Subscribe:

Pages

Saturday, July 3, 2010

காதலாகி...... கசிந்துருகும் வேளையிலே!

          ரு வருடம் முன்பு இங்கிருந்து இந்தியா சென்று வந்த உறவினரிடம் இருந்து துணியில் வரையப்பட்ட பெயிண்டிங்ஸ் இரண்டு எனக்கு பரிசாக கிடைத்தது. அதில் வரையப்பட்டு இருந்ததை பார்த்ததும் எனக்கு அப்படியே அதை வரையவேண்டுமென தோன்றியது. ஒரே அளவில்(30x30cm)  இரண்டு கேன்வஸ் போர்டுக‌ள் வாங்கிவந்து நான்கு வாரங்களில் இரண்டு படங்களையும் வரைந்து முடித்தேன்.

சமீபகாலமாக ஓவிய கண்காட்சிகள் எதிலும் பங்குபெற‌ விருப்பமில்லாமல் போனதால் வரைந்த இவ்விருப்படங்களையும் என் வீட்டின் சுவற்றை அலங்கரிக்க வைத்துக்கொண்டேன்.
பொதுவாக நான் ஆசையாய் வரையும் படங்களை காசாக்கி பார்ப்பதில் விருப்பம் இல்லை என்ற போதிலும், தானாகவே சில சமயம் அப்படி அமைந்துவிடுகிறது. இந்த படங்களை விற்றதும் அப்படிதான்... ஒரு வருடமாக சரியான தொடர்பு இல்லாமல் போன தோழி ஒருத்தி சென்ற மாதம் வீடு தேடி வந்தாள். வந்தவள் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த பெயிண்டிங்ஸை பார்த்ததும் பிடித்துப்போய் உடனே வேண்டுமென சொன்னாள். இன்னும் வார்னிஷ் கொடுக்கல, விரைவில் முடித்து த‌ருவதாக‌ சொன்னேன். ‘இதை வரைய எத்தனை மணி நேரங்கள் ஆகி இருக்கும்?’ என கேட்டுக்கொண்டவள், 'சும்மா வாங்கிக்கொள்ள மாட்டேன். அதற்கான பணத்தை கொடுத்தே பெற்றுக்கொள்வேன்’ என்றாள். கடைசியில் அவள் விரும்பியபடியே நடந்தது. நானே தேடி போகாமல் தானாகவே நான் வரைந்த படங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் சன்மானமும் அதிக சந்தோஷத்தையே கொடுக்கிறது.

சொட்ட சொட்ட கவிதைகளில்தான் காதலை சொல்ல‌ முடியுமா... வண்ணங்களைக்கொண்டு ஓவியங்களிலும் சொல்வதற்கான சிறு முயற்சிதான் இது!

37 comments:

Mrs.Menagasathia said...

wowwww very beautiful..well done priya!!

ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசம் ப்ரியா... இரண்டுபடமும் தம்பதியர்களின் காதல் உணர்வுகளை தெரியப்படுத்துகின்றன

பொதுவா நான் கவிதை எழுதுவதில்லை இந்த படங்களை பார்த்ததும் கவிதை எழுதணும்ன்னு தோன்றியது...

முதல் படத்துக்கான கவிதை

நான் மீட்டும் வீணையாய்
நீ இருந்த போதிலும்
வீணையிலிருந்து வரும்
சப்தங்களில் நான்
சத்தமின்றி
அடங்கிப்போகின்றேன்...

இரண்டாவது படத்துக்கான கவிதை

தொட்டு பேசிய
கைகளிரண்டு
தொட்டு பேசிய
கால்களிரண்டு
தொடாமல் பேசிய
மனங்களிரண்டு...

LK said...

arumai priya vaalthukkal

கலாநேசன் said...

கண்ணைக் கவரும் கலக்கல் ஓவியங்கள்.

seemangani said...

