Subscribe:

Pages

Monday, March 8, 2010

இரண்டாம் வாய்ப்பு !




ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !

நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.

எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..

ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……

வருந்துகிறேன்
என் மவுனத்தில் கரைந்த
அந்நாட்களை நினைத்து.

சொல்லியிருக்க வேன்டும்
ஏதாவது
எப்படியாவது
நீ புரிந்துகொள்ளும் வகையில் !

வேறொரு நாள்
பிரிந்தோம்.
நம்மிடையே இடைவெளி
நாம் பேசுவது நின்றுப்போனது. 
என் தவறுதான்
என்னால்தான் !
மீண்டும்
நம்பிக்கை கொள்கிறேன்
இதை மாற்றக்கூடும்
என்னால் மட்டுமே !

எத்தனை இரவுகள்
வெகு நேரமாகியும்
தூங்காமல் தவித்திருக்கிறேன்
ஏன் தெரியுமா
நீ என்னுடன் இருந்திருக்கிறாய்
நெருக்கமாக
என் வசம் இழுத்து
உன்னை அனைத்திருக்கிறேன்
என் போர்வைக்குள் !

சற்று நினைத்துபார்
உணர்ந்துக்கொள்வாய்
உன்னில் பாதியாக – நான் !

எத்தனை முறை
என் உணர்வுகளை
கரைத்திருக்கிறேன்
கண்ணீரிலே !

காத்துக்கொண்டிருந்து இருக்கிறேன்
எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்
ஏங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்
உன் தொடுதலை உணர்வதற்காக‌ !

உன்னுடன் சேர்ந்திருக்க
உன்னுடன் கைகோர்த்திருக்க
 முத்தம்
ஒன்றினை கொடுக்க
ஒரு முறையாவது !

எத்தனை விடியல்கள்
உன்னை தேடியபடியே
விழித்திருக்கிறேன்
ஆனால் நீயில்லை !

சில நேரங்களில்
கற்பனையில் நீ
என்னுடன்
என்னில் அக்கறையாக
பேசிக்கொண்டிருக்கிறோம்……
மறுபடியும் !

எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னருகில் இருக்கும்
என் இரண்டாம் வாய்ப்பை !

***

(இது என் க‌விதை அல்ல‌… மொழிப்பெயர்ப்பு செய்வது ரொம்ப பிடிக்கும் என்பதால் என்னை கவர்ந்த‌  ஒரு ப்ரெஞ்சு கவிதையினை நான் தமிழாக்கம் செய்ததுதான் இது)

36 comments:

பத்மா said...

ஒ மொழிபெயர்ப்பா ?tres bien

Madumitha said...

தங்களின் மொழிபெயர்ப்பு
மூலத்திற்கு
துரோகம் செய்திருக்க
வாய்ப்பில்லை
என்று தான் தோன்றுகிறது
original ஐ
படிக்காவிட்டாலும் கூட.

அன்புடன் அருணா said...

ஓ மொழி பெயர்ப்பா!

Raghu said...

என்ன‌டா இவ்வ‌ளோ அழுத்த‌மா ஒரு க‌விதையை எழுதியிருக்கிங்க‌ளேன்னு நினைச்சேன்.

ரொம்ப‌ ந‌ல்லா மொழிபெய‌ர்த்திருக்கிங்க‌:)

ஜெய்லானி said...

ஓ..ஓ...ஓ மொழி பெயர்ப்பா!

Chitra said...

கவித்துவம் கெடாமல் அருமையாக மொழி பெயர்த்து தந்ததற்கு, பாராட்டு.
This also shows your fluency in French. :-)

சீமான்கனி said...

ஆஹா...காதலின்...ஏக்க உணர்வுகளை அப்படியே சொல்லுது கவிதை மொழிபெயர்ப்பும் சுலபம் இல்லை வார்த்தைகளை அழகாய் சேர்த்து கோர்த்து இருக்கீர்கள்...படித்ததும் மணம் பாரமாகி போகிறது....
வாழ்த்துகள்... இன்னும் இதுபோல் தொடருங்கள்...

சீமான்கனி said...

வணக்கம் பிரியா...இங்கு வந்து பார்க்கவும்...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_08.html

tt said...

//ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.//

கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் தவிப்பு தெரிகிறது.. நல்ல மொழிபெயர்ப்பு பிரியா..

Priya said...

//ஓ மொழி பெயர்ப்பா!//.....Same reaction:)

Madumitha.....
சென்ற வருடம் அரசு யுனிவர்சிட்டியில் இருந்து எழுதப்பட்ட The Psychology of Adolescence என்ற புத்தகம் ப்ரெஞ்சு ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சில பக்கங்கள் எனக்கு மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த சின்ன அனுபவத்தை கொண்டுதான் இதை எழுதினேன். ஒரிஜினலை பாதிக்காத அளவில்தான் எழுதி இருக்கிறேன்னு நினைக்கிறேன்.

ர‌கு......
//என்ன‌டா இவ்வ‌ளோ அழுத்த‌மா ஒரு க‌விதையை எழுதியிருக்கிங்க‌ளேன்னு நினைச்சேன்.//....
அப்பவே புரிஞ்சு போச்சா இதை நான் எழுதலைன்னு:-)

அது தமிழில்தான் கவித்துவமா தெரியுது சித்ரா!

seemangani.......
//மொழிபெயர்ப்பும் சுலபம் இல்லை//....உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் அது!தொடர்பதிவு அழைப்பிற்கு மிக்க நன்றி!!!

