தொடர்ந்து பதிவெழுதுவதில் ஏனோ... தவிர்க்க முடியாமல் சிறு சிறு இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் நான் சந்தித்த சம்பவங்கள் மனிதர்கள் என் எல்லாமே சுவாரஸியமாக அமைந்துவிட, இங்கே சந்தோஷமுடன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஓவிய கண்காட்சிகளில் பங்குபெற நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்த போதிலும் விருப்பமில்லாமல் சில காலமாக தவிர்த்து வந்தேன். இம்முறையும் அப்படி ஒரு வாய்ப்பு தேடிவர தவிர்க்க முடியாமல் கலந்துக்கொண்டதற்கான காரணம் இந்தியா நாட்டினை தலைப்பாய் கொண்டு நடத்தப்பட்டது என்பதால். மற்ற நாடுகளை பற்றியும் அவர்களின் கலாச்சாரங்களை பற்றியும் தெரிந்துக்கொள்வதில்தான் எத்தனை ஆர்வம் இவர்களுக்கு!
சமீப காலமாக இங்குள்ள மக்கள் இந்திய நாட்டை பற்றி தெரிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விழாக்களே இதற்கு சான்று!நான் பணிபுரியும் இடத்தில் சென்ற மாதம் Voyage en Inde என்ற தலைப்பில் ஒரு மாலை பொழுதினை ஏற்பாடு செய்ய, இந்திய பெண்ணானதால் பாதிக்கு மேற்பட்ட பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்ததுவிட்டது. நம் நாட்டின் முக்கிய அம்சங்களை விளக்கப்படங்களுடன் கட்டுரையாக தொகுத்து வழக்கியது, விழா நடைப்பெற்ற ஹாலின் வாசலில் கோலம் போட்டது, மாலை பொழுதினை சுவைத்து மகிழ்ந்திட சிற்றுண்டி தயார் செய்தது என..... இதற்கான தேடலின் போதுதான் நம் நாட்டை பற்றி இன்னும் நிறைய தெரிந்துக்கொண்டேன். இந்திய பெண் என சொல்லிக்கொள்வதில் பெருமையாகவும் உணர்ந்தேன்.
கோலமிட எதுவும் கிடைக்காத போதும் கிடைத்த ஒரு சில கலர் மணல்களை வைத்து அவசர அவசரமாக கோலமிட்ட சில நிமிடங்கள் மீண்டும் நம் தமிழ்மண்ணை நினைக்க வைத்தது. ஊரில் இருக்கும்போது நன்றாகவே கோலம் போடுவேன் என்றாலும் இங்கு வந்து இப்படி பிரெஞ்சு மக்களுக்காக என்ற போது ஏதோ முதல்முறை போன்றதொரு உணர்வு எற்பட்டது. எனக்கு உதவியாக ஒரு பிரெஞ்சு நண்பரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து கோலமிட்டதை கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. கோலத்தை குறித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். அது ஆரம்பக்காலங்களில் எதற்காக போடப்பட்டது, அதனால் வரும் பயன் என்ன, இப்பொழுதும் தொடர்கிறதா என நம் நாட்டின் இந்த பழக்கத்தை கண்டு பிரமித்தனர்! நமது முன்னோர்களின் ஆழ்ந்த சிந்தனையையும் கலைதிறனையும் கேட்டு வியந்தனர்!
இந்தியாவிற்கு சுற்றுலா சென்று வந்த நண்பர் ஒருவர் slide projector ரில் இந்திய புகைப்படங்களை காண்பிக்க...... பின்னணியில் இனிமையான கர்னாடக சங்கீதமும் இசைத்துக்கொண்டிருக்க, பருகிட தேனீர், கூடவே சம்மோசாவும், மசால வடையும் சுவைத்து மகிழ்ந்த சில மணி நேரங்கள் வந்திருந்த அனைவரும் இந்தியாவிற்கே பயணித்தது போல் இருந்தது என்றனர்.
