ஓவியம் வரைவதற்கான தூண்டுதல் எல்லா மனிதர்களிடமும் சிறுவயதில் இருந்தே உண்டு... அந்த இயற்கையான குணத்திற்குட்பட்டு நாமும் வரைந்து பார்க்க தொடங்கிவிடுவோம். கோடு போட கையில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மனதில் மலரும் கற்பனைக்கேற்றபடி வரைந்து அதை பார்த்து மகிழ்ச்சியடைவோம். இதில் சிறுவர்களுக்கு பெரும் பங்குண்டு. இவர்களுக்கும் ஓவியங்களுக்குமான நெருக்கம் மிக பெரியது. தோன்றும் கற்பனைகளையும் கனவுகளையும் காட்சிகளையும் ஓவியமாக தர இயல்பாக இவர்களால் முடிகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த சிறுவர்களின் ஓவியங்களை போல சிறுவர்களையே ஓவியமாய் பார்க்கும் எத்தனையோ திறமை மிக்க ஓவியர்களும் உண்டு. குழந்தைகளை ஓவியமாக வரைபவர்களை பார்க்கும் போது பிரமிப்பாக தோன்றும். இணையத்தில் குழந்தைகளின் ஓவியங்களோ அல்லது அவர்களின் புகைப்படங்களோ எதுவாக இருந்தாலும் பார்க்க தவறுவது இல்லை. வரைவதை போல நான் நேசிக்கும் இன்னொன்று புகைப்படம்... ஒரு நொடி உணர்ச்சியையும் படமாக்கி கொடுக்கும் கலை அது. அதிலும் சிறுவர்களை படம்பிடிப்பது என்பது அழகான ஒன்று. இதுவே தூண்டுதலாக அமைய பார்த்த முதல் முறையே மனதில் ஒட்டி கொண்ட.... என்னை மிகவும் கவர்ந்தஒரு புகைப்படத்தை பார்த்து நான் வரைய ஆரம்பித்தேன்.
இம்முறை வழக்கமாக பயன்ப்படுத்தும் HB பென்சிலை தவிர்த்து Graphite pencil 2B-6B உபயோகப்படுத்தினேன். இதனால் எதிர்பார்த்த கருமை நிறம் கிடைத்தது.
வரைய ஆரம்பித்த மூன்று மணி நேரங்களுக்கு பின் கிடைத்ததுதான் கீழே காணும் அரும்புகளின் அணைப்பு.... புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...! ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ப்ரியமான பதிவுலக நண்பர்களை மீண்டும் சந்தித்ததிலும் வரைந்ததை பகிர்ந்துக்கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
இம்முறை வழக்கமாக பயன்ப்படுத்தும் HB பென்சிலை தவிர்த்து Graphite pencil 2B-6B உபயோகப்படுத்தினேன். இதனால் எதிர்பார்த்த கருமை நிறம் கிடைத்தது.
வரைய ஆரம்பித்த மூன்று மணி நேரங்களுக்கு பின் கிடைத்ததுதான் கீழே காணும் அரும்புகளின் அணைப்பு.... புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...! ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ப்ரியமான பதிவுலக நண்பர்களை மீண்டும் சந்தித்ததிலும் வரைந்ததை பகிர்ந்துக்கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
34 comments:
//புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...!
தெளிவாக தெரிகிறது பிரியா:-)
எப்போதும் போலவே நன்றாக உள்ளது.
நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவை கண்டத்தில் மிகுந்த மகிழ்ச்சி :-)
நீண்ட இடைவெளிக்கு பின் பதிவு
ஓவியத்தில் அன்பின் வெளிப்பாடு அழகாய் வெளிபட்டிருக்கிறது வாழ்த்துக்கள் பிரியா
அருமை. இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை இதன் நுணுக்கங்கள் தெரியாததால். ஆனால் ரசிகன் என்பதால் ஒரு வார்தை
என்ன சொலவது. ஓவியம் வரைவது என்பது அருமையான் உணர்வு.அதை நானும் என் கல்லூரிக் காலங்கள் வரைத் தொடர்ந்தேன்.அதன் பிறகு அது கவிதையாக மாறி ஓவியத்தை தொடர முடியவில்லை.
