Subscribe:

Pages

Monday, April 26, 2010

பனி மலைகளினூடே… ஒரு பயணம் (புகைப்படங்கள்)!!!

            

      மார்ச் மாதம் சென்று வந்த பனி மலைகளினூடே… ஒரு பயணம்  புகைப்படங்களுடன்! எடுத்து சென்ற போட்டோ கேமிரா பேட்டரி தீர்ந்து பழி வாங்கி விட அனைத்து படங்களுமே செல்போனில் எடுத்தது.


பனியை நோக்கி செல்லும் பயணம்...
பார்ப்பதற்கு ஏதோ எதிரிலே இருப்பது போல் தோன்றினாலும் போக போக போய் கொண்டே இருந்த சாலை!


சற்று நெருங்கிய‌ பின் எடுத்தது....
வளைந்த மலைபாதைக்கும் எதிரில் தெரியும் பனிசிகரத்திற்கு இடையே மிக பெரிய பள்ளத்தாக்கு. கேமிராவின் வழியே பார்த்த போது ஏதோ தொட்டு விடும் தூரம்தான் தெரிந்தது!


1600m altitude அறிவிப்பு பலகையை தாண்டியதும் அதன் உச்சிக்கு செல்ல ஆரம்பித்த சாலை!

 
சாலையில் வாகனங்கள் செல்ல வசதியாக ஒதுக்கி விடப்பட்ட பனிக்கட்டிகள்!


ஓடும் காரில் இருந்தபடியே  பறக்கும் விமானத்தை எடுத்தது. கண்ணாடி வழியாக எடுத்தும் ப‌டம் நன்றாக வந்த திருப்தியால்  செல்லுக்கு செல்லமாய் ஒரு முத்தம்!


வெயில் பட்ட இடங்கள் மட்டும் பனி கரைந்து திட்டு திட்டாக பச்சையும் வெள்ளையுமாக காட்சியளித்த மலைகள்!


வெண்மையான மணற்பரப்பில் வளர்ந்துள்ளதை போலிருந்த மரங்கள்!


உச்சியை அடைந்தபோது சுற்றிலும் வெண்மைதான்!
மேகங்களற்ற வானம் நீல நிறத்திலும்.... பூமி வெள்ளை நிறத்திலும்.... வெறும் இரண்டே நிறங்களில் கூட இத்தனை அழகா!!!


வழக்கம் போல் எனது கிறுக்கல்... என்னவருக்காக!

எழுதுவதற்கு குச்சிகள் ஏதும் கிடைக்காத நிலையில் க்ளவுஸ் கூட இல்லாத எனது விரலால் எழுதிவிட்டு அடுத்த சில நிமிடங்கள் வலியால் துடித்துக்கொண்டு இருந்தேன்!


சுருக்கங்கள் இல்லாத வெள்ளை போர்வையாய் இருந்த பனியில் நாங்கள் இருவரும் நடந்து நடந்து ஏற்படுத்திய கால் தடங்கள்!


தெரியவில்லை?! எப்படி தானாகவே இப்படி ஒரு கலரில்...படம் வந்தது என்று!


இது வேறு யாரும் இல்லைங்க. நாங்களேதான்!
 காதலில் கரைந்து... பனியில் உருகிய போது என்னவர் எடுத்தது!


28 comments:

Menaga Sathia said...

nice photos!!

Ahamed irshad said...

ஆஹா என்ன அருமையான லொக்கேஷன் சும்மா சொல்லக்கூடாதுங்க.... சூப்பர்..

Ahamed irshad said...

அன்பின் பரிமாற்றத்தை கடைசி ஃபோட்டோவிலேயே அழகா சொல்லிட்டீங்க.... Well.

ஜெய் said...

சூப்பரான இடம்.. என்ன ஊருன்னு சொல்லலியே..

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப அழகான புகைபடங்கள்

Chitra said...

/////காதலில் கரைந்து... பனியில் உருகிய போது என்னவர் எடுத்தது!//////



.... very romantic. nice photos. :-)

GEETHA ACHAL said...

அழகான படங்கள்..சூப்பர்ப்...ஒவ்வொரு படத்திற்கும் அடையாளம்...சூப்பர்ப்...

பத்மா said...

tres bien et tres jolie

RamGP said...

really superb.... last one excellent!!!!!!!

ரசிகன்! said...

உச்சியை அடைந்தபோது சுற்றிலும் வெண்மைதான்!
மேகங்களற்ற வானம் நீல நிறத்திலும்.... பூமி வெள்ளை நிறத்திலும்.... வெறும் இரண்டே நிறங்களில் கூட இத்தனை அழகா!!!
//

சுருக்கங்கள் இல்லாத வெள்ளை போர்வையாய் இருந்த பனியில் நாங்கள் இருவரும் நடந்து நடந்து ஏற்படுத்திய கால் தடங்கள்!
//

இது வேறு யாரும் இல்லைங்க. நாங்களேதான்!
காதலில் கரைந்து... பனியில் உருகிய போது என்னவர் எடுத்தது!
//

லவ்லி... ரொம்பவும் ரசிச்சன்!!!

