Subscribe:

Pages

Thursday, July 28, 2011

காதல் மொழி பேசும்.... கற்கள்!

                வரைவதில் குறையாத ஆர்வம்... தொடர்கையில் புது புது முயற்சிகளில் ஈடுபட மனம் முயல்கிறது. கொஞ்ச நாட்களாகவே கல்லில் வரைவது பிடித்திருக்கிற‌து. மிக குறைந்த நேரத்தில் வரைய முடிகிறது. இதற்காக கடற்கரை செல்லும் பொழுதுகளில் கல்லை தேடி தேடி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது. அவரின் ஊக்கம் மிக பெரிய பலம் எனக்கு!

வரைய நினைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்தி கற்பனை கொண்டு வண்ணம் தீட்ட, குவிந்திருக்கும் கற்களில் எதை எடுத்தாலும் அழகாகவே தெரிந்தது.


அழகாய் தெரிந்த கற்களை இன்னும் அழகாக்க ஏதோ சிறு முயற்சி செய்ததுதான் கீழ்காணும் படங்களில் உள்ளவை. இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன். நன்றாக காய்ந்தபின் கொஞ்சம் வார்னிஷ் அடித்துவிட... கல் கண்ணாடி போல் ஆனது!


முதலில் ஒரு ஜோடியை நீல நிறத்தின் பின்னனியில் வரைய ஆரம்பித்தேன். பின் அதுவே சுவாரஸியமாக தெரிய அப்படியே தொடர்ந்தேன்... வெவ்வேறு வண்ணங்களில். இதோ.... காதல்  மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!






57 comments:

Mahi said...

ஐ..இங்கே நான்தான் 1ஸ்ட் கமென்ட்! இருங்க போட்டோஸ் எல்லாம் நிதானமாப் பார்த்துட்டு வாரேன்!:)

Mahi said...

/நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது /அவ்வ்வ்வ்! பாவம்...நீங்க ரெண்டு பேரும் இல்ல, கடற்கரையில் உங்களைப் பார்த்து குழம்பிப்போகும் சகமனிதர்கள்! ;)

3 ஜோடிகளுமே சூப்பரா இருக்காங்க. நீலக்கலரில் கடல்--அலைகள்--வானம் அழகா இருக்கு!

Priya said...

வாங்க மகி, அங்க நான் முதல வந்த மாதிரி இங்கேயும் நீங்கதான் 1ஸ்ட்!

// பாவம்...நீங்க ரெண்டு பேரும் இல்ல, கடற்கரையில் உங்களைப் பார்த்து குழம்பிப்போகும் சகமனிதர்கள்! ;)// அதானே இல்ல;) கார‌ண‌ம் இப்படி பட்ட சமயங்களில் ஜ‌ன‌ங்க‌ள‌ற்ற‌ ப‌குதிக்கே சென்று விடுவ‌து வ‌ழ‌க்க‌ம்:)

Mahi said...

/கார‌ண‌ம் இப்படி பட்ட சமயங்களில் ஜ‌ன‌ங்க‌ள‌ற்ற‌ ப‌குதிக்கே சென்று விடுவ‌து வ‌ழ‌க்க‌ம்:)/ஓஹ்..அதுவும் அப்படியா?

சரி..சரி,ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்குப் போறீங்க,பாத்து பத்திரமாப் போயிட்டு வாங்க!:)

மாய உலகம் said...

வாவ்... சூப்பருங்க காதல் மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!ஓவியம் ஹைலைட்... சான்சே இல்ல இதுபோன்ற கல் ஓவியங்கள் இப்பொழுது தான் பார்க்கிறேன்... வித்தியாசமாக யோசித்து அற்புதமாக வரைந்த உங்களுக்கும்... கற்களை எடுக்கு உதவி புரிந்த உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

கல்லிலே கலை வண்ண்ம் க்ண்டேன்.
நல்ல முயற்சி. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்க(ல்)ள்.

காதல் என்றாலே கல்லால் அடிக்கும் காலம் போய் இப்போது கல்லிலேயே காதல் ஓவியம் என காலம் மாறியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

Priya said...

///கார‌ண‌ம் இப்படி பட்ட சமயங்களில் ஜ‌ன‌ங்க‌ள‌ற்ற‌ ப‌குதிக்கே சென்று விடுவ‌து வ‌ழ‌க்க‌ம்:)/ஓஹ்..அதுவும் அப்படியா?//... ஆமா நீங்க‌ சொன்ன‌து போல‌ ச‌க‌ ம‌னித‌ர்க‌ளின் ந‌லன் க‌ருதி:‍)

//சரி..சரி,ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்குப் போறீங்க,பாத்து பத்திரமாப் போயிட்டு வாங்க!:)// ம்ம் தங்கள் அன்பிற்கு நன்றி மகி!

Priya said...

இங்கு ஒரு சிலர் அப்படி வரைவதை பார்த்திருக்கிறேன்... ஆனாலும் கல்லில் வரைபவர்கள் மிக குறைவு என்பதால் அது அதிகம் பிரபலம் ஆக வில்லை என்று நினைக்கிறேன்.தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மாய உலகம்... அவரிடமும் சேர்த்துவிடுகிறேன்!

