Subscribe:

Pages

Thursday, November 17, 2011

காதல் தேசத்தை தேடி......

     வண்ணக்கலவையில் உருவாகும் ஓவியத்தை விட கருப்பு வெள்ளை  ஓவியம்தான் பெரும்பாலானவர்களை கவர்கிறது. எனது பள்ளி நாட்களில் இருந்தே எனக்கும் பென்சில் ஸ்கெட்சில் மிகுந்த ஆர்வம் உண்டு. சமீப நாட்களாக இவற்றை பற்றி நிறைய தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதோ மீண்டும் என் கைவண்ணத்தில் மலர்ந்த அரும்புகள்....  


சிறந்த ரசனையோடு ஆழமான பார்வை கொண்டவர்களால் ஓவியங்கள் உயிர்பெறுகிறது என்பது என் எண்ணம். இதோ உங்கள் ரசனையைக்கொண்டு இதற்கு கவிதை படைத்திடுங்கள். உங்களின் கவிதைகளால் உயிர் பெறட்டும் எனது ஓவியம்!


யாருமற்ற தனிமையில்
யாதுமற்ற‌ நிலையினில்
காதல் மட்டுமே துணையாய்
நீ என்னிலும்
நான் உன்னிலும்
சொல்லாத வார்த்தைகளும்
பொல்லாத காதலும்.....

விரல்களின் இறுக்கத்தில் கசிந்திட‌
காதல் தேசத்தை தேடி
நடைபயில்வோம் வா!

33 comments:

Unknown said...

me the firstu....

erunga na porumaiya padithu vitu varen..

SURYAJEEVA said...

அருமையான ஓவியம்... என்ன என்ன ரக பென்சில் களை உபயோகித்தீர்கள் என்று கூறியிருந்தால், உங்களை மாதிரி நாங்களும் வரைய முயற்சி செய்வோம்

G.AruljothiKarikalan said...

யாருமில்லாத இடத்தில் நீயும் நானும் மட்டும்.... இதுவே ஒரு கவிதை தான் :)

KParthasarathi said...

பெரிய சங்கடத்தில் என்னை ஆழ்த்தி விட்டீர்கள்.
உங்களுடைய பென்சில் ஓவியம் அழகா அல்லது நீங்கள் புனைந்த கவிதை சிறப்ப என்று தெரியாமல் தலையை பிய்த்துகொண்டு இருக்கிறேன்.கடைசியில் ஓவியம் கொஞ்சம் என்னை தன்பக்கம் இழுத்துக்கொண்டுவிட்டது

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓவியங்கள் மிகவும் நன்றாகவே வரையப்பட்டுள்ளன.
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk

Raghu said...

முத‌ல் வ‌ரி 100% உண்மை ப்ரியா. முக‌த்தில் சோக‌ம் ச‌ரியாக‌ வெளிப்ப‌டுவ‌து க‌ல‌ர் ஃபோட்டோஸைவிட‌ ப்ளாக் & ஒய்ட் ஃபோட்டோஸில்தான்.


இதுதான் என் வீடு என்றாள்
இவ்வ‌ள‌வு நேர‌ம்
விர‌ல் கோர்த்து ந‌ட‌ந்த‌வ‌ள்
க‌ட‌வுளை ச‌ந்தித்தால்
ஒவ்வொரு ம‌னித‌னுக்கும்
ஒரு ரீவைண்ட் ப‌ட்ட‌ன் கேட்க‌வேண்டும்

ஹிஹி..இத‌ க‌......சொல்ற‌துக்கே கூச்ச‌மா இருக்கு. அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிக்கோங்க‌ :))

Unknown said...

நம்
அன்பின்
கைப்பிடியில்
நம்பிக்கையை
அருகில்
வைத்து

பாசத்தின்
இறுக்கத்தில்
உன்னில்
என்னையும்
என்னில்
உன்னையும்
கண்டு ..

புறம் கூறும்
உலகை
தூரவைத்து ..

