Subscribe:

Pages

Thursday, March 18, 2010

மன்னிப்பாயா…….

   
    காதலை நாம தேடி போகக்கூடாது தானாவே அது நம்ம தேடி வரனும்........ விண்ணைதாண்டி வருவாயாவில் சிம்பு சொன்ன மாதிரி இந்த பாட்டு நல்லா இருக்குமா கேட்டு பார்க்கனும் அல்லது கேட்க கேட்க பிடிக்கும் என்றில்லாமல் ஒரு இனிமையான பாட்டு முதல்முறை கேட்கும்போதே தானாகவே மனதில் நுழைந்துக்கொள்ள வேண்டும். .......இதமாக இதயத்தை வருட வேண்டும்.


நல்ல இசை, பாடிய‌வரின் குரல் இனிமை இவற்றுடன் பாடல்வரிகள் கொண்டே எப்பொழுதும் ஒரு பாடலை நான் ரசிக்கின்றேன். அப்படி நிறைய பாடல்கள் இருந்தும் தற்பொழுது என் மனதினை தொட்ட பாடல் மன்னிப்பாயா. பிடித்திருந்து விட்டு விலகிக்கொண்ட ஒரு பெண்னின் மன நிலையை அழகாக உணர்த்தும் பாடல். கேட்ட முதல் முறையே பிடித்துவிட்டது, குறிப்பாக பாடல் வரிகள் என்னை கவர்ந்துவிட்டது. ஒவ்வொரு முறை கேட்குபொழுது அந்த பாடலில் மூழ்கி நான் என்னை மறக்கிறேன்.


இந்த பாடலின் சிறப்பே இடையே வரும் திருக்குறள்கள் தான்.எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.தாமரை அவர்களின் வரிகளை மேலும் மெருகேற்றுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

காதலை(காதலனை)நினைத்து சிந்தும் கண்ணீர் போதுமே காதலை காட்டிக் கொடுத்து விட.........

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

காதல் வந்தாலே தனக்கென எதையும் வைத்து கொள்வார்களா காதலர்கள்………

புலப்பலென சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

காதலில் இதயமும் இதயமும் இணைவதுதானே அழகு........


பெண் :
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே……….

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…….

(ஒரு நாள்…)

ஆண் :
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே……

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே……..
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்.........

பெண் :
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே……….

ஆண் :
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

(ஒரு நாள்…)

பெண் :
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ?
போவாயோ கானல் நீர் போலே தோன்றி………
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்………

(ஒரு நாள்…)
(கண்ணே…)


மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?
மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?

ஒ...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ????????????

« ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ? » என்ற ஒற்றை வரியில் அவளின் மொத்த காதலும் « வரம் கிடைத்தும் தவர விட்டேன் » என்பதில் அவளின் புலம்பலும் « மன்னிப்பாயா » என்று கேட்பதில் காதல் வலியும் நன்றாகவே உணரமுடிகிறது.


ஜெஸ்ஸி மாதிரி இன்னும் எத்தனை பெண்கள் மன்னிப்பாயா என்று கேட்டு இருக்கிறார்களோ அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ....?!

31 comments:

கமல் said...

பாடல் விமர்சனமும் அப் பாடல் பற்றிய கருத்துக்களும் நன்றாக உள்ளன. மன்னிப்பாய அனைவரின் மனதினையும் கவர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

ஜெனோவா said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்,ofcourse எனக்கு எல்லா பாடல்களுமே பிடித்திருந்தது... அதற்காகவே ரெண்டு தடவ போனேன் ;-))

(இந்த பதிவுல ஏதும் மறைமுக message இல்லையே !! ;-) )

seemangani said...

அட பாருங்களேன்..உங்கள் பதிவு படிக்கும்போது இந்த பாடல் தான் கேட்டு கொண்டு இருக்கிறேன்....எனக்கும் மிக பிடித்த பாடல்...பாடியவர்கள்:ஷ்ரேயா கோசல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டீச்சர், ரொம்ப உருக வெச்சிட்டீங்க..:))

Chitra said...

அந்த பாட்டில் இவ்வளவு தாக்கம் இருக்கா? மிகவும் ரசித்து ஒன்றி போய் கேட்டு இருக்கிறீர்கள் என்று புரிகிறது. :-)

malarvizhi said...

மிகவும் ரசித்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றிங்க.

எழிழன் said...

படவரிசை 19/03/2010
http://tamiltop10ssss.blogspot.com/

மின்னல் said...

அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமையான இசை.

padma said...

நீங்கள் எழுதிய பிறகு தான் இப்போ கேக்கிறேன் .நா கொஞ்சம் ஸ்லோ .நல்லா இருக்கு எதோ ஒரு பழைய பாடலின் சாயல் இருக்கு .எதுன்னு கண்டுபிடிக்க முடில. நல்ல பாட்டுங்க

ரிஷபன் said...

