Subscribe:

Pages

Monday, March 15, 2010

எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி......


Un Gars Une Fille: (a Guy a Girl) இங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் இது. தொடர் என்றால் நம்மூர் சீரியல்கள் போல் அறுக்காமல், இரவு எட்டுமணி செய்துகளுக்கு முன்னால் வெறும் 20 நிமிடங்களே வரும் நகைச்சுவைத்தொடர். தொடர்கதையாக இல்லாமல் தினமும் ஒரு எபிசோடாக வருவதினால் எப்பொழுது பார்த்தாலும் புரிந்துவிடும்.

ஒரு Coupleகுள் நடக்கும் தினசரி நிகழ்வுகளாக அவர்களுக்குள் நடக்கும் கொஞ்சல்கள், சின்ன சின்ன சண்டைகள், ஒருவரிடம் ஒருவர் காணும் குறைகள்.... என்று தொடரும் கதையில் எல்லாமே மிக‌ யதார்த்தமாக காட்டப்பட்டு இருக்கும். குறிப்பாக, ஒருவரை ஒருவர் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவதில் ஆரம்பித்து ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொள்வது, வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் சீன் போடுவது, படுக்கை அறையில் பேசும் பேச்சுக்கள், கூடவே நிகழும் சின்ன சின்ன காதல் விளையாட்டுக்கள்.....என்று எல்லாமே நகைசுவையாக இருக்கும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு தருணத்திலும் ஒருவர் ஒருவரிடம் காணும் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை மிகவும் நகைசுவையாக சொல்லும் தொடர் இது. நிமிடதிற்கு நிமிடம் சிரிப்பை வரவழைக்கும் தொடர் என்பதால், இத்தொடரைப் பார்க்க பிடிக்கும்.

இத்தொடரின் தனித்தன்மையே ஜான் அலெக்ஸ் என இருவர் மட்டுமே திரையில் வரும் நபர்கள். மற்ற க‌தாப்பாத்திரங்கள் வரும்போது அவர்களை பின்புறமாகவோ அல்லது வெறும் குரலாலே காட்டப்படுவார்கள். திரையில் இருவரின் முகத்தை மட்டுமே பார்ப்பதினால் போர் அடிக்கும் என்றால், அதுதான் இல்லை. அத்தனை பொருத்தமான‌ கணவன் மனைவி கதாப்பாத்திரத்தில் வரும் ஜானும் அலெக்ஸும் நிஜ வாழ்க்கையிலேயே கணவன் மனைவி. அதனால்தானோ என்னவோ காட்சிகள் அத்தனையும் வெகு இயல்பாக இருக்கிறது.

எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஏன் இணைந்து வாழ்கிறார்கள்... ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை...இதை உணர்த்தும் விதமாக ஒரு நிமிடம் சண்டை, அடுத்த நிமிடமே... கட்டிப்பிடித்து முத்தம் என்று ஜானும் அலெக்ஸும் The mirror of the couples ஆகவே தெரிகிறார்கள்.


தை தவிர எனக்கு பிடித்தது  La soirée de l'étrange என்ற நிகழ்ச்சி. இதில்  பயங்கரமான, மிகவும் பிரமிப்பான‌ உலகில் நடந்த, நடக்கின்ற‌ உண்மை சம்பவங்களை டாப் 30 என்று தொகுத்து வழங்குவார்கள். பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் ஃபீலுக்காகவே இந்நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பேன். சன் டிவியாலும் நெட்டின் உதவியாலும் நம்மூர் தொலைக்காட்சி நிகழச்சிகளையும்  பார்ப்பதுண்டு. அதில் ரொம்ப பிடித்தது கோபியின் நீயா நானா. பலத்தரப்பட்ட கருத்துக்களை இந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தாலும் பர்சனலாக எனக்கு கோபியின் பேச்சு திறமை பிடிப்பதனால், அது என்னை வெகுவாக கவர்ந்ததினால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் பார்ப்பேன்.

இவ்வளவு நீளமாக என்னை எழுத வைத்த நண்பர் Seemangani  அவர்களுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி பதிவை தொடர விரும்புகின்றவர்கள், தொடருங்கள்!