Priya said...

//பாராட்டுக்க(ல்)ள்.//கல் ஓவியத்திற்கு மிக சரியான பாராட்டுக்க(ல்)ள்!
மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்... உங்க பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்!

ஹேமா said...

கல்லைக் காதலாக்கிய கடவுள் இப்போ நீங்கள்.பாராட்டுக்கள் ப்ரியா !

Unknown said...

வாங்க மகி, அங்க நான் முதல வந்த மாதிரி இங்கேயும் நீங்கதான் 1ஸ்ட்!/

அதெலாம் முடியாது மீ தி firstu...

Unknown said...

கல்லில் காணும் காதல்
காலம் எல்லாம்
காதல் வாழ்க
காதல் ஓவியம் வாழ்க
ஓவிய மகராணி வாழ்க
ஓகே எனக்கு தனி பேமென்ட் அனுப்பிடுங்க

Unknown said...

நிலவின் பின்னணியில் நின்றிருக்கும் ஜோடி மிக அருமை.

சாந்தி மாரியப்பன் said...

கல்லிலே கலைவண்ணம் செய்து எங்களுக்கும் காட்சிப்படுத்தியதற்கு முதலில் பாராட்டுகள்..

ரொம்ப ரொம்ப அருமையாயிருக்குங்க.. புதுப்புது முயற்சிகளும் தேடலும்தான் முன்னேற்றத்தின் முதல்படி, இல்லையா... தொடருங்கள் :-)

எல் கே said...

கல்லிலே கலைவண்ணம் கண்டு காதல் இணைகளை அதில் உயிரூட்டிய தோழிக்கு வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

கவிதையில் காணும் காதல் மொழியை விட
கற்கள் மூலம் சொல்லும் காதல் மொழிகள்
அருமையிலும் அருமை
.வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

கல்லில் கலக்கல்...

tt said...

wow !! Excellent work Priya..

நிலாமகள் said...

க‌ல்லும் க‌லைவ‌ண்ண‌ம் பெற்றிடும் 'கைவ‌ண்ண‌ம்' த‌ங்க‌ளுடைய‌து! வெகு அழ‌கு! ச‌ற்றே பெரிய‌ அள‌விலுள்ள‌ இது போன்ற‌ க‌ல்லில் 'எம் சீல்' கொண்டு வினாய‌க‌ர் உருவ‌ம் செய்து ந‌ட்பு வ‌ட்ட‌த்துக்கு ப‌ரிச‌ளித்த‌ ப‌ழைய‌ நினைவு என்னுள்.

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப ரொம்ப கலக்கலாக வரைந்து இருக்கின்றிங்க...வாழ்த்துகள் ப்ரியா...

சின்ன கல்லில் அழகாக வரைந்து அசத்திட்டிங்க...

Menaga Sathia said...

வாவ்வ்வ் ப்ரியா சான்சே இல்ல..செம அழகா கல்லில் வரைந்திருக்கீங்க....உங்க ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்!!

சத்ரியன் said...

//எனக்காக
என்னவரும்
கண்களை நிலத்தில்
தவழ விட்டபடி
கற்களைத் தேடியலைந்ததைப்
பார்க்கும்போது
கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும்
நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது //

ப்ரியா,

மேலேயிருக்கிற காதல் கவிதை அருமையா இருக்கு தானே?

நீங்க எழுதியிருக்கும் கவிதை தான்.

கல்லிலே கலை வண்ணம் கண்டான் - மாற்றம் பெற்று,

கல்லிலே காதல் வண்ணம் பெற்றான்...!

r.v.saravanan said...

கல்லிலும் கலை வண்ணம் கண்டிருக்கிறீர்கள் பிரியா ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்

Raghu said...

வாவ்! மூணு ஓவிய‌ங்க‌ளுமே ந‌ல்லாருக்கு ப்ரியா. குறிப்பா அந்த‌ லைட் ப்ளூல‌ இருக்க‌ற‌ ஒவிய‌ம் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு

அம்பாளடியாள் said...

அழகிய கவிதையும் கற்களும் அருமை ந்தரமல்ல!!
வாழ்த்துக்கள் சகோ........அ

Priya said...

என்ன ஹேமா இது.. கல்லை காதலாய் படைத்ததினாலா....;)

ச‌ரி சிவா... நீங்க‌தான் firstu, ச‌ந்தோஷ‌மா;)

மிக்க‌ ந‌ன்றி க‌லாநேச‌ன்!

நிச்ச‌ய‌ம் தேட‌ல் தொடரும் அமைதிச்சார‌ல்!

மிக்க‌ ந‌ன்றி எல் கே!

Priya said...

கற்களில் காதலை காணும் சிறு முயற்சிதான் இது ரமணி சார்! தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

வாங்க சங்கவி, கலக்கல் பிடித்திருக்கிறதா..

நன்றி தமிழ்!

ஓ அப்படியா... தற்பொழுதும் இது தொடர்கிறதா நிலாமகள்..!

