Subscribe:

Pages

Saturday, June 5, 2010

காதல் செய்வோம் வா!


 கையுடன் கைக்கோர்த்து
என்னை அழைத்து சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!
என் காதோர‌ம் நெருங்கி வா
மெண்மையாக‌ சொல்லிவிடு...
நான் கேட்க‌ விரும்பும்
அனைத்தையும்!

என்னை தொடு
என் இத‌ழ்க‌ளை சுவைத்திடு
என்னுள் ஆழ‌மாக இருக்கும்
உண‌ர்வுக‌ளை வெளியேற்றிடு!
காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!

அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!
என்னுடைய‌ இர‌வுக‌ளில்
 ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!
 தடைகளை தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!

உன்னுள் சிறைப்பட்டிருக்கும்
என்னை இன்னும் தெரியவில்லையா...
என் விலங்குகளை உடைத்து
விடுதலை தந்துவிடு!
மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு
இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்
காதல் செய்வோம் வா!

46 comments:

Mrs.Menagasathia said...

மிகவும் அருமையான வரிகளுடைய கவிதை...

seemangani said...

//காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!
அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!//

''வரிகள் ஒவ்வொன்றிலும் கலந்து வழிகிறது காதல்'' அழகாய் வத்திருக்கு கலக்கல் கவிதையிலும்..ப்ரியா...வாழ்த்துகள்

ப்ரியமுடன்...வசந்த் said...

பெண்மையின் ஆழ்மன வெளிப்பாடு நல்லா வந்திருக்குங்க....

ரகசிய சிநேகிதன் said...

unarvugalin velippaadu arumai....

LK said...

கவிஞி ,ஓவியத் தாரகை எங்கள் ப்ரியா வாழ்க (யாராச்சும் சோடா கொடுங்க ப்ளீஸ்)
நல்லா இருக்குங்க

ப்ரின்ஸ் said...

மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு//

/பெண்மையின் ஆழ்மன வெளிப்பாடு நல்லா வந்திருக்குங்க....//

கவிதை வரிகளுக்கு கூட கலை (இதயம்) வடிவம் கொடுக்க நினைத்த கலை கண்களை பாராட்டுகிறேன் !!

கலாநேசன் said...

Very nice

செ.சரவணக்குமார் said...

காதல்...

வார்த்தைகளில் நிரம்பி வழியும் காதல்..

நல்லாயிருக்கு ப்ரியா.

வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்குங்க ப்ரியா.. தொடர்ந்து எழுதுங்க ச்சும்மா Freeya.........

அஹமது இர்ஷாத் said...

அது என்னங்க Publié par Priya(பதிவிட்டவர்) பிரெஞ்ச் மொழியோ..? (நல்லா கேக்கிறாங்கயா டீடெய்ல்லு..!)

ஜெய்லானி said...

நல்ல கவிதை வரிகள்..!!

♠புதுவை சிவா♠ said...

கவிதையின் ஓவ்வொறு வரியிலும் அன்பு தெரிகிறது இந்த அழகான கவிதை எழுதியதற்கு வாழ்த்துகள் தோழி.


இதை படித்த எனக்கு தோன்றிய சில வரிகள்.

ஒரு மர கிளை
இரு கிளிகள்
பரிமாரிக் கொண்டன
காதல் மொழிகள்

இதை கண்ட
மரத்தின் இலைகளில்
பரவியது கூச்சம்

r.v.saravanan said...

குட் ப்ரியா வாழ்த்த வார்த்தைகள் இல்லை எனவே நண்பனாய் பெருமை கொள்கிறேன்

கிளிகள் படம் நல்லாருக்கு நீங்க வரைஞ்சதா

சுசி said...

அழகா இருக்கு ப்ரியா..

கவிதையும் படமும்..

ஹேமா said...

ப்ரியா...உங்களை மறந்த நிலையில் காதலின் தனிமையிலிருந்து எழுதிய கவிதைதானே இது !

Madumitha said...

இனிது..
இனிது
காதல் போல் உங்கள் கவிதையும்.
படம் அருமை.

VELU.G said...

வழிய வழியக்காதலை கொடுத்துள்ளீர்கள்

Riyas said...

