Subscribe:

Pages

Thursday, September 30, 2010

ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!!!

அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!

மிக சாதாரனமாக‌ வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது….குறிப்பாக பெண்களை ரசிப்பதில். பெண்கள் ஆண்களால் ரசிக்ககூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிற‌து என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆண்கள் அனைவருமே ரசனைமிக்கவர்கள் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு. அப்பாவில் ஆரம்பித்து தம்பிகள், கஸின்கள், கல்லூரி நண்பர்கள், என்னவர் என அனைவருமே நல்ல ரசனை உணர்வு படைத்தவர்கள்தான்.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் செயல்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டு இருப்பவர்… ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்து சுடிதாருக்கு மாறிய போதும் சரி, திருமணக்கோலத்தில் என்னை கண்ட போதும் சரி என்னை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்த என் அப்பா………

அக்கா உனக்கு இது நல்லாயில்ல, இது நல்லா இருக்கும் என்பதாகட்டும், அதுவரை ப்யூட்டி பார்லர் போகாத நான் தோழியின் ஆலோசனைபடி என் நிச்சயதார்த்தம் அன்று மேக்கப் போட்டுகொண்டு வந்து நின்ற போது, ‘நீ சாதாரனமாவே நல்லாயிருப்பியே’ என்று சொன்ன‌ இவர்களின் விருப்பப்படி ப்யூட்டி பார்லர் போகாமலே திருமணத்திற்காக‌ நானே என்னை அலங்கரித்துக்கொண்ட போது ‘ஆங் இதுதான் எங்க அக்கா’ என சொல்லி என்னை மகிழ்வித்த தம்பிகள், கஸின்கள்………

நட்பின் உரிமையில் உனக்கு இதுதான் எடுப்பா இருக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல, இந்த செருப்புதான் உன் காலுக்கு அழகா இருக்கு என சொல்வதில் ஆரம்பித்து, புரியும் செயல்கள் அனைத்தையும் உடன் இருந்து ரசித்து, இவர்கள் இத்தனை கூர்மையாக கவனிப்பார்களா, இவ்வளவு ரசனைமிக்கவர்களா ஆண்கள் என உணர்த்திய எனது கல்லூரி நண்பர்கள்……

என்னை ரசித்து பின் என் சின்ன சின்ன செயல்களையும் ரசித்து, இந்த பிறவியை ரசித்து வாழ்ந்திட இறைவன் எனக்களித்த வரமாக நான் நினைக்கும் என்னவர்……

இவர்களை தொடர்ந்து இன்று நான் சந்தித்து வரும் இனைய நண்பர்கள்.... இவர்களை பற்றி என்ன சொல்வது!!! நான் வரைந்த சித்திர பெண்ணழகை ரசித்து வர்ணித்து இவர்கள் எழுதிய கவிதைகள் படியுங்கள், உங்களுக்கே புரியும்... ஆண்கள் எவ்வளவு ரசனை மிக்கவர்கள் என்று. ஓவிய பெண்ணிற்கே கவிதையால் உயிர் கொடுக்க‌ நினைக்கும் ஆண்கள் இவர்கள். இப்பொழுது சொல்லுங்கள் தோழிகளே, ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தானே இருக்கமுடியும்!!!



துப்பட்டா தேவதை





தென்றல் காற்றில்
பறக்கும் பார்வையை
வீசி செல்லும்
யார் இந்த
தேவதை
துப்பட்டா
தாரிகை !!!
                 …சிவா

துப்பட்டா என்னும்
என் தேவதையின் சிறகுகள்
பறக்கத்தானே செய்யும்..
                        …ப்ரியமுடன் வசந்த்


துப்பட்டாவில் படபடக்குதென் உசிரு
உன் பார்வை பட்டு(ப்) புள்ளியானேன்
கட்டிக் கொள்ளு இல்லைக் கண்ணை மூடு! :)
                                                                 …பாலன்


தேவதைக்கு இறகு இருக்குமாம் - பறக்க
ஆனால் பார்தவர்கள் யாரும் இல்லை
இன்று
உன் வண்டியில் நீ வரும் போது
காற்றில் பறந்த உன் துப்பட்டா - என்
கண்ணுக்கு தெரிந்தது அது இறகாக
                                                            …புதுவை சிவா

 
ராத்திரி வானின் ஒரு துண்டை
ரகசியமாய் திருடிவந்து
துப்பட்டா செய்திருக்கிறாய் காற்றில்
துடித்து பகல் வானத்திடம்
ஒழுங்கு காட்டுகிறது உன் துப்பட்டா...
                                                                     …சீமான்கனி