ஆனால் ரசிக்க என்றுமே மறப்பதில்லை.
எனக்குத் தெரிந்த அளவில் புகைப்படத்தைக் காட்டிலும் ஓவியம் அழகு. அதுவும் எந்த வண்ணமும் இல்லாமல் இருக்கும் இந்த ஓவியங்களின் அழகே தனி. அருமை.
ஓவியத்தை மட்டும் போடாமல் அதற்கு சில வர்ணனைகளும், நல்ல பதிவு.
மிக அருமை ப்ரியா. உயிர்ப்போடு இருக்கின்றன ஓவியங்கள். படிப்படியாக காட்டியிருப்பது இன்னும் அழகு.
இந்த ஓவியம் ஒரு கவிதை.
கண்களை திறப்பது தான் கலை
அது உங்களுக்கு மிகவும் அருமையாக வருகிறது
Ithu migavum arumai priya...especially the girls eyes.. magic!!! -- Joe
ஓவியங்கள் வெகு அருமையாக வந்துள்ளன.
அன்பு வெளிப்படுகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk
அவள் கண்களிலேயே அவ்வளவு அன்பும் இருக்கு ப்ரியா.
உங்களுக்கு ஓவியம்ங்கறது ஜஸ்ட் லைக் தட் ஒரு காபி போடற மாதிரி போல. ஆனால் எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும் :)
வாங்க Bharathi.... நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிடுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்...!!!
ஆமா சரவணன் சார் நீண்ட.... இடைவெளிக்கு பின் ஒரு பதிவு!
ரசித்தமைக்கு நன்றி வேல்முருகன் சார்!
தங்கள் ரசனைக்கு நன்றி Tamilraja இப்பொழுதும் கவிதையுடன் ஓவியம் வரைவதை தொடரலாமே...
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேம்!
வாங்க சித்ரா.. என் ஓவியம் கவிதை சொல்கிறதா... சோ ஹாப்பி!
"கண்களை திறப்பது தான் கலை" அழகான இந்த பின்னூட்டத்தை ரசித்தேன்... மிக்க நன்றி suryajeeva!
Hey Joe thank u so much!
வை.கோபாலகிருஷ்ணன் சார்... தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்!
குட்டி பெண்ணின் கண்களை வரையும் போது உன்மையிலேயே மனம் நிறைவாக உணர்ந்தேன் ரகு அவள் கண்களிலேயே அவ்வளவு அன்பும் நிறைஞ்சிருக்கு இல்லையா..ரசித்ததற்கு நன்றி ரகு!
(உங்களுக்கு மட்டும் ஒரு உண்மை சொல்றேன் ரகு.... வரைய தெரிந்த அளவிற்கு எனக்கு காபி போட தெரியாது:-))
உங்கள் கலைத்திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது... கிரேட்...
சித்ரா சாலமன் மூலமாக இங்கு முதன் முறை வந்தேன்.மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் பென்சில் வரைபடம்.
நன்றி உங்களுக்கும் சித்ராவிற்கும்
KP gave me your link today and I enjoyed your work so much.. sometime black and white plays more vibrancy than colors and this is one such.. the emotions are brought out beautifully Priya.. sorry not fluent in writing in tamil , hope that is ok :-)
so cute...
thathrubama varainthu erukeengal..
குட்டி பாப்பா அழகா இருக்கு
நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும்
நிறைவாக ஒரு பதிவு
வாழ்க வளமுடன்
ரொம்ப அழகா இருக்கு ப்ரியா!
மிகவும் அருமை ப்ரியா.....
ஹை!பூங்கொத்து!
என்ன சொல்லி பாராட்டுவதுன்னு தெரியல,ரொம்ப அழகா வரைந்திருக்கீங்க...இந்த அற்புதகலையியைக் கொடுத்த இறைவனுக்கு தான் நன்றி சொல்லனும்...அந்த சிறுமியின் கண்கள் அற்புதமா வந்திருக்கு..
நிறைவான ஓவியத்தை தந்தமைக்கு நன்றி ப்ரியா !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Philosophy Prabhakaran!
