மேலே... படங்களில் இருப்பது என் வீட்டு அருகில் சாலையின் ஓரமாக மலர்ந்துள்ள மலர்கள்!
கீழே... படங்களில் பூத்திருப்பது என் வீட்டில் பூத்துள்ள பூக்கள்!
உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வரும் இதமான காலமும் இதுதான். குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத சுகமானதொரு காலம். குளிரிலே வறண்டுப்போன சருமம் இப்பொழுதுதான் நல்ல ஸ்கின் டோனை காட்ட ஆரம்பித்து இருக்கிறது. குளிருக்கு விடைக்கொடுக்கும் வண்ணம் மக்கள் தங்களது ஆடைகளில் மாற்றம் கொள்ள தொடங்கி உள்ளனர். குளிருக்காக மூன்று நான்கு ஆடைகள் அனியும் கஷ்டம் முடிந்து இப்போது ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் என்று ஆகிவிட்டது. துணிகடைகளில் நியூ கலெக்ஷன்ஸ் ஆடைகள், கலர் கலராக நீச்சல் உடைகளும் வந்து குவிந்திருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து பீச் ரொம்ப தூரம் இல்லை என்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம். இப்பொழுதே சில நாட்டு சுற்றுலாவினரை பார்க்க முடிகிறது. அதனால் கடற்கரை சாலையில் உள்ள கடைகள் ரெஸ்டாரண்டுகள் (குளிர் காலத்தில் மூடப்பட்டு இருந்தது) எல்லாம் மீண்டும் திறக்கபட்டுள்ளது. கடற்கரை காற்றை சுவாசித்துக்கொண்டே உணவருந்த சாலை முழுதும் நிறைய ஓப்பன் ரெஸ்டாரண்டுகள் உள்ளது.
நேற்று அப்படிதான், சும்மா ஜாலியாக பீச்சில் சுற்றிக்கொண்டிருந்த நானும் என்னவரும் திடீரென்று எழுந்த ஆசையால் இரவு இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி அரைமணி நேரம் கடற்கரை சாலை முழுவது சுற்றி கடைசியாக ஒரு நல்ல ரெஸ்டாரண்டை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தோம். ஆச்சிரியம்.. ஆர்டர் செய்த ஐந்தே நிமிடங்களில் சாப்பாடு வந்தது. ஃபாஸ்ட் ஃப்ட் சென்டரை போல் வேகமாக இருந்ததை கண்டு வியப்பாக இருந்தது. பிரெஞ்சு சமையலை பழகிக்கொண்ட போதிலும் பொதுவாக வெளியில் சாப்பிடுவது பிடிப்பதில்லை என்பதால் எனக்கு வழக்கம்போல் பீட்ஸாதான்.
இன்னும் சில தினங்களில் இங்கு கோடைக்காலம்(ஜூன் 21 முதல்) ஆரம்பம் என்பதால் அடுத்த மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை. இதற்காகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நிறைய மாற்றங்கள். வழக்கமான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு புதியதாக ஒருசில கோடைக்கால கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இப்பொழுதே ஒளிப்பரப்பி வருகிறார்கள். முக்கியமாக சிறுவர்களுக்கென்று கார்ட்டூன் படங்கள் இளைஞர்களுக்கான தொலைக்காட்சி தொடர்கள் என்று ஒளிப்பரப்பபடுகிறது.
கோடைக்காலத்தை வரவேற்கும் விதமாக இப்பொழுதே ஒரு சில விழாக்கள் ஆரம்பமாகி உள்ளது. இவற்றின் தொடக்கமாக இரண்டுவாரம் முன்பு நடந்து முடிந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா.... வழக்கம்போல் இம்முறையும் தொலைக்காட்சி சேனல்கள் நம் ஐஸ்வரியா ராயை காட்ட மறக்கவில்லை. வெறும் 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் கேன்ஸ்(Cannes) என்ற போதிலும் இந்த முறை எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்த கேன்ஸ் விழாவை தொடர்ந்து இனி மூன்று மாதங்களுக்கு இங்கே எதற்கெடுத்தாலும் விழாதான். சின்ன சின்ன விஷயங்களை கூட இந்த பிரெஞ்சு மக்கள் ரசித்து கொண்டாடி மகிழ்கிறார்கள். இதோ இந்த வார இறுதியில் எங்கள் ஊரில் Fête des cersies! அதாவது செர்ரி பழத்திற்கான விழா(இது ஐம்பதாவது வருடக் கொண்டாட்டமாம். மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்). வழக்கமாக மே மாதமே கொண்டாடப்படும் விழா இது. ஆனால் சென்ற மாதம் கொஞ்சம் மழையாக இருந்ததினால் இப்பொழுதுதான் செர்ரி பழங்கள் முற்றிலுமாக பழுக்க துவங்கியுள்ளது.
இங்கு இப்பொழுதுதான் கல்யான சீசன். பிரெஞ்சுகாரர்களின் திருமணத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு தனியாக ஒரு பதிவு போட வேண்டும்... அவ்வளவு இருக்கு அதைப்பற்றி எழுத!
