Subscribe:

Pages

Friday, April 9, 2010

அம்முவாகிய உனக்கு.......


             நீண்ட நாளா உனக்கு ஒரு கடிதமாவது எழுத வேண்டுமென ஆசை எனக்கு. பக்கம் பக்கமாய் பேப்பரில் எழுதியது போய் மெயிலில் இரண்டொரு வரியாக சுருங்கிவிட்ட இன்டர்நெட் யுகத்தில் நாம் இருப்பதால் இதோ அதன் வழியாவே உனக்கு ஒரு கடிதம்.

ல்லா படிக்கிறியா? படிப்பில ஒழுங்கா கவனம் செலுத்து. நல்லா சாப்பிடு, எப்பவும் தூங்கிட்டு இருக்காத. அப்பா அம்மாகிட்ட கோபப்படாத. கூட படிக்கிற ஆண் நண்பர்களிடம் பார்த்து பழகு. நல்ல பொண்ணு என பேர் வாங்குற மாதிரி நடந்துக்கோ...... இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணும் வழக்கமான அக்கா நான் இல்லைங்குறது உனக்கே தெரியும். அதனால ஏதோ எனக்கு தோணுவதை எழுதுறன்.

க்கா தங்கையாக இருந்தும் ஏனோ நமக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் கூட இதுவரை வந்ததில்ல. இனியும் வரப்போவதில்ல. ஓரே ரசனை ஒரே எண்ணம் என இருப்பது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா அதுக்காக என்னை மாதிரியே தூங்கும்போது எழுப்பினா இத்தனை கோபம் வருமா உனக்கு? ஆமாமா.... பொறுமையான எனக்கே தூக்கத்தில அத்தனை கோபம் வரும்போது கோவக்காரியான உனக்கு கோப‌ம் வருவது நியாம்தான !!!

ங்கிட்ட இருந்து நீ நிறைய கத்துக்கிட்டதா சொல்லி இருக்க. உனக்கு தெரியுமா நான் கூட உங்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டுவரன். முக்கியமா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச மெடிகல் சயின்ஸ் பத்தி உன் மூலமா நிறைய தெரிஞ்சுக்கிறேன். இதுல ந‌ம்ம அப்பாக்குதான் ரொம்ப சந்தோஷம். இப்பல்லாம் அவரு அடிக்கடி சொல்லி கொள்வது என்ன தெரியுமா? நான் நிறைவேற்றிடாத அவரின் ஆசையை நீ படித்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறாயாம். நான் என்னடி செய்வேன். எனக்கும் மெடிக்கல் படித்திட ஆசைதான். அதற்காக எத்தனை Entrance Exams எழுதியிருப்பேன். வெளி ஊருல படிக்க வாய்ப்பு கிடைச்சும் உங்கள எல்லாம் விட்டுட்டு எப்படி போறதுன்னு சொன்னேன். இப்ப பாத்தியா ராமன் தேடிய சீதையாய் உன் மாமா என்னை தேடி வர நானும் அவருடன் உங்கள எல்லாம் விட்டு பிரிந்து இவ்வளவு தூரம் வந்துட்டேன். நினைக்குறப்ப‌ வியப்பாதான் இருக்கு. மருத்துவ பணி புனிதம்தான்.ஆனா நான் என்ன செய்ய அதை விட புனிதமான டீச்சர் வேலை எனக்காக காத்துக்கிட்டு இருந்திருக்கு. என்ன, நான் சொல்றது சரிதானே... உன்னைப்போல மருத்துவம் படிப்பவர்களுக்கு கூட கற்றுக்கொடுத்திட ஒரு ஆசிரியர் தேவை இல்லையா!!!

மீபகாலமா நம்ம அம்மாவின் புலம்பல் இது.... "எனக்கு அம்மாவும் இவதான் மாமியாரும் இவதான்!" பாவமடி நம் அம்மா, கைகுழந்தையாக இருக்கும் போதே த‌ன் தாயை இழந்தவங்க. அதனால சில சமயங்களில் எட்டி பார்க்கும் உன் மாமியார் வேஷத்தை கலைச்சுட்டு அவங்களுக்கு அம்மாவாகவே இருந்து விடு!