இதேபோல் எங்கள் ஊரில் உள்ள (Médiathèque) மீடியாசென்டரிலும் Novembre en Inde என்ற தலைப்பில் கடந்த சில நாட்களாக இந்திய சமையல், இலக்கியம், சினிமா, கோலமிடுதல், மியுசிக்கள் கான்ஃபெரன்ஸ், புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சியென ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கு இந்திய மக்கள் அதிகமில்லாத பகுதி என்பதால் அடிக்கடி இந்திய பயணம் மேற்கொள்ளும் பிரெஞ்சு மக்கள் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு பகிர்தலை மேற்கொண்டுள்ளார்கள். இவற்றின் நோக்கமே மற்ற நாடுகளின் மொழி, இனம், மதம், கலாச்சார பழக்கவழக்கங்கள்........ பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவே!
கடந்த வாரம் இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்ற இந்திய சமையல் வகுப்புகளில் கலந்துக்கொண்டு வந்திருந்த பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பிரெஞ்சு பெண்களுக்கு நம் தென் இந்திய சமையலை செய்துக்காட்டியது மிகவும் சுவாரஸியமாக இருந்தது. முதல்முறை இப்படி வெளியிடத்தில் சமைப்பது என்பது கொஞ்சம் சவாலாகவே தெரிந்தது எனினும் சரியான முறையில் சுவையாக செய்துவிட, அனைவரும் ஒன்று சேர்ந்து ருசித்து மகிழுந்தது நிறைவாக இருந்தது.
அடுத்து, அனைவரது பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனது ஓவியங்கள்.... கீழே காணும் படங்கள்.... சென்ற வாரம் எடுத்தது.
வழக்கம்போல எனது ஓவியங்களை காண்பவர்கள் கேட்கும் கேள்விகள் "ஏதாவது டிராயிங் கிளாஸ்க்கு போயிருக்கிங்களா?","எத்தனை வருஷம் கத்துக்கிட்டீங்க?" என இம்முறையும் கேட்கப்பட.... "இல்லை, அப்படி எதுவுமில்லை. என் குடும்பத்தில் அனைவரும் ஓரளவிற்கு வரைய தெரிந்தவர்கள், அதனால் அது ஜீன் வழியாக வருகிறதுன்னு நினைக்கிறேன்" என்ற எனது பதிலும் வழக்கமானதாக இருந்தது.
நம் நாட்டை பற்றி ஆர்வமாய் பல வகையான கேள்விகள், நிறைய விமர்சனங்கள், ஒருவர் மற்றொருவருடன் தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் என இனிமையாக நகரும் நிகழ்வுகளில் நானும் கலந்துக்கொண்டதில் இந்திய பெண்ணாய் பெருமைகொள்ளதான் செய்கிறது.
38 comments:
அருமையான பகிர்வு,. கடல் கடந்து வாழும் இடத்திலும் நம் நாட்டின் பெருமையை கேட்க்கும் பொழுது மனம் மகிழ்கிறது, இதில் உங்கள் பங்கிற்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
நீண்ட இடைவெளிக்கு பின் எழுதினாலும் உடனடியாக வந்து தங்கள் கருத்தை தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்!
இங்கு நான் சந்தித்த பிரெஞ்சு மக்கள் அனைவரும் இந்தியாவை பிரமிப்புடனும் பெருமையாகவும்தான் பார்க்கிறார்கள்!
இங்கு வந்த ஒரு வெளிநாட்டு பெண்மணி கூறியது.
வரும் வரைக்கும் பல விதமான பயம்இருந்து கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் இந்தியாவைப்பற்றி பலவிதமாகத்தான் கூறினார்கள். ஆனால் இங்க அத்தனையும் வியப்பாக இருக்கிறது.
தவறான புரிதல்கள் இந்தியாவைப்பற்றி இருக்கும் அளவிற்கு நிறைவான எண்ணங்கள் உள்ள வெளிநாட்டு மக்களும் உண்டு.