:)

சீமான்கனி said...

படங்களும் படத்துக்கு விளக்கமும் அழகோ அழகு ஆனால் நிறைய ஏமாற்றம் அட்லீஸ்ட் பனியில் ஆங்கிலத்திலாவது எழுதி இருக்கலாம்... பனியை கலவர படுத்திய கால் தடங்கள் அழகு...

ஜெய்லானி said...

ரொம்பவும் அழகா இருக்கு . நல்ல ரசனை உங்களுக்கு.

AkashSankar said...

தமிழ் இணையத்தில் ஒரு புது ஒளிபதிவாளர்...

Anonymous said...

ungaluku kulira villliya...

padangalai partha vinadi udaney neyku jivnu kuliruthu...udabelam nadnguthu..swetter potukituthan enimeyel ungal padivai vasikkanum.

hahaha..

wow kalai nayathudan oru oru villakamum..

alagai erunthathu migavum rasithen

nandri
valava valamudan

complan surya

அன்புடன் அருணா said...

superb!

கண்ணா.. said...

//சுருக்கங்கள் இல்லாத வெள்ளை போர்வையாய் இருந்த பனியில் நாங்கள் இருவரும் நடந்து நடந்து ஏற்படுத்திய கால் தடங்கள்!//

//காதலில் கரைந்து... பனியில் உருகிய போது //

உங்களுக்குள்ள ஓரு காதல் கவிதாயினி ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க போல..... அவங்களையும் அப்பப்போ பதிவு எழுத வையுங்க :))


படங்கள் அனைத்தும் அருமை..... உங்க ஊருக்கு ஓரு டிரிப் அடிக்க வேண்டியதுதான்....

r.v.saravanan said...

படங்கள் அனைத்தும் அருமை என்றாலும் கடைசி படம்

ஒரு கவிதை யாய் தெரிகிறது



பனி படர்ந்த இடத்தில் ஒரு காதல் படர்ந்திருக்கிறது
வாழ்த்துக்கள்

vicky said...

photo ellam pramaatham
pakirnthamaiku nandri

Raghu said...

எல்லா ஃபோட்டோஸுமே சூப்ப‌ர், குறிப்பா 3, 11 & 12...11ல் இருக்கும் அந்த‌ க்ரீன் ஷேட் எக்ஸ‌ல‌ண்ட்!

ரிஷபன் said...

போட்டோ கவிதைகள் அற்புதம்

ஜெயா said...

very nice photos priya...

Unknown said...

அருமையான படங்கள்.அதற்கு ஏற்ற அருமையான வரிகள்.வாழ்த்துகள்

Priya said...

நன்றி Mrs.Menagasathia !

நன்றி அஹமது இர்ஷாத்!
ஆமாங்க, இங்கு சில தமிழ் படங்கள் ஷூட் பண்ணி இருக்காங்களாம்.

நன்றி ஜெய்!
அதுக்காகதான் போன பதிவோட link கொடுத்திருந்தேன், நீங்க அதை படிக்கலைன்னு நினைக்குறேன்.ஓகே... Castellane, France

நன்றி sarusriraj !
நன்றி Chitra !
நன்றி Geetha Achal !
Merci padma !
நன்றி ராம் !

ரசித்தமைக்கு மிக்க நன்றி ரசிகன்!

நன்றி seemangani !
என்னங்க செய்ய என்னவருக்காக எழுதும் போது அவருக்கு நன்றாக தெரிந்த மொழியில்தானே எழுதமுடியும்!

நன்றி ஜெய்லானி!

நன்றி அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..!

நன்றி Complan Surya !
குளிராமல் இருக்குமா? வருடத்தில் 4 அல்லது 5 மாதங்கள் இங்கு குளிரில்தான் இருந்தாக வேண்டும்!

நன்றி அன்புடன் அருணா!

நன்றி கண்ணா.. !
வாங்க, ஒரு டிரிப் அடிங்க! உங்களுக்கு ரொம்ப பிடித்து விடும்!

நன்றி r.v.saravanan !

நன்றி vicky !

நன்றி ரகு!

நன்றி ரிஷபன்!

நன்றி ஜெயா!

நன்றி மின்னல் !

எல் கே said...

very nice , exp the shadow pic and the one in different color. excellent

தக்குடு said...

ஸ்ஸ்ஸ்ப்பா! முடியல...:) ஒரே லவுஸுதான் போலருக்கு...:) கவிதை மற்றும் கவிதைக்கு போட்டியாக தாங்கள் கிளிக்கிய கிளிக்குகள் இரண்டும் அருமை, வாழ்த்துக்கள் சகோதரி!

Priya said...

Thank you LK!

நன்றி தக்குடுபாண்டி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ப்ரியா... pictures அருமை... அதை விட உங்க வார்த்தைகள் அற்புதம். நீங்க போடற ஒரு ஒரு போஸ்ட்ம் என்னை கவிதை எழுத சொல்லுது... நன்றி...

Priya said...

நன்றி அப்பாவி தங்கமணி!
அப்போ கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?!!!சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க.

Post a Comment