Subscribe:

Pages

Saturday, November 28, 2009

மருதாணி...எனும் கலை!

     சிறுமியாக இருந்த காலம்முதலே மருதாணியின் மீதி எனக்கு அப்படியொரு காதல். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் இரண்டு கைகளையும் ஆசையோடுக் காட்டிக்கொண்டு, அவர்கள் எப்படியெல்லாம் வைக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வேன். நன்றாக சிவக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு இரவு முழுதும் கலைந்து விடக்கூடாதே என்று கைகளை அதிக அசைவில்லாமல் வைத்துக்கொண்டு தூங்குவேன். விடிந்ததும் கைகளை கழுவிக்கொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டி மகிழ்ந்த நாட்கள்தான் எத்தனையோ !!!


பின் நானே வைத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு இதுவும் ஒருவிதமான கலை என்பதனை உணர்ந்துக் கொண்டேன்.


இப்பொழுது கிடைப்பதுப்போல் அப்போ ரெடிமேட் கோன்கள் கிடைக்காது என்பதால் தெரிந்தவர்களிடமும் தோழிகளிடமும் பெற்றுவந்த மருதாணி இலைகளை நானே அம்மியில் அரைத்து(இதற்காகவாது நான் அம்மியினை தொடுவதாக அம்மாவின் கமென்ட் கிடைக்கும்) வைத்துக்கொள்வேன். கோன்களில் கிடைக்க ஆரம்பித்த பிறகு, கூடவே அதற்கான வடிவங்களில் விதவிதமாக அச்சுகள் கிடைத்தது. ஆனால் அதை தவிர்த்து எப்போதும் நானே வடிவங்களை உருவாக்கி வரைந்துக்கொள்வேன்.


எனக்கு பிடித்தமானவைகளில் நான் இன்னும் தொடர்ந்து கொண்டு வருவது இந்த மருதாணி வரைந்துக்கொள்வதைதான். எத்தனை நாட்கள்தான் தாள்களிலும் கேன்வஸ் போர்டுகளிலும் வரைந்துக்கொண்டிருப்பது, அதான் மாறுதலாக என் கைகளிலும் வரைந்துகொண்டவை.....மருதாணியாக!

28 comments:

malarvizhi said...

நானும் மருதாணி பிரியை தான். ஆனால் கோன்களில் உள்ள மருதாணி போட பிடிக்காது. அம்மியில் அரைத்த மருதாணி தான் பிடிக்கும்.

Raghu said...

மேலே இருக்க‌ற‌ முத‌ல் ப‌ட‌த்த‌ பாத்தாலே, என‌க்கு "ஸ்ஸ்ஸ்...ப்ப்ப்பா இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுதே", எப்ப‌டிதான் வ‌ரைஞ்சிங்க‌ளோ, ரொம்ப‌ பொறுமைசாலியா இருப்பீங்க‌ போல‌ருக்கே

ந‌ல்லா இருக்குங்க‌!

//இதற்காகவாது நான் அம்மியினை தொடுவதாக அம்மாவின் கமென்ட் கிடைக்கும்//

ம‌ம்மிக்கே உரிய‌ அம்மி கிண்ட‌ல்:)

ஜெனோவா said...

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் ...

tt said...

நிறைய பொறுமை இருக்கு பிரியா உங்களுக்கு.. வாழ்த்துக்கள் !!

Priya said...

வணக்கம் மலர்விழி, எனக்கும் கூட அரைத்த மருதாணியின் வாசம் பிடிக்கும்,நன்றி...

குறும்ப‌ன்,//ரொம்ப‌ பொறுமைசாலியா இருப்பீங்க‌ போல‌ருக்கே//...அப்படிதான் சொல்றாங்க!உங்க கமென்ட் வெரி நைஸ்...Thank u!

Priya said...

நன்றி ஜெனோவா!

ஆமா தமிழ், பொறுமை நமக்கு அவசியமானது தானே,ஏதோ எனக்கும் கொஞ்சம் பொறுமை இருக்கு.
நன்றி...

sathishsangkavi.blogspot.com said...