நிறைவாய் உணர்கின்றேன்.
கவிதை அருமை... வாழ்த்துக்கள்.
நிறைய சாதித்திருக்கிறீர்கள்.பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!
பெருமிதமாயிருக்கு ப்ரியா... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!
அருமையான பகிர்வு.
வாங்க சகோதரி வணக்கம்
அச்சமிலா
நெஞ்சம் படைத்து
அன்பாய்
அரவனைத்து
அயலார்களும்
மிகைத்துபோக
தாய் நாட்டின்
தலைவரிகளின்
கலாச்சாரத்தை
தமிழ் வாழ
தமிழ் தாயாய்
புகட்டியுல்லாய் ..............
என் தோழி
வாழ்த்தும் பாராட்டும் ப்ரியா.சந்தோஷமாயிருக்கு தோழி !
Romba mahilchiyaavum athe samayam perumaiyakavum irukku priya..
En vanakkangalum :)
பிரியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம். போட்டோ ரொம்ப நல்லா இருக்கு , கோலம் சூப்பர்ர்ர்...
வாழ்த்துக்கள் சகோதரி... பெருமையாக இருக்கிறது இந்தியாவின் மேன்மை சொன்னமைக்கு..
அருமை பகிர்வு நம் நாட்டின் பெருமையை கேட்கும் பொழுது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ஓவியங்கள் வரைவது ஒரு கொடுப்பினை மேடம் . எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது .
பெரிய விஷயங்களை ஒரு நிறைகுடமாகத் தளும்பாமல் கேஷுவலாக சொல்கிறீர்கள்...
உங்கள் அறிமுகம் கிடைத்ததே பெருமகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுந்துங்கள்... வரையுங்கள் முக்கியமாக பகிருங்கள் :)
ஆமாங்க ஜோதிஜி இங்குகூட அப்படி எங்கோ எப்போதோ கேள்விப்பட்டவைகளை வைத்து இந்தியாவை குறைத்து பார்ப்பவர்கள் உண்டு. சில விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லும் போது உண்மையை புரிந்துக்கொள்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
சே.குமார்... கவிதையா!?!
அன்புடன் அருணா!
ஆஹா, நீங்கள் சொல்வது போல சாதனை எல்லாம் எதுவுமில்லை, என்னால் முடிந்தவரை நான் கலந்துக்கொண்டேன், அவ்வளவுதான்!நன்றி!
நன்றி நிலா மகள்!
நன்றி அன்பரசன்!
வணக்கம் dineshkumar!
அடடா, கவிதையே எழுதிட்டீங்க!சூப்பராக எழுதி இருக்கிங்க! மிக்க நன்றி!
நன்றி ஹேமா!
நன்றி Balaji saravana!
நன்றி சாருஸ்ரீராஜ்! அந்த கோலம் வெறும் பதினைந்து நிமிடங்களிலே அவசரஅவசரமாக போட்டிருந்தேன்!
நன்றி வெறும்பய!
நன்றி r.v.saravanan!
முடியாதது எதுவுமில்லைங்க மங்குனி அமைச்சர்! அதனால் முயற்சி செய்யுங்க,வரைய கத்துக்கோங்க!
வாங்க பிரபு . எம்!
உங்களை மாதிரி நண்பர்களின் ஊக்கம் உற்சாகத்தை கொடுக்கிறது. நிச்சயமாக தொடருவேன்! நன்றி!
வாழ்த்துக்கள் ப்ரியா! கோலம் அழகா இருக்கு. உங்க ஓவியங்கள் லாங்ஷாட்-ல இருப்பதால் தெளிவா பார்க்க முடியல,அதனால என்ன? நீங்க வரையும் ஒரு சில ஓவியங்களைப் பார்க்கையிலேயே உங்க திறமை தெரியுதே.:)
Check this link for a sweet award! :)
http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_12.html
இது உங்க அச்சீவ்மெண்டுக்கு என் அப்ரிஷியேஷன்!:):)
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் ப்ரியா...ரொம்ப சந்தோஷமாயிருக்கு..
