Subscribe:

Pages

Friday, January 14, 2011

தி ஆர்ட் ஆஃப் கோலம்!

        பொங்கல் என்றதும் சட்டென்று என் நினைவில் வருவது கோலங்கள்தான். தினந்தினம் கோலங்களால் வீட்டு வாசலை அழகுப்படுத்தும் நம் நாட்டுப் பெண்கள்தான் எத்தனை கலை நயமிக்கவர்கள்! அதிலும் இந்த திருநாட்களுக்காக‌ போடப்படும் கோலங்கள் கொள்ளை அழகுதான். என் சிறுவயதில் அம்மா கோலமிடுவதைக் கண்டு பிரமித்து இருக்கிறேன். அந்நாட்களில் பள்ளி செல்கையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்பட்டு இருக்கும் கோலங்களை கண்டு வியந்து, நமக்கும் இதுபோல் கோலம் போட வருமா, அதுவும் இவ்வளவு பெரியதாக எல்லாம் கோலமிட முடியுமா? என கேள்விகள் எழும்பும்.

அம்மா அவர்களுக்கென்று ஒரு நோட்டு புத்தகத்தில் நிறைய கோலங்கள் வரைந்து வைத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். அப்பொழுது நானும் உங்களை மாதிரி கோலம் போட வேண்டுமென அம்மாவிடம் சொல்ல, தனியாக பேப்பரும் பென்சிலும், அவ‌ர்கள் போட்ட கோலம் ஒன்றினையும் த‌ந்து, அதை பார்த்து போடச் சொன்னார்கள். புள்ளிகளை மிகச் சரியாக வைத்து முதல்முறையாக ஐந்துவயதில் ஒரு ஐந்துப்புள்ளிக் கோலம் போட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

அம்மாவிடமிருந்து நிறைய பூக்கோலங்களை கற்றுக்கொண்டு வந்த போதிலும் என்னுடைய ஈர்ப்பு எப்பொழுதும் சிக்கு கோலங்கள் மீதே இருந்தது. ஏனோ அம்மாவிற்கு அதில் ஆர்வம் குறைவு... ஆனால் அதுதான் எனக்கு  ரொம்ப பிடித்த ஒன்றானது. பின் அம்மாவை போலவே நானும் எனக்கென ஒரு நோட்டுபுத்தகம் உருவாக்கிக்கொண்டேன்; அதில் தொன்னூறு ச‌தவீதம் சிக்கு கோலங்கள்தான் இருந்தன.

எதையும் கற்றுக்கொள்ளும் புதிதில் அடிக்கடி செய்துப்பார்க்க தோன்றுமில்லையா, அப்படிதான் கொஞ்சம் வளர்ந்த பெண்ணான‌ பிறகு நானே விரும்பி தினமும் ஒரு கோலம் என்று போட்டு வந்தேன். ஆர்வமிகுதியால் பள்ளிவிட்டு வந்தபிறகு மாலையிலும் கோலமிடுவது சில நேரங்களில் தொடர்ந்தது. நான் கோலம் போட ஆரம்பித்த பிறகு நிறைய சிக்கு கோலங்கள்தான் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்தது. அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ, வீட்டிற்கு வருபவர்களோ கோலத்தை பற்றி கேட்டுவிட்டால் போதும், அம்மாவோ பெருமையோடு "எனக்கு சிக்கு கோலமே வராது, ஆனா என் பொண்ணு என்ன சுலபமா போடுறா" எனச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.

கற்றுக்கொண்ட ஒன்று பழக்கமாகிப் போகும்போது ஆர்வம் குறைந்து போர் அடிக்க ஆரம்பிக்குமே... அப்படிதான், என் கல்லூரி நாட்களில் கோலம் போட என்னை எழுப்பும் அம்மாவிடம் அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் என்று சொல்லி மறுத்ததுண்டு(என்னசெய்வது அப்போதெல்லாம் தூக்கம்தான் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது) அப்பொழுதுதான் 'ஏன் கோலம் போடனும்... அதனால என்ன பயன்...' என அம்மாவிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததின் தொடர்ச்சியாக அவற்றை பற்றி நான் தெரிந்துக்கொண்டவைகள்.....

