Subscribe:

Pages

Sunday, November 21, 2010

பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு
இன்றுவரை
ஒவ்வொன்றும்
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம்
நமதுறவு என்பதால்!

காய்ந்தப்பின்பும்
காதலுடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும்
உன் அன்பைப் போலவே!

என்னில் நீ ரசிப்பவைகளில்
என்றும் முதலிடம் பிடிப்பது
என் நெற்றி பொட்டு......

அன்று நீ வாங்கிக்கொடுத்தது
இன்றும் என்னிடம்
பத்திரமாக‌!

குழந்தையின் பாதமாக
எண்ணி கொஞ்சிடும் நீ
அழகுபடுத்திட‌ பரிசளித்தாயே
தங்க கொலுசு......
என்றுமே என் கால்களை தழுவியபடி
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
எழும் சலங்கை சப்தம்
உன்னை நினைப்படுத்திக்கொண்டு!

என்னை நினைத்து எழுதிய
கவிதை பக்கங்கள்….....
எனக்காக பார்த்து பார்த்து
வாங்கிய ஆடைகள்….....
கடைசியாக
என் பிறந்த நாளுக்கு
பரிசளித்த கைகடிகாரம் வரை
அனைத்துமே என்னிடம்
பொக்கிஷங்களாக‌……..

நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும்
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!

41 comments:

philosophy prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பு... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

philosophy prabhakaran said...

ஆகா... நான்தான் First....

Priya said...

வாங்க வாங்க philosophy prabhakaran... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

கலாநேசன் said...

உணர்வுமிகு கவிதை.அருமை.

LK said...

/நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும்
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!//

ப்ரியா அருமை... ஏன் எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை ??

LK said...

அந்த கடைசி வரிகள் கண் கலங்க வைத்தன

பத்மா said...

பிரியா மனசு வலிக்கிறது.
எப்பொழுது வேண்டுமானாலும் தரலாம்.
God wills .cheer up

பிரபு . எம் said...

//நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும்
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!//

இந்த வரிகள் மனதைத் தொட்டதைக் கூர்மையான வலியால் உணர்ந்தேன்...

அன்பரசன் said...

Nice.

சே.குமார் said...

உணர்வுமிகு கவிதை.

அன்புடன் அருணா said...

Hope everything alright Priya?

r.v.saravanan said...

very nice priya

எஸ்.கே said...

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

Mrs.Menagasathia said...

கவிதையின் கடைசி வரிகள் கலங்க வைத்துவிட்டது ப்ரியா..கடவுள் துணையிருப்பார்...

g.aruljothiKarikalan said...

aarambam migavum sandhoshamaaga irundhadhu kadaisi varigal............ enna solvadhu? ellam sariyaagividum.

Ananthi said...

நெஞ்சைத் தொட்டது கவிதை.. கடைசி வரிகளின் உள்ளர்த்தம் கண்டு மனசு கஷ்டமா இருக்குப்பா..
உங்களுக்கு என் அன்பும், அணைப்பும் ப்ரியா..

♠புதுவை சிவா♠ said...

கவிதையின் கடைசி வரியை
கடந்த போது - அந்த
கண்ணீரின் துளியையும்
காதலின் வலியை
வார்தைகள் இல்லை ஆறுதல சொல்ல . . .

ஹேமா said...

அழகா ஆனந்தமா வரிசைப்படுத்திட்டு இப்பிடியா முடிப்பீங்க !

siva said...

காய்ந்தப்பின்பும்
காதலுடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும்
உன் அன்பைப் போலவே!...great...

கவிதையின் கடைசி வரி...
வார்தைகள் இல்லை ஆறுதல சொல்ல . . .

ராமலக்ஷ்மி said...

சோகமாய் முடித்து விட்டீர்களே? அழகான கவிதை.

Balaji saravana said...

நல்லா இருக்கு ப்ரியா

Anonymous said...

மனசு வலிக்கிறது. Hugs. That's all I can do from here. =(

யாதவன் said...

வழமைபோல் சுப்பர் பிரியா

சாருஸ்ரீராஜ் said...

கடைசி வரிகள் மட்டும் கனக்கிறது...

Jenova said...

எழுதுவதற்கோ , படிப்பதற்கோ நேரமில்லை என நான் போட்டுவைத்திருந்த வட்டத்திற்குள்ளேயே இருந்திருக்கலாம் இன்றும் .

உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட ஒரு ஆத்மாவாக மாறிவிட வேண்டுமென்பதில் தீவிரம் காட்டும் பொழுதுகளிலெல்லாம் இப்படி ஏதோ ஒன்று இடறி விடுகிறது .

பிரியா , விடையை கண்டுபிடித்துவிடும் சாமர்த்தியசாலிகள் மட்டுமே புதிரை வாசிக்கப் பழகிக்கொள்கிறார்கள் , இது என் எண்ணம் !

வாழ்த்துக்கள் ,
ஜெனோவா

கவிநா... said...

கவிதை அல்ல இது... ஒரு கண்ணீர் கதை...

