருமையான பதிவுகள் காண்கிறேன்...
வியப்பில் ஆழ்ந்தேன்..
தொடருகிறேன்...

Post a Comment