ஆஹா அழகான ஓவியம் பிரியா பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு....வசந்த் மாப்பியோட கவிதையும் ஆப்ட்டா இருக்கு புது டெம்ப்ளேட் சூப்பர்...எங்கே பிடிச்சிங்க???ஒவ்வொரு sottilum காதல் சொல்ல உங்கள் தூரிகை சமைத்த ஓவியத்தால் மட்டுமே முடியும்...வாழ்த்துகள்...

Madumitha said...

நூறு கவிதைகள்
சொல்லத் தவறியதை
ஒரு நல்ல ஓவியத்தால்
சொல்லமுடியும் பிரியா.

வசீகரமான ஓவியங்கள்.
வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

அருமை பிரியா அருமை தளத்தின் புதுமை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

நானே தேடி போகாமல் தானாகவே நான் வரைந்த படங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் சன்மானமும் அதிக சந்தோஷத்தையே கொடுக்கிறது.

நீங்கள் சொல்வது சரி அதில் கிடைக்கும் திருப்தியும் மன நிறைவும் தனி தான்

நீங்கள் சொல்வது சரி தான்

உங்கள் தூரிகை எழுதிய கவிதை

அஹமது இர்ஷாத் said...

அருமைங்க ப்ரியா...அசத்தல்...

Anonymous said...

WOW!!!

ர‌கு said...

அட்ட‌காச‌ம் ப்ரியா! ஓவிய‌ம் உங்க‌ளுக்கு க‌ட‌வுள் அளித்த‌ வ‌ர‌ம்...விளையாடுறீங்க‌

ஜெயா said...

அழகான ஓவியம் பிரியா.

``கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்’’
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்”

இந்தக் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது....

ஹேமா said...

எங்கடா ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன்.இதுதான் சங்கதியா !


தன்னையே தருகிறது
பூத்த பூ...
உடன் பழமாய் !

வெட்கியது நிலவு
நீ...
வெட்கித்த பின் !

பாராட்டுக்கள் போதாது ப்ரியா.அவ்ளோ அழகு.தேர்ந்தெடுத்த வர்ணங்கள் !

ரிஷபன் said...

ஓவியங்கள் இரண்டுமே அழகோ அழகு..

மங்குனி அமைச்சர் said...

அழகு மேடம்

கமலேஷ் said...

அருமையான ஓவியங்கள்...
மிகவும் ரசிக்க முடிகிறது..

சுசி said...

முயற்சி வெற்றிதான் ப்ரியா..

அவ்ளோ அழகா இருக்கு.

சுசி said...

புது டெம்ப்ளேட்டும் அழகு.

ஜெய்லானி said...

//சொட்ட சொட்ட கவிதைகளில்தான் காதலை சொல்ல‌ முடியுமா... வண்ணங்களைக்கொண்டு ஓவியங்களிலும் சொல்வதற்கான சிறு முயற்சிதான் இது!//

உண்மைதான் படிப்பதை விட ஒரு படம் ஆயிரம் காவியம் , கவிதை சொல்லும்.


படங்கள் ஏ பிளஸ் சூப்பர்..!!

malarvizhi said...

அற்புதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

//சொட்ட சொட்ட கவிதைகளில்தான் காதலை சொல்ல‌ முடியுமா... வண்ணங்களைக்கொண்டு ஓவியங்களிலும் சொல்வதற்கான சிறு முயற்சிதான் இது//

ஓவியங்கள் இரண்டுமே அழகோ அழகு..

அண்ணாமலை..!! said...

எனக்குப் பொறாமையா இருக்குங்க!
ரொம்பவே அற்புதமான ஓவியங்கள்!

வைகறை நிலா said...

அற்புதமான ஓவியம்..
பெண் வெட்கப்பட்டு தலையை தாழ்த்தியிருப்பதுபோல் வரைந்திருப்பது இனிய பேசும் கவிதை
அற்புதமான திறமை உங்களுக்கு...

Priya said...

நன்றி மேனகா!