வந்து போகும்
துன்பம் தனை
எதிர்க்கொள்ள
வா நடை பயின்று
வரலாம்...

Unknown said...

நீ
கைபிடித்து
அழைத்து
நடக்கையில் ...

பள்ளி செல்லும்
நாட்களில்
அம்மாவின்
கரம்
பற்றிய
நினைவு

உன்னோடு
என்னை
நடக்க
வைக்கிறது

Unknown said...

நீ கைப்பற்றிய
உடன்
நினைக்கிறேன்
போகும் தொலைவு

அருகில் இருந்தாலும்
தூரமாய்
போக வேண்டும் என்று

தேவதையின்
அருகில்
இருக்க
யாருக்குத்தான்
பிடிக்காது

அதனால் தான்
கடிகாரத்தின்
இரண்டு முட்களையயும்
பிடுங்கி வைத்து விட்டேன்

Unknown said...

நீங்கள் ஓவியம் மட்டும் வரைய வில்லை
கவிதையும்
சேர்த்துதான்
வரைந்து இருக்கீங்க
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

சத்ரியன் said...

உயிரோவியம்..!

ஜெனோவா said...

உன் திசைக்காட்டிக் கண்கள்
இழுத்துச் செல்லும் பாதையில்
உனைத் தொடர்கிறேன்
கப்பலில் இணைக்கப்பட்ட
குறும் படகாய்!

அன்புடன் அருணா said...

அசத்தல் ஓவியம்!

Balajisaravana said...

ஹாய் ப்ரியா,
ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது இந்த ஓவியம்..
என்னை மறுபடியும் கவிதைஎழுத தூண்டினதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் :)


அந்தி மாலை..
ஈரம் சேரா வழிப் பாதை..
வரிசை மரங்களின் நலம் விசாரிப்புகள்..
வழியெங்கும் தொடர்ந்திடும் மணக்காற்று..
இதமேற்றும் பூங்குயிலோசை..
வெண்மேக ஓவியனின் நிறை தீட்டுக்கள்..
நிழல்கள் பட்டு நிமிரும் புல்வெளி..
தலை கவிழ்க்கும் தடைக்கற்கள்..
முழுமை என்னருகிலிருக்க
தொலைதூரமோடும் பிறை நிலா..
வார்த்தை தீண்டா மௌன மொழி..
வருத்தம் தொடா மனப் பிரதேசம்..
தீராப் ப்ரியம் திசையெங்கும் நிரம்பி
ரசனை வழியும் இக்கணநேரம்..
உன் விரல் பின்ன நடந்திடும் வேளை!

Priya said...

தொடர்ந்து ஓவியங்களை ரசித்து பின்னூட்டம் அளித்துவரும் நன்பர்களுக்கு எனது அன்பான நன்றிகள்!

@suryajeeva.... HB & Graphite pencil 2B-6B
இதைப்பற்றி நிச்சயமாக அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.

வாங்க அருள்... "யாருமில்லாத இடத்தில் நீயும் நானும் மட்டும்..." கவிதையான தருணமாகத்தான் அது இருக்கக்கூடும்!கவிதைக்கு நன்றி!

@KParthasarathi...... ஓவிய‌த்தின் ப‌க்க‌த்தில் எழுத்துக்க‌ளை சேர்ப்ப‌து அவ‌சிய‌மில்லைதான்... A picture is worth a thousand words இல்லையா... அதான் ஓவிய‌ம் கொஞ்சம் உங்களை அதன்பக்கம் இழுத்துக்கொண்டுவிட்டது. த‌ங்க‌ள் ர‌ச‌னைக்கு ந‌ன்றி!

Tamilthotil said...