இன்னும் கேட்கலை..வரிகள் படிச்சதும் கேட்க ஆசை வந்திருச்சு

ஜெயா said...

அண்மையில் வெளி வந்த பாடல்களில் இதயத்தை வருடும் இதமான பாடல் இது.பாடல் வரிகள் அருமை.ஷ்ரேயா கோசலின் குரல் இனிமை.. பாடலை ரசித்து அழகாக பகிர்ந்துள்ளீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

7ஜி ரெயின்போ காலனி படத்திலிருந்து ஷ்ரேயா கோசலின் குரலுக்கு நானும் ரசிகன்தான். அப்படியே பாட்டையும் போட்டிருக்கலாம்.

ர‌கு said...

இந்த‌ ப‌ட‌த்தில் வ‌ரும் 'ஆரோம‌லே'தான் என்னோட‌ ஃபேவ‌ரைட், 'ஹோச‌ன்னா', 'ம‌ன்னிப்பாயா'வை விட‌. ஒவ்வொரு முறையும் இந்த‌ பாட‌லை கேட்கும்போது, பாட‌லின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ரும் கிடார் இசையில் சொக்கிப்போகிறேன் :)

தமிழ் said...

மனதைப் பிசையும் பாடல் வரிகள் ..

Madumitha said...

ஜெய் ரஹ்மான்

saisayan said...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
enakku pidithathu.. nice article..!!

Mohan said...

இந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.ஆனால் இந்தப் பாட்டோட வரிகளுக்கும்,படத்தில் இந்தப் பாட்டு வரும் காட்சிக்கும்தான் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.

Priya said...

கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

//(இந்த பதிவுல ஏதும் மறைமுக message இல்லையே !! ;-) )....//ஆஹா, இப்ப‌டி ஒரு வில்ல‌ங்க‌மான‌ கேள்வியை கேட்டுடிங்க‌ளே ஜோ;)

//அப்படியே பாட்டையும் போட்டிருக்கலாம்//....ஆமா ஜெய்லானி, நினைச்சேன் ஆனா போடாம‌ விட்டுட்டேன்;(

அப்பாவி தங்கமணி said...

நானும் அந்த பாட்ட கேட்டேன் ப்ரியா. நல்ல வரிகள், நல்ல இசையும் கூட. உங்க பதிவும் அழகு தான் அந்த பாட்ட போலவே

அண்ணாமலையான் said...

நல்ல ரசனை..

PriyaRaj said...

One of my Favourite song right now...

Priya said...

நல்ல பாட்டு என்பதாலே நம் எல்லோரையும் கவர்ந்து விட்டது!
நன்றி அப்பாவி தங்கமணி,அண்ணாமலையான் & PriyaRaj!

அப்பாவி தங்கமணி said...

அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

Anonymous said...

//காதலை(காதலனை)நினைத்து சிந்தும் கண்ணீர் போதுமே காதலை காட்டிக் கொடுத்து விட.........//

காதலின் அருமையான வரிகள்..

My days(Gops) said...

//ஒவ்வொரு முறை கேட்குபொழுது அந்த பாடலில் மூழ்கி நான் என்னை மறக்கிறேன். //

swimming theriumah?

//இடையே வரும் திருக்குறள்கள் தான்//
chancey ila.. thanks for the info... enakku adhu thirukural nu theriavey theriaadhu :(

btw, nalla irundhadhu indha padhivu :)

கவிதன் said...

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்………

மிக அருமையான வரிகள்...! தாமரை அவர்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் தான்.... இப்பொழுது இன்னொரு முத்து!!!

Priya said...

அப்பாவி தங்கமணி.......
பார்த்தேன், தொடர் பதிவு அழைப்பிற்கு மிக்க நன்றி!
விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்!

நன்றி எனது கிறுக்கல்கள்!

My days(Gops).........மிக்க நன்றி!

//swimming theriumah?//....ஹா ஹா ஹா:)

//enakku adhu thirukural nu theriavey theriaadhu :(//.......
திருவள்ளுவர்க்கு வந்த சோதனை;(

கவிதன்........
//தாமரை அவர்களின் பாடல்கள் எல்லாமே சூப்பர் தான்.... இப்பொழுது இன்னொரு முத்து!!!//..... உண்மைதான். அவ‌ரின் வ‌ரிக‌ள் ம‌ன‌தை இதமாக வ‌ருடுகிற‌து! வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி!

அப்பு சிவா said...

உண்மை, உண்மை...

அழகான பாடல். எனக்கு மிக மிக பிடித்த இரண்டு பாடகர்கள் பாடியதால் வேறு, அதிகமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிவா

Priya said...

மிக்க நன்றி சிவா!

jey said...

it s superve

Post a Comment