Subscribe:

Pages

Tuesday, July 13, 2010

ஸ்ட்ராபெர்ரி வாரம்!!!


     சீசன் பழமான ஸ்ட்ராபெர்ரி... அத‌ன் இனிப்பான‌ சுவைக்காக‌ ம‌ட்டும் இல்லாம‌ அழ‌கிய‌ சிக‌ப்பு நிற‌த்தில இருப்ப‌தாலும் அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌ ப‌ழ‌மாக‌ இருக்கிறது. Citrus வ‌கை ப‌ழ‌ங்க‌ளிலே அதிக‌மாக‌ வைட்ட‌மின் C இருக்கும் ப‌ழ‌ம் இது. எல்லா ரெட் கலர் பழங்களிலேயும் "லைக்கோடின்" சத்து அடங்கியிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற இரத்தத்திலேயும் ஐம்பது சதவீதம் இருக்கு. ஆனா, அதற்கு குறைவா இருக்கும்போதுதான் சத்துக்குறைவு ஏற்படுது. இய‌ற்கையிலேயே இதில் Folic Acid உள்ள‌தால் கர்ப்பமான பெண்கள் அவ‌சியம் சாப்பிட வேண்டிய‌ பழமிது. இதனால் குழந்தை எந்த குறையுமின்றி முக்கியமாக brain and nervous System disorders ஏதுமின்றி பிறக்குமாம். மேலும் இது Fat free food என்பதால் பலவகையான diet க்கு பயன்படுத்தபடுகிறது.

நம்ம‌ சரும பாதுக்காப்பிற்கும் உதவுது என்பதால் இப்பழங்களை கொண்டு இப்போது நிறைய ஃபேஸ் வாஷ், ஃபேஷியல் மாஸ்க் எல்லாம் கிடைக்குது. இதெல்லாம் போட்டு வெளி அழகை மெருகேற்றுவதைவிட‌, இந்த பழங்களை நிறைய சாப்பிடுவதால் “உள்ளே வெளியே” என ஒரே சமயத்தில பல நன்மைகள் கிடைக்கும்.

எத்தனை நாள்தான் அப்படியே சாப்பிடுவது, அதையே கொஞ்சம் வேறு விதமாக செய்து சாப்பிட்டா... அப்படி நான் செய்து ருசித்தவைகள் குறிப்புடன் தந்திருக்கேன். செய்து பாருங்க... அதன் அழகான ரெட் கலரிலும் சுவையிலும் மயங்கி போயிடுவீங்க!


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

¼ கப் ஸ்ட்ராபெர்ரி
1 கப் பால்
2 ஸ்பூன் சர்க்கரை
2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்க்ரீம்சுத்தமாக கழுவப்பட்ட பழங்களை துண்டுக்களாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொண்டு, அதோடு பால், சர்க்கரை, வெண்ணிலா ஐஸ்க்ரீமையும் சேர்த்து அரைக்க வேண்டும். நுரை பொங்கிய நிலையில் இப்போது ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்.********************


ஸ்ட்ராபெர்ரி ஒயிட் சீஸ்

1 கப் ஸ்ட்ராபெர்ரி
1 கப் ஒயிட் சீஸ்
2 ஸ்பூன் சர்க்கரை
2 பிஸ்கட்ஸ்ழங்களை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வைக்கவும். சீஸ்ஸூடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவேண்டும். பரிமாற இரண்டு கண்ணாடி கிளாஸ் எடுத்து, அதில் முதல ஒரு ஸ்பூன் சீஸ் போட்டு, மேல ஒரு ஸ்பூன் பழங்களை சேர்த்து மீண்டும் கொஞ்சம் சீஸ் கொஞ்சம் பழங்கள் என மாற்றி மாற்றி போடவும். தேவையான அளவு மூன்று நான்கு அடுக்கு என கடைசியா பழங்கள் மேல பிஸ்கட்டுகளை விரல்களாலே உடைத்து தூவிவிடுங்கள். கண்ணை கவரும் கலரில் சுவையான சத்தான டெசர்ட் ரெடி!


******************


ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

15 – 20 பிஸ்கட்ஸ் (இந்த வகை கேக்குகளுக்கு என்று விற்கப்படும்)
2 கப் ஸ்ட்ராபெர்ரி
3 கப் ஒயிட் சீஸ்
4 ஸ்பூன் சர்க்கரை
1 ஸ்பூன் எலுப்பிச்சை சாறு
2 ஸ்பூன் வெண்ணிலா பவுடர்

 
ழங்களை சிறுசிறு துண்டுக்களாக்கி அதோடு 2 ஸ்பூன் வெண்ணிலா, ஒரு ஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறு கலந்து வைத்துக்கொள்ளவும்.  சீஸ்ஸுடன் சர்க்கரையை சேர்த்து அதோடு பழத்துண்டுகளையும் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் உட்புறமாக சுத்தமான பாலிதின் கவரை ஓட்டியபடி வைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்த தண்ணியை வாயகன்ற கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த பிஸ்கட்டுகளில் முன்பக்கம் மட்டும் சர்க்கரை ஓட்டி இருக்கும். சர்க்கரை இல்லாத பின் பகுதியை சர்க்கரை தண்ணியிலேயே நனைத்து ஒன்னு பக்கத்தில ஒன்னு ஒன்னா அடுக்கிக் கொண்டே வரனும். பிஸ்கட்டின் நனைந்த பகுதி பாத்திரத்தை ஓட்டியபடி இருக்கனும். பின் அடிப்பக்கமும் இதே மாதிரி அடுக்கிக்கொண்டு கலந்து வைத்துள்ள சீஸ் பழ கலவையை இந்த பிஸ்கட்டுகள் மேல கொட்டி விடவேண்டும். மீண்டும் மேல்புறமும் நனைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவேண்டும். நன்றாக மூடிய நிலையில் பிரிட்ஜில் எட்டுமணி நேரம் வைக்க வேண்டும்.