வாழ்த்துகள் ப்ரியா. அந்த கடைசி ஃபோட்டோல இருக்கற பெண்ணின் புகைப்படம் இன்னும் கூட வேற வேற ரியாக்ஷன்ல வரைஞ்சிருந்தீங்களே, அதையெல்லாம் கண்காட்சிக்கு பயன்படுத்தலியா?
+2ல பயாலஜி க்ரூப் எடுத்தா நிறைய படம் வரையணும்னு பயந்தே, கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தேன். ஓவியம்லாம் நமக்கு ரசிக்கறதோட சரிங்க!
சாரிங்க... வேறு நண்பரின் கவிதை படித்து எழுதிய பின்னூட்டம் தவறுதலாய்... போட்டோக்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
உங்களின் ஓவியத்தை இன்னும் சற்று நெருக்கத்தில் எடுத்து காட்டி இருக்கலாம்
பெருமிதமாயிருக்கு ப்ரியா... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!
:) kolam superb priya........... Go on.........
me the first............
அந்நிய மண்ணில்
இந்தியாவின் பெருமையை
amithaiyai
கோலங்களை
போட்டு
சமசோ சுட்டு..
இந்தியாவின் அருமைகளை
அழகாய்
ஓவியமாய் தீட்டி
வாழ்ந்துகொண்டு இருக்கும்
இந்தியாவின்
ஓவிய திருமகளுக்கு
எனது பணிவான வணக்கங்கள்
வாழ்த்துக்கள்
மேலும் பணி
சிறக்க பிராத்தனைகள்..
(தாமதத்திற்கு மன்னிக்கவும்)
பாராட்டு மற்றும் வாழ்த்துகள் ப்ரியா .. . . .
வாங்க மஹி, விருதுக்கு மிக்க நன்றி. விரைவில் வந்து பெற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி மேனகா!
நீங்க சொன்ன அந்த ஓவியங்களும் இருக்கு ரகு. கீழிருந்து நான்காவது படத்தை பாருங்க, லாங்ஷாட்ல தெரியும்!
ஆனா நான் வரைய விரும்பியே +2வில் பயாலஜி படித்தேன்:)ரகு!
மீண்டும் வந்ததற்கு நன்றி சே. குமார், எதற்கு சாரியெல்லாம்;)
நன்றி இளவழுதி வீரராசன்!
அடுத்தமுறை நிச்சயம் எனது ஓவியங்களை நெருக்கத்தில் படம் பிடித்து போடுகிறேன்.
மிக்க நன்றி கனிமொழி!
வாங்க சிவா, இதற்கு எதுக்குங்க மன்னிப்பு!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
மிக்க நன்றி புதுவை சிவா!
magizhchiyaana tharunangal illaya priya? idhupondra virudhugal niraya thodarattum
ம்ம்.. ஆமா g.aruljothiKarikalan மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்தான்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரியா .
வாழ்த்துக்கள் .
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... பெருமையா இருக்கு ப்ரியா..
படங்களும், ஓவியங்களும் அருமை.. :-))
கலர் மணலில் விரிந்த ரங்கோலி மனம் கவர்கிறது.
கண்காட்சியில் ஓவியங்கள். மிக்க சந்தோஷம் ப்ரியா. ஓவியங்களைத் தனித்தனிப் படங்களாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
வாழ்த்துக்கள்!
நன்றி பத்மா!
நன்றி ஆனந்தி!
//ஓவியங்களைத் தனித்தனிப் படங்களாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.//.... நிச்சயமாக பகிர்ந்துக்கொள்கிறேன்! நன்றி ராமலக்ஷ்மி!
Congrats Priya...I told you, you will go places..this is just a start...all the very best
நன்றி அப்பாவி தங்கமணி!
Post a Comment