A decorative appearance என்பதையும் தாண்டி ஆரம்ப கால‌ங்களில் அரிசி மாவினால் கோலம் போடப்ப‌ட்டதால் சின்னஞ்சிறிய உயிரினங்களுக்கு உணவாக இருந்திருக்கிற‌து என்பது நாமனைவரும் அறிந்ததே. காலையில் ஒளிரும் சூரிய ஒளிகதிர்களால் உடலுக்கு நல்லது என்றும், குனிந்து நிமிர்ந்து கோலமிடுவதால் பெண்களுக்கு உடற்பயிற்சியாகவும், முக்கியமாக Reproductive organs சிறந்தமுறையில் இயங்குவதற்கும் உதவுகிறதாம். மேலும் புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம்....என்று பலகோணங்களில் போடப்படுவதால் கோலங்களை Mathematical type of art என்றும் சொல்லப்படுகிறது; அழகு, ஆரோக்கியம், கணிதம், பக்தி என‌ அனைத்தையும் கொண்டு, கோலம் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் கலை உணர்வை வெளிக்கொண்டு வருகிறது. பொறுமை மற்றும் கான்ஸ்சென்ட்ரேஷன் பவரை அதிகப்படுத்துகிறது. இதையெல்லாம் விட சிக்கு கோலங்களைப்பற்றி எனக்கு தெரிந்த கேள்விப்பட்ட ஒன்றிது; எப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இருபது முப்பது புள்ளிகள்வரை நீண்டு, அவைகள் அத்தனையும் இணைத்து ஒரு கோலமாக்க முடிகிறதோ அதேப்போலதான், வாழ்க்கையில் எந்த மாதிரியான சந்தர்ப்பங்களிலும் பிரச்சனைகளில் இருந்தும் அழகாக சுமுகமாக நடந்துக்கொள்ள‌ கோலமிடுதல்… சிறந்த பயிற்சி அளிக்கிறதாம். இதோ... அத்தகைய சிறப்பு மிக்க சிக்கு கோலங்களை, என் நோட்டு புத்தகத்தில் நான் வரைந்து வைத்திருந்த ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 

29 comments:

Mathi said...

nice kolams..chikku kolam kastam.i dont know..

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனையான நினைவுகள் ப்ரியா அம்மா கோலம் போடுவதை அருகிலிருந்தே ரசித்ததனால் புள்ளிக்கோலம் போடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். கோலங்களையும் பார்த்தேன் அழகாயிருக்கின்றன!மேலிருந்து எட்டாவது கோலம் பர்ட் ஸ்டைலில் வரைந்தது மிகப்பிடித்திருக்கிறது.!

Anonymous said...

12 கோலங்களும் அருமை.
உங்கள் அனுபவமும் அருமை..

அன்புடன் நான் said...

கோலங்களில் இவ்வளவு தகவலும் நன்மையும் இருக்கா???

பாராட்டுக்கள்.... உங்க கோலங்கலும் நல்லயிருக்கு....உங்க வலைகூட கோலம்போலத்தான் இருக்கு....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//எப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இருபது முப்பது புள்ளிகள்வரை நீண்டு, அவைகள் அத்தனையும் இணைத்து ஒரு கோலமாக்க முடிகிறதோ அதேப்போலதான், வாழ்க்கையில் எந்த மாதிரியான சந்தர்ப்பங்களிலும் பிரச்சனைகளில் இருந்தும் அழகாக சுமுகமாக நடந்துக்கொள்ள‌ கோலமிடுதல்… சிறந்த பயிற்சி அளிக்கிறதாம்//

ரொம்பப் பிடித்தது இந்த விளக்கம்.

எல்லா கலையிலும் வல்லவராக இருக்கிறீர்கள். அத்தனை கோலங்களும் அருமை. பொங்கல் சமயத்துக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி ப்ரியா!

சுசி said...

அழகா இருக்கு ப்ரியா. அத்தனை கோலங்களும் அழகு.

மாணவன் said...

கோலங்கள் அனைத்தும் கொள்ளை அழகு

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

கோலங்கள் அனைத்தும் அழகு ப்ரியா

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

ரசனையுடன் சொல்லிய விதம் ரொம்பவும் சூப்பர் .. :-)
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

Raghu said...

அந்த‌ மூன்றாவ‌து கோல‌ம் மாதிரி, பொங்க‌லின்போது வீட்டு வெளியே அம்மா மூன்று கோல‌ங்க‌ள் போடுவாங்க‌. இப்போல்லாம் உட‌ல் நிலை கார‌ண‌மா ஒண்ணுதான்.

பொங்க‌ல் வாழ்த்துக‌ள் ப்ரியா

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அனுபவமும் கோலங்களும் அருமை.

puduvaisiva said...

நன்றி பிரியா பதிவுக்கும் வண்ண கோலத்திற்கும்.

கோலம் போடுதல் முலம் உடல் பெறும் பயிற்ச்சி பற்றிய விளக்கம் அருமை.

Unknown said...

wow so cute..all kolams..

thanks for sharing

Sriakila said...

நான் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டதைவிட நோட்டில் கோலம் போட்டுப் பார்த்தது தான் அதிகம்.

இந்தப் புள்ளிக்கோலம் எப்படித்தான் போடுறீங்களோ? ரொம்பக் கஷ்டம் (எனக்கு).
உங்க அதென்ன சிக்குக் கோலங்களா?? நான் இப்போதான் இந்தப் பேரையேக் கேள்விப்படுறேன், ரொம்ப ரொம்ப சூப்பர்!