தோழமையில் மகிழ்வதும் இப்போதுதான். நண்பர்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு அழைத்து ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு மகிழும் அற்புதமான காலமிது. குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே அமர்ந்து உணவருந்துவதற்கும் இப்பொழுது வசந்தகாலத்தில் வீட்டின் தோட்டத்திலே நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதற்கும் எத்தனை வித்தியாசம்.... இனிமையான நிமிடங்கள் அது. சுற்றிலும் வண்ணமயமாக மாறிக்கொண்டிருக்கும் அற்புதமான நாட்களிது என்பதால் ரம்மியமான உணர்வுகளுடன் இதை எழுதுகிறேன்.
எல்லோருக்கும் பணிகளும் கடமைகளும் அவசியம்தான். அதே நேரத்தில் நம்மைச்சுற்றி நிகழும் காலமாற்றங்களும் அது கொண்டுவரும் இனிமையான மாற்றங்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே!
வெயிலோ மழையோ குளிரோ பணியோ... எந்த ஒரு கால நிலையையும்... அதனால் வரும் சின்ன சின்ன மாற்றங்களையும் ரசித்து பார்க்க பழகிக்கொண்டாலே போதும்... இந்த வசந்தக்காலம் மட்டுமல்ல, வாழ்வு முழுவதும் வசந்தம் வீசும்.
31 comments:
excellent pics. for rest of the matter will post comment later :)
அழகாயிருக்கு...
cute photos!!
Nice Pictures..
// வெறும் 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் கேன்ஸ்(Cannes) என்ற போதிலும் இந்த முறை எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. //
பல பேர் வாழ்க்கையில ஒருமுறையாவது அங்க எல்லாம் போக முடியாதான்னு ஏங்கறவங்க இருக்காங்க.. வாய்ப்பு கிடைச்சா விட்டுடாதீங்க...
நல்ல பதிவு ப்ரியா..
/வெயிலோ மழையோ குளிரோ பணியோ... எந்த ஒரு கால நிலையையும்... அதனால் வரும் சின்ன சின்ன மாற்றங்களையும் ரசித்து பார்க்க பழகிக்கொண்டாலே போதும்... இந்த வசந்தக்காலம் மட்டுமல்ல, வாழ்வு முழுவதும் வசந்தம் வீசம்./
உண்மை பிரியா!
//எல்லோருக்கும் பணிகளும் கடமைகளும் அவசியம்தான். அதே நேரத்தில் நம்மைச்சுற்றி நிகழும் காலமாற்றங்களும் அது கொண்டுவரும் இனிமையான மாற்றங்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே!//
கை குடுங்க ப்ரியா..
உங்க ஊர்ல இவ்ளோ பூக்கள் வந்திடுச்சாஆஆஆ.. எங்க ஊர்ல இப்போதான் லைட்டா கலர் தெரியுது..
அழகா இருக்கு படங்கள்.
மலர்வனமும் அந்த கலர்வனமும் அழகோ அழகு உங்க வீட்டுல இவ்ளோ பூச்செடி இருக்கா!!!! எனக்கு விதவிதமான பூச்செடின ரெம்ப இஷ்ட்டம்...ஆனால் இங்க வளக்குறது கஷ்ட்டம்:(
கேன்ஸ் திரைப்பட விழவா மிஸ் பண்ணறீங்களே...!!!உங்களுக்கு வசந்தமும்,கோடையும் சிறப்பாய் அமைய வாழ்த்துகள்...
அருமையான புகைப்படங்கள் ப்ரியா, வழக்கம் போல் அசத்தல்
கேன்ஸை அடுத்த வருடம் மிஸ் பண்ணாதீங்க, நீங்க போய் கொஞ்சம் 'க்ளிக்'கினால் நிறைய அழகான புகைப்படங்களை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கும்
//எல்லோருக்கும் பணிகளும் கடமைகளும் அவசியம்தான். அதே நேரத்தில் நம்மைச்சுற்றி நிகழும் காலமாற்றங்களும் அது கொண்டுவரும் இனிமையான மாற்றங்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே//
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க :)
//இந்த வசந்தக்காலம் மட்டுமல்ல, வாழ்வு முழுவதும் வசந்தம் வீசம்//
'அவர்' படங்களை அதிகம் பார்க்காதீங்க, இப்ப பாருங்க பஞ்ச்செல்லாம் அடிக்கறீங்க :))
ரொம்ப வசீகரமா இருக்கு.
பூக்களால் செய்த வீடோ உங்களது?
கோடையை வரவேற்கவும் ஒரு விழாவா?
கடசி வரிகளில் மிகப் பெரிய விஷயத்தை
சொல்லியிருக்கிறிர்கள்.
வாழ்த்துக்கள் பிரியா.
அடுத்த படம் எப்போ?
போட்டோக்களும் அனுபவங்களும் அருமை.
வண்ண வண்ணப் பூக்கள்.பூக்களின் வண்ணம் தேர்ந்தெடுப்பதுகூட ஒரு கலைதான்.
அத்தனையும் அழகு.
அடுத்த நிகழ்வுகளையும் வண்ணமாக்குங்கள் ப்ரியா.