13 comments:

Chitra said...

Thats a nice review and write-up! :-)

seemangani said...

//ஜானும் அலெக்ஸும் The mirror of the couples ஆகவே தெரிகிறார்கள்.

English subtitles உடன் விடியோ கிடைக்காததால் உங்களுக்காக சில காட்சிகளை என் எழுத்துக்களில் கொடுத்திருக்கிறேன்………. //

இந்த வர்ணனையே நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.காட்சி விளக்கமும் அருமை...அழைப்பையேற்று இப்படியொரு அழகான பதிவை தந்ததிற்கு நன்றிகள்.

ஜெனோவா said...

நல்ல எழுத்து நடை பிரியா, வாழ்த்துகள்!

ஜெய்லானி said...

:-))

அம்பிகா said...

வருட கணக்கில் மெகாகா... சீரியல் போட்டு கொல்லும் நம்மூர்காரங்க இப்படி ஏதாவது போட்டால் நல்லாயிருக்கும்.
நல்ல பதிவு

MANO said...

THANKS FOR VISIT MY PAGE & YOUR COMMENTS

MANO

ஜெயா said...

நிகழ்ச்சி பற்றிய வர்ணணையே அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் போல ஆவலைத் தூண்டுகிறது பிரியா... நல்ல பதிவு.

ர‌கு said...

இதுமாதிரி "ர‌ம‌ணி Vs. ர‌ம‌ணி"ன்னு ஒரு ந‌கைச்சுவைத் தொட‌ர் ச‌ன் டிவியில‌ ஒளிப‌ர‌ப்பாச்சு. 'ம‌ர்ம‌தேச‌ம்' நாகா இய‌க்கியிருந்தார். அது ந‌ல்லாதான் இருந்த‌து. தேவ‌த‌ர்ஷினி ந‌ல்லா ந‌டிச்சிருந்தாங்க‌. ஏனோ ரொம்ப‌ நாள் போக‌ல‌.....அழுகை காட்சியே இல்ல‌ன்னு நிறுத்திட்டாங்க‌ளோ?!

'நீயா நானா' கோபி 'ட‌மில்'ல‌ பேசாம‌, த‌மிழ்ல‌ தெளிவான‌ உச்ச‌ரிப்போட‌ பேச‌ற‌துனாலேயே ர‌சிக்க‌ வெச்சுட‌றார் :)

Mohan said...

ரொம்ப இரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க;நன்றாக இருந்தது!

Priya said...

சித்ரா உங்க வேகம் எனக்கு பிடிச்சிருக்கு. பதிவை போஸ்ட் செய்த அடுத்த 17 நிமிடத்தில உங்க கமெண்ட்!

முதல்முறையாக என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்த உங்களுக்குதான் முதல் நன்றி seemangani!

க‌ருத்துக்க‌ளையும் வாழ்த்துக்க‌ளையும் த‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள்!
ஜெனோவா
ஜெய்லானி
அம்பிகா
MANO
ஜெயா
Mohan

ரகு//'நீயா நானா' கோபி 'ட‌மில்'ல‌ பேசாம‌, த‌மிழ்ல‌ தெளிவான‌ உச்ச‌ரிப்போட‌ பேச‌ற‌துனாலேயே ர‌சிக்க‌ வெச்சுட‌றார் :)//... ஆமா ர‌கு அத‌னால‌தான் அந்த‌ நிக‌ழ்ச்சியே ந‌ல்லா இருக்கு.அவ‌ரையும் நிறைய‌ பேருக்கு பிடிக்கிற‌து!

goma said...

உங்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சி எதுவென்று எங்களிடம் மட்டும் கேட்கவே கேட்காதீர்கள்

திரு திரு வென்று பெக்கு மாதிரி முழிப்போம்

goma said...

பேக்கு என்று வாசிக்கவும்
பெக்குன்னா என்னவென்று எல்லோரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்

Priya said...

goma........
//உங்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சி எதுவென்று எங்களிடம் மட்டும் கேட்கவே கேட்காதீர்கள்//..... புரிகிற‌து ந‌ம் நாட்டில் டிவி பார்ப்ப‌வ‌ர்க‌ளின் நிலை:-)
நன்றி!

Post a Comment