Subscribe:

Pages

Friday, February 18, 2011

இயற்கையில் இத்தனை அதிசயங்களா.......!!!

        ஒரே ரசனை உள்ளவர்கள் வாழ்க்கையில் இணையும் போது வாழ்க்கையே ரம்மியமானதாகி விடுகிறது. எனது ரசனைகளேற்ற வாழ்க்கை துணை எனக்கு கிடைத்திருப்பதால் காணும் ஒவ்வொன்றிலும் இன்பம் அடைகிறேன். இயற்கையை ரசித்து வாழத்தெரிந்தாலே எப்போழுதும் மனதில் உற்சாகம்தான்... அதிலும் பிடித்தவருடன் எனும்போது காணும் அனைத்தும் சொர்க்கம்தான். இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து எத்தனையோ அழகழகான இடங்களை எல்லாம் என்னை அழைத்துசென்று காண்பித்த என்னவர், இம்முறை சென்ற வாரக்கடைசியில் அழைத்துச்சென்றது கேன்ஸ் ஃபிலிம்  ஃபெஸ்டிவல் நடக்கும் ஊரில் இருந்து  பத்து கிமீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியை போல இருந்த ஒர் இடத்திற்கு!

நகரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பகுதியில் சுற்றிலும் அடர்ந்திருந்த மரங்களின் நடுவில் ஒரே ஒரு கட்டிடம், பார்ப்பதற்கு வீடு போல் தோற்றமளித்தது. ஆனால் அதற்குள் இத்தனை அதிசயங்கள் நிறைந்திருக்குமா என எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஒருசில கார்கள் மட்டும் அங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. அதேப்போல சில குடும்பங்களும் காத்திருந்தனர். சரியாக மதியும் இரண்டு மணிக்கு பூட்டி இருந்த அந்த கட்டிடத்தின் கதவு திறக்கப்பட, எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்... நாங்களும் பின் தொடர்ந்தோம்.

 உள்ளே நுழைந்தவுடன் எதிரில் ரிசப்ஷன், வலதுபுறத்தில் சிறிய கடை இடதுபுறத்தில் சின்ன ரெஸ்டாரண்ட் என மிக எளிமையாக இருந்தது. ரிசப்ஷனிஸ்ட் வர, அனைவரும் டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தோம். சிறிது நேரத்திற்குபின் அங்கு வந்து சேர்ந்தார் ஒரு கைட். காத்திருந்த 25 பேர்க்கொண்ட குழுவினை தன்னை பின் தொடருமாறு சொல்லி ரிசப்ஷன் பக்கம் இருந்த கதவினை திறந்தார். வியக்க வைக்கும் அதிசயங்கள் உள்ளே காத்திருந்தது தெரியாமல் அவரை தொடர்ந்துபடி படிக்கட்டுகளில் இறக்கிச்சென்றேன். ஆஹா, அதற்குள் ஒரு உலகம்.... கீழ் நோக்கியபடி 11 அடுக்குகளை கொண்டிருந்த Cavernனுடைய பெயர் Grottes de Saint Cézaire.

Cavern னை சுற்றி பார்ப்பதற்கு முன் அது பிறந்த கதையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமே. 1890ல் Mr.Leon Dozol என்பவர் தன் தோட்டத்தில் திராட்சை செடிகளை நடுவதற்காக பள்ள‌ம் தோண்டி இருக்கிறார். சிறிய பள்ளம் தோண்ட முயன்றவர் ஆழமான குழியில் விழுந்துவிட பின் தன்னுடைய குடும்பத்தினரால் சிரமப்பட்டு வெளியே வந்து இருக்கிறார்.( படத்தில் வலதுபுறத்தில் இருப்பவர்தான் Mr. Dozol, அப்பொழுது இருந்த நுழைவு வாயிலில்...அவரது குடும்பத்தோடு!) அப்பொழுதுதான் கீழே பூமிக்கடியில் மிக பெரிய குகை இருப்பதாக தெரியவர‌ ஆவலுடன் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் உதவியோடு மூன்று வருட முயற்சிக்குபின் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த Cavern. த‌ன்னை தேடி வரும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் இந்த இடத்தை சுற்றிக்காட்ட ஆரம்பித்து இருக்கிறார். பின் அந்த ஊருக்கு வரும் சுற்றுலாவினர் மெல்ல மெல்ல இதைப்பற்றி கேள்விப்பட்டு இவ்விடத்தை பார்க்க வர ஆரம்பித்துள்ளார்கள்.
 
