வந்திருந்தவர்களிடம் excuse me என்று சொல்லிவிட்டு கேமராவுடன் பால்கனியில் வந்து நின்றுக்கொண்டேன். ஆனால் ஏனோ புகைப்படம் எடுக்க மறந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கும் சூரியனை ஏக்கத்துடன் பார்க்க, "கவலை வேண்டாம் நாளை மீண்டும் விடியல் வரும், நானும் வருவேன்" என்று சொல்லிச் செல்வதைப் போல் தோன்றியது.(இங்கு பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்). அந்த இருண்ட சூரியஒளி என்னில் பட்டு மீண்டும் கண்களில் மின்னும் கனவுகளுமாய் நெஞ்சில் நம்பிக்கையுடன் ஒரு புகைப்படம் எடுத்து, என் விழி அசைவுகளின் மூலம் அதனிடமிருந்து விடைப்பெற்று மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்....
Thursday, January 7, 2010
மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்....
புதுவருடக் கொண்டாட்டம் அத்தனையும் தாண்டி என்மனம் என் வீட்டு எதிரில் இருக்கும் மலைகளின் பின்னால் ஓடி ஒளிந்துக்கொள்ளும் சூரியனில் லயித்து நின்றது.
வந்திருந்தவர்களிடம் excuse me என்று சொல்லிவிட்டு கேமராவுடன் பால்கனியில் வந்து நின்றுக்கொண்டேன். ஆனால் ஏனோ புகைப்படம் எடுக்க மறந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கும் சூரியனை ஏக்கத்துடன் பார்க்க, "கவலை வேண்டாம் நாளை மீண்டும் விடியல் வரும், நானும் வருவேன்" என்று சொல்லிச் செல்வதைப் போல் தோன்றியது.(இங்கு பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்). அந்த இருண்ட சூரியஒளி என்னில் பட்டு மீண்டும் கண்களில் மின்னும் கனவுகளுமாய் நெஞ்சில் நம்பிக்கையுடன் ஒரு புகைப்படம் எடுத்து, என் விழி அசைவுகளின் மூலம் அதனிடமிருந்து விடைப்பெற்று மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்....
இதற்குமுன் இதே மாதிரி பல சமயங்களில் என்னை கவர்ந்த என் வீட்டு முன்னால் தோன்றிய அழகிய காட்சிகளை, நான் ரசித்து எடுத்தவைகளைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க!
வந்திருந்தவர்களிடம் excuse me என்று சொல்லிவிட்டு கேமராவுடன் பால்கனியில் வந்து நின்றுக்கொண்டேன். ஆனால் ஏனோ புகைப்படம் எடுக்க மறந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கும் சூரியனை ஏக்கத்துடன் பார்க்க, "கவலை வேண்டாம் நாளை மீண்டும் விடியல் வரும், நானும் வருவேன்" என்று சொல்லிச் செல்வதைப் போல் தோன்றியது.(இங்கு பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்). அந்த இருண்ட சூரியஒளி என்னில் பட்டு மீண்டும் கண்களில் மின்னும் கனவுகளுமாய் நெஞ்சில் நம்பிக்கையுடன் ஒரு புகைப்படம் எடுத்து, என் விழி அசைவுகளின் மூலம் அதனிடமிருந்து விடைப்பெற்று மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்....
18 comments:
very nice photography
என்னங்க இது டொயிங் ன்னு மியுசிக் எல்லாம்!!! :) ... ஒரு மாதிரி ரகளையா ரம்மியமா இருக்கு உங்க பக்கம் வந்தாலே (சேவியர் சார் சௌக்கியமா ..:) போட்டோ வழக்கம் போல அசத்தல். படம் வரையரத பத்தி எதுனா பாடம் எடுத்தா உங்க முதல் ஸ்டுடன்ட் நாந்தான் மிஸ் ஓகே ..:)
sarusriraj......
Thank you!
பலா பட்டறை......
//என்னங்க இது டொயிங் ன்னு மியுசிக் எல்லாம்!!! :)//...
புதுவருட வாழ்த்து அட்டையிலிருந்து வரும் மியூஸிக்கை சொல்றீங்கன்னு நினைக்கிறன்...
//ஒரு மாதிரி ரகளையா ரம்மியமா இருக்கு உங்க பக்கம் வந்தாலே//...ரம்மியமா ஓகே, அதென்னங்க ரகளையா...நான் ரொம்ப நல்ல பொன்னுங்க:-)சோ, என்னோட blogம் அப்படிதான் இருக்கும்:-))
//(சேவியர் சார் சௌக்கியமா ..:)//...
ரொம்ப நல்லா இருக்காரு!
//போட்டோ வழக்கம் போல அசத்தல்.//...
மிக்க நன்றி!
//உங்க முதல் ஸ்டுடன்ட் நாந்தான் மிஸ்//...
நீங்க very brilliantங்க, என்னைப்பற்றி சரியா தெரியாமலே மிஸ்ன்னு சொல்லியிருக்கீங்க.
