Subscribe:

Pages

Tuesday, March 1, 2011

துணியிலே கை வண்ணம்....

        தையல் என்பது மிக அற்புதமான கலை. அதிலுள்ளவைகளோ பலவகை. இந்த தையற்கலை காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கொண்டிருந்தாலும், உடை என்ற ஒன்று இருக்கும்வரை இதற்கு அழிவில்லை எனலாம்! அற்புதமான இந்த கலையை தொழிலாக்கி இன்று வெற்றிய‌டைந்து வருபவர்கள் ஏராளம் என்றாலும் கூட பெண்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்காகவே இருக்கிறது. இந்த‌ பொழுதுபோக்கின் மூலம் உள்ளப்பயிற்சி பெற முடியுமாம். இதைப்பற்றி அதிகம் தெரியாது எனக்கு எனினும் மற்ற கலைகளைப் போலவே தைப்பதற்கும் பொறுமை, கிரியேட்டிவிட்டி மற்றும் கலையார்வம் அவசியம் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

இப்பொழுது இதைப்பற்றி ஏதோ கொஞ்சம் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் பள்ளி பருவத்தில் எனக்கிதை அறிமுகப்படுத்திய சிஸ்டர் கிறிஸ்டின்தான். ஆறாம் வகுப்பு முதல் தொடர்ந்து மூன்று வருடம், ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியம் கடைசி பீரியட்டில் டிராயிங் அல்லது தையல் க்ளாஸ் இருக்கும். எப்பொழுதும் வரைவதைவிட தையல் வகுப்பைதான் அதிகம் எதிர்ப்பார்ப்பேன். காரணம் ஏதோ ஓரளவிற்கு வரைய தெரிந்ததால் சீக்கிரமாக எனது டிராயிங்கை முடித்துவிட்டு மற்ற தோழிகளுக்கு உதவி செய்துக்கொண்டிருப்பேன். ஆனால் தையல் பற்றி தெரியாததால் அதை கற்றுக்கொள்ளும் ஆர்வ‌த்தில் அந்த வகுப்பிற்காக‌ காத்துக்கொண்டிருப்பேன். சிஸ்டரும் மிக தெளிவாக சொல்லிக்கொடுப்பார்கள். என்னுள் உள்ள கலையார்வத்தினாலோ என்னவோ அவர் சொல்லிக்கொடுப்பதை அப்படியே செய்து பாராட்டைப்பெற்றுவிடுவேன். அதன்பிறகுதான் அம்மா வீட்டில் தைத்துக்கொண்டிருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். ஆர்வம் பற்றிக்கொள்ள எனது ஏழாம் வகுப்பின் வருடக் கடைசியில் தையல் வகுப்பில் சிறிய அளவில் கொடுக்கப்பட்ட துணியில் எம்பிராய்டரி போட்டு அதையே சிறிய பைப்போல தைத்துவிட்டேன். அதை வீட்டிற்கு எடுத்து வந்து என் அப்பாவுக்கு பரிசாக கொடுத்தேன். அப்பாவும் ஆசையோடு பெற்றுக்கொண்டு அதில் பைபிள் வைத்துக்கொள்ள அவருடன் எடுத்துச்சென்றுவிட்டார்(அப்பா வெளிநாட்டில் பணிபுரிந்த சமயம் அது). இதோ இன்றுவரை பைபிளை சுமந்தபடி அந்த பை என் அப்பாவிடம் பத்திரமாக உள்ளது. அந்த மூன்று வருடங்கள் மட்டுமே ஊசியும் நூல்களும் என்னுடன் உறவாடியது. அதன்பிறகு படிப்பில் கவனம் அதிகமாகவே, தைப்பதை மறந்தே போனேன்.

மறந்துப்போனதை நியாபகப்படுத்தியது சென்றமாதம் ஒரு நாள் கடையில் நான் கண்ட தையலினால் செய்த‌ கிப்ட் ஒன்று. இதயம் வடிவில் அழகான இரண்டுவரி காதல் சொற்களுடன் இருந்த அதை எடுத்துப் பார்த்தபோதுதான் அது துணியில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது புரிந்தது. உள்ளே மறைந்திருந்த தையல் ஆர்வம் லேசாக எட்டி பார்க்க, நானும் தைப்பதற்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டேன். மறந்துப்போன சிலவற்றை நியாப்படுத்தி இணையத்தின் மூலம் இன்னும் தெரிந்துக்கொண்டு இதோ மீண்டும் ஊசியை கையிலெடுத்திருக்கிறேன். தையல் வகைகள் பற்றி அதிகம் தெரியாததால் பூக்களிலிருந்தே ஆரம்பிக்கலாமே என்றெண்ணி ஏதோ எனக்கு தெரிந்தவற்றை கொண்டு நான் உருவாக்கியவை இது.


