Subscribe:

Pages

Thursday, April 1, 2010

ஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது!




விக்கின்ற ணர்வுகள்

னம் புரியாத ஓர் உணர்வு
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !

பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !

சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் எழுதிய‌ உண‌ர்வு !

பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !

எண்ணற்ற மாற்றங்களை
என் உள்ளம் சந்தித்த போதிலும்
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம்
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு
உயிர் இழந்து
முடிவாக எத்தனையோ விஷயங்கள்
மறந்த போதிலும்
மறக்காதொரு உணர்வு !

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !


*******************************************************


ச்சும்மா வரைஞ்சது !!!




***********************************************************


திவுலகில் சில வாரங்களாக தொடர் பதிவுகள்.... விருதுகள்.... என்று தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எனக்கு கிடைத்து இருக்கும் இரண்டாவது விருது இது.


இந்த விருதை அளித்த தோழி பத்மாவுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மிகவும் சந்தோஷத்துடன் இந்த விருதினை நானும் சில நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



38 comments:

Raghu said...

//சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !//

'நச்' வ‌ரிக‌ள்!

ஓவிய‌ம் ந‌ல்லாருக்குங்க‌, க‌ல‌ர்ல‌ இருந்திருந்தா இன்னும் ந‌ல்லா இருந்திருக்கும்

விருதுக்கு ந‌ன்றி ப்ரியா :)

சீமான்கனி said...

//சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !//

சொல்லாத உணர்வுகளை சொல்லாமலே சொல்கிறது சுகமான கவிதை...

சும்மா வரைந்தாலும் சுபேரா இருக்கு ஓவியம்...

எனக்கும் விருது பங்கு வைத்த பிரியமான ப்ரியாவுக்கு சொல்ல துடிக்கும் உணர்வு நன்றி..நன்றி..நன்றி..
சக பங்காளிகளுக்கும் வாழ்த்துகள்...

பத்மா said...

அட்டகாசமா இருக்கு பென்சில் ஓவியம் அந்த முடி, தோடு.எல்லாம் அழகு .கலக்குங்கள் பிரியா

ஜெனோவா said...

வரிகள் நல்லா அமைஞ்சிருக்கு பிரியா ..
என்னது ச்சும்மாவாக்குமா ????!! அதுவே இப்படி இருக்கு ... எனக்கும் ஒரு படம் வரைஞ்சு தாங்க.. விவரங்கள் மெயில் பண்றேன்
விருதுக்கும் உங்க அன்புக்கும் நன்றி தோழி !

வாழ்த்துக்கள்

Sivakumar said...

டிராயிங் பிரமாதம். பாத்து வரைஞ்சீங்களா? பாக்கமலா? ஹேர் ஸ்டைல், கிளிப் போட்டிருக்கிறது, முகத்தில் ஒரு நிதானம், காதணி, டிரஸ்ஸில் ஷேடிங்... சூப்பர்.

காதுக்கு முன்னால் இருக்கும் நாலு கற்றை முடி தாங்க பொண்ணுங்களுக்கே அழகு.

பிரமாதமா இருக்கு! கவிதையை பல சந்தர்ப்பங்களை ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!

அப்பறம், விருதை பகிர்ந்து கொண்டதற்கு கடமை பட்டிருக்கிறேன். நன்றி!!! முதல் பகிர்வு விருது எனக்கு!

சிவா

Chitra said...

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

..... very nice!

pencil drawing is super!

Congratulations for the award!

Ahamed irshad said...

அந்த ஓவியம் அருமை. கலக்குங்க ஃப்ரீயா.

(ப்ரியான்னு தான் சொல்ல நினைச்சேன்...!

அண்ணாமலையான் said...

சூப்பருங்க எல்லாமே

நேசமித்ரன் said...

நல்ல ஓவியம்

Vijiskitchencreations said...

உங்க ஒவியம் சூப்பரா இருக்கு. நல்ல ரசனை. வாங்க நம்ம பக்கம்.ஒவியத்தோட வந்துடுங்க.மீண்டும் வருகிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

கவிதை படம் இரண்டுமே ரொம்ப அருமை

Priya said...

நன்றி ரகு!
//க‌ல‌ர்ல‌ இருந்திருந்தா இன்னும் ந‌ல்லா இருந்திருக்கும்//
"கலர" கலரில்தான் பாப்பிங்களா:)

கலரில் வரைய முயற்சி செய்றேன், முடிந்ததும் மெயிலில் வரும்!



//சொல்லாத உணர்வுகளை சொல்லாமலே சொல்கிறது சுகமான கவிதை...//
நன்றி கனி!

என்ன இருந்தாலும் உங்கள மாதிரி எல்லாம் என்னால கவிதை எழுத முடியாது!



//அந்த முடி, தோடு.எல்லாம் அழகு//.... ந‌ன்றி ப‌த்மா!
ஒரு பெண்ணா இருந்து பெண்ணை வ‌ரையும் போது க‌ம்ம‌ல், முடி இதில் எல்லாம் அதிக க‌வ‌ன‌ம் செலுத்துற‌து இய‌ற்கைதானே!



//எனக்கும் ஒரு படம் வரைஞ்சு தாங்க.. விவரங்கள் மெயில் பண்றேன்//....... க‌ண்டிப்பா ஜோ! மெயில் ப‌ண்ணுங்க‌. ந‌ன்றி!!!



ந‌ன்றி சிவா!
ஆன‌ந்த‌ விக‌ட‌னில் இட‌ம் பெற்ற‌ ப‌ட‌த்தை பார்த்து வ‌ரைந்த‌துதான்.