ஆமா தழிழ், இழந்த காதல் மீண்டும் கிடைக்காதா என்ற தவிப்புதான்!

ஜெயா said...

தாமதமாகத் தான் படித்தேன்.. மொழி பெயர்த்த கவிதையாக இருந்தாலும் அழகான காதல் கவிதை பிரியா.....

Mohan said...

படிக்கும்போது மொழிபெயர்ப்பு கவிதை போல் இல்லாமல் இருந்ததே இந்தக் கவிதையின் வெற்றி!

Priya said...

//தாமதமாகத் தான் படித்தேன்.. //....
தாமதமானாலும் ப‌ரவாயில்லை ஜெயா, வந்துட்டீங்களே அதுவே போதும். நன்றி!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மோகன்!

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான மன உணர்வை சொல்லிய கவி வரிகள் அழகு

கவி அழகன் said...

நெஞ்ச தொட்ட கவிதை

திவ்யாஹரி said...

ஒ மொழிபெயர்ப்பா.. ரொம்ப நல்லா மொழி பெயர்த்து இருக்கீங்க பிரியா.. அழகான கவிதை..

திவ்யாஹரி said...

sorry ம்மா.. உங்க ப்ளாக் பக்கம் வரவே இல்ல ரொம்ப நாளா.. :(

Priya said...

மிக்க நன்றி நினைவுகளுடன் -நிகே!

யாதவன்...இதுதான் உங்க‌ நிஜப்பெயரா?

திவ்யாஹரி......
//ஒ மொழிபெயர்ப்பா..//....நீங்களுமா!?

//sorry ம்மா.. உங்க ப்ளாக் பக்கம் வரவே இல்ல ரொம்ப நாளா.. :(//.......பரவாயில்ல.இதற்கு எதுக்கு சாரி, முடியும்போது வாங்க திவ்யா.

சத்ரியன் said...

ப்ரியா,

கவிதை அழகா இருக்கு.

(மூலக் கவிதையின் கவிஞர் பெயரைக் குறிப்பிடலாமே>)

நட்புடன் ஜமால் said...

note Sathriyan's

மொழியாக்கமே இவ்வளவு அழகா!!!

அதன் மூல வடிவத்தை சுவைக்க கொடுத்து வைத்துள்ளீர்கள் ...

"உழவன்" "Uzhavan" said...

நல்லா பண்ணியிருக்கீங்க..

sury siva said...

மூலக் கவிதையின் கவிஞர் பெயரைக் குறிப்பிடலாமே>)

subbu rathinam

PPattian said...

கவிதை நன்று. உங்கள் ஓவியங்கள் அழகு.. அந்த பட்டாம்பூச்சி ஓவியம் அழகோ அழகு....

வினோத் கெளதம் said...

கவிதை நன்று..மொழிபெயர்ப்பு அபாரம்..

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

அழகான கவிதை...
அதே போல் என் உலகத்திற்கு வந்து சென்றதற்கு நன்றி

அன்புடன்
வைகையின் சாரல்
http://nirmalbabu.blogspot.com

PriyaRaj said...

Wow very nice poem...u have a wonderful space ..thanx for comment in my blog ..

KUTTI said...

சிறப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்

gils said...

wow...mozhi peyarpu mathirye terileenga..soopera iruku :) came to ur blog from annam's blog. Semma kavithai

~gils

Priya said...

//சத்ரியன் said...(மூலக் கவிதையின் கவிஞர் பெயரைக் குறிப்பிடலாமே>)//நிச்சயமா,இதோ அந்த அழகிய கவிதையை எழுதியவங்க பெயர்:Emily Rheault!

நட்புடன் ஜமால்
"உழவன்" "Uzhavan"
sury
PPattian : புபட்டியன்
வினோத்கெளதம்
வைகையின் சாரல்
PriyaRaj
MANO
gils
பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!

ரசிகன்! said...

எத்தனை முறை
என் உணர்வுகளை
கரைத்திருக்கிறேன்
கண்ணீரிலே !
//

unarchchivasappada vaitha kavidhai..

mela ulla varigaley podhum.. muzhumaiyaai unarvai velippaduththa...

romba arumaiya irukkunga...

Priya said...

மிக்க நன்றி ரசிகன்!

ரசிகன்! said...

ingu padhivittamaikku mannikkavum!!!

its not a big deal to insert text in photos... u can do it very easily with picasa.. its about 8 mb.. i couldn find ur id here.. so jus posting here.. del after reading..

durai.vt@gmail.com

Cheers,
Rasigan

Rasigan said...

ada ... idhu mozhi peyarppaa :O

Priya said...

மிக்க நன்றி ரசிகன் உடனே பதில் தந்தமைக்கு.

Anonymous said...

//எத்தனை விடியல்கள்
உன்னை தேடியபடியே
விழித்திருக்கிறேன்
ஆனால் நீயில்லை !//
வலிகள் மிகுந்த வார்த்தைகள்
மொழிபெயர்ப்பு வீண் போகவில்லை
வாழ்த்துக்கள்.

Priya said...

//மொழிபெயர்ப்பு வீண் போகவில்லை//...ரொம்ப சந்தோஷமா இருக்கு!
நன்றி எனது கிறுக்கல்கள்!

Post a Comment