Subscribe:

Pages

Saturday, January 8, 2011

இனிதாய் தொட‌ரும் (வாழ்க்கை)பயண‌ம்....

                  பிரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடத்தில் கிடைத்த சிறந்த இணைய நட்புகளும், அறிந்தும் தெரிந்தும் கொண்ட விஷயங்களும் நல்லதொரு அனுபவங்களை பெற்று தந்தது. நள்ளிரவு குளிரில் நடுங்கியபடியே கடற்கரையில் கூடி இருந்த நூற்றுக்கணக்கான மக்களுடன் சேர்ந்து இப்புதிய வருடத்தை தொடங்கியதுகூட புது அனுபவத்தை தந்தது. இதோ கடந்துவந்த நாட்களை அசைப்போட்டபடியே நிகழ்கால நாட்களை ரசித்திட மேற்கொண்ட புதிய வருடத்தின் பயனமும் இனிமையாகவே அமைந்தது.

ஆல்ப்ஸ் மலைதொடர்களின் அடிவராத்தில அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறிய ஊராகிய Laus க்கு செல்லும் போதே -3°c யில் சாலை எல்லாம் பனிமூட்டமாகவே இருந்தது. காலை நேர பனிபடர்ந்த‌ சாலைகள்தான் எத்தனை அழகு!


நகரத்து சத்தங்கள் ஏதுமின்றி இருந்த அந்த ஊருக்குள் நுழையும் போதே எதிர்க்கொள்ளும் அமைதி மனதிற்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த ஊர் பிரபலமாவதற்கு காரணமாக சொல்லப்படும் ஆலயம் மிகவும் அழகாக இருந்தது.


இதுவரை நான் இங்கு பார்த்த ஆலய‌ங்களில் இருந்து இது சற்று மாறுப்பட்டு இருந்தது. வழக்கமாக ஆலய‌த்தின் பீடத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூக்கள் இங்கில்லை. காரணம் ஆலயத்தின் உள்ளே நுழையும்போதே இயற்கையாவே வரும் மலர்களின் வாசம்தான் என சொல்லப்படுகிறது. ஏனோ எந்த வாசனையையும் நான் உணரவில்லை.

நாம் கடவுளிடம் பேசுவதற்கு இதுப்போல ஒரு புனித ஸ்தலம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக பல ஊர்களில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. அமைதியாக இருக்கும் ஆலயத்தில் மக்களின் கண்ணீர் கலந்த வேண்டுதல்களை பார்த்தபோது சிலிர்ப்பாக இருந்தது. இப்படி இங்கு வேறெந்த ஆலயங்களிலும் நான் பார்த்ததில்லை.


பிரான்ஸின் லூர்து(Lourdes) நகரில் காட்சியளித்ததைப் போலவே மாதா இங்கேயும் 1664 ஆம் ஆண்டு பெனுவா எனபவருக்கு காட்சிக்கொடுத்து இருக்கிறார். அவர் தோன்றிய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம்தான் கீழே காணும் படம்.


ஆலயத்தை சுற்றிலும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டு இருந்த காட்டேஜ்கள் பார்ப்பதற்கு மிக அழகாய் தெரிந்தது. நல்லவேலையாக இன்னும் அந்த பகுதி Commercialized ஆகாமல் இருப்பதை பார்த்திட சந்தோஷமாக இருந்தது.அதேப்போல ஆலயத்தின் எதிர்புறத்தில் காட்சியளித்த பனிப்படர்ந்த மலைகளோ மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்தது.


Altitude அதிகமில்லாத போதும் குளிர் அதிகமாகவே இருந்தது. அங்கிருந்து கீழே இறங்கியபோது எதிர்கொண்டது Serre Poncon எனும் ஏரி, அதிகபட்ச பனியால் தண்ணீரின் அளவு குறைந்து உறைந்ததுபோல காட்சியளித்தது.



கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர் என்பதற்கு சான்றாக அங்கு நிறைந்துள்ள இயற்கை அழகுகள் ஒருபுறம் என்றாலும் அந்த ஊர் மக்களும் அவர்களது நல்ல உள்ளங்களும் இன்னொரு சான்று. ஏதோ பல நாட்கள் பழகியதைப் போல் பார்த்ததும் புன்னகைத்து பேசும் அவர்களது எளிமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடிக்கடி பார்த்துக்கொள்கின்ற போதும் புன்னகைக்க மறுக்கும் நகரத்து மக்களுக்கு இடையில் இந்த சின்னஞ்சிறிய ஊர் மக்கள் எப்பொழுதும் புன்னகைக்க மறப்பதில்லை. அவர்களுடன் பேசினாலே போதும், நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, அத்தனை அன்பாக பேசுகிறார்கள். இவர்களது எளிமையான குணத்திற்கும் சிரித்த முகத்திற்கும் காரணம்.... இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் வசிப்பதா அல்லது உறுதியாக நம்பப்படும் இந்த புனித ஸ்தலமா... தெரியவில்லை! ஆனால் அங்கிருந்தவரை நானும் என்னவரும் இயற்கையை ரசித்து தெய்வீக சக்தியை உணர்ந்து சந்தோஷமாக கழித்த பொழுதுகளது!

