Subscribe:

Pages

Friday, February 11, 2011

நேசித்து வரைகிறேன்!


               சின்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்படுத்தி பார்க்க முயல்கிறது. இங்குள்ள ஓவியர்கள் கடற்கரை சாலையில் வரைய அமர்ந்தாலே பெரும்பாலும் பென்சில் ஸ்கெட்ச்தான் பண்ணுவார்கள். அதிலும் Portraits தான் அதிகமாக இருக்கும். எனக்கும் சிறு வயதில் இருந்தே பென்சில் டிராயிங் மிகவும் பிடிக்கும் என்பதால் நிறைய பெயிண்டிங்ஸ் என தொடர்ந்தாலும் இடையிடையே இப்படி பென்சில் ஸ்கெட்ச் செய்வதுண்டு.

இயற்கை எழில் நிறைந்த இடங்களை வரைந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதோ... இங்கே கீழே காணும் முதல் இரண்டு படங்கள் அப்படி முயற்சி செய்து பார்த்ததுதான்.




வரைந்தப் ப‌டங்களை கணினியில் ஏற்றியபோது தொடர்ந்த கலைத்தாகத்தால் மீண்டும் சில மாற்றங்கள் கொண்டன இவ்விருப்படங்களும்.... ஆனால் இம்முறை கணினியின் உதவியோடு! படங்களை காண.... இங்கே செல்லவும்.

பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபம். அதிக நேரம் தேவைப்படுவதில்லை. பெயிண்ட்ஸ், பிரஷ்கள், கேன்வாஸ் போர்ட், பெயிண்டிங் மீடியம்ஸ்... என பொருட்கள் பரவி கிடக்கும் நிலையும் இல்லை... வேலை முடிந்த பிறகு பிரஷ்களை சுத்தமாக கழுவி வைப்ப‌தில் ஆரம்பித்து எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைக்கும் வேலையும் இதில் இல்லை. தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser மட்டுமே.

என்னென்னவோ வரைந்துப் பார்த்தாலும் பூக்களை வரைவதில் அலாதி பிரியம் இருக்கத்தான் செய்கிறது.


பொதுவாக பென்சில் ஸ்கெட்சில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் பூக்களைக்கொண்டே தங்கள் வரையும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

வரையும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். மிக மெலிதான கோடுகளால் அவுட் லைன்களை போடவேண்டும். முடிந்தவரை அழித்து அழித்து கோடுகள் மேல் கோடுகள் வரைவதை தவிர்க்க வேண்டும். Pencil strokes பண்ணும்போது அழுத்தம் இல்லாமல் ஓரே சீராக இருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் மிக அழுத்தமான strokes கொடுத்து கான்ட்ராஸ்ட் காட்டலாம். இலைக்களுக்கு அப்படி செய்தால் நன்றாக இருக்கும். பின் cotton swab அல்லது tissue paper கொண்டு pencil strokesசை சற்று மெதுவாக தேய்த்துவிட்டால் போதும், சுலபமான பென்சில் ஸ்கெட்ச் ரெடி!









47 comments:

சீமான்கனி said...

ஐ...நான்தான் பஸ்ட்டு...

சீமான்கனி said...

கருப்பு வெள்ளையிலும் கலக்கலாதான் இருக்கு ....

சீமான்கனி said...

pencil strokes முயன்று பார்த்தேன் அருமை ...

Ram said...

ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின் வந்து நிக்குது.. பலர் அவசரமா ஓடி போய் ஏறுறாங்க.. அந்த இன்ஜின்க்கு பக்கத்துல ப்ளாட்பார்ம்ல ஒரு கடை இருக்கு.. சேலைய எடுத்து இடுப்புல சொருகிட்டு ஒரு பொம்பள கடைய பாத்த மாதிரி இன்ஜின் பக்கம் பின்னாடி காமிச்சுகிட்டு பேப்பர் டம்ளர்ல காபி குடிக்கிறா.. கீழ ஒரு 3வயசு பையன் மேல கிழிஞ்ச சட்ட போட்டுகிட்டு கீழ டவுசர் போடாம ஒத்த கையில தலைய சொரிஞ்சிகிட்டு இன்னொரு கையில அந்த டம்ளர எக்கி எக்கி கேக்குறான்.. ஆனா அந்த பொம்பள அத பத்தி கவல படாம நேரா பாத்த மாதிரி காபி குடிக்கிறா.. சுத்தி இருக்குற மக்கள் கொஞ்ச பேர் அந்த பக்கம் வர போற டிரெயினுக்காக வெயிட பண்றாங்க.. சிலர் வந்திருக்குற டிரெயின்ல ஏறுறாங்க.. சிலர் இந்த காட்சிய பாக்குறாங்க.. இதுல டிரெயினுக்காக வெயிட் பண்றவங்க மூஞ்சில ஏக்கம், டிரெயில ஏறுறவுங்க மூஞ்சில அவசரம், அந்த காட்சிய பாக்குறவங்க மூஞ்சில பாவம், அந்த குழந்தை மூஞ்சில பசி அந்த பொம்பள மூஞ்சில அலட்சியம்.. இது எல்லாம் தெரியுது.. சுத்தி இருக்குற மக்கள் எல்லா விதத்துலயும் இருக்காங்க.. அதாவது வயசானவங்க, ஸ்கூல் பையன், பொண்ணு.. எல்லாம் கலந்து.. இதை வரைதல் சாத்தியமா.???