தங்களின் முதல் வருகைக்கு நன்றி KParthasarathi... தேங்க்யூ சித்ரா!
Thank u so much padmaja!
//sometime black and white plays more vibrancy than colors//...Absolutely
Always love the black & white pictures!
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா!
தேங்க்ஸ் மகி!தேங்க்ஸ் அருள்!
ஹை பூங்கொத்து:) நன்றி அருணா மேடம்!
நன்றி மேனகா... உண்மைதான் "Talent is God Given" இறைவனுக்கு நன்றி சொல்லிட்டுதான் இருக்கேன்.
நிறைவான ஓவியமாக தெரிகிறதா... மிக்க நன்றி புதுவை சிவா!
ஓவியங்கள் அருமை வாழ்த்துக்கள்:)
வாவ்! என்ன மாதிரி ஒரு ஓவியம்.பிரமிப்பாக உள்ளது எனக்கு. உயிர்ப்பான அற்புதக் கலை உங்களுக்கு கை கூடி இருக்கிறது.வாழ்த்துக்கள்.
தங்கள் ரசனைக்கு நன்றி Tamilraja இப்பொழுதும் கவிதையுடன் ஓவியம் வரைவதை தொடரலாமே...
உங்கள் கருத்துக்கு நன்றி இருப்பினும் நேரம் கிடைப்பதில்லை. ரசனைமிக்க தருணங்கள் ஒவியம் வரைவது,மண்ணில் விதையை போட்டு அது முளைப்பதைப் பார்ப்பது,தனிமையான பொழுதில் காய்கறிகளுடன் ஒன்றி அதைப் பக்குவப்படுத்தி சமைப்பது,தெருக்களின் நீளத்தை ரசித்து நடப்பது.இப்படி நிறைய நிறைய ஒவியத்தைப் போல நான் தொலைத்துக் கொண்டிருப்பவை. இன்னும் கவிதை மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் உங்கள் வலைப்பூவைப் பார்த்தது சிறிது ஆசைத் துளிர்க்கிறது.
This is a beautiful portrait!
//ஓவியங்களுக்குமான நெருக்கம் மிக பெரியது. தோன்றும் கற்பனைகளையும் கனவுகளையும் காட்சிகளையும் ஓவியமாக தர இயல்பாக இவர்களால் முடிகிறது. //
நிஜம் தான் ப்ரியா.
அவர்களின் உலகம் வேறு. அவர்களின் “பலமே” கற்பனை உலகு தான். அதனால் தான் புதிய தலைமுறையினரால் உலகை புதுப்பித்துக் கொண்டே இருக்க முடிகிறது.
உங்கள் கை வண்ணத்தில் ”அரும்புகளின் அணைப்பு” அற்புதமாய் வெளிப்பட்டிருக்கிறது.
,ரொம்ப அழகா வரைந்திருக்கீங்க..வாழ்த்துகள்.
நன்றி மழை!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி raji மேடம்!
Tamilraja k.... தெருக்களின் நீளத்தை ரசித்து நடப்பதை கூட ஓவியம்போல காணும் உங்களின் ரசனை மிக அழகானதாக இருக்கிறது. இருப்பினும் கவிதைகளில் கொண்டுவரும் அழகை ஓவியமாகவும் கொண்டுவர மீண்டும் முயற்சி செய்யுங்கள்!
Thank you so much Katherine Thomas!
//அதனால் தான் புதிய தலைமுறையினரால் உலகை புதுப்பித்துக் கொண்டே இருக்க முடிகிறது.//....ஆமாங்க சத்ரியன் அவர்கள் அழகான அதிசயங்கள்!நன்றி!!!
மிக்க நன்றி Kanchana Radhakrishnan !
இன்று தான் உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்.. மிகவும் அருமை..
பாராட்ட சொற்களே வரவில்லை.. சொக்கி நிற்கிறேன் போங்கள்! மூணு மணி நேரம் ஒரு படத்தை perfection தொட்டு வரையும் உங்கள் உழைப்பு வணக்கத்துக்குரியது.
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அப்பாதுரை!
Post a Comment