எல்லோருக்கும் பணிகளும் கடமைகளும் அவசியம்தான். அதே நேரத்தில் நம்மைச்சுற்றி நிகழும் காலமாற்றங்களும் அது கொண்டுவரும் இனிமையான மாற்றங்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே//
ரசிக்கலாமே!!!
நானும் இந்த உலகத்தை ஒரு தடவையாவது சுத்தி பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன் நடக்க மாட்டேன்கிறதே!!!
வண்ணமையமான வசந்த கால வாழ்த்துகள் ! தோழி
பதிவின் கடைசி வரிகள் அருமை.
bon féte des cerises ! ! !
உங்க பூந்தோட்ட பூக்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
"என் வீட்டு அருகில் சாலையின் ஓரமாக மலர்ந்துள்ள மலர்கள்!"இது போல் நான் இங்கே சென்னையில் எங்கே பார்க்க போறேன் ...
உங்க ஊரே பதியும் அங்குள்ள ஜனங்களே பத்தி நீங்க சொன்ன விதம் ரொம்ப அருமையா இருக்கு ..mr beans holidays என்ற சினிமாவில் உங்க ஊரு நான் பார்த்தேன் அப்பவே ஒரு தடவை எங்கிலும் அங்கே போகணம் என்று நினச்சுட்டேன் ..நடக்குமா என்று தான் தெரியலே.
நன்றி
பாராட்டுக்களையும் கருத்துக்களையும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து வந்த வேலைகள் காரணமாக பக்கத்தில் இருந்தும் கேன்ஸ் விழாவிற்கு செல்ல முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான். ஏற்கனவே ஒரு முறை சென்றதுண்டு.அப்போது நிறைய ஹாலிவுட் நடிகர்களை பார்த்தேன். அங்கு எப்போதும் டிராஃபிக் அதிகமாக இருக்கும். கார் பார்க் பண்ண இடமே கிடைக்காது.அங்கு சென்றுவர ஒரு நாள் முழுதும் வேண்டும். நிச்சயமாக அடுத்த வருடம் மிஸ் பண்ணாமல் உங்களுக்காகவே சென்று வருவேன்.
ஆமா சுசி, இப்பல்லாம் எதிர்பாராத காலமாற்றத்தால் குறிப்பிட்ட நாட்களில் பூக்கள் பூப்பதில்லை.
யாரு ரகு அந்த 'அவர்'?
பேரிலே பிரின்ஸை வச்சுக்கிட்டு... அப்புறமென்ன உலகை ஒரு ரவுண்ட் அடிங்க!
வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு டிரிப் அடிங்க, sandhya!
அழகான பூந்தோட்டம் போல வண்ணமயமான பதிவு பிரியா.......
அழகான பதிவு
படங்கள் அருமை ப்ரியா இந்த பூக்களின் படங்களை பார்க்கையில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது நன்றி
வண்ண பூக்களும் உங்கள் வர்ணனைகளும் அருமை.....இதைப் பார்த்தே என் வலை தளத்தில் கவிதை எழுத வேண்டும் போல் உள்ளது....
உங்கள் ரசனையை ரசிக்கிறேன்...
நன்றி ஜெயா!
நன்றி soundar!
உண்மைதான் சரவணன் பூக்களைப் பார்க்கும் போது தானாகவே புத்துணர்ச்சி வந்திடுது!
கவிதை எழுதுங்க sofi!
ரசித்தமைக்கு நன்றி மேடேஸ்வரன்!
சூப்பர் போடோஸ்.... பூக்கள் எப்பவும் அழகு தான்... எனக்கும் ரெம்ப பிடிச்சது spring சீசன் தான் (நல்ல வேலை செர்ரி பழத்தை ஞாபக படுத்தினீங்க... மறந்தே போயிட்டேன்... இங்க Cherry Picking ரெம்ப நல்லா இருக்கும்... )
போட்டோக்கள் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன சகோ....
வழக்கம் போல புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
உள்ளூர் திருமணம் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.
please correct the spelling in the Title.
அப்பாவி தங்கமணி...பொதுவா ஸ்பிரிங் சீசனைதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.
நன்றி வஸந்த்!
நிச்சயம் அதைப்பற்றி எழுதுறேன் கலாநேசன்.
திருத்திவிட்டேன், சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி!
nice photos
நல்ல பதிவு..இப்போ தான் முதல் தடவை வந்திருக்கேன்..:)
cannes அருமையான நகரம் .அரை நாள் பார்த்திருக்கேன் ..
நீங்க எங்க இருக்கீங்க ? antibes ?
தேங்க்ஸ் மலர்விழி!
ஹாய் அருண்... கேன்ஸ் வந்திருந்திங்களா, நைஸ்! நான் Antibesல இல்ல. Varல இருக்கேன்(83)!
படிக்கும் பொழுதே மனதில் ஓர் அற்புத உணர்வு! ஏக்கமாக உள்ளது பூக்கலுடன் உறவாட..........
இங்கு இல்லயே........
நன்றி g.aruljothiKarikalan!
Post a Comment