இது எப்படி உருவானது என்பதையும் கொஞ்சம் பாருங்களேன்.

எனது பள்ளி நாட்களின் போது செய்த தையலும் இங்கு உள்ளது... இதோ, அதையும் பாருங்கள்!!!

42 comments:

Chitra said...

you are an all-rounder! I admire you a lot....:-)

மகி said...

அழகா இருக்கு ப்ரியா! உங்களை மாதிரி ஓவியர்கள் இருந்தா துணியில் டிஸைனை ட்ரேஸ் பண்ணும் வேலை இல்லை!:)

மகி said...

நாங்கள் பள்ளியில் கற்றது இந்த மாதிரி க்ளாத் இல்லை..சாதா காட்டன் க்ளாத்..இதுவும் சீக்கிரம் வாங்கி தைத்துப்பாக்கணும். அடுத்து அதான் பண்ணப்போறேன். பகிர்வுக்கு நன்றி!

ஹேமா said...

ப்ரியா...நிறைய நாளாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே தோழி !

அழகுக் கலைகள் உங்கள் பக்கம்.எதை எடுத்தாலும் அழகாக்கி விடுகிறீர்கள்.உங்கள் கைவேலை என் அம்மாவை ஞாபகப்படுத்துகிறது.

savitha ramesh said...

Romba nalla irukku priya.Neraya thiramai irukku priya unga kitta.Its god's gift.

மாணவன் said...

ரொம்ப நல்லாருக்குங்க சகோ, டிசைன் உருவான செய்முறை விளக்கமும் அழகு :)

எல் கே said...

அருமை. நான் ஒரு உதவி கேட்டேன் பதிலே இல்லை

ஜெய்லானி said...

இன்னும் நினைவுகளை தூசிதட்டி வெளியே எடுங்க ..உங்களுகுள்ள இன்னும் என்னவெல்லம் ஒளிஞ்சிகிட்டு இருக்கோ...!! சூப்பர் டிஸைன் :-))

ராமலக்ஷ்மி said...

அனைத்து கலையிலும் வல்லவர் நீங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகும் எத்தனை நேர்த்தி. உருவாகிய விதமும் பார்த்தேன். நன்று ப்ரியா.

Sriakila said...

எல்லாக் கலையையும் தெரிந்து வைத்திருக்கும் சகலகலா வல்லியா நீங்கள்..

கலாநேசன் said...

super

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இதுலயும் கலக்கறீங்க டீச்சர்! :))

Thendral said...

Its Beautiful!!!

சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்க..

g.aruljothiKarikalan said...

NANDRAAGA ULLADHU PRIYA... ENAKKUM PALLIKKAALATHIL THAIYAL VAGUPPU IRUNDHADHU MATRUM EN AMMA NANRAAGA THAIPPAAR... IRUNDHAALUM EMBROIDERY SEYA MAATAR... EPPOZHUDHUM POL UNGAL EZHUTHUKKAL ENNUDAYA MALARUM NINIVUGALAI KOODAVE KOOTIKONDU VANDHUVIDUGIRADHU... NANDRI PRIYA..

சுசி said...

அழகா இருக்கு ப்ரியா.

கவிநா... said...

wow....... fantastic friend. very attractive design, colours. how excellent skills you have!! hats off you priya!! amazing tallent...

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப அழகா இருக்கு பிரியா

Anonymous said...

அருமையான விளக்கம்,முயற்சி செய்கிறோம்...

r.v.saravanan said...

அருமை பிரியா

தம்பி கூர்மதியன் said...

இன்னும் எவ்வளவு திறமை ப்ரியா.!!

நீங்க சூப்பருங்க.!!

அன்புடன் அருணா said...

பள்ளிக்கூடதியல் வகுப்பு நினைவு வந்தது!

Priya said...

சித்ரா தங்களின் பாராட்டுக்கு நன்றி...
//all-rounder// மீ... !!!
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல:)ஏதோ கொஞ்ச‌ம் தெரிந்த‌தை ப‌கிர்ந்துக்கொள்கிறேன்.

பள்ளியில் காட்டன் க்ளாத்திலும் செய்திருக்கிறேன் மகி. ஆனால் இந்த துணியில் சற்று சுலபமாக இருக்கும்...இதையும் முயற்சி செய்து பாருங்க.

ஆமா ஹேமா ரொம்ப நாளாச்சு, நல்ல சுகம். நீங்க‌ ந‌ல‌மா?

ந‌ன்றி Savitha.

ந‌ன்றி மாண‌வ‌ன்.

தாமததிற்கு ம‌ன்னிக்க‌வும் எல் கே... இப்போ ப‌தில் அனுப்பிவிட்டேனே, ஓகேவா?