ரி உன் பிறந்த நாள் அதுவுமா இதுக்கு மேல உன் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதுல எழுதி இருக்குற எல்லாம் எனக்கு தெரிந்ததுதானே அப்படிங்குற‌ உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது. அதனால் சில வரிகளோட முடிச்சிக்கிறேன்.

டீனேஜை விட்டு அடல்ட் உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் உன்ன அன்புடன் எங்க உலகத்திற்கு வரவேற்று கொள்ளுகிறோம். ஒன்னு மட்டும் சொல்றன் எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்!

ன் கனவை நிஜமாக்கு ! கோல்ட் மெடல் வாங்கிடு ! விரும்பிய படியே மேற்படிப்பில் சைக்காலஜி எடுத்து படி! உன் துறையில் நீ வெற்றி பெற இந்த அக்காவின் வாழ்த்துக்கள்!!! மேலும் உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!(பி.கு........மேலே உள்ள புகைப்படத்தில் அம்முவின் கால்களை உரசிக்கொண்டிருப்பது கேரளாவின் அதிரம்பள்ளி அருவி!என்னவர் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது)

25 comments:

Chitra said...

எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்!


........ Hurray! My principle for happiness :-)
A nice birthday wish and advice!
Convey our wishes too!

Priya said...

என்னா ஸ்பீடு சித்ரா நீங்க. வேகமான உங்க கமென்டுக்கு மிக்க நன்றி!
விடிந்ததும் என் தங்கைக்கு போன் பண்ணுவேன். நிச்சயம் உங்க வாழ்த்துக்களையும் சொல்லிடுறேன்.

ஜெனோவா said...

Hi Priya,Convey my wishes to Ammu!!
'Appy Birthday..

ராமலக்ஷ்மி said...

அம்முவுக்கு அக்கா எழுதியிருப்பது அருமையான அழகான வாழ்த்து.

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

சேர்த்து விடுங்கள் உங்கள் பிரியமான தங்கையிடம்.

ர‌கு said...

அம்முவுக்கு இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக‌ள் :)

//உன்னைப்போல மருத்துவம் படிப்பவர்களுக்கு கூட கற்றுக்கொடுத்திட ஒரு ஆசிரியர் தேவை இல்லையா//

ஹும்..எப்ப‌டிலாம் ச‌மாளிக்க‌ வேண்டிய‌தாயிருக்கு ;)

//எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்!//

வெரி நைஸ் :)

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு பிரியா, அம்முவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

அழகான வாழ்த்துக் கடிதம். என் பிறந்த நாள் வாழ்த்துகளும்.

சே.குமார் said...

அம்முவுக்கு அக்காவின் வாழ்த்துமடல் அருமை..!

உங்கள் பிரியமான தங்கைக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

asiya omar said...

அழகான அக்கா தங்கை உறவு ,அத்ற்கு ஈடு இணை எதுவும் இல்லை,அம்மாவின் அதே பாசத்தை உடன் பிறந்த சகோதரியிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

//ஒன்னு மட்டும் சொல்றன் எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்!
// சூப்பர்ர்..

தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

பொறுப்புள்ள அக்கா!என் பூங்கொத்தையும் அனுப்பிருங்க!

seemangani said...

//உன்னைப்போல மருத்துவம் படிப்பவர்களுக்கு கூட கற்றுக்கொடுத்திட ஒரு ஆசிரியர் தேவை இல்லையா!!!//

ஆமாம்.. ஆமாம்..

//எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்! //

ஷாட்டா என்னை போலன்னு சொல்லி இருக்கலாம்...அம்முவுக்கு ஜனன நாள் வாழ்த்துகள்...

ஜெயா said...

