Subscribe:

Pages

Monday, November 9, 2009

மெழுகுச்சிலையில்... உயிர் வாழ்பவர்கள் !

பாரிஸில் நான் பார்த்த மீயூஸியங்களில், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று Wax Work Museum (French : Musée Grevin). கிட்டதட்ட 300 உலகளவில் பிரபலமானவர்களின் மெழுகுச் சிலை இங்கேதான் உள்ளது.


இங்கே  ஒருசில பிரபலங்கள் இறந்தும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றியது. எப்படியாவது இவர்களுடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள முடியுமா என்றால், இங்கே அது நிறைவேறுகிறது. என்னவோ அவர்களே நேரில் இருப்பதாக எண்ணி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு நீண்ட வரிசையே காத்திருந்தது. நானும் எனக்கு பிடித்தமானவர்களுடன் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


         சுற்றிப் பார்த்துக் கொண்டே வரும் போது, ஒரு வாலிபன் மிகவும் அழகாக, ஸ்டைலாக நின்றுக்கொண்டிருந்தான். யார் இவன்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எந்த துறையில் இவன் பிரபலம்?...இப்படி தொடர்ந்தெழுந்த கேள்விகளுக்கு பதில் தேடும் முன்னே, புன்னகையால் அவன் பதிலளித்தான்.


      அட, இவன் சிலை இல்லை. இருந்தும்  சந்தேகத்துடன் நெருங்கி சென்றுப் பார்த்தபோது, சிரித்துக்கொண்டே அவன் சொன்னான், « நான் இங்கே வேலை செய்பவன் » என்று. அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன்  ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக.


ஆசை ஆசையாய் எடுத்த சில புகைப்படங்கள்………




இதில் யார் சிலை, யார் சுற்றி பார்பவர்கள்.... சற்றே குழப்பம்தான்.










சிலைகளின்  நடுவிலே நடமாடும் மனிதர்களும் ! 


கண்களின் நிறம், ஸ்கின் கலர் டோன் மற்றும் முடியின் நிறம், அதன் தன்மை இப்படி சிலையின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு கூடிய காட்சியகம்.



Leonardo da Vinci... உலகப் புகழ்பெற்ற ஓவியங்களின் உரிமையாளர் !









    
இங்கேயும் நம் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டிட...ஒரு பெண் !


அன்பே உருவான அன்னை தெரெசா !














My heart will go on……(Titanic) பாடலின் மூலம் நம் இதயங்களை கொள்ளைக்கொண்ட பாடகி Celion Dion !













Michael Schumacher... எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் !














Jackie Chan சிலையை...சுற்றிக்கூட சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது !












 
 
Marilyn Monroe... இறந்தும் இளமையோடு !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




அட, இங்கேயும் நம் ஷாருக்கான்... இவருக்கும் தான்  எத்தனை வெளி நாட்டு ரசிகர்கள் !














Michael Jackson... ஏனோ இவரைப் பார்க்க மட்டும் சற்று பாவமாக இருந்தது !



சிலை வடிவில் கூட, அழகில் சிறிதேனும் குறைவில்லாமல் நடிகை Monicca Bellucci !
















இவை அத்தனைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நம்ம காந்தி தாத்தா !


















னக்கு என்னவோ அவைகளை வெறும் மெழுகுச் சிலைகளாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்கள். நெருங்கிச் சென்று சிலைகளின் கண்களைப் பார்த்தப்போது, அவைகள் என்னுடன் பேசுவதாகவே எனக்கு தோன்றியது. அவ்வளவு உயிரோட்டத்துடன் அமைந்திருந்தது.

7 comments:

tt said...

// அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன் ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக. //

haha!

Priya said...

என்ன செய்றது தமிழ், just missed !!!

creativemani said...

ஜாக்கி சான் மற்றும் ஷாருக் சிலைகள் தத்ரூபமாய் உள்ளன.

ஜெனோவா said...

பகிர்வுக்கு நன்றி , ( இங்கயாவது பாத்துக்குறோம் ;) )

விக்னேஷ்வரி said...

அவன் புன்னகைக்க சிறிது தாமதித்திருந்தாலும், நிச்சயம் அவனையும் photo எடுத்திருப்பேன் //
இவ்வளவு புகைப்பட ஆர்வமா...

ஒரு விஐபியா இல்லைனாலும், ரொம்ப ஸ்மார்டாக இருந்ததிற்காக.//
ஓ, அது தான் மேட்டரா... அப்போ சரி.

நல்லாருக்கு சிலை மனிதர்கள்.

Priya said...

நன்றி மணிகண்டன !
நன்றி ஜெனோவா !

Priya said...

நன்றி விக்னேஷ்வரி! கொஞ்சம் புகைப்பட ஆர்வம்தான்...ஆனா, மேட்டரை சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே.....

Post a Comment