அப்பா இன்னும் எத்தனைக் கவிதை இந்த ஒவியத்திற்கு பின்னூட்டம் கிடைக்குமோ... இருப்பினும் நிறைவடையாத கவிதை உங்கள் ஓவியம். அந்த குழந்தைகள் நடக்கும் பாதையில் புற்களையும்,இன்னும் சில சின்னஞ்சிறு செடிகளையும் எப்படி இவ்வளவு தத்துரூபமாக வரைந்தீர்கள். நானும் பல முறை வரைந்து காகிதம் கிழிந்தது தான் மிச்சம். இது என்னுடைய சிறு முயற்சி, எனினும் உங்கள் தலைப்புக்கு சம்மந்தமில்லாத ஒன்று தான்.

நடை பயிலும் வயதை துளித்துளியாய்
நகர்த்திக் கொண்டிருக்க
நட்புப் பழக வருகிறாய்
என் இனியதோழியே!
என் கரம் பற்றி நிற்கிறாய்
உன் வழியெங்கே?
என் வழியெங்கே?
வழி தெரியாமல்
நம் விழியெங்கிலும் அன்பு
மட்டுமே சுமந்து கொண்டு
உன் கரம் பற்றி
நட்பு பயில்கிறேன் தோழியே...!

கேள்விகளின்றி என் கரம் பற்றி
பயணம் செய்யும் என் அன்புத் தோழனே...!
வா!
நகம் நனைத்துக் கொண்டிருக்கும்
நம் நட்பை நரை விழும் வரை
எடுத்துச் செல்வோம்.
வா நண்பா...!

Priya said...

@வை.கோபாலகிருஷ்ணன்
பாராட்டுக்களுக்கு நன்றி சார்!

//முக‌த்தில் சோக‌ம் ச‌ரியாக‌ வெளிப்ப‌டுவ‌து க‌ல‌ர் ஃபோட்டோஸைவிட‌ ப்ளாக் & ஒய்ட் ஃபோட்டோஸில்தான்.//....வ‌ரைய‌ தெரியாது என்று சொல்லி இருக்கிங்க‌ ர‌கு ஆனாலும் அதன் நுணுக்கங்க‌ளை ப‌ற்றி தெரிந்துவைத்து இருக்கிங்க‌, பார‌ட்டுகக்க‌ள்!

"க‌ட‌வுளை ச‌ந்தித்தால்
ஒவ்வொரு ம‌னித‌னுக்கும்
ஒரு ரீவைண்ட் ப‌ட்ட‌ன் கேட்க‌வேண்டும்"...கூச்ச‌ப்ப‌ட்டாலும் சூப்ப‌ரா ஒரு விஷ‌ய‌ம் சொல்லி இருக்கிங்க‌... ந‌ன்றி ர‌கு!

அப்ப‌ப்பா.... க‌விதைம‌ழையா கொட்டுது... அழகான கவிதைகள் மிக்க‌ ந‌ன்றி சிவா!
"தேவதையின்
அருகில்
இருக்க
யாருக்குத்தான்
பிடிக்காது "... ச்சோ ஸ்வீட்!

@சத்ரியன்... இரண்டு வரியிலாவது கவிதை தந்து இருக்கலாமே கவிஞரே!

Priya said...

வாங்க ஜெனோவா...//கப்பலில் இணைக்கப்பட்ட
குறும் படகாய்!//.... சிம்பிலி சூப்ப‌ர்ப்!

மிக்க நன்றி அன்புடன் அருணா!

சூப்பர்.... நல்ல ஃபீல் கொடுத்து கவிதை எழுத தூண்டியதே... ரொம்ப சந்தோஷம் Balajisaravana! தங்கள் கவிதையை எனது FBல ஷேர் பண்ணிக்கலாமா?


//நகம் நனைத்துக் கொண்டிருக்கும்
நம் நட்பை நரை விழும் வரை
எடுத்துச் செல்வோம்.//....
நிறைவடையாத கவிதை உங்கள் ஓவியம் என நீங்க சொன்னதை போல நட்பை இறுதிவரை கொண்டுச்செல்வ‌தை நான் ஓவியம் வரையும் போது உணர்ந்தேன்.. தற்பொழுது தங்களின் கவிவரியிலும் உணர்ந்தேன். நன்றி Tamilraja k said...தங்கள் கவிதையை எனது FBல ஷேர் பண்ணிக்கலாமா?