--
அன்புடன்
கவிநா...

Priya said...

நன்றி கலாநேசன்!

நன்றி LK!
ம்ம்.. விருப்பமில்ல,மேலும் எப்படி இணைப்பதுன்னு தெரியல.

//எப்பொழுது வேண்டுமானாலும்,God wills //... உண்மைதான் பத்மா!

நன்றி பிரபு.எம்!

நன்றி அன்பரசன்!

நன்றி சே.குமார்!

...ya I'm alright now அன்புடன் அருணா!

நன்றி r.v.saravanan!

நன்றி எஸ்.கே.!

Priya said...

//கடவுள் துணையிருப்பார்//... மிக்க நன்றி மேனகா!

g.aruljothiKarikalan
//ellam sariyaagividum.//....நம்பிக்கையில் நானும்!

//உங்களுக்கு என் அன்பும், அணைப்பும் ப்ரியா..//...அன்பிற்கும் அணைப்பிற்கும் மிக்க நன்றி ஆனந்தி!

நன்றி புதுவை சிவா!

//அழகா ஆனந்தமா வரிசைப்படுத்திட்டு இப்பிடியா முடிப்பீங்க !//....என்ன செய்வது தோழி சில நேரங்களில் முடிவு நம்கையில் இல்லையே;(

நன்றி Siva!

நன்றி ராமலக்ஷ்மி!
//சோகமாய் முடித்து விட்டீர்களே?//... அப்படி முடிப்பதில் விருப்பமில்லைதான் எனினும் உணர்வுகளில் உறைந்துபோன ஒன்றின் தூண்டுதலால் எழுதப்பட்டது.

Priya said...

நன்றி Balaji saravana!

Tks for ur hugs அனாமிகா துவாரகன்!

நன்றி யாதவன்!

மனதை கனக்கவைத்து விட்டேனா சாருஸ்ரீராஜ்?!

வாங்க ஜோ, கலங்கி நிற்கும் வேளையில் ஆதரவாய் வருகை தந்த உங்களின் அன்பிற்கு நன்றி!

//கவிதை அல்ல இது... ஒரு கண்ணீர் கதை...//...உண்மைதான் கவிநா!

Mahi said...

ப்ரியா,உங்க போஸ்ட் வந்தவுடனே பார்த்தேன்..கடைசிவரிகள் பார்த்ததும் கொஞ்சம் குழப்பமா இருந்தது..நாமா எதுவும் அஸ்யூம் பண்ணிக்கவேணாம்னு அமைதியாயிட்டேன். :-|

உங்கள் இழப்பு புரிகிறது.இதை கடந்துவரும் வலிமையை கடவுள் உங்களுக்குத் தருவார்.

S Maharajan said...

//காய்ந்தப்பின்பும்
காதலுடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும்
உன் அன்பைப் போலவே!//

ரசித்த(நேசித்த)வரிகள்

நிலா மகள் said...

கடைசி பத்தி அதிர்வை அளித்தது. விதி வரைந்த பாதை வழிதான் வாழ்க்கை அனேக நேரங்களில்... கடந்து வரும் தெம்பையும் யாசித்தாக வேண்டியிருக்கிறது.

சத்ரியன் said...

காய்ந்தப்பின்பும்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
உன் அன்பைப் போலவே!


ப்ரியா,
காதல் அப்படித்தான்!

Vino said...

Really superb priya ...

I have read this many time

Awesome .....

Sumathi said...

Dear Priya,
I have visited your blogs before and enjoyed them very much. This sad kavithai made me join officially. I understand your pain. enna solla? I am very sorry. Prayers and hugs from me... You are a really sweet, friendly person. Everything will be alright. Take care! Indha valiyai marakka unakku viraivil nalladhae nadakkattum! God is gracious.

இசக்கிமுத்து said...

கடைசி வரியின் வலியினை உணரமுடிகிறது!!

Priya said...

உங்க அன்பான வார்த்தைகளுக்கு நன்றி Mahi!

நன்றி S Maharajan!

//கடந்து வரும் தெம்பையும் யாசித்தாக வேண்டியிருக்கிறது.// ... நிஜ‌ம்தான் நிலாம‌க‌ள்!

ந‌ன்றி ச‌த்ரிய‌ன்!

Thanks Vino!

Thank u Sumathi!
Tks a lot for ur Hugs & prayers!

ந‌ன்றி இசக்கிமுத்து!

g.aruljothiKarikalan said...

comment'sku en nandrigal...

அப்பாவி தங்கமணி said...

நெகிழ வைத்தது ப்ரியா... என் மனதையும் படித்ததை போல... அழ வெச்சுட்டீங்க... ஆனா ஆழமா யோசிக்கவும் வெச்சுட்டீங்க... தேங்க்ஸ்

நான் எழுதி போஸ்ட் பண்ண தயங்கிகிட்டு இருக்கற ஒரு கவிதைய மறுபடியும் இன்னிக்கி படிச்சேன்...

Priya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி தங்கமணி!

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Post a Comment