வாங்க வசந்த்... கமெண்டே கவிதையா... சூப்பர்! மிக்க நன்றி கவிதை இரண்டும் மிக அருமை படங்களுக்கு பொருத்தமா இருக்கு!

நன்றி LK!

நன்றி கலாநேசன்!

நன்றி கனி.புது டெம்ப‌லேட் பிடிச்சிருக்கா, நன்றி!(From Deluxe templates)

நன்றி மது மேடம்!

நன்றி சரவணன்!

நன்றி இர்ஷாத்!

நன்றி அனாமிகா!

இந்நேரத்தில் வரம‌ளித்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் ரகு!

வாங்க‌ ஜெயா, மீண்டும் க‌விதையா... மிக்க‌ ந‌ன்றி!

ஆ.. இன்னுமொரு க‌விதை... ரொம்ப‌ அழ‌காக எழுதி இருக்கிங்க‌ ஹேமா, ந‌ன்றி!

ந‌ன்றி ரிஷ‌ப‌ன்!

ந‌ன்றி மங்குனி அமைச்சர்! மேட‌ம் எதுக்கு, ச்சும்மா ப்ரியான்னே சொல்லுங்க‌!

உங்க‌ ர‌ச‌னைக்கு நன்றி க‌ம‌லேஷ்!

மிக்க‌ ந‌ன்றி சுசி!

ந‌ன்றி ஜெய்லானி!

ந‌ன்றி ம‌ல‌ர்விழி!

ந‌ன்றி குமார்!

ந‌ன்றி அண்ணாம‌லை!

மிக்க‌ ந‌ன்றி வைக‌றை நிலா!

சாருஸ்ரீராஜ் said...

பிரியா அருமையான ஓவியங்கள் ,,,very nice. no words to say.

Sowmya said...

very nice paintings. priya.

Priya said...

வாங்க சாருஸ்ரீராஜ்... மிக்க நன்றி!

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப ரெம்ப அழகா இருக்கு ப்ரியா... பெரிய கிப்ட் இது உங்களுக்கு கடவுள் குடுத்தது... வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

வண்ணங்களுக்குள்ளே வார்த்தைகளை உள்ளடக்குதல் என்பது இது தானோ?உங்கள் ஓவியங்கள் கலர் கலராய் கவிதை பேசுகின்றன. வாழ்த்துக்கள்

இனியாள் said...

Arputhamaana oviyangal, vaazhthukkal priya.

Ganesan.MR said...

Wonderful drawings. Congrats and all the best.
http://vrnew.blogspot.com/

அம்பிகா said...

மிக அழகான ஓவியங்கள்.
\\சொட்ட சொட்ட கவிதைகளில்தான் காதலை சொல்ல‌ முடியுமா... வண்ணங்களைக்கொண்டு ஓவியங்களிலும் சொல்வதற்கான சிறு முயற்சிதான் இது! \\
காதல் ரசம் சொட்டும் அருமையான ஓவியங்கள்.
கொஞ்சம் லேட்டா வந்திருக்கேனோ?

பிரியமுடன் பிரபு said...

மிக மிக மிக அழகான ஓவியங்கள்.

Priya said...

நன்றி அப்பாவி தங்கமணி!

நிஜமா என் ஓவியங்கள் கலர் கல‌ராய் கவிதை பேசுகிற‌தா!!!?... மிக்க நன்றி தமிழ் மதுரம்!

நன்றி இனியாள்!

நன்றி Ganesan.MR!

நன்றி அம்பிகா!லேட்டாவா.. எப்ப வேணும்னாலும் வாங்க, ஆனா கன்டிப்பா வாங்க:)

நன்றி பிரபு!

siva said...

:)

Priya said...

வாங்க‌ சிவா, நன்றி.

அப்பு சிவா said...

வழக்கம் போல் அற்புதம். தொடர்ந்து வரையுங்கள்.

Priya said...

நன்றி அப்பு சிவா!

Post a Comment