ஒரே ரசனை ஒரே எண்ணம் கொண்ட அக்கா தங்கையாக இருந்தால் சந்தோசம் தான்.சின்னச் சின்ன சண்டைகள் கூட வருவதற்கு வாய்ப்பு இல்லை..உண்மைதான் பிரியா. உங்கள் தங்கையாகிய அம்முவுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

எங்கள் சங்கம் சார்பாக

இனிய வாழ்த்துகளையும்
அப்படீய வாழ்த்துக்கள் கூறிய
அனைத்து பேரன்புமிக்க பதிவர்கள்கும்
எங்கள் சங்கம் கேக் வழங்கி
உங்கள் தங்கை பிறந்த நாளை
கொண்டாடுகிறோம்...

எல்லாம் வல்ல இறைவன்
உங்கள் தங்கையின் அனைத்து கனவுகளையும்
நிறைவேற்றி
எபோதும் நலமுடன்
வாழ எங்கள்
சங்கமும் இறைவனை வேண்டுகிறது..!

நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யாநன்றி

வாழ்க வளமுடன்
வருத்தபடாத வசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

லதானந்த் said...

நல்ல இடுகை. வாழ்த்துக்கள்

DREAMER said...

வாழ்த்து கடிதம் மிக அருமை..! அமமுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

-
DREAMER

அஹமது இர்ஷாத் said...

எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு.... ஆஆஆஆ

Sorry

உங்கள் தங்கைக்கு.......

துபாய் ராஜா said...

அன்புத் தங்கை அம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

I'm so happy to see so many people wishing me who have never seen me also thank you
Thanks a lot

"Nandri"

i'm so lucky to have a loving sister like you Thank you akka. I love you...
I thank God for giving me such a wonderfull sister

Thank you everybody,bye......Have a nice day!

(sorry for writing in English i'm not expert in tamil like my sister)

ஜெரி ஈசானந்தன். said...

என்னுடைய வாழ்த்துகளும்.

அப்பாவி தங்கமணி said...

//அக்கா தங்கையாக இருந்தும் ஏனோ நமக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் கூட இதுவரை வந்ததில்ல//

ப்ரியா நெஜமாவா சொல்றீங்க... இப்படி கூட உலகத்துல அக்கா தங்கை இருப்பாங்களா... வாவ்
உங்க தங்கைக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Priya said...

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் என் தங்கையிடம் சேர்த்து விட்டேன் நண்பர்களே. சந்தோஷத்துடன் உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டாள்!
நன்றி! நன்றி! நன்றி!


//ஹும்..எப்ப‌டிலாம் ச‌மாளிக்க‌ வேண்டிய‌தாயிருக்கு ;)//.... ஆமாமா ஹிஹிஹி:)

asiya omar....//அழகான அக்கா தங்கை உறவு ,அத்ற்கு ஈடு இணை எதுவும் இல்லை,அம்மாவின் அதே பாசத்தை உடன் பிறந்த சகோதரியிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.//.... உண்மைதாங்க!

//ஷாட்டா என்னை போலன்னு சொல்லி இருக்கலாம்...//.....ஹா ஹா ஹா:)
//அம்முவுக்கு ஜனன நாள் வாழ்த்துகள்...//.....ஓ இப்ப‌டி கூட‌ சொல்ல‌லாமா!

வாங்க சூரியா, என் தங்கையின் பிறந்த நாளைக்கு வாழ்த்திய அனைத்து பதிவர்களுக்கும் கேக் வழங்கிய உங்களுக்கும் உங்க சங்கத்துக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்!!!

பெயருக்கு ஏற்ற மாதிரியே இப்படி அப்பாவியா கேக்குறீங்களே, அப்பாவி தங்கமணி!!!

Priya said...

Ammu....
//i'm so lucky to have a loving sister like you Thank you akka. I love you... //.............. Thanks & I too love you dear!

இரசிகை said...

vaazhththukal......:)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment