Subscribe:

Pages

Wednesday, August 18, 2010

மனம் தேடும் சந்தோஷம்!

                நெற்றியில் பதிந்த‌ என்னவரின் அழுத்தமான முத்தத்தினால் அழகாக விடிந்தது  எனது பொழுது. பிறந்த நாள் என்றாலே எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மனது சந்தோஷம் கொள்கிறது.
எனக்கும் அப்படிதான்! எழுந்ததில் இருந்து சொந்தங்கள், நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளினாலும், மெயில்கள் மற்றும் பதிவின் மூலமாகவும் வாழ்த்துக்களை பெற்ற மகிழ்ச்சியில் காலையில் கோவிலுக்கு சென்றேன். மாதாவின் பெருவிழா என்பதால் ஒன்பது பாதிரியார்களின் ஆசிர்வாதத்தில் திருப்பலி கண்டு மகிழ்ந்தேன்.


கஷ்டப்பட்டு நான் சமைத்த பிரியாணியும் சிக்கன் 65யும் மதியம் சாப்பிட்டு முடித்து, இரண்டு மணி நேரம் அப்பா அம்மாவுடன் சாட்டிங்கில் பேசிக்கொண்டே அவர்கள் முன்னால் கேக்  கட் பண்ணி, ( நானே செய்த கேக் இது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)அவர்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்டுவிட்டு,  மாலை என்னவருடன் கடற்கரைக்கு பயனமானேன்.


கடற்கரை சுற்றிலும் நிரம்பி இருந்த ஜனநெருக்கடியில் நானும் ஒருத்தியாகி, தொலைந்து போகாமல் இருக்க என்னவரின் கையை இறுக்க பிடித்துக் கொண்டேன். இதமாக காற்றில் அசைந்தாடும் படகில், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக்கொண்டு இருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தண்னீரில் பட்டு ஜொலிக்கும் அழகை என்னவரின் தோலில் சாய்ந்து கொண்டு முப்பது நிமிட படகு பய‌ணத்தை ரசித்தேன்.


வழக்கம்போல் கடற்கரை உணவகங்களில் நீண்ட வரிசை! காத்திருக்க பிடிக்காமல் என்னவருக்கும் எனக்கும் பிடித்த சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் இரவு உணவை முடித்து, கடலில் நடைபெற்ற வான வேடிக்கையினை கண்டு மகிழ்ந்தேன்.




நள்ளிரவு தாண்டியும் சோர்வடையாமல் மொய்க்கும் மக்கள் கூட்டத்தில் நான் மட்டும் கொஞ்சம் சோர்வடைந்துப் போனேன். அங்கிருந்த நீண்ட டிராஃபிக்கை சிரமப்பட்டு தாண்டி வீடு வந்துசேர 2 மணி ஆகிவிட்டது.



சிறுமியாக இருந்தபோது பிறந்த நாளில் புது டிரஸ் கிடைத்தாலே சந்தோஷம், பள்ளி வயதில் தோழிகளின் வாழ்த்து அட்டைகள் வந்தாலே சந்தோஷம், கல்லூரி பருவத்தில் தொலைப்பேசியில் வரும் வாழ்த்துக்களினால் சந்தோஷம், திருமணம் முடிந்ததால் என்னவரின் காதல் பரிசுகளில் சந்தோஷம் என்று இன்று வரை என் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷத்தால் நனைந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் பதிவுலக நண்பர்களும் இணைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி!

ஆனால் இவற்றால் மட்டும் மனது முழு சந்தோஷத்தை அடைந்து விடுகிறதா…  இந்த கேள்வியால் ஏனோ உண்மையான சந்தோஷத்தை மனது தேட முயற்சிக்கிறது.  ஏதாவது கஷ்டப்படும் ஏழை சிறுவர்களுக்கு உதவிட வேண்டும் என தோன்றியது. அதன் தொடக்கமாக நேற்று பாண்டிச்சேரியின் முக்கிய வீதி ஒன்றில் நடைப்பாதையில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள 4 வயது சிறுவனுக்கு ஆடைகள், செருப்பு, நோட்டு புத்தகங்கள், பென்சில்கள், இனிப்பு கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து மகிழ்ந்தேன். நேரடியாக என்னால் அதை செய்ய முடியாமல் போனதில் சின்ன வருத்தம்தான். ஆனால் பொருட்களை பெறும் போது கிடைத்த மகிழ்ச்சியினை புன்னகையால் அச்சிறுவன் வெளிப்படுத்தியதை என் தம்பி புகைப்படமாக்கி அனுப்பி இருந்தான். பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.

பிறந்த நாளில் மட்டும் இல்லாமல் தினசரி நிகழ்வுகளின் மூலமாக நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுக்கும் இறைவனுக்கு 'நன்றி' என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட முடியுமா?

இனி வரும் பிறந்த நாட்களில் ஒரு சிறுவனுக்கு உதவிடும் நிலை மாறி இன்னும் கஷ்டப்படும் சில‌ சிறுவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை தொடர்ந்து செய்ய நல்ல மனதை அளித்திடுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

25 comments:

Ramesh said...

அருமை அருமை..உங்களது பிறந்த நாளை நேரில் வராமலேயே உங்களுடன் சேர்ந்து கொண்டாடிய உணர்வு வந்தது இந்தப் பதிவைப் படிக்கும் போது....

tt said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா !!

சுசி said...