1925ல் அதன் மேல் ஒரு கட்டிடம் எழுப்பி மின்சார வசதியும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1926ல் Cavernனுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா இடமாகி இன்று நூற்றுக்கணக்கான மக்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.
(மின்சார இணைப்பற்ற நிலையில் கையில் விளக்குடன் சுற்றி பார்த்தவர்கள்... 1926ல்!)

இந்த cavern பிறந்த கதை இதுதான் என்றாலும் அப்படி என்ன அதிசயங்கள் அதன் உள்ளே நிறைந்திருக்கும் என்பவர்களுக்காக இதோ நான் ரசித்து எடுத்து புகைப்படங்கள்! 


உள்ளே இறங்க ஏற்படுத்தப்பட்ட வழி இதுதான்...
 
 
 
 ஆனால் Mr. Leon Dozol கண்டுப்பிடித்த வழி.... இது! 
 

இயற்கையில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றெண்ணியவாறு படம்பிடித்துக்கொண்டிருக்க, அந்த கைட் சொன்ன விளக்கங்கள் மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. Combination of chemical processes, erosion from water, tectonic forces, micro organisms, pressure, atmospheric influences, digging.etc என‌பலத்தரப்பட்ட geological processes மூலமே இப்படி உருவாகிறதாம். ஏதோ ஒன்றிரன்டு வருடங்கள் அல்ல பல நூற்றாண்டுக்களாக வள‌ர்ந்து வருகிறதாம். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் பலவிதங்களில் வடிவம் பெறுவதை என்னவென்று சொல்வது! பூக்களைப் போலவும், பழவகைகளைப்போலவும், விலங்குகளைப்போலவும் தோற்றமளிக்கிறது.
கீழே காணும் படத்தில் இருக்கும் இடத்திற்கு திராட்சை குவியல் என்று பெயர்... மேலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளி நீரும் கல்லில் பட்டு சிதறும் போது இப்படி திராட்சை பழங்களைப் போல தோற்றம் பெற்றுள்ளது.


இயற்கையாகவே இப்படியொரு உருவம் பெற்ற Limestone....ஆச்சரியம்தானே!!!
இதற்கு ரோமியோ என பெயரிட்டு அழைக்கிறார்கள்!இதோ, இந்த கட்டிடத்தின் கீழேதான் Cavern  என்றால் நம்பமுடிகிறதா!!!


செயற்கையாக பல இடங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் இயற்கையே இப்படி பல வடிவங்களை கொடுத்திருப்பது அதிசயம்தானே. மேலும் அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஏதோ குகைக்குள் ஒரு தனி உலகமே தெரிவதுபோல தோன்றியது. அத்தனை அழகுடன் கண்களுக்கு மட்டுமில்லாமல் காதுகளுக்கும் விருந்தளித்து limestoneல் இருந்து எழும்பிய இசை... கேட்டு பாருங்கள், உண்மையிலேயே அதிசயம்தான்!


35 comments:

ராமலக்ஷ்மி said...

நீங்கள் ரசித்து எடுத்த படங்களை நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி ப்ரியா.

