Subscribe:

Pages

Friday, August 20, 2010

வெட்கப்புன்னகை !


ன்றுதான்
முதல் முறை
நீயும் நானும் பேசிக்கொண்டது.

உன் குர‌லை
கேட்கப்போகிறேன்
ஆவல் ஒரு புறம் !
உளறாமல் நான் பேசவேண்டுமே
பதட்டம் மறுபுறம் !

தொலைப்பேசி என் கையிலும்
படபடப்பு நெஞ்சிலும்
மனம் நிறைய மகிழ்ச்சி
அன்று உன் பிறந்தநாள் ஆனதால் !

நீயே எடுக்க வேண்டும்
எண்ணியபடி
எண்களை அழுத்துகிறேன்
எதிர்ப்பார்ப்பின் உச்சமாய்
நினைத்தபடி
நீயேதான் !

"ஹலோ" என்றாய்
"ஹாப்பி பர்த்டே" என்றேன் நான்
சட்டென "வெறும் வாழ்த்துக்கள்
மட்டும்தானா" என்றாய் நீ !

பேச எழுந்த வார்த்தைகளை
என் புன்னகையினூடே
உதடு கடித்து மறைத்துக்கொண்டேன்!
சிந்திய
வெட்கப்புன்னகையினை
சிதறாமல் பிடிக்க
என் முன்னே
இல்லை நீ !

அங்கே சிறிது மெளனம்!
நிலவிய மெளனத்தில்
அரங்கேறி இருக்க வேண்டும்
நம் காதல்
உனக்கு தெரியாமலும்
எனக்கு தெரியாமலும்!

பின் ஏதேதோ பேச நினைத்தும்
முதல் உரையாடலில்
முடியாமல் போனது.

தொலைபேசியை
வைத்துவிட்டு தேடிச் சென்றேன்
பகிர்ந்துக்கொள்ள
என் அம்மாவை நோக்கி !

வெட்கங்களின் இடையிடையே
சொற்களை கோர்த்து
நீ பேசியதை சொன்னேன்.
"அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம்தான்னு
சொல்ல வேண்டியதுதானே" என்றாள் அம்மா.

உன்னிடம் முதலில்
தோன்றி மறைந்த
வெட்கப்புன்னகை
மீண்டும் சிந்தியது
இம்முறை
அம்மாவின் முன்னால்.

அன்று  ஆரம்பித்தது
உன்னால்
இன்றுவரை
தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது
உன்னிடமே !

ஆனால் அன்று சிதறிய
என் வெட்கப் புன்னகையை
இன்று
சிதறாமல் சேகரிக்கின்றாய் !


என்னில் வாழும் என் இன்னொரு உயிரான என்னவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Xavier 


37 comments:

சாருஸ்ரீராஜ் said...

super priya ..birthday wishes to xavier....

Priya said...

வாங்க சாருஸ்ரீராஜ். நிச்சயம் உங்க வாழ்த்தை அவரிடம் சேர்த்து விடுகிறேன். நன்றி!

Balaji saravana said...

நைஸ் கவிதை பிரியா!
//நிலவிய மெளனத்தில்
அரங்கேறி இருக்க வேண்டும்
நம் காதல்
உனக்கு தெரியாமலும்
எனக்கு தெரியாமலும்!//
அருமையான வரிகள்..
என் வாழ்த்தையும் சொல்லி விடுங்கள்!

Mrs.Menagasathia said...

Happy B'day to ur hubby!! nice priya!!

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!!

ஜெய்லானி said...

கவிதை வரிகள் சூப்பர்.. :-))

ஹேமா said...

அன்பான வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் ப்ரியா.அன்பின் தேக்கத்தோடு கவிதை உணர்வின் உச்சம்.

Mohan said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Jeyamaran said...

Nice poem and nic wishes Dude Me too wish the same................

சுசி said...

உங்கள் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா.. அழகான கவிதை..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரொம்ப நாளாச்சு டீச்சர். நலம்தானே. சாருக்கு ஒரு ஹாப்பி பர்த்டே பார்சல். (சாக்லேட் உங்க செலவு) :))

Sriakila said...

உங்களுடையப் பதிவுகளை இப்போது தான் படிக்க ஆரம்பிக்கிறேன்.

உங்கள் கவிதையில் காதல் வழிகிறது. அனைத்து வரிகளும் அருமை! உங்கள் கணவருக்கு என்னுடையப் பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள்.

Chitra said...

How sweet!

Convey our birthday wishes to Xavier!

சீமான்கனி said...

திருமணத்துக்கு முந்தையநாட்களை கவிதையாய் அழகாய்..கலக்கல்... ஆஹா...பிரியா இருவருக்கும் இவ்வளவு பக்கமாய் பிறந்தநாளா???கிரேட்...மிக்க மகிழ்ச்சி என்வாழ்த்துகளை மறக்காமல் சொல்லிவிடவும்...

ர‌கு said...

காத‌லையும், வெட்க‌த்தையும் மிக‌ ர‌ச‌னையாக‌ எழுதியிருக்கீங்க‌...ர‌சித்து வாசித்தேன் ப்ரியா!

