Subscribe:

Pages

Monday, January 11, 2010

சின்ன சின்னதாய் சில‌ கவிதைகள்....

 ன் முன்னால்
தொலைந்து போன
என் வார்த்தைகளை
தேடிப்பிடித்து
கவிதைகளாக்குகிறேன்
உனக்காகவே!
கண்டெடுக்க உதவிய
உனக்கு
சமர்பிக்கவே !

 ***************************

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக‌......

***************************

நீ சோர்ந்து போகையில்
என் கவிதைகளை வாசித்திரு
இதமாக உன் இதயத்தை
அது வருடி செல்லும் !
என் நியாபகம் வரும்போதெல்லாம்

என் கவிதைகளை நேசித்திரு
உன்னை என்றும் உயிர்ப்போடு
அது வைத்திருக்கும் ! 

***************************************************************

டந்த சில நாட்களாக நாடு முழுவ‌தும் பனியால் மூழ்கி கிடக்கிறது. ஆனால் நான் வசிக்கும் சவுத் ப்ரான்ஸில் மட்டும் எப்பொழுதும் குளிர் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இம்முறை இங்கேயும் அதிக குளிர் என்றும் நிறைய பனிமழை பொழியப்போவதாகவும் கடந்த மூன்று நாட்களாக டிவியில் அலர்ட் நியூஸ் வந்துக்கொண்டேயிருந்தது.
 
 

நான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த‌ அந்த நாளும் நேற்று வந்தது. வெள்ளை மழை பொழிய.... எங்கும் கொள்ளை அழகு! குளிரோ தாங்க முடியாத அளவில்.... பனிப்போர்வையால் மூடியிருந்த பால்கனியில், பனியில் நனைந்துக்கொண்டே ஒரு ஹார்ட் வரைந்து ஐலவ்யூ எழுதி, ஒரு ரோஜா பூவும் வைத்து என்னவரை அழைத்துக் காட்ட, அவரும் ரசித்து உடனே ஒரு போட்டோவும் எடுத்து "என் ரொமாண்டிக் பொண்டாட்டியே, முதல்ல உள்ள வா" என்று அக்கறையோடு உள்ளே அழைத்து வந்துவிட்டார்.


இதுவும் சின்னதாய் ஒரு கவிதைதானே!?

32 comments:

பலா பட்டறை said...

"என் ரொமாண்டிக் பொண்டாட்டியே, முதல்ல உள்ள வா" என்று அக்கறையோடு உள்ளே அழைத்து வந்துவிட்டார்.//

எங்க மிஸ்ஸ காப்பத்திய அந்த மிஸ்டர் வாழ்க..::))
கவிதை வேற ஆரம்பிச்சிட்டீங்களா... அப்ப நாங்க கட மூட வேண்டியதுதான்...::)
nice photo...as usual.

சங்கர் said...

ஐ, கவித, கவித, கவித

அண்ணாமலையான் said...

குளிர் உங்கள கும்மாளம் போட வச்சிருக்கு...

கவிக்கிழவன் said...

தமிழ் தை பொங்கல் சிறப்பாக அமையட்டும்

Chitra said...

The photo is poetic and romantic. enjoy....... iniya pongal nal vaalththukkal.

ஜெனோவா said...

Enjoy the winter... likewise i love to go in rain ;-)

Appy pongal

குறும்ப‌ன் said...

முத‌ல் க‌விதை நைஸ்:)

ரெண்டு ஃபோட்டோஸும் சூப்ப‌ர்!

//"என் ரொமாண்டிக் பொண்டாட்டியே, முதல்ல உள்ள வா"//

"ரோஜா" ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ "என் அருமை ப‌ட்டிக்காடே"தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருது:)

Priya said...

பலா பட்டறை......
ஏதோ நானே கவிதை என்ற பேரில கிறுக்கிட்டுருக்கேன், அதை கவிதைன்னு நீங்க எல்லாம் ஏத்துக்கறதே பெரிய விஷயம்தான்.
//அப்ப நாங்க கட மூட வேண்டியதுதான்...::)//.....
இது கொஞ்சம் ஓவரா இல்ல:‍)
மிக்க நன்றி!

சங்கர்......
கடைசிவரைக்கும் நல்லாயிருக்கா இல்லையான்னு சொல்லவே இல்லையே:)

அண்ணாமலையான்.......
//குளிர் உங்கள கும்மாளம் போட வச்சிருக்கு...//.......
ஆமா, ச‌ரியா சொல்லிட்டீங்க‌ளே:‍)

கவிக்கிழவன்.......
மிக்க‌ ந‌ன்றி, உங்க‌ளுக்கும் என் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

Chitra .........
Thank u & wishing you the same!

ஜெனோவா......
Thanks & Happy Pongal!

