தவிக்கின்ற உணர்வுகள்
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !
பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !
சந்தோஷங்களில் மூழ்குகின்ற உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற உணர்வு !
உணர்வுகள் அலைமோதிட
உணர்ச்சிகள் ததும்ப
இதயத்தின் ஆழத்தில் எழுதிய உணர்வு !
பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !
எண்ணற்ற மாற்றங்களை
என் உள்ளம் சந்தித்த போதிலும்
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம்
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு
உயிர் இழந்து
முடிவாக எத்தனையோ விஷயங்கள்
மறந்த போதிலும்
மறக்காதொரு உணர்வு !
சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற உணர்வு !
சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உணர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !
*******************************************************
ச்சும்மா வரைஞ்சது !!!
***********************************************************
பதிவுலகில் சில வாரங்களாக தொடர் பதிவுகள்.... விருதுகள்.... என்று தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எனக்கு கிடைத்து இருக்கும் இரண்டாவது விருது இது.
இந்த விருதை அளித்த தோழி பத்மாவுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மிகவும் சந்தோஷத்துடன் இந்த விருதினை நானும் சில நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.