ஆமா கீதா, உள்ளங்கை அளவில் உள்ள கல்லில் வரைவது கொஞ்சம் சிரமம்தான்...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

Priya said...

பாராட்டுக்களுக்கு நன்றி மேனகா!

கவிஞரின் கண்களால் எதை பார்த்தாலும் கவிதையாகத்தான் தெரியும்... இல்லையா சத்ரியன், அதான் சாதாரணமாக எழுதியதையும் கவிதையா பார்க்கறிங்க!
//கல்லிலே கலை வண்ணம் கண்டான் - மாற்றம் பெற்று,

கல்லிலே காதல் வண்ணம் பெற்றான்...!// காதலும் ஒரு கலையாகவே..;)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆர் வி சரவணன் சார்!

ப்ளூ கலர் ரொம்ப பிடிக்கும்தானே ரகு;)

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்!

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

thendralsaravanan said...

very creative...wishes!

S.Kumar said...

நீலக்கலரில் கடல்--அலைகள்--வானம் அழகா இருக்கு!

puduvaisiva said...

WOOWWOWO Really touching and Excellent worked

Thanks priya+your soul mate :-)

"இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன்"

if possible to use organic paint.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. ப்ரியா.. என்னன்னு சொல்றது.. போங்க. உண்மையில் சூப்பர்-பா..

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க.. கலக்கலா வரைஞ்சிருக்கீங்க!!

ஆல் தி வெரி பெஸ்ட் டு யூ!! :))

Priya said...

Thank u thendralsaravanan!S.Kumar!

Yes It's possible siva!

வாங்க ஆனந்தி, பிடிச்சிருக்கா... ரொம்ப சந்தோஷமா இருக்கு & தேங்க் யூ!

Priya ram said...

ரொம்ப பொறுமையா, அழகா பண்ணி இருக்கீங்க பிரியா. சூப்பர்.......

Yaathoramani.blogspot.com said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

கல்லிலே ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன ப்ரியா!ஆயில் பெயிண்ட் தான் சரியாக வரும். அதில் தான் இஷ்டம் போல் திருப்தி வரும் வரை பல ஸ்ட்ரோக்ஸ் பண்ண‌லாம்.

Priya said...

மிக்க நன்றி Priyaram!

தங்கள் வாழ்த்துக்களுக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

ஆமாம் நீங்கள் சொன்னதுப்போல் ஆயில் பெயிண்ட்தான் மிக சுலமபா இருக்கிறது! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேம்!

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Katz said...

oviyangal arumai.

R.Gopi said...

ஆஹா....

வாவ்...

அருமை...

அற்புதம்...

இவையெல்லாம் பத்தாது...

கல்லிலே கலைவண்ணம் படைத்த உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்...

r.v.saravanan said...

happy birthday priya

ஆர்வா said...

எல்லாமே மிக அழகான நேர்த்தியுடன் இருந்தன. அருமை..

M.R said...

நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது

அது அன்பின் வெளிப்பாடு சகோ..

M.R said...

கல்லிலே கலைவண்ணம் கண்டார் என்ற பாடல் வரி நினைவிற்கு வருகிறது சகோதரி .

படங்கள் அருமை. கண்களுக்கு விருந்து .

அதிலுள்ள ஓவியமும் அன்பை வெளிப்படுத்துகிறது ,நன்றி

G.AruljothiKarikalan said...

migavum arumayaana oviyangal priya...

போளூர் தயாநிதி said...

அற்புதமாக வரைந்த உங்களுக்கும்... உதவி புரிந்த உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்

Sakthi said...
This comment has been removed by the author.
Sakthi said...

wow.. priya... superb... can i have one?

மனோ சாமிநாதன் said...

தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

http://blogintamil.blogspot.com/

r.v.saravanan said...
This comment has been removed by the author.
Anonymous said...

கற்கள் அழகுதான் ,...
ஓவியமும் அழகுதான் ,...
இரண்டும் இணைந்தால் எவ்வளவு அழகு
என்று காட்டி இருப்பது ப்ரியாவின்
ரசனைக்கு ஒரு எடுத்துக்காட்டு ,...

m.prakash said...

கற்கள் அழகுதான் ,...
ஓவியமும் அழகுதான் ,...
இரண்டும் இணைந்தால் எவ்வளவு அழகு
என்று காட்டி இருப்பது ப்ரியாவின்
ரசனைக்கு ஒரு எடுத்துக்காட்டு ,...

இவன்
ம.பிரகாஷ்,...
http://thanimaiyilidhayam.blogspot.com

Vijayan Durai said...

நல்ல கலைத்திறன் .தங்கள் தூரிகை பட்டு கல்லும் கல்லும் கலையாக மாறியிருக்கிறது

Jayanthy Kumaran said...

Hy Priya,
you're amazingly talented. love your creativity..
nice space you have..
love to visit often..:)
keep in touch..
Jay
Tasty Appetite

Igor Torgachkin said...

Good luck! Greetings from Russia!

Unknown said...

I think, I'm not that much good in painting. please teach me to draw with paint! and I'm proud to be your niece.

Post a Comment