சேவிய‌ர் அவ‌ர்க‌ளுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் :)

Priya said...

நண்பர்களே உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாரு, மேனகா, Jayamaran, சித்ரா உங்களின் வாழ்த்துக்களை அவரே படித்துவிட்டு சந்தோஷமடைந்தார். தமிழில் எழுதிய மற்றவர்களின் வாழ்த்துக்களை நான் படித்துக் காட்டியதில் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நன்றி!

வாங்க‌ ஷ‌ங்க‌ர், நல‌மா? சரி ச‌ரி, அவ‌ருக்காக‌தானே சாக்லெட் செல‌வை ஏத்துக்கிறேன்:)

Sriakila உங்க‌ முத‌ல் வ‌ருகைக்கும் அன்பான‌ வாழ்த்துக்க‌ளுக்கும் ந‌ன்றி தோழி.

r.v.saravanan said...

கவிதை மிகவும் nice உங்களவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பிரியா

Maduraimohan said...

அன்பான வரிகள் இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசு உங்கள் கணவருக்கு வேறெதுவும் இல்லை :)

பாலன் said...

உங்கள் கணவரிற்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள் ப்ரியா, உங்கள் கவிதை மிக அருமையான பிறந்தநாள் பரிசு வாழ்த்துகள்

Anonymous said...

belated birthday wishes to your lovable partner priya.. by the way lyrics were too good..

Jenova

சௌந்தர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு

பத்மா said...

happy birthday xavier ...belated greetings
i need a big gâteau

♠புதுவை சிவா♠ said...

Joyeux anniversaire Xavier désolé pour le retard.

:-)

Priya said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்.

நன்றி Maduraimohan.
பரிசுதான்.. ஆனால் அவருக்கென்று எழுதியதை நானே படித்துக்காட்ட வேண்டியதாய் உள்ளது(அவர் தமிழ் பேசுவதோடு சரி, படிக்க தெரியாது)!

தெரிவித்துவிட்டேன் பாலன், நன்றி!

Thanks a lot Jenova,from my lovable partner too.

நன்றி செளந்தர்!

வாங்க பத்மா... இதோ கத்தோ பார்சலில் வந்துக்கொண்டே இருக்கிறது.

பிறந்த நாள் முடிந்தும் கொண்டாட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு பு.சிவா.
அதனால் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. பிரெஞ்சில் எழுதியதால் இன்று சேவியரே படித்து சந்தோஷப்பட்டார். அதற்காக மீண்டும் ஒரு நன்றி.

நிலா மகள் said...

எங்கள் இனிய வாழ்த்தையும் தங்கள் துணைவருக்கு சேர்ப்பித்திடுங்கள் பிரியா...

அப்பாவி தங்கமணி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் சார்பிலும் சொல்லி விடுங்கள் ப்ரியா... அழகான கவிதை... இதை விட அழகாய் வாழ்த்து சொல்ல முடியாது... உங்களவர் கொடுத்து வைத்தவர் தான்...

"உழவன்" "Uzhavan" said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

Priya said...

சேர்த்துவிட்டேன் நிலாமகள்... வாழ்த்துக்களுக்கு நன்றி!

நன்றி அப்பாவி தங்கமணி... உங்க வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன்!

நன்றி உழவன்!

ராஜ ராஜ ராஜன் said...

இப்பிடிக் கூட வாழ்த்து சொல்லலாமோ...

நல்லா இருக்கே...

சேவியர்க்கு என் வாழ்த்துகளும்...!

http://communicatorindia.blogspot.com/

மோகன்ஜி said...

பிரியா,சற்று முன்னரே பார்த்தேன் உங்கள் கவிதையை.பாரதி தாசன் ஊரு பொண்ணாச்சே ! அழகான வாழ்த்து. என் அன்பு சேவியருக்கும்.என்றும் மாறாப் புன்னகையுடன் இன்பமாய் இருங்கள்.
மோகன்ஜி,ஹைதராபாத்

சே.குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நந்தா said...

convey my belated wishes!!

காதலில் பிறந்த நாள்
கூட ஒரு பண்டிகையாகி
விடுகிறது :)

Nice blog

Priya said...

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.......

...ராஜ ராஜ ராஜன்

...மோகன்ஜி

...சே.குமார்

ம்ம்... ஆமாங்க நந்தா "காதலில் பிறந்த நாள் கூட ஒரு பண்டிகையாகி விடுகிறது :)"

Ananthi said...

Happy birthday to Xavier.. :)
Many more happpy returns of the day...

Kavithai superrrrrrr..priya :)

dineshkumar said...

வணக்கம் பிரியா
கவிதை காவியமாக உள்ளது


//ஆனால் அன்று சிதறிய
என் வெட்கப் புன்னகையை
இன்று
சிதறாமல் சேகரிக்கின்றாய் !


என்னில் வாழும் என் இன்னொரு உயிரான என்னவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.///
இவ்வரிகளை வாசிக்கும்போது

Anonymous said...

chanceaella! superb akka

bye ur sister

Chennai to Shirdi Tour Package said...

அற்புதமான பதிவு

Post a Comment