Menaga Sathia said...

excellent priya!!

Yaathoramani.blogspot.com said...

மிகப் பிரமாதம். குறிப்பாக அந்தப் பூ படம்
ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்க
பூ மலர்தலைப் பார்பதைப் போலவே இருந்தது.
தொடர வாழ்த்துக்கள்

Chitra said...

Priya.......... Love them, ma! You are amazing!!!

Anonymous said...

எக்ஸலண்ட் ப்ரியா! கடைசிப் படத்துல பூவுக்கு பக்கத்தில ஒரு சின்ன இலை மடிந்த மாதிரி இருக்கே, ஐயோ, அவ்வளவு சூப்பர்! அது செம்பருத்தி பூ தான?
பூவ பார்த்துக்கிட்டே வரைஞ்சீங்களா? இல்ல நினைச்சுக்கிட்டேவா? லவ்லி :)

கோநா said...

very nice priya.

தினேஷ்குமார் said...

பென்சில் பிடித்தவரெல்லாம் சித்திரம் தீட்டமுடியுமா தோழி உங்களுக்கென ஆண்டவன் கொடுத்த அற்புத வரமது .........

சத்ரியன் said...

அழகோவியம்.

Unknown said...

no no no..

...நான்தான் பஸ்ட்டு

Unknown said...

ம் என்ன சொல்ல

உங்களால் முடியும்

எளிமைய சின்ன சின்ன ஓவியம் எப்படி வரைவது எப்படி கத்து கொடுத்ததுக்கு முதலில் நன்றி

சின்ன சின்ன பூக்களில் இருந்து கட்டிடங்கள் வரை

முப்பாட்ட பரினமமும் கலந்து

எளிமைய வரைறீங்க.

உங்களால் எல்லாமே சிறக்க வரைய முடியும்.

எல் கே said...

ப்ரியா கடவுளின் வரம் இது.. வாழ்த்துக்கள்

Unknown said...

மிக மிக அருமை வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

super priya...

r.v.saravanan said...

கலக்கலா இருக்கு ப்ரியா வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

சூப்பர் ...!! படங்கள் வரையும் பேப்பருக்கு கீழே எக்ஸ்ரே வைத்தால் அழுத்தம் அதிகம் கிடைக்காது..

3 டைமன்ஷன் படம் அழகோ அழகு :-))

G.AruljothiKarikalan said...

romba nalla irukku priya...

நிலாமகள் said...

வரைந்ததும் , அதற்கான குறிப்புகளும் வெகு அழகு!! தம்பி கூர் மதியன் விவரித்த காட்சியை அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாமா...?! முடியாதென்ற சொல் பிரியா அகராதியில் nil !

சுசி said...

ஒரு மொட்டு இதழ் விரித்து மலர்ந்தது போல் இருக்கு நீங்க படிப்படியா பூவை வரைந்த விதம்.

இயற்கையும் அவ்ளோ அழகா உங்க கைவழி.

கவிநா... said...

வாவ்... பேரழகுங்க ப்ரியா உங்க ஓவியம்...
நீங்க சொல்றது மாதிரியே பென்சில் ஓவியம் கொஞ்சம் சுலபம். ஆனால், அதிலும் இவ்வளவு அழகான ஓவியம் உங்கள் கைவழி தான் வரமுடியும். அற்புதம்ங்க...
மூன்று படமுமே வெகு அருமை... கணிணியில் செய்த மாற்றமும் ரொம்ப அழகு... கலக்குங்க..

Raghu said...

கொஞ்சம் பெருமூச்சு கொஞ்சம் பொறாமை :)

//பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபம். அதிக நேரம் தேவைப்படுவதில்லை. பெயிண்ட்ஸ், பிரஷ்கள், கேன்வாஸ் போர்ட், பெயிண்டிங் மீடியம்ஸ்... என பொருட்கள் பரவி கிடக்கும் நிலையும் இல்லை//

ஹுக்கும்..எனக்கு பென்சில்லேயே வரைய வராது :(

GEETHA ACHAL said...

ஆஹா...சொல்ல வார்த்தை இல்லை...

உங்கள் திறமை மேலும் அதிகரிக்க வாழ்த்துகள்...

அருமையான அற்புதமாக இருக்கின்றது...சூப்பரோ சூப்ப்ர்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து பிரியா!

Anonymous said...

அழகான கருப்பு வெள்ளை ஓவியம்!!!

