Subscribe:

Pages

Wednesday, September 1, 2010

பிரியமானவர்களுக்கு.....

           ன் மனசு நிறைஞ்சிருக்கு, மனசுல பட்டதை சொன்னேன், மனசுக்குள்ளேயே பேசிக்கிட்டேன், மனசே சரியில்ல..... இப்படி நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றுக்கு 'மனசு' என பெயரிட்டு நாமும் அதையே முன்னிறுத்தி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். என் மனதை நான் அறிந்துக்கொள்ளும் முயற்சியாகவே "என் மனதில் இருந்து"என பெயரிட்டு இந்த வலைப்பக்கத்தை தொடங்கி இதோ ஒரு வருடம் ஆகிவிட்டது.


தற்செயலாகதான் எழுத ஆரம்பித்தேன். அதுவரை என் டயரியில் மட்டுமே எழுதிவைத்து வந்த கவிதைகளில் சிலவற்றை பதிவிட ஆரம்பித்து பின் என்னை சுற்றி நிகழ்பவைகளையும் எனக்குள் நிகழ்பவைகளையும் எழுதி வருகிறேன். பெரும்பாலும் அந்தந்த நேர உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே என் பதிவுகள் இருப்பதாக உணர்கிறேன். நான் காண்கின்ற உணர்கின்ற  அனைத்தும் எனக்குள் ஏற்படுத்தும் ஆழமான பார்வையை எழுதிட விரும்பினேன். மனதிற்குள் சிக்கி தவிக்கும் உணர்வுகளை கவிதைகளிலாவது கொட்டி விட வேண்டுமென நினைக்கிறேன்! ஆனால் கவிதைகளில் கூட வெளிப்படுத்த முடியாத நேரங்களில் ஓவியங்களின்  மூலம் எனது உணர்வுகள் வண்ணங்களாக வெளிப்படும் போது ஏதோ ஒரு வித நிறைவு ஏற்படுகிறது.ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று என்னை சலனப்படுத்தும் போது இங்கே அவை எழுத்துக்களாக வடிவம் பெறுகிறது.

இதன் மூலம் அற்புதமான நட்புகள் கிடைத்திருக்கிறது. கிடைத்திருக்கும் தோழமைதான் என்னை பரவசப்படுத்தி மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது.

என் வலைப்பக்கத்தை பார்வையிடும் அனைத்து உள்ளங்களிலும், தொடர்ந்து பதிவுகளை படித்து எழுதும் பின்னூட்டங்களிலும் உங்களுக்கும் எனக்குமான‌ பிரியத்தை உணர்கிறேன். ஒரு வருடம் ஆகிய நிலையில் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

எழுத்துக்களாலே நாம் இணைந்திருக்கிறோம். இன்று அதே எழுத்துக்கள் மூலமாகவே என் பிரியமானவர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிகிறேன்.

33 comments:

Chitra said...

WOW!!!! Congratulations!!!
I am happy for you!!!

Chitra said...

Hurray!!! I am the first one to wish you too....... Awesome feeling!!!

Anonymous said...

//இதன் மூலம் அற்புதமான நட்புகள் கிடைத்திருக்கிறது. கிடைத்திருக்கும் தோழமைதான் என்னை பரவசப்படுத்தி மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது.//

உங்கள் பக்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியா...உங்கள் தோழமைகளில் ஒருவன் எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம்...

Balaji saravana said...

வாழ்த்துக்கள் ப்ரியா!

வெறும்பய said...

எழுத்துக்களாலே நாம் இணைந்திருக்கிறோம். வாழ்த்துக்கள் ப்ரியா!

கலாநேசன் said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

சே.குமார் said...

முதல் பிறந்த நாளுக்கு (வலைப்பூவுக்கு...) வாழ்த்துக்கள்.
எழுத்துக்களாலே இணைந்திருக்கிறோம் உண்மைதான், நட்பின் வாசம் வீசிக்கொண்டே இருக்கட்டும்.

vinu said...

appidiya sari ok vazthukkal.
appudeenu sambirathaayathukku sollittu pogamudiyaatha badi konjam touching ah eluthi irrukkeenga, athanaala naanum oru poongoththu koduthu vaalthittu poiduren.

varttaaaaaaaaaaaa

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் ..இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்

Raja said...