மருதாணி மருத்துவ குணம் நிறைந்ததுங்க.......

படத்தில் கைகளில் இருக்கும் ஓவியம் அழகு.....

எப்படிங்க இப்படிஎல்லாம் கலக்குறீங்கபோங்க....................

Priya said...

Sangkavi,உங்க பாராட்டுக்கு நன்றிகள் பல!
(ஏதோ எனக்கு தெரிந்தது)

Menaga Sathia said...

வாவ்வ்வ் டிசைன் ரொம்ப அழகா இருக்கு ப்ரியா.ரொம்ப பொறுமை உங்களுக்கு.வாழ்த்துக்கள்!!

Anonymous said...

இரண்டாவது போட்டோல பார்க்க அமேசிங்க்கா இருக்கு.

Priya said...

நன்றி Mrs.Menagasathia!
நன்றி Ammu Madhu!

பரிசல்காரன் said...

நல்லா எழுதறீங்க ப்ரியா..

விடாம எழுதுங்க...!

(btw, மருதா’ணி’ னி அல்ல!)

செ.சரவணக்குமார் said...

அருமை. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

Raghu said...

த‌மிழ்ம‌ண‌ம் ப‌ற்றி கேட்டிருந்தீர்க‌ள். உங்க‌ளுடைய‌ ஈமெயில் முக‌வ‌ரி என‌க்கு தெரியாததால், இங்கே க‌மெண்ட்டாக‌வே எழுதிவிடுகிறேன். த‌வ‌றாக‌ எண்ண‌வேண்டாம்.

நீங்க‌ள் எழுதும் ப‌திவுக‌ளை த‌மிழ்ம‌ண‌ம், த‌மிழிஷில் இணைத்தால் நீங்க‌ள் எழுதுவ‌து மேலும் நிறைய‌ பேரை சென்ற‌டையும் (அப்ப‌டிங்க‌ற‌ ந‌ம்பிக்கைல‌தான் நானும் தொட‌ர்ந்து எழுதிகிட்டிருக்கேன்).

http://tamilmanam.net/

http://www.tamilish.com/

Priya said...

செ.சரவணக்குமார்,உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

குறும்ப‌ன்,மிக்க நன்றி!(நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதுவோம்)

அன்புடன் அருணா said...

மறுபடியும் எனக்க்குப் பிடித்த மருதாணி!பூங்கொத்து!

Priya said...

மிக்க நன்றி அன்புடன் அருணா!

Nithya said...

Arumaya irukku. Romba neat ah podareenga. Super. :)

Do you do it yourself on both the hands???? adhu than yenakku varadhilla.. nan left la mattum potupen :)

Sowmya said...

aahha kalakareenga.. priya..
very nice design.

Sowmya said...

ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா.
ப்ளாக் ஐ விசிட் செய்ததர்கு.
உங்க மெஹந்தி டிசைன் ரொம்ப அழகு.
சூப்பர் டிசைன்.

G.AruljothiKarikalan said...

migavum arumiyaga ulladhu. Enakkum indha marudhani kalayin meedhu alaadhi priyam. neengal sonnadhu pol araitha marudhaniyai paal coveril potu pizhindu varaindhadu ellam ninaivukku varugiradhu. andha kirukkalgalayum paaratiya palaraal naanum ippodhu oralavukku marudhani idugiren. enn ninaivugalai meetadhartkum ungalin arumayana designgalukkum mikka nandri.

G.AruljothiKarikalan said...

ennudaya blogayum parthu vimarsikkavum

Priya said...

மிக்க நன்றி செள‌ம்யா!

Priya said...

g.aruljothiKarikalan வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! உங்க ப்ளாகில் நீங்க போட்ட மருதாணியை பார்த்தேன். நல்ல டிசைன்ஸ்! வாழ்த்துக்கள் தோழி!

Jaleela Kamal said...

ரொம்ப அழகாக இருக்கு டிசைன்,.

Priya said...

மிக்க நன்றி Jaleela Kamal!

Anonymous said...

very nice design.

Anonymous said...

very nice design.

Post a Comment