Sriakila said...

Waw! very beautiful!

Mahi said...

அழகா இருக்கு ப்ரியா! வண்ணங்கள் ஒரு விதமான அழகுன்னா கருப்பு வெள்ளை இன்னொரு விதம்! அருமையானபடங்கள்!

puduvaisiva said...

Very nice Priya

Thanks. . . .

Priya said...

//pencil strokes முயன்று பார்த்தேன் //... அப்படியா, ரொம்ப சந்தோஷமா இருக்கு கனி!'பஸ்ட்டு' வந்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.


வாங்க தம்பி கூர்மதியான், நீங்க எழுதியதை படிக்கபடிக்க மனக்கண்முன் வார்த்தைகள் காட்சியாய் தெரிகிறது. மிக அருமை!
இதற்கு முன் வரைந்த படங்களில் ஓரளவு முகபாவனைகளை கொண்டு வரமுயற்சி செய்திருக்கிறேன்.ஆனால் நீங்க சொல்கிற ஏக்கம், அவசரம்,பாவம்,அலட்சியம் இதையெல்லாம் ஒரே படத்தில் கொண்டு வர இன்னும் முயற்சி தேவை... நான் இப்போதுதான் ஓரள‌விற்கு வரையகற்றுக்கொண்டு வருகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் இக்காட்சியினை 'வரைந்தால்' நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மிக்க ந‌ன்றி!

Menaga, Ramani, Chitra....நன்றி!

பாலாஜி, பூவை பார்த்துக்கிட்டுதான் வரைஞ்சேன்... கூடவே கொஞ்சம் கற்பனை:)

நன்றி கோநா!

Priya said...

//படங்கள் வரையும் பேப்பருக்கு கீழே எக்ஸ்ரே வைத்தால் அழுத்தம் அதிகம் கிடைக்காது.. //... ஆமா ஜெய்லானி, நீங்க‌ சொல்வ‌து ச‌ரிதான்!


//முடியாதென்ற சொல் பிரியா அகராதியில் nil ! //... ஏங்க‌ இப்ப‌டி:)
நிலாம‌க‌ள், நீங்க‌ சொல்ற‌மாதிரி ந‌டந்தா...ம்ம்...பார்க்கலாம்!

//அதிலும் இவ்வளவு அழகான ஓவியம் உங்கள் கைவழி தான் வரமுடியும்....//... ந‌ன்றி க‌விநா, ஆனா இன்னும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டிய‌வை நிறைய இருக்கே:)

Priya said...

நான் வரைந்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டதில் மகிழ்ச்சி!என் ஓவியங்களை ரசித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

TamilTechToday said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// பின் cotton swab அல்லது tissue paper கொண்டு pencil strokesசை சற்று மெதுவாக தேய்த்துவிட்டால் போதும், சுலபமான பென்சில் ஸ்கெட்ச் ரெடி//

நீங்க சொல்றது பாத்தா சுலபம்னு தான் இருக்கு...ஆனா எனக்கு சுட்டு போட்டாலும் drawing வரவே வராது ப்ரியா... ரெம்ப ட்ரை பண்ணி இருக்கேன்... உங்கள போல வரைரவங்கள பாத்தா செம பொறாமையா இருக்கும்... என் கணவர் பென்சில் ஸ்கெட்சிங் நல்லா செய்வார்... he will be interested to see this... will show him...thanks Priya... great work...Keep it up...

கவி அழகன் said...

அழகு சித்திரம் மனதை பறிக்கிறது

கோமதி அரசு said...

நேசித்தால் தான் வரைய முடியும்.
நேசியுங்கள் வரையுங்கள் எங்கள் கண்களுக்கு விருந்தளியுங்கள்.

அருமையான படங்களுக்கு நன்றி பிரியா.

'பரிவை' சே.குமார் said...

Super... Super... Super.

Unknown said...

beautiful

Unknown said...

lovely blog and wonderful paintings...i dont have words to express.......r u priya suresh of easy and tasty reicpes? happy to follow u

Priya said...

அப்பாவி தங்கமணி... உங்க கணவரும் வரைவாங்களா.. மிக சந்தோஷம்! கண்டிப்பா இந்த படங்களை காட்டுங்கள்.

Savitha... நீங்க சொல்ற ப்ரியா நான் இல்லை... 'அது நான் இல்லை':)
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

vanathy said...

wow! you are a talented artist.

Priya said...

Thanks vanathy!

Anonymous said...

வணக்கம்
அற்புதம். அத்தனை பூக்களையும் அள்ளி எடுத்து ஆண்டவன் திருவடிகளில் சேர்க்க ஆசை
அன்புடன்
நந்திதா

Chennai to Shirdi Tour Package said...

உங்கள் வரைதல் திறமை சூப்பர்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Supper

Unknown said...

எனக்கு பொருட் கூட்டம் வரை கற்றுத் தாருங்கள் தயவு செய்து

Post a Comment