//இயற்கையை ரசித்து வாழத்தெரிந்தாலே எப்போழுதும் மனதில் உற்சாகம்தான்... //

உண்மைதான். விரிவான தகவல்களுக்கும் நன்றி.

g.aruljothiKarikalan said...

eppozhudhum pol magizhchiyaaga oor sutri paartha tirupthi enakku....thanks priya.

r.v.saravanan said...

படங்களை நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி ப்ரியா.

தம்பி கூர்மதியன் said...

இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கையில் இப்படி ஒரு பதிவு போட்டதால் உங்க மேல எனக்கு வருத்தம்..

அதை மறந்து பார்த்தால் அனைத்தும் அருமை..

மாணவன் said...

அழகான இயற்கையின் அதிசயங்களை ரசித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க சகோ :)

Chitra said...

Interesting!!!! We have a large cavern close to our town... (3 hours drive) I am planning to write about it too... :-)

S.Menaga said...

அழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி ப்ரியா!!இப்போழுதுதான் நானும் இந்த இடத்தைப் பற்றி அறிகிறேன்...

எல் கே said...

இது புதுசு. இயற்கையின் பல விந்தைகளில் ஒன்று.. படங்களுக்கு நன்றி ப்ரியா

அன்புடன் அருணா said...

அட!பூங்கொத்து!

சுசி said...

அற்புதமான இடம். பகிர்வுக்கு நன்றி ப்ரியா.

savitha ramesh said...

cavern U.S lum undu..naangal sila maadhangalukku munbu dhan paarthom.idhu ulaga adhisayamdhaan.azhagana post priya

vanathy said...

Really amazing. One of you photos look like a huge eagle sitting on a branch.

GEETHA ACHAL said...

மிகவும அருமையாக இருக்கின்றது..

இங்கு நாங்களும் சில cavernயிற்கு சென்று இருக்கின்றோம்...ஒவ்வொன்று தனி அழகு...உங்கள் படங்கள் அனைத்துமே சூப்பர்ப்...

siva said...

அருமையான பயணம்
விவரிக்கும் வரிகளும்
தெளிவான படங்களும்
அருமை
நானும் பயணித்தேன் உங்கள் கட்டுரையுடன்...

Thendral said...

Lovely!!! Thanks for sharing.

♠புதுவை சிவா♠ said...

அழகா இருக்கு பயமாவும் இருக்கு !

இயக்குநர் இராம நாரயணுக்கு இந்த லோக்கேஷனை பற்றி தெரிய வந்தால் "பாதாள பைரவி 2011 " நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு.

:-)

ஆயிஷா said...

அழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி .

சிவகுமாரன் said...

பிரான்சை சுத்தி காட்டினதுக்கு நன்றி.
நல்லா என்சாய் பண்ணுரீக

சீமான்கனி said...

நிஜமாவே அதிசயம்தான்...படங்களும் விடியோவும் மிரட்டலா இருக்கு...அறியா தகவல்கள் பிரியா பக்கத்தில் இது புதுசு...மேலும் இது போல் வர ஆவல்...பகிர்வுக்கு நன்றி...

Gayathri said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

சே.குமார் said...

அழகான படங்களுடன் விரிவான தகவல்களுக்கு நன்றி.

Priya said...

ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்!

மகிழ்ச்சியாக சுற்றி பார்த்திங்களா, நன்றி அருள்!

நன்றி சரவணன்!

//இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கையில் இப்படி ஒரு பதிவு போட்டதால் உங்க மேல எனக்கு வருத்தம்..//... அச்ச‌ச்சோ, அப்ப‌டியா! ச‌ரி அதை ம‌ற‌ந்து பார்த்து ர‌சித்த‌மைக்கு ந‌ன்றி த‌ம்பி கூர்ம‌தியன்.

உங்க‌ளுக்கும் ந‌ன்றி மாண‌வ‌ன்!

//We have a large cavern close to our town...// Is it? cool!
waiting for your post Chitra!

Priya said...