சுருண்டு நெளிந்து நீண்டு விழும்
கூந்தல் அருவியில்
சிக்கிக் கொள்ளும் ஒரிதழாவாவது
மாறேனோ?
                                      …பாலாஜிசரவணா


பாவையின் பார்வையிலே
பொய் கோபம் தெரியுதடி
கோவலன் நானிலையோ
கோபிக்க மாட்டாயோ
                                  …தினேஷ்குமார்

குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

தேன் இனிக்கும் உதட்டில்-தீந்
தமிழ் நழுவும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
                                                              …யாதவன்

 
ஒ பெண்ணே எனக்கு மட்டும்
உயிர் கொடுக்கும் சக்தியிருந்தால்
நொடியில் உன்னை என்னவளாக
மாற்றியிருப்பேன் .காலந்தோறும்
கவிபாடியிருப்பேன் இப்படி ஒற்றை
கவியில் புலம்ப வைத்து விட்டாயே..!!
                                                                       …ஜெய்லானி

27 comments:

அன்பரசன் said...

சரிதான் போங்க

ஹேமா said...

உண்மைதான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் ப்ரியா,பெண்களிடம் ரசிக்கும் இடத்தில் பொறாமை முதலில் முந்திக்கொளும்.ஆண்கள் உண்மையாகவே ரசனையோடு ஒன்றிவிடுபவர்கள் !

மதுரை சரவணன் said...

super . i agree with u. thanks for sharing.

Anonymous said...

//அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்//
"என்றால்" என்பது தேவையில்லையென கருதுகிறேன்.
தொகுப்புக்கு நன்றி!

கவி அழகன் said...

நன்றி ப்ரியா
நன்றாக அலசி எழுதி உள்ளீர்கள்

சீமான்கனி said...

நன்றி பிரியா...
இவ்வளவு ரசனையா வரைந்துவிட்டு இப்படி பதிவு போட்டால் நான் என்னத்த சொல்ல...

ரிஷபன் said...

நல்ல ரசனையான பதிவு.

உன் துப்பட்டாவை
சரி செய்து கொள்ளும்
ஒவ்வொரு வினாடியும்
என் பார்வை
தப்பு செய்வதை
ஒப்புக் கொள்கிறேனடி பெண்ணே!

(கவிதை மாதிரி!)

Menaga Sathia said...

உண்மைதான் ப்ரியா,நீங்கள் சொல்வது ஏற்றுக்ககூடியதுதான்..எல்லோர் கவிதைகளும் நன்றாகயிருக்கு..

தினேஷ்குமார் said...

நன்றி சகோதரி
நாங்கள் எத்திக்கு
சென்றாலும்
எங்களை சிந்திக்க
தூண்டுவது
சந்திக்க நேரிட்டும்
சாடையில் பேசுவது
ரசிக்க துணிந்து
வரைந்த எழுத்துக்கள்
எழுத்துக்கள்
கவிதையாகுமென
கனவில் கூட
நினைக்கவில்லை
நன்றி தோழி...........

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!!!//

I agree to this statement 200%... wow... kavithai malai polinjutaangale... kalakkal...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ப்ரியா

நிச்சயமா ரசனையென்பது ஆண்பால்தான்

பெண்ணை வைத்து எழுதப்பட்ட கவிதைகளே இந்த உலகில அதிகம் ஆணாஇ வியந்து எந்த பெண்ணும் அவ்வளவாக கவிதைகள் எழுதுவதில்லை...

Priya said...

அன்பரசன்
//சரிதான் போங்க//... ;)

//பெண்களிடம் ரசிக்கும் இடத்தில் பொறாமை முதலில் முந்திக்கொளும்//... அப்படியா சொல்றீங்க ஹேமா...எல்லா பெண்களும் அப்படி இல்லைல:)

மதுரை சரவணன்
//i agree with u//.... ok Thank u!

//"என்றால்" என்பது தேவையில்லையென கருதுகிறேன்.//... தங்கள் கருத்துக்கு நன்றி Balaji saravana!அதை நீக்கி விடவா?

நன்றி யாதவன்!

சீமான்கனி
//இவ்வளவு ரசனையா வரைந்துவிட்டு இப்படி பதிவு போட்டால் நான் என்னத்த சொல்ல...//.... ஹிஹி:)

வாங்க ரிஷபன்,கவிதை மாதிரி என்னங்க! கவிதையேதான்!!! நன்றி!

நன்றி மேனகா!

dineshkumar
நீங்க சாதாரனமாகவே பேசினாலும் கவிதையாக‌தான் வருமோ;)

அப்பாவி தங்கமணி
200%.... absolutely right!!!

