Subscribe:

Pages

Tuesday, December 21, 2010

ஒளி பிறக்க..... ஒளியேற்றுவோம்!

           னக்கு பிடித்தவைகள் ஏராளமானவை என்றாலும் அவைகளில் ஒரு சில மட்டுமே நேசிக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படி மிகவும் நேசிக்கும் ஒன்று ஒளி. விழிகளின் வழியே எனக்குள் ஊடுருவி செல்பவைகளில் இவ்வொளி ஏனோ நீங்கா இடம்பிடித்து விடுகிறது. படர்ந்திருக்கும் இரவில் ஏற்றிவைக்கும் ஒரு சிறு ஒளி அந்த இடத்தையே அழகானதாக மாற்றிவிடுகிறது இல்லையா!

ஏன் எதற்காக தீபம் ஏற்றப்படுகிறது என்று அறியாமலே அதன் அழகுக்காக மட்டுமே விவரம் அறியாத வயதிலேயே கார்த்திகை தீபத்திருவிழாவினால் ஈர்க்கப்பட்டு எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் பழக்கம் இல்லாதபோதும் அகல்விளக்குகளை வாங்கி வந்து வீட்டை தீபங்களால் அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதேப்போல் கிறிஸ்துமஸின் போதும் மெழுவத்தியினை கொண்டு அலங்கரிப்பது நான் மிகவும் நேசிக்கும் ஒன்று. சாதாரனமாக ஏற்றிவைக்கும் வத்தியுடன் கூடவே சில Christmas ornaments கொண்டு அலங்கரித்தால் இன்னும் அழகாக தோற்றமளிக்கும். இன்னும் கிரியேட்டிவாக செய்வதென்றால் இயற்கையாக கிடைக்கும் மலர்கள், இலைகள், சருகுகள், குச்சிகள் இவற்றில் எதைக்கொண்டு வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். வெயில் பட்டவுடன் பூப்போல விரிந்து கிடக்கும் Pine cones கொண்டு அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிறிஸ்துமஸ் அலங்காரப்பொருட்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. பூக்களைப்போல காட்சியளிக்கும் இவைகளுக்கு பல நிறங்களில் வண்ணந்தீட்டி தற்பொழுது கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளுக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கும் சென்று வரும் பொழுதுகளில் மரங்களினின்று கீழே விழுந்துக்கிடக்கும் Pine conesகளை சேகரித்து வைத்துக்கொள்வேன். நான்காவது மற்றும் கடைசிப்படத்தில் இருப்பது அதைக்கொண்டு அலங்கரித்ததுதான்.

Artificial flowers, Pine cones, Christmas balls, paper garlands.... இவைகளுடன் சிறியது பெரியதுமாக வண்ண மெழுகுவத்திகள் கொண்டு நான் உருவாங்கிய Candle decorations........ புகைப்படங்களாக்கி உங்கள் முன் வைத்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் இதேப்போல் மெழுவத்திகளை கொண்டு உங்கள் வீட்டினை அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டின் உள்ளமைப்புக்கு ஏற்றார்போல தேவைப்படும் நிறங்களில் அலங்கரிப்பது கூடுதல் அழகைக்கொடுக்கும். ஒளியினால் உங்கள் வீட்டின் அறை அழகாக தோற்றமளிப்பதோடு உங்கள் உள்ளத்து அறைகளும் ரம்மியமாக மாறிவிடும். இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!!!
ஹேப்பி ஹாலிடேஸ்!!!!!


25 comments:

philosophy prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

philosophy prabhakaran said...

படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது....

மகி said...

Merry X-mas,Happy new Year & Happy holidays to you and your family!

All the decorations are beautiful!

மாணவன் said...

படங்கள் அருமை,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!!

siva said...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

புதிய டேம்ப்லடே மிக அருமை

விளக்கங்களும் உங்கள் புகைப்படங்களும்
நன்று.மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!

கலாநேசன் said...

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்.

எல் கே said...

அடிக்கடி காணமா போய்டுவீங்க இப்பவே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிகிறேன்

Balaji saravana said...

ஒளிவீசும் தீபங்கள் போல் வரும் புத்தாண்டில் மகிழ்ச்சி ஒளி எங்கும் பரவட்டும்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா :)

♠புதுவை சிவா♠ said...

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள் ப்ரியா. . . .

எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் பாடல்

"அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே"

http://www.youtube.com/watch?v=-4x6UVK2_GA

Anonymous said...

Lovely!!!

வெறும்பய said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!!

Mathi said...

VERY NICE DECORATIONS PRIYA !! I LOVED IT !!
HAPPY NEW YEAR !!

சாருஸ்ரீராஜ் said...

lovely one advance christmas & new Year wishes

r.v.saravanan said...

படங்கள் அருமை

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள் பிரியா

சே.குமார் said...

படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தகு...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

ஒளி பேசும் அழகு படங்கள் ப்ரியா...
உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துகள்!!

g.aruljothiKarikalan said...

paarkum anaithayum azhagaaga matrum tiranai iraivan ungalukku koduthullan priya... merry Christmas and happy new year....

அப்பாவி தங்கமணி said...

வாவ்...சூப்பர்...இப்ப இங்கயும் எங்க பாத்தாலும் கிறிஸ்துமஸ் decors தான்... கொள்ளை கொள்ளும் அழகு... உங்க பக்கத்திலும் அதே பார்த்து ஹாப்பி... உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Priya said...

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ர‌கு said...

கிறிஸ்தும‌ஸ் வாழ்த்துக‌ள் ப்ரியா..கேக் அனுப்பிடுங்க‌

முக‌வ‌ரி:

ந‌ம்ப‌ர் 5, விவேகான‌ந்த‌ர் தெரு
துபாய் குறுக்கு ச‌ந்து........:))

சத்ரியன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Priya said...

என்ன ரகு கேக் பார்சல் வந்திடுச்சா... நீங்க கொடுத்த முக‌வ‌ரிக்கு அனுப்பிவிட்டேன்:)

Priya said...

நன்றி சத்ரியன், உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாவ், சூப்பரா எழுதி இருக்கிங்க சிவகுமாரன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Emreen said...

Very beautiful arrangements...!!

Post a Comment