இதோ... நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த (அப்படி யாராவது இருக்கிங்களா?) வான வேடிக்கை படங்கள். பிரான்ஸின் சுதந்திர தின விழாவிற்காக அன்று இரவு கடலில் நடத்திய வான வேடிக்கையை காண இரு கண்கள் போதவில்லை. அவ்வளவு அழகு! நான் முன்பே சொல்லி இருந்த மாதிரி வானில் விடப்பட்ட முதல் வான வேடிக்கையிலேயே, அழகில் மயங்கி புகைப்படம் எடுக்க மறந்து போனேன். மேலும் கேமராவின் கண்கள் வழியே பார்ப்பதைவிட என் இரண்டு கண்களால் ரசிப்பதையே விரும்பினேன். அதனால் கீழே காணும் அத்தனை படங்களும் என்னவர் எடுத்தது.
பல வண்ணங்களில் அழகாய் தெரிந்த வான வேடிக்கைகளில் இம்முறை புதியதாக நிறைய வடிவங்களை புகுத்தியிருந்தனர். முதல் முறையாக இதயம் வடிவில்......பதிமூன்றாவது படத்தில் பாருங்கள். எனக்கு மிகவும் பிடித்தது கடைசி படம்தான். நன்றாக பார்த்தால் தெரியும் அது பனைமரம் வடிவில் இருப்பது. இங்கு கடற்கரை சாலைகளில் முழுவதும் அழகாக தோற்றமளிப்பது இந்த பனை மரங்கள்தானே!!!
முதல்முறையாக வீடியோ இணைத்திருக்கிறேன். வெறும் ஒரு சில நொடிகள்தான். ஃபுல் ஸ்க்ரீனில் பார்க்கலாம். பாருங்கள், நான் ரசித்ததை நீங்களும் உணர்வீர்கள்.
23 comments:
இதோ... நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த (அப்படி யாராவது இருக்கிங்களா?)
என்ன இப்படி கேட்டுடீங்க
படங்கள் அனைத்தும் அருமை பிரியா
ஒளி இருட்டில் எழுதிய கவிதை போன்று ஒவ்வொன்றும் கண் கவர் வண்ணங்களில் அருமையாய் இருக்கிறது
வாழ்த்துக்கள்
super..!
மிக்க நன்றி சரவணன்! அப்படி யாராவது இருக்கிங்களான்னு கேட்ட அடுத்த சில நிமிடங்களில் வந்து இருக்கிங்களே.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
படங்கள் அனைத்தும் அற்புதம்.
nichayama i was waiting ..padam super priya
thanks for sharing
வீடியோ பார்த்தேன் நல்ல இருக்கு
very nic pics!!
படங்கள் அனைத்தும் அருமை பிரியா
வாவ்....வீடியோ போட்டோ ரெண்டும் சூப்பர்
படங்களும் வீடியோவும் அருமை.நீங்கள் பார்த்த ஸ்டாரைப் பற்றி சொல்லவே இல்லை பிரியா....
wowwwww. great pictures priya..
replay paaththa mathiri irundhathu ..
thanksss :-)))
உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
சூப்பர் பகிர்வு டீச்சர். :))
very nice... super photos.
படங்கள் அருமை ப்ரியா..அதுவும் அந்த வயலட் கலரில் பூச்சி போல தோற்றமளிக்கும் படம் ஃபன்டாஸ்டிக் :)
sorry for the delay comment..
nice pictures.thanks for sharing..
video really nice
1 . வானில் பூத்துக் குலுங்கும் ஒளிச் செடிகள்!
௨ .இருள் வெளியில் சரம் நெகிழ்ந்த வைரத் துணுக்குகள்!
3 .கருஞ்சிவப்புப் பின்னணியில் கண் கவரும் ஒளிமரம்!(கடற்கரையில் அடிவானத்தில் எழும் சூரியன் நீர்ப்பரப்பில் பிரதிபலிப்பது போன்றதொரு அழகு...ஆஹா!)
4 .படமெடுத்து நிற்கும் 5 தலை நாகத்திற்கு மேலிருந்து பூச்சொரியல்!
5 .தரை சக்கரம்!
6 .நவீன ஓவியம்!
7 .வெடித்துச் சிதறும் பருத்திப் பூ!
8 .கடவுள் வருகிறார் ஒளிவட்டத்துடன்!
9 .வயலட் தேசத்திலிருந்து வரும் பறவைக் கூட்டம்!
10 .பிரபஞ்சத் தோற்றம்...?!
11 .செல் பிரிதல்!
12 .தென்னை உதிர்க்கும் மட்டைகள்!
13 .தரையிலடித்த கார்த்திகைப் பந்தம்!
14 .மேசை மேல் பூஜாடி!
15 .வான் மகளுக்கு ஒளிச்செண்டு!
16 .அடடா... ஒற்றைப் பனை!
அத்தனையும் அருமை!!!! பிடித்த, அளித்த கைகளுக்குப் பெருமை!!!!!!
சரவணன்
தமிழ் அமுதன்
அம்பிகா
பத்மா
செளந்தர்
மேனகா
கார்த்திக்
அப்பாவி தங்கமணி
ஜெயா, நிச்சயமா சொல்றேன்... விரைவில்!
ஆனந்தி, விருதுக்கு மிக்க நன்றி!
வாங்க ஷங்கர், நலமா?
குமார்
ஆமா ரகு எனக்கு கூட அது பிடிச்சிருந்தது.
குமரன்
அனைவருக்கும் எனது நன்றிகள்.
வாங்க நிலா மகள்!
அப்பப்பா.. ஒவ்வொரு படத்திற்கும் வர்ணித்து எழுதியிருக்கும் விதம் அழகு!
படம்பிடித்தது என்னவர் என்பதால் உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்து விட்டேன்.அவரின் நன்றிகளையும் உங்களிடம் சேர்த்து விடுகிறேன்.
அருமையான பகிர்வு சகோதரி.
வீடியோ மிகவும் அழகாக இருந்தது..
அப்படி யாராவது இருக்கிங்களா?
நான் இருக்கேன்...நான் இருக்கேன்...அழகு!
மிகவும் ரசிதேன்
படமும் வீடியோ இனைப்பும் மிக அழகாக உள்ளது ப்ரியா
இங்கு french embassy எதிரில் உள்ள கார்கில் நினைவு சதுக்கம் அருகில் வான வேடிக்கை 1 மணி நேரம் நடந்தது அனைத்தும் உள்ளூர் வெடி :-) வழக்கம் போல் வெடிக்கை பார்க்க அதிக கூட்டம். மற்றும் embassy - உள்ளே இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நன்றி கமலேஷ்!
ரொம்ப சந்தோஷமா இருக்கு கனி!
நன்றி அருள்ஜோதி!
நம்மூர் நிகழ்வுகளை தெரியப்படுத்தியதற்கு நன்றி சிவா!ஒரு மணி நேரமா? இங்கு வெறும் 30 நிமிடங்கள்தான் நடந்தது;(
Post a Comment