Priya said...

ப்ரியமுடன் வசந்த்
//ஆணாஇ வியந்து எந்த பெண்ணும் அவ்வளவாக கவிதைகள் எழுதுவதில்லை...//... பெண்கள்ன்னா அழகு, அதனால ஆண்கள் அவர்களை வியந்து கவிதை எழுதுறாங்க. ஆனா பெண்களுக்கு அப்படியா.... புரிஞ்சிக்கிட்டீங்கன்னா சரி:)(ச்சும்மா, தமாஷு தப்பா எடுத்துக்காதிங்க;)

Asiya Omar said...

அழகான பெண் ஓவியம்
ரசனைகள் பலவிதம்,அருமை.

Raghu said...

என்ன‌ங்க‌ ஆண்க‌ளை இப்ப‌டி பாராட்டுறீங்க‌ளே? உங்க‌ளுக்குலாம் பெண்ணாதிக்க‌ம்னா என்ன‌ன்னு தெரியாதா? அட‌! சும்மானாச்சுக்கும் ச‌ண்டை போட‌லாம், சீக்கிர‌ம் பெண்ணாதிக்க‌வாதியா மாறுங்க‌ :))))

அப்புற‌ம் ஒண்ணே ஓண்ணு, ஒவிய‌த்துல‌ இருக்க‌ற‌ அந்த‌ பொண்ணு கொஞ்ச‌ம் ஸ்மைலோட‌ இருந்திருந்தா இன்னும் சூப்ப‌ரா இருந்திருக்கும்.

க‌விதை? ஹிஹி...அதெல்லாம் உங்க‌ ஏரியா உள்ளே‌ வ‌ர‌மாட்டேன் :)

r.v.saravanan said...

தேவதை என்னோடு பேசுவதில்லை என்றாலும் துப்பட்டா எனை பார்த்து நலம் விசாரித்து கொண்டு தான் இருக்கிறது

ஓவியம் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய கவிதை

puduvaisiva said...

நலம் வேண்டி தெய்வத்துக்கு
செய்வோம் அர்ச்சனை
பெண்கள் மனம் மகிழ
செய்வது ஆண்களின் ரசனை

அதற்கு - நீ
'நேசமா இது எனக்கு அழகாக இருகா?'
தலை சாய்த்து சிரித்து கேட்கும் அழகுக்கு
ஈடு இல்லையே எதுவும் இவ் உலகில்

Unknown said...

நன்றி ப்ரியா

கமலேஷ் said...

அழகான ஓவியம்.

ப்ரியமுடன் வசந்த் said...

http://www.google.com/imgres?imgurl=http://funnywomen.com/uploaded_images/andi-osho-2009-june-757832.jpg&imgrefurl=http://www.funnywomen.com/girltalk_gossip.php&usg=__Bj1zAElRAwR7H0AiCBehJ0jBTJ4=&h=448&w=300&sz=31&hl=en&start=111&sig2=XaHkrNIJmDPoRXTEmi81iA&zoom=0&tbnid=tYi9bj-3_pDIwM:&tbnh=127&tbnw=85&ei=VS2qTK2rLI-MvQPd1pHeDA&prev=/images%3Fq%3Dfunny%2Bwomen%26um%3D1%26hl%3Den%26rlz%3D1G1GGLQ_ENQA288%26biw%3D1024%26bih%3D588%26tbs%3Disch:10,3203&um=1&itbs=1&iact=rc&dur=541&oei=Cy2qTILCI5Cece6ugOoM&esq=23&page=8&ndsp=18&ved=1t:429,r:7,s:111&tx=14&ty=50&biw=1024&bih=588

இது போல பெண்ணுக்கும் கவிதை எழுதுவோம்... பெண்கள் போன்று அழகென்ற ஆணவம் பிடித்தவர்கள் ஆண்கள் அல்ல!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான கவிதைகள் தான்..பகிர்வுக்கு நன்றி ப்ரியா... :-)

Mahi said...

ப்ரியா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

சர்பத் said...

ஓவியமும் கவிதை தொகுப்புகளும் அருமை.

பால்ராஜ் said...

ஓவியப்பாவையின்
நீவிய கூந்தலில்
ஆவியைத் தொலைத்துவிட்டு
அலைகின்றேன்
ராப்பகலாய்...

Priya said...

க்யூட் கவிதை, நன்றி பால்ராஜ்!

அன்புடன் மலிக்கா said...

நல்ல ரசனையும் பதிவும்..

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Kurinji said...

beautiful paintings, really gr8!

Post a Comment