எனக்குக் கோலங்களைப் போட்டுப் பார்ப்பதைவிட மற்றவர்கள் போட்டக் கோலத்தை ரசிக்கப் பிடிக்கும்.

ரங்கோலியில் கலர் தூவ ரொம்பப் பிடிக்கும். அதுதான் நமக்குத் தெரிஞ்ச உருப்படியான வேலை.

Priya said...

எனக்கு ஏனோ அது எப்பவும் கஷ்டமாகவே இருந்ததில்லை மதி!

வாங்க வசந்த.. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!

நன்றி மகா!

சி. கருணாகரசு... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

நன்றி ராமல‌க்ஷ்மி... எல்லாம் மற்றவர்களிடம் இருந்து தெரிந்துக்கொண்டவைகள்தான்!

மிக்க நன்றி சுசி!

நன்றி மாணவன்!

நன்றி சரவணன்!

Priya said...

வாங்க ஜெய்லானி, மிக்க நன்றி!

பரவாயில்லையே ரகு... அம்மா போடும் கோலத்தை நல்லா கவணிச்சியிருக்கிங்களே!

நன்றி குமார்!

நன்றி பு.சிவா!

நன்றி சிவா!

Priya said...

Sriakila,
//நான் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டதைவிட நோட்டில் கோலம் போட்டுப் பார்த்தது தான் அதிகம்.//....உங்களைப்போலவேதான் நானும்!

//அதென்ன சிக்குக் கோலங்களா??//..... புள்ளிக்கோலங்களை அப்படியும் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்!

//ரங்கோலியில் கலர் தூவ ரொம்பப் பிடிக்கும்.//...... நான் மிக‌வும் ர‌சிச்சு செய்யும் வேலை அது:)

Nithu said...

Romba azhaga irundhudhu unga kolangal. Bookmarked.

சிவகுமாரன் said...

ஊர்கோலமாய் போகும் கோலநினைவுகள்
சீராய் அழகாய் சிக்கலில்லாமல்.
நன்று.

Unknown said...

நிலாவுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு! அத்தனை நட்சத்திரப் புள்ளிகளை வைத்துக் கொண்டு உங்களைப் போல் கோலமிடத்தெரியாமல் தவிக்கிறது நிலா!! தங்கள் கோலங்கள் அருமை!!

கோநா said...

கோலங்களின் பின்புல தத்துவங்கள், தகவல்கள் அனைத்தும் உண்மை. குறிப்பாக சிக்கு கோலங்களைப் போடும் போது பழகும் அமைதி, வாழ்வின் சிக்கலான கணங்களையும் அதே அமைதியுடன் எதிர்கொண்டு விடுவிக்க உதவிடும், வாழ்த்துக்கள் பிரியா.

Priya said...

Thanks Nithu!

நன்றி சிவகுமாரன்!

உங்க‌ள் பாராட்டுக்கு ரொம்ப‌ ந‌ன்றி வைக‌றை!உங்க‌ளின் வார்த்தைக‌ளே க‌விதை போலிருக்கு, ர‌சித்தேன்!

ந‌ன்றி கோநா!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
கற்றுக்கொண்ட ஒன்று பழக்கமாகிப் போகும்போது ஆர்வம் குறைந்து போர் அடிக்க ஆரம்பிக்குமே.

wat a line , aahaa

சி.பி.செந்தில்குமார் said...

the last paragh seemed to b very big.. next time make short.. ok

கோமதி அரசு said...

கோலம் நினைவுகள், உங்கள் சிக்கு கோலங்கள் எல்லாம் மிக மிக அருமை.

எனக்கும் உங்க அம்மா மாதிரி சிக்கு கோலங்கள் நிறைய போடமாட்டேன் பூ கோலங்கள் தான் போடுவேன்.

நானும் மார்கழி கோலங்கள் என்ற பதிவில் கோலங்கள், பொங்கல் வாழ்த்து பதிவில் பொங்கல் கோலங்கள் எல்லாம் போட்டு இருக்கிறேன். முடிந்த போது பாருங்கள்.

Unknown said...

அருமையான பதிவு...அருமை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Lovely post Priya... took me to memories of school days... too good those kolams

Reva said...

Superb post and blog...arumaiyaa irukku...
Reva

iacovotabbert said...

Tipster - Aetna Titanium Wire | TITanium Wire
Tipster. © TITNCORETIPSTER.TATNICALWINS.COM LTD.Aetna: T&Cs babyliss pro titanium hair dryer Apply. Tipster. Tipster. mens titanium earrings © TITNCORETIPSTER.TATNICALWINS.COM LTD.Aetna: titanium metal T&Cs Apply. Tipster. titanium chords © TITNCORETIPSTER.TATNICALWINS.COM LTD.Aetna: T&Cs Apply. Tipster. apple watch aluminum vs titanium © TITNCORETIPSTER.TATNICALWINS.COM LTD.

Post a Comment