உங்க பிரார்த்தனை கண்டிப்பா நிறைவேறும் ப்ரியா..

பாராட்டுக்கள் :))))

Raghu said...

மிக‌ச் சிற‌ந்த‌ எண்ண‌ம் ப்ரியா, ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வும்போது அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ம‌கிழ்ச்சியைப் பாருங்க‌ள்..வேறெங்கிலும் காண‌க்கிடைக்காத‌ சொர்க்க‌ம‌து

GEETHA ACHAL said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...உண்மை தான் ப்ரியா...கஷ்டபறவங்களுக்கு உதவும் பொழுது சிறிய உதவியாக இருந்தாலும் அதனை பெரிய உதவியாக நினைத்து அவர்கள் கண்களில் தெரியும் சந்தோசத்திற்கு அளவு சொல்ல முடியாது...வாழ்த்துகள்...

அம்பிகா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா.
பிறந்தநாளில் பிறர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பிறந்தநாளுக்கு ஒரு பூங்கொத்தும் சிறந்த எண்ணத்துக்கு ஒரு பூங்கொத்தும்!

கமலேஷ் said...

பிறந்த நாளை மற்றவர்களுக்கு உதவி செய்து அர்த்ததமுள்ளதாக்கி இருக்கிறீர்கள்..
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி.

Chitra said...

பிறந்த நாளில் மட்டும் இல்லாமல் தினசரி நிகழ்வுகளின் மூலமாக நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுக்கும் இறைவனுக்கு 'நன்றி' என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட முடியுமா?

...... Thats so sweet!
Aug.15th..... HAPPY BIRTHDAY!!!
I am happy to know that you really had a wonderful birthday!

சீமான்கனி said...

உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் அன்பான பாராட்டுகள் பிரியா...மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்....

Unknown said...

வார்த்தைகள் இல்லை பாரட்ட..
வாழ்த்துக்கள் ...
இந்த பண்பிற்கு ஆண்டவன் எல்லா அருளையும்
தருவார்.

Unknown said...

கடவுள்...
கேக்...
சாப்பாடு...
இயற்கை...
வண்ண வேடிக்கை....

ஒரு ஒரு புகைப்படமும் அழகு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நெற்றியில் பதிந்த‌ என்னவரின் அழுத்தமான முத்தத்தினால்

-------------------------------

அந்தரங்கங்களை போடுவதை தவிர்க்கலாமே?...

விஜய் மகேந்திரன் said...

my best wishes priya!happy always....

puduvaisiva said...

"இனி வரும் பிறந்த நாட்களில் ஒரு சிறுவனுக்கு உதவிடும் நிலை மாறி இன்னும் கஷ்டப்படும் சில‌ சிறுவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை தொடர்ந்து செய்ய நல்ல மனதை அளித்திடுமாறு இறைவனை வேண்டுகிறேன்."

இந்த நற் சேவை தொடர வாழ்த்துகள் ப்ரியா...

கனிமொழி said...

Belated B'day wishes Priya!! :)

r.v.saravanan said...

இனி வரும் பிறந்த நாட்களில் கஷ்டப்படும் சில‌ சிறுவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை தொடர்ந்து செய்ய நல்ல மனதை அளித்திடுமாறு இறைவனை
வேண்டுகிறேன்

நல்ல விஷயம் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துகள் பிரியா

'பரிவை' சே.குமார் said...

அருமையான எழுத்து... உங்கள் பிறந்தநாளை உங்களுடன் கொண்டாடியது போன்றதொரு உணர்வு.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

நலமும் வளமும் நிலைபெற்று வாழிய பல்லாண்டு! இல்லார்க்கு இரங்கும் எண்ணம் வலுப்பெற வாழ்த்துகள்...!!

Priya said...

நன்றி ரமேஷ்!

வாங்க தமிழ், ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கிங்க. நன்றி தோழி.

பாராட்டுக்களுக்கு நன்றி சுசி.

//வேறெங்கிலும் காண‌க்கிடைக்காத‌ சொர்க்க‌மது//... ஆமா ரகு இப்போதுதான் உணர ஆரம்பித்து இருக்கிறேன்.

உண்மைதான் கீதா.

ந‌ன்றி அம்பிகா.

பூங்கொத்துக்க‌ளுக்கு ந‌ன்றி அன்புட‌ன் அருணா.

ந‌ன்றி க‌ம‌லேஷ்.

நன்றி சித்ரா.

நன்றி கனி.

உங்க அன்புக்கு நன்றி சிவா!

Priya said...

புன்னகை தேசம்.... சென்ற பதிவின் தொடர்ச்சி போலதான் இதை எழுதினேன். அதை படித்து விட்டு இதை படித்திருந்தால் நிச்சயம் அந்தரங்கமாக தோன்றி இருக்காது.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Priya said...

நன்றி விஜய் மகேந்திரன்.

தொடரவே விரும்புகிறேன் புதுவை சிவா.

லேட்டானாலும் வந்து வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி கனிமொழி.

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்.

பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சே.குமார்.

நன்றி நிலா மகள்.

பத்மா said...

belated greetings priya ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Belated birthday wishes priya... நீண்ட ஆயுளும் என்றும் இதே உதவும் மனமும் அளிக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்

Priya said...

நன்றி பத்மா!

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வேண்டுதலுக்கும் நன்றி அப்பாவி தங்கமணி!

Post a Comment