Priya said...

கவிதை எழுதிய நண்பர்களிடம் ஒரு சின்ன வேண்டுக்கோள்...எனது ஓவியத்தோடு உங்கள‌து கவிதைகளை FBல ஷேர் பண்ண விரும்புகிறேன்... பண்ணிக்கலாமா?

Yaathoramani.blogspot.com said...

ஓவியக் கவிதை /கவிதை ஓவியம்
இப்படிச் சொல்லலாமா என் நினைக்கிறேன்
ஓவியமும் அதற்கான தங்கள் கவிதையும்
மிக மிக அருமை
மீண்டும் மீண்டும் பார்த்தும்
மீண்டும் மீண்டும் படித்தும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Tamilthotil said...

Tamilraja k said...தங்கள் கவிதையை எனது FBல ஷேர் பண்ணிக்கலாமா?

உங்களிடம் நான் கேட்கலாம் என்று இருந்தேன் , எனக்கு இப்படி ஒரு கவிதையை தந்த உங்கள் ஒவியத்தை என் வலைப்பூவில் பயன்படுத்திக் கொள்ளலாமா... என்று, நீங்கள் கேட்டு விட்டீர்கள். தாராளமாக...
வாழ்த்துக்கள் இன்னும் இப்படி நிறைய ஒவியங்கள் படைப்பதற்கு...

Balajisaravana said...

//சூப்பர்.... நல்ல ஃபீல் கொடுத்து கவிதை எழுத தூண்டியதே... ரொம்ப சந்தோஷம் Balajisaravana! தங்கள் கவிதையை எனது FBல ஷேர் பண்ணிக்கலாமா? //
இதெல்லாம் கேக்கணுமா ப்ரியா.. with pleasure :)

puduvaisiva said...

உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்...

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது ...


thanks priya

"தாரிஸன் " said...

//யாருமற்ற தனிமையில்
யாதுமற்ற‌ நிலையினில்//

ennai kavarntha varigal....!
nice..

Priya said...

மிக்க நன்றி Ramani sir!

Tamilraja k... தாராளமாக ஒவியத்தை வலைப்பூவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!!

ரொம்ப சந்தோஷம் பாலாஜி, நன்றி!

சூப்பர் புதுவை சிவா, கவிதை நச்ன்னு இருக்கு!

நன்றி தாரிஸன்!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். என் மனைவி உங்கள் தளத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.
நான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். குறைவாக எழுதினாலும் நிறைவாக உள்ளது. தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

மாலதி said...

அசத்தல்

Suresh Subramanian said...

ஓவியங்கள் அருமை.... நான் உங்கள் ஒவியங்களை என்னுடைய் கவிதை... கதைகளில் பயன்படுத்திக் கொள்ளளாமா...

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Priya said...

@திண்டுக்கல் தனபாலன்.....தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

நன்றி மாலதி!

@Rishvan .... தாராளமாக பயன்ப்படுத்துக்கொள்ளுங்கள், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

Yaathoramani.blogspot.com said...

தங்கள் எழுத்தின் ரசிகன் நான
புத்தாண்டில் தொடர்ந்து பதிவுகள் தரக் கூடுமாயின்
மிக்க மகிழ்ச்சி கொள்வேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Mahi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா!

மாசத்துக்கு ஒரு பதிவாவது போட்டு எங்களோட தொடர்பில் இருங்க! :)

Priya said...

மிக்க நன்றி Ramani சார், தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி... தொடர்ந்து பதிவெழுது நினைக்கிறேன்.... தொடர்பில் இருக்கவும் விரும்புகிறேன்..சில நேரங்களில் முடியாமல் போய்விடுகிறது... இனி கண்டிப்பாக மாதம் ஒருமுறை எழுதவாது முயற்சி செய்கிறேன்!

srimathan said...

super kavithai

Post a Comment