20 comments:

மாணவன் said...

உங்களது பயண அனுபவங்களை படங்களுடன் பகிர்ந்துகொண்டு எங்களையும் பயணிக்க வைத்துவிட்டீர்கள் அருமை

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

பொறாமையா இருக்குங்க . ஆனாலும் நல்லா இருக்குங்க. பகிர்வுக்கு மிக்க நன்றி.

கோநா said...

பயணத்தின் அனுபவங்கள் துணையைப் பொறுத்தது. உனக்கும், உன்னவருக்கும் வாழ்த்துக்கள் பிரியா

மாணவன் said...

தளத்தின் புது டெம்ப்ளேட் வடிவமைப்பு சூப்பர்
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ

Raghu said...

புத்தாண்டு வாழ்த்துக‌ள் ப்ரியா

முத‌ல் ம‌ற்றும் மூன்றாவ‌து புகைப்ப‌ட‌ங்க‌ள் அருமை..என்ன‌ கேம‌ரா யூஸ் ப‌ண்றீங்க‌?

புது வ‌ருஷ‌ம் புது டெம்ப்ளேட்..வெரி நைஸ் :)

puduvaisiva said...

ப்ரியா பதிவை படிக்கும் போதே அந்த இடங்களை நேரில் பார்த உணர்வு

நன்றி !

'பரிவை' சே.குமார் said...

பயண அனுபவங்களை படங்களுடன் பகிர்ந்து எங்களையும் பயணிக்க வைத்துவிட்டீர்கள்.

r.v.saravanan said...

பயண அனுபவமும் படங்களும் அருமை பிரியா

Mathi said...

nice priya...intha church kule pona mathiriye irukku.neenga sonna ellame feel panninen..thanks for ur sharing.

Bharathi Dhas said...

// அடிக்கடி பார்த்துக்கொள்கின்ற போதும் புன்னகைக்க மறுக்கும் நகரத்து மக்களுக்கு இடையில் இந்த சின்னஞ்சிறிய ஊர் மக்கள் எப்பொழுதும் புன்னகைக்க மறப்பதில்லை. அவர்களுடன் பேசினாலே போதும், நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, அத்தனை அன்பாக பேசுகிறார்கள்.

நம்மவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்று :-)

அந்த ஊர் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களது மின்னஞ்சல் கிடைத்தது. மிக்க நன்றிகள்.

Anonymous said...

செம அழகான படங்கள்! ஒரு நிறைவான பதிவு ப்ரியா!
புத்தாண்டு இனிமையாய் மலர்ந்திருக்கு :)

Priya said...

நன்றி மாணவன்!

நன்றி சிவகுமாரன்!

//பயணத்தின் அனுபவங்கள் துணையைப் பொறுத்தது//... உண்மைதான் ரொம்ப சரியா சொல்லியிருக்கிங்க, நன்றி கோநா!

மீண்டும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி மாணவன்!

வாங்க ரகு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//என்ன‌ கேம‌ரா யூஸ் ப‌ண்றீங்க‌?//... Sony Cyber-shot!

நன்றி புதுவை சிவா!

நன்றி சே.குமார்!

நன்றி சரவணன்!

நன்றி மதி!

நன்றி பாரதி!

நன்றி பாலாஜி!

Asiya Omar said...

அருமை ப்ரியா,அனுபவமும் படங்களும் உங்கள் எழுத்து நடையும் அருமையோ அருமை.facebook request ,யாருன்னு முன்பு முழிச்சேன்,இப்ப தெரிந்ததில் மகிழ்ச்சி.

Mahi said...

அழகான இடங்கள்,பளீச் புகைப்படங்கள்! பகிர்வுக்குநன்றி ப்ரியா! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பனித்துளி சங்கர் said...

அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . நேர்த்தியான எழுத்து நடை ரசிக்க வைக்கும் வார்த்தை அலங்காரம் அசத்தல் வாழ்த்துக்கள் . புகைப்படங்கள் தேர்ந்தெடுப்பு ரசிக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

கவி அழகன் said...

அழகான பயணத்தை அழகாக எழுதி எங்களையும் பயணிக்க வைத்து விட்டீர்கள் பிரியா

Priya said...

இப்போதாவது நான்தான் அதுன்னு தெரிஞ்சிக்கிட்டீங்களே, ரொம்ப சந்தோஷமா இருக்கு:)நன்றி asiya omar!

நன்றி Mahi உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி பனித்துளி சங்கர்!

நன்றி யாதவன்!

அன்புடன் அருணா said...

இந்தப் படங்களையெல்லாம் இதை விட அழகாக வரைவீர்களே ப்ரியா!!!இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Kurinji said...

Nice post...

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

Priya said...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அன்புடன் அருணா... உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Thanks Kurinji!

Post a Comment