//இப்போழுதுதான் நானும் இந்த இடத்தைப் பற்றி அறிகிறேன்...// அப்படியா மேனகா. இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள‌, இங்கு பாருங்க....
http://www.lesgrottesdesaintcezaire.com/

ஆமா எல் கே, உண்மையிலேயே இது இயற்கையின் விந்தைதான்!

பூங்கொத்துக்கு நன்றி அன்புடன் அருணா!

வருகைக்கு நன்றி சுசி!

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம்தான் Savitha!

Thank you Vanathy!

நன்றி Geetha!

Priya said...

கட்டுரையுடன் பயணித்த உங்களுக்கு நன்றி சிவா!

ஆமா பு.சிவா, எனக்கு கூட உள்ளே நுழையும் போது ஒருவித பயம்(கொஞ்சமா)இருந்தது! பயங்கர த்ரில் அனுபவம்தான்!
அட, படத்தோட பெயர் கூட ரெடியா இருக்கா:)

நன்றி ஆயிஷா!

நன்றி சிவகுமாரன்!
//நல்லா என்சாய் பண்ணுரீக//...
பின்ன என்னங்க, வாழ்க்கை வாழத்தானே:)

Priya said...

வாங்க கனி, நிஜமாகவே அதிசயம்தாங்க இது!

தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Gayathri! நிச்சயம், பார்த்துவிட்டு சொல்கிறேன்!

மிக்க நன்றி சே.குமார்!

ர‌கு said...

//இதோ, இந்த கட்டிடத்தின் கீழேதான் Cavern என்றால் நம்பமுடிகிறதா!!!//

நிச்ச‌ய‌மா இல்லை

இண்டியானா ஜோன்ஸ் ப‌ட‌ம்தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. இந்த‌ மாதிரி இட‌த்துல‌ 20, 25 ந‌ப‌ர்க‌ளோட‌ போகற‌துக்கு ப‌தில் 4,5 பேரோட‌ போயிருந்தா இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்கும் :)

ஒண்ணு சொல்ல‌ணும்னு நினைச்சேன்...அடுத்த‌ முறை கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவ‌லை மிஸ் ப‌ண்ணாதீங்க‌ ப்ரியா

Mahi said...

அழகா இருக்கு ப்ரியா! பகிர்ந்தமைக்கு நன்றி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Wow.. wonderful pictures.. thanks for sharing :)

ரொம்ப கிளியர்-ஆ இருக்குப்பா பிக்சர்ஸ்..
நல்ல பகிர்வு..!! ;-))

Anonymous said...

படங்கள் அழகா இருக்கு ப்ரியா..

jayakumar said...

really you are a lucky girl...

Flora said...

Priya! indru mudhal ungal valaithalathukku naan rasigaiyagiviten. Mannikkavum! thamizhala eppadi type panradhunu theriyala.

Priya said...

//இந்த‌ மாதிரி இட‌த்துல‌ 20, 25 ந‌ப‌ர்க‌ளோட‌ போகற‌துக்கு ப‌தில் 4,5 பேரோட‌ போயிருந்தா இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்கும் :)//.... ஆமா ர‌கு நான் கூட‌ அப்ப‌டிதான் நினைச்சேன். பாதுக்காப்பு க‌ருதி ஒரு குருப்பாதான் அனுப்புறாங்க‌.

//அடுத்த‌ முறை கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவ‌லை மிஸ் ப‌ண்ணாதீங்க‌ ப்ரியா//....முயற்சி பண்ணுறேன் ரகு.

நன்றி மகி!

நன்றி ஆனந்தி!

நன்றி மஹா!

Priya said...

Thanks Jayakumar!

Welcome Flora!
ரொம்ப சந்தோஷமாயிருக்கு... ந‌ன்றி!

Bharathi Dhas said...

என்னே இயற்கையின் அழகு...?

Priya said...

ஆமா Bharathi Dhas இயற்கை அழகை என்னவென்று வர்ணிப்பது...!

Post a Comment