வாழ்த்துக்கள் ப்ரியா! தொடர்ந்து எழுதுங்கள்...

r.v.saravanan said...

எழுத்துக்களாலே நாம் இணைந்திருக்கிறோம்.
வாழ்த்துக்கள் ப்ரியா! தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து பிரியா!!

♠புதுவை சிவா♠ said...

பூங்கொத்து & வாழ்துகள் ப்ரியா

Ananthi said...

வாழ்த்துக்கள் ப்ரியா... தோழியின் ஒரு வருட பயணத்தில் கூட பயணிக்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி... :-))
உங்கள் கவிதை, எழுத்து வடிவங்கள், உங்கள் ஓவியம் அனைத்துமே அருமை...
மென்மேலும்.. உங்கள் மனதில் இருந்து, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. காத்திருக்கிறேன்.. :-)))

lawrysma1 said...

Hi Congratulations. I read your blog from time to time. Keep up the good work.

I am Fr Lawrence, Lyon, France.

Suresh said...

Innaiku thaan inga vandhean. 1 year late!! ungal payanathirkku vazhthukal. count on me today onwards.. :-))

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

நிலா மகள் said...

எங்க மனசும் நிறைஞ்சிருக்கு பிரியா... ஆரோக்கியமாவே வளர்ந்திருக்கிங்க ஒரு வருடத்தில் ! மென்மேலும் உயர்வு பெற எங்கள் பிரார்த்தனைகள்...

asiya omar said...

ஒரு வருட சாதனைக்கு வாழ்த்துக்கள்,வலைப்பூவில் மனம் ஒரே சீராய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

ர‌கு said...

ந‌ன்றிலாம் எதுக்கு? தொட‌ர்ந்து எழுதுங்க‌ :)

மங்குனி அமைசர் said...

இதன் மூலம் அற்புதமான நட்புகள் கிடைத்திருக்கிறது. கிடைத்திருக்கும் தோழமைதான் என்னை பரவசப்படுத்தி மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது.////


உண்மையான வார்த்தைகள் , பதிவுலகின் மூலம் நன்மை தீமை இருக்கிறதோ இல்லையோ , நமக்கு உலகம் முழுவது நண்பர்கள் கிடைத்து விட்டார்கள்

Sriakila said...

வாழ்த்துக்கள் ப்ரியா! மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் இணைவோம்.

அண்ணாமலை..!! said...

உங்கள் கவிதைகள்,சிந்தனைகள் எல்லாமே ரசனை என்றாலும்
உங்களின் ஓவியங்கள் தான் அத்தனை அழகு!
ஓவியங்கள் எளிதானவை அல்ல!

பாலன் said...

வாழ்த்துக்கள் ப்ரியா உங்கள் மனதில் இருந்து உண்டாகும் எழுத்தின் அதிர்வலைகள் எம்மனதில் என்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும், தொடர்ந்து எழுதுங்கள் பின் தொடர்கின்றோம்

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

dear frd very nice ur blogger continue good luck

அப்பாவி தங்கமணி said...

Happy (blog) Anniversary Priya... keep up the writing...

Yellow Rose said...

Pasamulla akkavirkku,

Intru thaaan ungal varikalai tharichikka intha thambikku vazhi therinthathu.... Ini en chella akkavirkku en varikalum vanthu serum....

-Dhanaakutty...

dineshkumar said...

வணக்கம் பிரியா
நான் பதிவுலகிற்கு புதியவன் இன்று தான் உங்கள் பதிவை கண்டேன் ஒரு சில படைப்புகளை மற்றும் கண்டேன் இனி காணும் நாட்களே.

அன்புடன் தினேஷ்

siva said...

HAPPY FIRST BIRTHDAY TO EN MANATHIL ERUNTHU....!!!
HAPPY FIRST BIRTHDAY TO EN MANATHIL ERUNTHU....!!!
HAPPY FIRST BIRTHDAY TO EN MANATHIL ERUNTHU....!!!

Yellow Rose said...

akka kalakkureenga.... hmm...

அஹமது இர்ஷாத் said...

Congrats Priya..

சந்ரு said...

வாழ்த்த்துக்கள் தொடருங்கள்

ஸாதிகா said...

நல் வாழ்த்துக்கள் ப்ரியா.தொடர்ந்து நிறைய இடைவெளியில்லாமல் பதிவிடுங்கள்.

Post a Comment