குறும்ப‌ன்.......
//முத‌ல் க‌விதை நைஸ்:)//....அப்போ ம‌ற்ற‌ இர‌ண்டும் வேஸ்ட்டா!?
எனிவே, மிக்க‌ ந‌ன்றி!!!

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

ஜெயா said...

நீ படித்த என் கவிதைகளோ சிறு கதையாக என்னுள் புதையுண்டு போன படிக்காத கவிதைகளோ தொடர்கதையாக....அழகான வரிகள். வாழ்த்துக்கள்** புகைப்படங்களும் அழகு,,கொட்டுகிற பனியிலும் இதயத்தை வரைந்து கணவர் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தியதும் அழகு****

KABEER ANBAN said...

//இதுவும் சின்னதாய் ஒரு கவிதைதானே!?//

உம்ம்ம்..படமே கவிதை!! நல்லா இருக்கு :)

இனிய பொங்கல் வாழ்த்துகள்

கமலேஷ் said...

நீங்க எடுத்த போட்டோவை பார்க்கும் போது உண்மையில் கவிதை போல்தான் உள்ளது...வாழ்த்துக்கள்...

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு கவிதை, படங்களும் அருமை

Priya said...

ஜெயா......
//கொட்டுகிற பனியிலும் இதயத்தை வரைந்து கணவர் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தியதும் அழகு****//
இப்படி சின்ன சின்ன செயல்களால காதலை புதுப்பித்துக்கொண்டால், வாழ்க்கை சுவாரஸியமா இருக்கும் என்று நினைக்கிறேன்!

உங்க தொடர் வ‌ருகைக்கு, கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

KABEER ANBAN.....
மிக்க‌ ந‌ன்றி!
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கமலேஷ்......
//நீங்க எடுத்த போட்டோவை பார்க்கும் போது உண்மையில் கவிதை போல்தான் உள்ளது//...
ரொம்ப சந்தோஷமா இருக்கு, நன்றி!

Jaleela......
மிக்க‌ ந‌ன்றி!

வேலன். said...

கவிதை அருமை சகோதரி...அதைவிட புகைப்படம் மிக அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஹேமா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அழகான வரிகளோடு கவிதை. வாழ்த்துக்கள். கொட்டுகிற பனியிலும் இதயம்.ம் ம் ம் !

ஸாதிகா said...

புதுமையான் வாழ்த்து.ரசிக்கும்படி இருந்தது.

Priya said...

வேலன்......
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

ஹேமா......
நன்றி, உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ஸாதிகா.....
மிக்க நன்றி!

சிவப்ரியன் said...

கவிதை அருமை. நிறைய ரசித்தேன்.

காதல் மனசுக்கு, கால் நகம் போதும் கவிதை எழுத...
களம் கிடைத்தால்?

Priya said...

சிவப்ரியன்......
//காதல் மனசுக்கு, கால் நகம் போதும் கவிதை எழுத... களம் கிடைத்தால்?//

இதுவே ஒரு க‌விதை மாதிரி இருக்கு... மிக்க நன்றி!

சக்தியின் மனம் said...

hi.. happy pongal..

Priya said...

சக்தியின் மனம்.......
Hi sakthi,
//hi.. happy pongal..//...rendavadhu muraiyaa:-)
Anyway, Thanks & Wish you the same!

பிரியமுடன் பிரபு said...

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக‌......

//

நல்லாயிருக்கு

ரிதன்யா said...

புகைப்படம் அருமை
நல்ல விசயங்களைப்பார்க்கும் போது காதல் வரும். வந்திருக்கு உங்க ஆத்துக்காரருக்கு...

Priya said...

பிரியமுடன் பிரபு......
நன்றி!

ரிதன்யா.....
நன்றி!
//நல்ல விசயங்களைப்பார்க்கும் போது காதல் வரும். வந்திருக்கு உங்க ஆத்துக்காரருக்கு...//.....
ஆமா...அதேதாங்க‌:-)

சக்தி said...

நீ சோர்ந்து போகையில்
என் கவிதைகளை வாசித்திரு
இதமாக உன் இதயத்தை
அது வருடி செல்லும் !
என் நியாபகம் வரும்போதெல்லாம்
என் கவிதைகளை நேசித்திரு
உன்னை என்றும் உயிர்ப்போடு
அது வைத்திருக்கும் ! //

என் இதயத்தை இதமாக வருடி சென்றது உண்மைதான்..

சக்தி said...

என் இதயத்தை இதமாக வருடி சென்றது உண்மைதான்..

Priya said...

நன்றி சக்தி!

தமிழன்-கறுப்பி... said...

அழகு...

Priya said...

நன்றி தமிழன்-கறுப்பி!

புன்னகை தேசம். said...

உங்க படைப்புகள் அனைத்தும் அருமை .. பெயிண்டிங்ஸ் அட்டகாசம்.

வாழ்த்துகள்..

Priya said...

புன்னகை தேசம்....நன்றி!

Post a Comment