Subscribe:

Pages

Thursday, March 25, 2010

சம்திங் ஸ்பெஷல்.... !!!

    
     "ன்னோட பிறந்த நாளன்றுதான் மாப்பிள்ளைக்கும் பிறந்த நாளாம்" என்று என் அப்பாவின் பிறந்த நாளைப்பற்றி சொல்லி என் அம்மாவிற்கு (அவர்கள் திருமணத்திற்கு முன்) சந்தோஷத்தை கொடுத்தாராம் என் மாமா(அம்மாவின் அண்ணன்). "மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாளாம்".....அப்பா அம்மாவின் திருமணத்தின் போது குடும்பத்தில் இதே பேச்சாக இருந்ததாம். ஆம்... இருவரின் பிறந்த நாளும் மார்ச் 25. திருமணம் முடிந்த அடுத்த பத்து மாதத்தில் பிறந்த முதல் குழந்தை நான். இரண்டரை வருடத்திற்குப் பின் பிறந்த என் தம்பிக்கு என்ன ஆசையோ..... வந்து பிறந்தான் அதே மார்ச் 25ல். எதிர்பாராமல் அதே நாளில் தம்பியும் பிறந்ததால் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆச்சரியம்.

சில வருடங்களுக்கு பிறகு... என் தங்கை, அம்மாவின் வயிற்றில் இருந்த சமயம் அது. மார்ச் மாதக்கடைசியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் டெலிவரி ஆகுமென்று டாக்டர் சொல்லிவிட வீட்டில் எல்லோருக்கும் இந்த குழந்தையும் அதே தேதியில் பிறந்து விடுமோ என்று நினைத்ததைவிட, எதிர்பார்த்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். மார்ச் 25தும் வந்தது! தம்பிதான் அம்மாவின் வயிற்றை தொட்டுப் பார்த்துக்கொண்டே "பாப்பா இன்னைக்கு பொறந்திடுமா ம்மா ?", என்று கேட்க அம்மாவும் சிரித்துக் கொண்டே "தெரியலையேப்பா" என்றது இன்றும் என் நினைவில்.

"எங்க பிறந்த நாளன்றுதான் பாப்பாவும் பொறக்கும். நாங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து கொண்டாடுவோமே, எங்க பிறந்த நாள்தான் ஸ்பெஷல் டேவாக இருக்கும்" என்று தம்பிதான் ரொம்ப ஆசையாக சொல்லிக் கொண்டு இருந்தான். "ஆமா நீங்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவிங்க. ஆனால் என்னோட பர்த்டேவை விடுமுறை நாளாக்கி இந்த நாடும் சேர்ந்து கொண்டாடும். அதனால் என்னோட பிறந்த நாள்தான் ஸ்பெஷல்"என்று சொல்லிக்கொள்வேன். (பின்ன, நான் பிறந்தது ஆகஸ்ட் 15 ஆச்சே !) என் பர்த்டேதான் ஸ்பெஷல் என்று தம்பியிடம் சொல்லிக் கொண்டாலும் ஒரே நாளில் பிறந்த என் அப்பா, அம்மா, தம்பி மூவரும் சேர்ந்து கொண்டாடிடும் பிறந்த நாள்தான் சம்திங் ஸ்பெஷல் எங்கள் வீட்டில் !
(அப்புறம் தங்கை எப்போதுதான் பிற‌ந்தாள் என்று கேட்கிறீர்களா… எதிர்ப்பாராமல் அப்பா அம்மாவின் பிறந்த நாளன்றே தம்பி பிறந்தான். எதிர்ப்பார்த்த தங்கையோ... இல்லை, வேறொரு நாளில்தான் பிறப்பேன் என்று ஏப்ரலில்தான் பிறந்தாள்).



இன்று பிறந்த நாள் கொண்டாடிடும்
அப்பா அம்மா தம்பி மூவருக்கும்
என் அன்பின் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!



23 comments:

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அப்பாவுக்கு, அம்மாவுக்கு, தம்பிக்கு:)!

ஸ்ரீ.... said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ப்ரியா.

ஸ்ரீ....

நேசமித்ரன் said...

மிக நல்ல பகிர்வுங்க

வாழ்த்துகள்

கவிதன் said...

ஆச்சர்யமாக இருக்கிறது!!!

உங்கள் அம்மா ,அப்பா , தம்பி எல்லோருக்கும்....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

அப்பா,அம்மா,தம்பி 3வரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது மிக ஆச்சரியம்.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

மூவருக்கும் பூங்கொத்துடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்...நெஜமாவே படிக்கறப்ப புல்லரிச்சு போச்சு ப்ரியா...சில விசியங்கள் அப்படி தான்...உங்க அம்மா அப்பா தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரசிகன்! said...

adada!!!

enna oru inbamaana naal !!!

natchaththirangal thoorattum!!!

vaazhthukkal moovarukkum!!!

pudhuchery kondaadattum!!!

-Rasigan

பத்மா said...

வாவ் .எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

இன்று பிறந்த நாள் கொண்டாடிடும்

அப்பா அம்மா தம்பி மூவருக்கும்

என் அன்பின் இனிய

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

நல்ல சேதி ப்ரியா ...நானும் என் பிறந்தநாளில் யாராவது பிறந்திருபார்களே அவர்களை சந்திக ஆவலுடன் வெகு நாட்களாய் சுற்றி கொண்டு இருக்கிறேன்...ஒரே ஒரு நண்பனை சந்தித்தேன் அவனுக்கும் எனக்கும ஒருநாள் வித்யாசம்..ம்ம்ம்ம்...

Chitra said...

What a coincidence!

HAPPY BIRTHDAY TO YOUR PARENTS AND TO YOUR BROTHER!

ஜெயா said...

மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இந்த நாள் உங்கள்குடும்பத்துக்கு சம்திங் ஸ்பெஷல் தான் ப்ரியா...

Raghu said...

இதைவிட‌ பொருத்த‌மா இந்த‌ ப‌திவுக்கு த‌லைப்பு வெக்க‌ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்ங்க‌.

அப்பா, அம்மா, த‌ம்பி மூவ‌ருக்கும் பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் :)

Mohan said...

மூவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Priya said...

வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

malarvizhi said...

அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் நானும் என் தங்கையும் ஒரே நாளில் பிறந்தவர்கள்.(இரண்டு வருட இடைவெளியில்)ஜூலை 13 .

பத்மா said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

Priya said...

நன்றி மலர்விழி! ஆமா... சில நேரங்களில் இப்படிதான் எதிர்பாராமல் நடக்கிறது. என்னோட கஸின் ஒருத்தி ஜுலை 27ல் முதல் குழந்தையும் அடுத்த வருடம் அதே தேதியில் இரண்டாம் குழந்தையும் பெற்றாள்!

விருதுக்கு நன்றி பத்மா!

Jaleela Kamal said...

ஓ முன்று பேருக்கும் ஒரே நாளிலா.

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

Priya said...

நன்றி Jaleela!

Priya said...

உங்க அனைவரின் வாழ்த்துக்களை கண்டு மகிழ்ந்த எனது பெற்றோர் அவர்களது நன்றிகளை தெரிவிக்க சொன்னார்கள்!

நன்றி! நன்றி! நன்றி!

Post a Comment