Subscribe:

Pages

Tuesday, November 24, 2009

கொண்டாட்டம் ஆரம்பம் !

       கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் வேளையில் அதை வரவேற்கும் விதமாக இங்கு எண்ணற்ற தயாரிப்புகள் ஆரம்பமாகி உள்ளது. வீதியெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண மின்சார விளக்குகள், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ணத்தோரணங்கள், பலவிதமான சாக்லெட் வகைகள், பரிசுப்பொருட்கள், நியூ கலக்ஷன்ஸ் ஆடைகள் என்று ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

          கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இந்த கிறிஸ்மஸ் ட்ரீதான். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கிடைக்கும் மரங்களை வாங்கிவந்து, அலங்கரிப்பதற்கென்றே விற்கப்படும் விதவிதமான வண்ணத் தோரணங்கள், சீரியல் லைட்ஸ் கொண்டு அதை அலங்கரிக்கப்படும் அழகே தனி! Sur un thème என ப்ரெஞ்சில் சொல்வதைப்போல ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமாய் அதை அலங்கரிப்பது என்பது ஒரு அழகான கலை என்றே நினைக்கிறேன். வழக்கமான சிகப்பு மற்றும் கோல்டன் நிறங்களில் இருந்து, இன்று ரொம்ப வித்யாசமாக பல வண்ணங்களில் எல்லாம் அலங்கரிக்கப் படுகின்றன.....நீலம், வைலெட், ஆரஞ்சு என்று விதவிதமாய் இந்த ட்ரீயை அழகுப்படுத்த ஆரம்பித்திருப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. எனக்கு பிடித்தது சிகப்பு மற்றும் வெள்ளி நிறங்கள்தான் என்றாலும், இந்த வருடம் என்னோட சாய்ஸ் நீலம்தான்.

8 comments:

ஜெனோவா said...

நடத்துங்க ;-)
அய் நானும் இந்த கிறிஸ்துமசுக்கு ஊருக்குப் போறேனே ;-))
(இப்பவே என்னோட அம்மா வைக்கப்போற கோழிக்கொழம்பு ...ஸ்ஸ்சப்பா நாக்கு ஊருது )

Priya said...

ம்ம்ம்.....ஜாலிதான்! என்னதான் வெளியில் பலவிதமாய் சாப்பிட்டாலும், அம்மாவின் சமையல் சமையல்தான், போய் என்ஜாய் பன்னுங்க!

Unknown said...

போட்டோல நீலமே இல்ல..

பா.ராஜாராம் said...

நல்ல நடை,பகிரல் ப்ரியா.

சூர்யா said...

kalakunga....

Priya said...

பேநா மூடி,கடைசி புகைப்படத்திலிருப்பது நீலம்தானே!?
வணக்கம் பா.ராஜாராம்,நன்றிகள் பல.......
நன்றி சூர்யா!

Raghu said...

இப்போதான் உங்க‌ ப்ளாகை ப‌டிச்சு பாத்தேன். உங்க‌ளோட‌ "வ‌ண்ண‌ங்க‌ள் எண்ண‌ங்க‌ள்" அபார‌ம், ந‌ல்ல‌ ஓவிய‌ திற‌மை உங்க‌ளுக்கு. ஒவ்வொரு வார‌மும் ஒரு குறிப்பிட்ட‌ நாள்ல‌ "இந்த‌ வார‌ ஓவிய‌ம்"ங்க‌ற‌ மாதிரி ஏதாவ‌து வ‌ரைஞ்சு ஒரு ப‌திவா போடுங்க‌. வாழ்த்துக‌ள்!

Priya said...

உங்க ஐடியாபடி தொடர முயற்சி செய்றேன், உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி குறும்ப‌ன்!

Post a Comment