பிரிட்ஜில் இருந்து எடுத்து, கேக் பாத்திரத்தை ஒரு தட்டில் தலைக்கீழா கவுத்துவிட்டால் கேக் இப்போது தட்டில் வந்துவிடும். மேல சுற்றி உள்ள பாலிதின் கவரை எடுத்து விட்டு ஐந்தாறு ஸ்ட்ராபெர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.

மற்ற கேக் வகைகளைப்போல அதிக வேலையில்ல. குறைந்த நேரத்தில செய்ய டேஸ்ட்டான கேக் இதுதான்.
22 comments:

ராமலக்ஷ்மி said...

ஸ்ட்ராபெர்ரி பற்றிய குறிப்புக்கும், செய்முறைக்கும் மிக்க நன்றி. படங்கள் செய்தே பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகின்றன:)!

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்..அனைத்து ரெசிபிகளும் அருமை!!

r.v.saravanan said...

ஸ்ட்ராபெர்ரி குறிப்புகளுடன் செய்முறை விளக்கமும் பலே
கண்டிப்பாக வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன் பிரியா நன்றி

LK said...

வாவ் சூப்பர் நன்றி சுசி

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அருமையான ஸ்ட்ராப்பெர்ரி collectionஸ்...அருமை...வாழ்த்துகள்...White cheese என்பது என்ன...அல்லது வெரும் சீஸினை தான் குறிப்பிடுகின்றிங்களா...

சே.குமார் said...

வாவ் சூப்பர்..!

Priya said...

நன்றி ராமலக்ஷ்மி!

நன்றி மேனகா!

கண்டிப்பா செய்ய சொல்லி சுவைத்து பாருங்க சரவணன்!

என்னாச்சு LK! சுசி??????

வாங்க கீதா... சாதாரண சீஸ் வேறு, ஒயிட் சீஸ் வேறு. இந்த ஒயிட் சீஸ் பொதுவா கேக்ஸ், டெசர்ட்ஸ்க்கு எல்லாம் பயன்ப்படுத்துவது...ஜஸ்ட் லைக் ஒயிட் க்ரீம் ஆர் பிரெஷ் க்ரீம்.

நன்றி குமார்!

Anonymous said...

Speechless =))

seemangani said...

ஸ்ட்ராபெர்ரி எனக்கு ரெம்ப பிடிக்கும் ஆனால் அத பார்த்தே பலகாலமாச்சு...ஹும்ம்ம்ம்...

ர‌கு said...

நான் நேத்துதான் ஸ்ட்ராபெர்ரி க்ரீம் பிஸ்க‌ட் சாப்பிட்டேன்..ஹி..ஹி..:))

மில்க் ஷேக் கொஞ்ச‌ம் ஈஸியா இருக்க‌ற‌ மாதிரியிருக்கு..இருங்க‌ நானே வீட்ல‌ ட்ரை ப‌ண்ணிட்டு சொல்றேன்

ஜெய்லானி said...

அந்த கடைசி பட தட்டை மட்டும் என் பக்கம் தள்ளுங்களேன்...

சூப்பர்..!!

koovai kumaran said...

nanRi....

♠புதுவை சிவா♠ said...

ஸ்ட்ராபெர்ரி பழமும் அதன் பயனும் சொல்லி தந்த உங்கள் முறையும் அருமை.

நன்றி ப்ரியா

மற்றும் பாஸ்டில் நாள் வாழ்த்துகள் (La fête nationale)

Priya said...

நன்றி அனாமிகா துவாரகன்!

ஏன் கனி உங்க ஊர்ல கிடைக்கிறது இல்லையா?

ஸ்ட்ராபெர்ரி க்ரீம் பிஸ்க‌ட் நல்லா இருந்ததா ரகு? மில்க் ஷேக் செய்து பார்த்திட்டு சொல்லுங்க!

வாங்க ஜெய்லானி, கண்டிப்பா உங்களுக்கு இல்லாமலா!

வாங்க குமரன், நன்றி!

ரொம்ப நன்றி சிவா... Fête Nationale நியாபகம் வைத்து வாழ்த்து சொன்னதற்கு.!

Sowmya said...

ஆஹா பாக்கும் போதே சூப்பர் ஆ இருக்கு. very nice ப்ரியா .

ரிஷபன் said...

ம்ம்.. சப்பு கொட்ட வைக்கிறது..

மகி said...

ஸ்ட்ராபெர்ரி சீஸ்கேக் சூப்பரா இருக்கு ப்ரியா! மத்த ரெசிப்பிகளும் அழகு!

Priya said...

செய்து சுவைத்து பாருங்க செளம்யா இன்னும் சூப்பரா இருக்கும்!

அப்படியா ரிஷபன், நன்றி!

நன்றி மகி!

Bharathi Dhas said...
This comment has been removed by the author.
Bharathi Dhas said...

பார்த்ததுமே "அப்படியே சாப்பிடுவேன்" என்று எடுக்க துடிக்கிறது மனது.
வீட்டை விட்டு அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் என்னக்கு இது மேலும் வருத்தத்தை உண்டாக்கியது :)
அன்புத்தம்பி
பாரதிதாஸ்

ஜெயா said...

படங்கள் பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுகிறது ப்ரியா.......

Priya said...

உங்களை வருத்தமடைய வைத்ததற்கு வருந்துகிறேன் பாரதி!

நன்றி ஜெயா!

Post a Comment