//காதுக்கு முன்னால் இருக்கும் நாலு கற்றை முடி தாங்க பொண்ணுங்களுக்கே அழகு. //.........உங்க‌ள‌ மாதிரி ர‌ச‌னை உள்ள‌ ஆண்க‌ளால்தான் பெண்க‌ளாகிய‌ நாங்க‌ எல்லாம் எப்போதும் அழ‌கா இருக்கோம்:)



ந‌ன்றி சித்ரா!
உங்க‌ வ‌ருகையும் வாழ்த்துக்களும் தொட‌ருவ‌தில் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கு!



ந‌ன்றிஅஹமது இர்ஷாத்!
//கலக்குங்க ஃப்ரீயா.
(ப்ரியான்னு தான் சொல்ல நினைச்சேன்...!//.......க‌ல‌க்கிடுவோம் ஃப்ரீயா:)


ந‌ன்றி அண்ணாமலையான்!

ந‌ன்றி நேசமித்ரன்!


ந‌ன்றி Vijis Kitchen !
//வாங்க நம்ம பக்கம்.ஒவியத்தோட வந்துடுங்க//.......வ‌ரேன்.... ஒரு அழ‌கான‌ ஓவிய‌த்தோட‌!


ந‌ன்றி sarusriraj!

Menaga Sathia said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!! ஒவியம் மிக அழகு...ரசித்தேன்.

கவிதையும் கலக்கல்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து ஓவியத்துக்கும் விருதுகளுக்கும் பிரியா!

விஜய் said...

உணர்வுகளின் வெளிப்பாடு அருமை

ஓவியத்தில் பென்சில் ஷேடிங் மிக நன்றாக இருக்கிறது

கவிதை ஓவியம் இரண்டு திறமையும் ஒரு சேர வாய்ப்பது அரிது

இன்னும் சாதிக்க வாழ்த்துகிறேன் சகோதரி

விஜய்

ஜெயா said...

கவிதையும் அழகு... நீங்கள் வரைந்த ஓவியமும் அழகு.. வாழ்த்துக்கள் பிரியா...

ஜெய்லானி said...

ஓவியத்தை பாத்தாலே கவிதை வந்துடும் போல இருக்குதே!!!சூப்பர்.......

Unknown said...

பென்சில் ஸ்கட்ச் நன்றாக இருக்கிறது.தொடருந்து வரையுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

எச்சுஸ்மி , அந்த பொண்ணோட போன் நம்பர் கிடைக்குமா ?
அட சும்மா டைம் என்னான்னு கேட்கதாங்க

Priya said...

நன்றி Mrs.Menagasathia!

நன்றி அன்புடன் அருணா!

நன்றி விஜய்!

நன்றி ஜெயா!

ஒரு க‌விதை எழுதி இருக்கலாமே ஜெய்லானி!

நன்றி மின்னல் உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்!

மங்குனி அமைச்சர்
ஓ.... டைம் கேக்கத்தானா?!

ரசிகன்! said...

பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !//

உணர்வுகள் எப்பவுமே ஒரு உந்துதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்!

இதோ இந்த கவிதையை போல!

ரசித்தேன்!


and the sketch is too good!!!

:)

GEETHA ACHAL said...

உங்களுடைய ஒவியம் மிக மிக சூப்பர்ப்...அருமையாக இருக்கின்றது..தொடரட்டும் உங்கள் ஒவிய கலை...வாழ்த்துகள்...

Priya said...

நன்றி ரசிகன்!
நன்றி கீதா!

Paleo God said...

ஆஹா நாந்தான் கடைசியா டீச்சர்..!

நான் வரைந்த படங்களும் விரைவில் வரும் பார்த்துவிட்டு ஒரு கருத்து ப்ளீஸ்..:)

--
வழக்கம் போல கவிதை/படம் அருமை.:)

இரசிகை said...

m......
oviyam superb:)

Priya said...

வாங்க ஷங்கர்,சீக்கிரம் வரைங்க. வந்து பார்க்கின்றேன்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜெய்லானி!
வந்து வாங்கிக்குறேன்!மிக்க நன்றி!!!

மிக்க நன்றி இரசிகை!

DREAMER said...

கவிதையும் ஓவியமும் அருமை..!

-
DREAMER

Priya said...

மிக்க நன்றி DREAMER!

க.பாலாசி said...

உங்க ஓவியம் நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்....

elamthenral said...

drawing so good and ur poet also...

வைகறை நிலா said...

கற்பனை உணர்வு..
எழுதிய உணர்வு..
மாறாத உணர்வு..
மறக்காத உணர்வு..

உணர்வுகளைப் பற்றி
உணர்வுப்பூர்வமான கவிதை..

கவிதன் said...

ஓவியம் அழகா இருக்கு!!!

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ப்ரியா!

கவிதன் said...

கவிதை அருமை ப்ரியா!!! வாழ்த்துக்கள்!

Priya said...

ந‌ன்றி க.பாலாசி!
ந‌ன்றி புஷ்பா!
ந‌ன்றி வைகறை நிலா!
ந‌ன்றி க‌வித‌ன்!

r.v.saravanan said...

உணர்வுகளை கவிதையாய் தொடுத்திருக்கும் விதம் ஒரு அழகான உணர்வை
கொடுத்தது
ஓவியம் நல்லாஇருக்கு

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

Priya said...

நன்றி r.v.saravanan!

Shirdi Tour Package said...

அழகு! அழகு! அழகு!

Piping Design Course said...

வெளிப்படுத்தப்படாத உணர்வு அழகாக இருக்கிறது....

Post a Comment