நினைவுக‌ள் நிறைய‌ இருக்கு ஜெய்லானி... தூசித‌ட்டி வெளியே கொண்டு வ‌ர முய‌ற்சி செய்கிறேன்!

Priya said...

தங்களின் ம‌னம் திறந்த பாராட்டுக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்!

//சகலகலா வல்லியா நீங்கள்..//... அட என்னங்க நீங்க, சும்மா எல்லாமே கொஞ்சம் தெரிஞ்சி வச்சிக்கலாமேன்னுதான்:)

நன்றி கலாநேசன்!

டீச்சரை மறக்காமல் இருக்கிங்களே ஷங்கர்:)
ரொம்ப நன்றி!

Thanks Thendral!

நன்றி சே.குமார்!

நன்றி அமைதிசாரல்!

Priya said...

வாங்க அருள்ஜோதி... எனது எழுத்துகளின் மூலம் உங்களின் நினைவுகள் மலர்ந்ததா, மிகவும் சந்தோஷம். நன்றி!

நன்றி சுசி!

மிக்க நன்றி கவிநா!

நன்றி சாருஸ்ரீராஜ்!

வருகைக்கு மிக்க நன்றி "குறட்டை " புலி... முயற்சி செய்து பாருங்க!

நன்றி சரவணன்!

மிக்க நன்றி தம்பி கூர்மதியான்!

வாங்க அருணா தங்களுக்கும் பள்ளி தையல் வகுப்பு நினைவுகளா....!!!

S.Menaga said...

u r amazing priya..wonderful embroidery!!

சீமான்கனி said...

ஆஹா...அழகா இருக்கு...வண்ணங்களின் சேர்க்கை கண்களுக்கு இதமாய் இருக்கு...பள்ளிகாலத்து கைவண்ணம் இன்னும் அழகு...வாழ்த்துகள்...ப்ரியா....

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கு இந்தத் தையல் கலை மூலம் நீங்கள் உருவாக்கிய கைவண்ணங்களே சாட்சி. விளக்கக் குறிப்புக்களும் படங்களும் அருமை.இன்று தான் உங்களின் வலைத் தளத்தை முதன் முதலாய் தரிசித்தேன்.

♠புதுவை சிவா♠ said...

அனைத்தும் அழகாக உள்ளது ப்ரியா வாழ்த்துகள் !

Anonymous said...

wow

Beautiful

PRIYA!!!

GEETHA ACHAL said...

எப்படி ப்ரியா...இப்படி எல்லாம்...எதையும் விட்டு வைப்பது இல்லை போல...அனைத்து திறமைகளையும் கற்று வைத்து இருக்கின்றிங்க போல...வாழ்த்துகள்...

Priya said...

Thanks Menaga!

நன்றி கனி!

வாங்க நிரூபன் முதல் வருகைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்... !

மிக்க நன்றி சிவா!

நன்றி மகா!

வாங்க கீதா, கலைகளில் உள்ள ஆர்வத்தால் கற்றுக்கொள்வதுதான் எல்லாம்...//எதையும் விட்டு வைப்பது இல்லை போல//...மற்றபடி எதுவும் தெரியாது எனக்கு:)
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!

Ramani said...

செய்முறைப் .பயிற்சியோடு விளக்கி இருக்கும் விதம்
மிக அருமை.உங்கள் பதிவே ஒரு கலைக்கூடம் போல் உள்ளது
தொடர்ந்து வருகிறேன் தொடர வாழ்த்துக்கள்

ர‌கு said...

ஓவிய‌ம்..கிறிஸ்தும‌ஸ் கேக்ஸ்..புகைப்ப‌டம்..இப்போ தைய‌ல்

ஓகே என்சாய்!

♔ம.தி.சுதா♔ said...

எனது முதல் வருகையிலேயே அருமையாக கவர்ந்து விட்டீர்கள்.. நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

Balaji saravana said...

வெரி நைஸ் ப்ரியா! சித்ராக்கா சொன்னது மாதிரி நீங்க ஒரு ஆல் ரவுண்டர் தான்! :)

அஹமது இர்ஷாத் said...

Good Priya :)

Enna Nalama Priya?

r.v.saravanan said...

மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

சுசி said...

ப்ரியா ஓடி வாங்க.. தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்..

Priya said...

ரொம்ப நன்றிங்க சரவணன்!

இதோ ஓடி வரேன் சுசி... தொடர்பதிவு அழைப்பிற்கு நன்றி, விரைவில் எழுதுகிறேன்.

10அம்மா said...

ஹாய் ப்ரியா, உங்க தையல் செய்முறை அருமை.

மேட்டி துணியை எங்கு கிடைக்கிறது? தற்போது இதுபோல் வருவதில்லை என்று கடைகளில் கூறுகிறார்கள்

Post a Comment