காதல் காதல் காதல்

அழகான கவிதை,,,

Anonymous said...

அழகான கவிதை :))

ர‌கு said...

ஸாரி ப்ரியா, க‌மெண்ட் போடும்போது கொஞ்ச‌ம் ப்ராப்ள‌ம் ஆயிடுச்சு User IDல‌, அதான் என்னோட‌ பெய‌ர்ல‌ இத்த‌னை க‌மெண்ட்ஸ்!

ராசராசசோழன் said...

கவிதை களிப்புற செய்யும் என்பதற்கு எடுத்துகாட்டு இது...

அம்பிகா said...

அழகான படமும், அருமையான கவிதையும்
\\அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!\\
:-)))
.

padma said...

NICE NICE PRIYA

சி. கருணாகரசு said...

கசிந்துருகி சொட்டுகிறது காதல்... பராட்டுக்கள்.

Priya said...

ஆமாங்க இர்ஷாத்....Template மாற்றிய போது இப்படி தானாவே ப்ரெஞ்சில வந்துவிட்டதுன்னு நினைக்குறேன்...

வாவ், சூப்பர்ப் சிவா. எழுதிய கவிதைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

இல்ல சரவணன், நான் வரையல.

சரியா கண்டுப் பிடிச்சிட்டீங்களே ஹேமா! (அனுபவம்:))

எவ்வளவு ஆழமான யோசனை தனி காட்டு ராஜா!!!

எதுக்கு ரகு சாரி எல்லாம்? நான் முடிஞ்சவரை டெலிட் பண்ணிட்டேன்.

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கு என் நன்றி!

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_11.html

:-)

sofi said...

neenga ivlo alaga kavithai eluthuveergal entru intru than therinthu kondaen....aazhamaan unarvin velipaadu....

ஜெயா said...

அழகான காதல் கவிதை....

அண்ணாமலை..!! said...

கவிதையான
கற்பனைகள்..
கற்பனையான
கவிதை!!

SUFFIX said...

தலைப்புக்கேற்ற கவிதை, எல்லா வரிகளும் இன்பம்.

அப்பாவி தங்கமணி said...

நல்லா இருக்குங்க ப்ரியா

பாலன் said...

மனம்புதைந்திருக்கும் இயல்புகளை வெளிக் கொணர எழுதியிருக்கும் கவிதை காதலில் இழைந்துள்ளது.
அருமை ப்ரியா!

பிரியமுடன் பிரபு said...

காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!
அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!
///////////////
அருமை

Meera Manoj said...

I just happened to see your blog while browsing....you have such a wonderful collection of photos and the way you expressed your thoughts are really amazing....your paintings are so beautiful..unga kavithai romba romba arumai....

Anonymous said...

அனைத்துமே மிக மிக மிக மிக அழகு

Priya said...

நன்றி நண்பர்களே....உங்கள் அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்!

Sowmya said...

nice kavidhai

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

சே.குமார் said...

அருமையான வரிகளுடைய கவிதை...

Ananthi said...

/// என்னுடைய‌ இர‌வுக‌ளில்
ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!///

ஆஹா.. அருமை..
மனதில் உள்ள காதலை இதை விட யாராலும் அழகாக வெளிக்கொண்டு வர முடியாதுங்க..
வாழ்த்துக்கள்..!!

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப அழகா , ஸ்ட்றாங்க சொல்லிருக்கிங்க , சூப்பர்

Priya said...

நன்றி செளம்யா!

ஆ.. மறுபடியும் ஒரு விருதா.. மிக்க நன்றி ஜெய்லானி!

நன்றி சே.குமார்!

நன்றி ஆனந்தி!

நன்றி மங்குனி அமைச்சர்!

பிரியமுடன் பிரபு said...

அழகான கவிதை...

Anonymous said...

// தடைகளை தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!//

நன்று..

Priya said...

நன்றி பிரியமுடன் பிரபு!

நன்றி கோவை குமரன்!

Swarna Prabhu said...

Hi, Thanks for ur comments in my blog(pencilsketchin.blogspot.com).. Your blog is awesome..Keep rocking!

Post a Comment