கண்டுபிடிச்சிட்டீங்க... எஸ், நான் டீச்சராதான்(ஆங்கிலம்)வேலை பார்க்கறேன். (ஆனா என்ன செய்யறது, டிராயிங் டீச்சரா இல்ல) உங்கள மாதிரி ஸ்டுடன்ஸ் கிடைச்சா ஆன்லைன் க்ளாஸ் எடுக்கலாம் போலிருக்கே:-)
அந்த இருண்ட சூரியஒளி என்னில் பட்டு மீண்டும் கண்களில் மின்னும் கனவுகளுமாய் நெஞ்சில் நம்பிக்கையுடன் ஒரு புகைப்படம் எடுத்து, என் விழி அசைவுகளின் மூலம் அதனிடமிருந்து விடைப்பெற்று மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்.... ........புகைப் படங்கள் எடுப்பது ஒரு கலை. தான் ரசித்ததை இப்படி கவித்துவமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மற்றுமொரு கலை. You are blessed!
You are blessed//
ரகளை ன்னு இதுதான் சொல்ல வந்தேன் ... மிஸ் :)
இலவசமா கிளாஸ்னா கசக்கவா போகுது மிஸ் :))
english teacher..
உங்க மாணவர்கள் குடுத்து வச்சவங்க.
நம்ம சுசியக்கா வீட்டை மாதிரியே உங்க வீடும் அருமையான இடத்தில இருக்கு, ஹ்மம்ம்மம்ம்ம்ம், கொடுத்து வச்சவங்க
//Chitra said...
புகைப் படங்கள் எடுப்பது ஒரு கலை. தான் ரசித்ததை இப்படி கவித்துவமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மற்றுமொரு கலை. //
ஒரு கலைஞரோட மனசு இன்னொரு கலைஞருக்கு தான் தெரியும்னு சொல்லுவாங்களே அது இது தானா, அவ்வ்வ்வவ்வ்வ்வவ் :)
ஒவ்வொரு விடியலும் வந்து போகிறது,,, ஆனால் சூரியனை காண்பது தான் மிகவும் கடினமாக இருக்கிறது.. அழகான புகைப்படம் வாழ்த்துக்கள் பிரியா.****
nice photo
Chitra......
//புகைப் படங்கள் எடுப்பது ஒரு கலை. தான் ரசித்ததை இப்படி கவித்துவமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மற்றுமொரு கலை.//....
அதை இவ்வளவு ரசித்து அழகா கமென்ட் எழுதுவதும் ஒரு கலைதானே!
பலா பட்டறை.......
மீண்டும் நன்றி!
//இலவசமா கிளாஸ்னா கசக்கவா போகுது மிஸ் :))//...அப்ப எப்போ ஆரம்பிக்கலாம்?
சங்கர்..........
//உங்க வீடும் அருமையான இடத்தில இருக்கு, ஹ்மம்ம்மம்ம்ம்ம், கொடுத்து வச்சவங்க//....
உண்மைதான், அழகான இடத்தில வீடு அமைய கொடுத்து வச்சிருக்கனும்!
ஆனா, நான் என்ன நினைக்கிறேன்னு தெரியுமா, நம்மை சுற்றி எப்போதும் இயற்கையாகவே அழகு நிரம்பி இருக்கிறது... அது நம்ம பார்க்கிற பார்வையிலதான் இருக்குன்னு நினைக்கிறேன்!
ஜெயா......
//ஆனால் சூரியனை காண்பது தான் மிகவும் கடினமாக இருக்கிறது..//...
அதை ஏன் கேட்கறீங்க, வருடத்தில பாதி நாட்கள் வானம் இருண்டே இருக்கு!
MAHA........
Thank u!
பிரியா வாய்ப்பே இல்லை. எப்டி இவ்ளோ அழகா படம் வரையறீங்க. நீங்க வரைஞ்ச படங்களை எல்லாம் பார்த்தேன். எல்லாமே அருமை. எனது தோழி இருத்தி இரு இளம்பச்சை நிற இலையில் பனித்துளி இருப்பது போல் தத்ரூபமாக ஒரு படம் வரைந்திருந்தாள். அருமையாக இருந்தது. அது போல் வரைகிறீர்களா?
Superb photo priya !
greetings!
நீங்க குடுத்த லிங்க்ல நாலாவது போட்டோ சூப்ப்ப்பர்!
//இங்கு பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்//
கவலைப்படாதீங்க, அது எதிர்க்கட்சிகளோட சதியா இருக்கும், இதுபத்தி கலைஞர்கிட்டே பேசறேன்!
MAHA.....
//பிரியா வாய்ப்பே இல்லை. எப்டி இவ்ளோ அழகா படம் வரையறீங்க//......
நம்புங்க, நிஜமாவே நான்தான் வரைந்தேன்!
மிக்க நன்றி!
அப்புறம் உங்க தோழிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
ஜெனோவா.....
Thank you!
குறும்பன்......
//அது எதிர்க்கட்சிகளோட சதியா இருக்கும்,//....இருக்கலாம்!
//இதுபத்தி கலைஞர்கிட்டே பேசறேன்!//
ம்ம்... சீக்கிரம் பேசிட்டு சொல்லுங்க!
நீங்கள் ரசித்து எடுத்த படங்களை, என்னை போல ஒரு வேளை அந்த
இயற்கையும் பார்த்து இருந்தால் காற்றிலே ஒரு முத்தம் கொடுத்து இருக்கும்
அழகன்......
உங்களுக்கும் நல்ல ரசனைதான்.....
ரொம்ப நன்றி!
பிரியா படம் ரொம்ப அருமை இருக்கு. அதில் எழுதி இருக்கும் உங்கள் எண்ணங்கலும் சூப்பர்
Jaleela.......
மிக்க நன்றி!
Post a Comment