« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா »
"ஷாஜகான்" படத்தில் "மின்னலை பிடித்து மின்னலை பிடித்து" பாடலில் வரும் வரிகள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு அழகாக பெண்னை ரசித்து எழுதப்பட்டு இருக்கிறதே என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். ஒரு பெண்ணாக பெண்களை வரையும் போது இந்த பாடல் வரிகள்தான் நினைவில் வரும். ஏனோ என்னையும் அறியாமல் பெண்களை வரையும் போது மட்டும் இந்த பாடலை முனுமுனுத்தபடி வரைகிறேன்.
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா »
"ஷாஜகான்" படத்தில் "மின்னலை பிடித்து மின்னலை பிடித்து" பாடலில் வரும் வரிகள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு அழகாக பெண்னை ரசித்து எழுதப்பட்டு இருக்கிறதே என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். ஒரு பெண்ணாக பெண்களை வரையும் போது இந்த பாடல் வரிகள்தான் நினைவில் வரும். ஏனோ என்னையும் அறியாமல் பெண்களை வரையும் போது மட்டும் இந்த பாடலை முனுமுனுத்தபடி வரைகிறேன்.
மேலே உள்ள படங்கள் அனைத்தும் நம் தமிழ் வாரப்பத்திரிக்கைகளை பார்த்து வரைந்தது. நான் வரைபவைகளை ரசித்து தொடர்ந்து பின்னூட்டமிடும் (ஆண்)நண்பர்கள் வழக்கம் போல் நன்றாக வரைந்து இருக்கிறீர்கள் என சொல்லாமல் இந்த சித்திரப் பெண்ணழகை பற்றி 'கனவு கன்னிகையோ.... காதல் தேவதையோ....' என எப்படி தோன்றினாலும் கவிதையாக எழுதிவிடுங்கள். காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!
45 comments:
ப்ரியா அருமையா இருக்கு கலக்குங்கள்
sorry for writing in English.......akka i know about your painting and drawing talents and i used to tell my opinions immediately when u show me ur painting then y i should leave a comment on ur website but anyway........take it
i like the second drawing very much because it is casual and that girl is so cute
then the fourth drawing.......i think that u drew it by seeing u in mirror isn't it? because it looks like u
then
the lips of the first drawing is nice
but the girl in the third drawing has some fat in some region.........bye ur loving sister
//காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!//
அழகான வரிகள்.
ப்ரியா அருமை
அருமை ப்ரியா!! எல்லா ஒவியங்களும் அழகு....
எல்லாமே அழகா இருக்கு ப்ரியா.
அழகை இருத்திவிட்டு
ஓவியம் என்கிறாய்
நீ பொய்யா
இல்லை
உன் ஓவியம் பொய்யா
சொல் ப்ரியா !
எல்லா ஒவியங்களும் அழகு ப்ரியா...
விதவிதமான பெண்கள்.படங்கள் எல்லாமே அழகா இருக்குங்க ப்ரியா!
உங்க தங்கை சொன்னது நிஜம்தானா?;)
பிரமிக்க வைக்கும் அழகு.....
ப்ரியா! செம!...
அந்த கடைசி ஓவியத்துல இருக்கிற பொண்ணு பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சி மனசுல :)
அந்த படத்த என் ப்ளாக்குல போட்டுக்க உங்க அனுமதி கிடைக்குமா?
சுருண்டு நெளிந்து நீண்டு விழும்
கூந்தல் அருவியில்
சிக்கிக் கொள்ளும் ஒரிதழாவாவது
மாறேனோ?
படம் 2 துப்பட்டா தாரிகை
தென்றல் காற்றில்
பறக்கும் பார்வையை
வீசி செல்லும்
யார் இந்த
தேவதை
துப்பட்டா
தாரிகை !!!
1 . ஹாய் சொல்லும் தேவதை
வானவில்
புருவமும்
கருவண்டு
கண்களும்
கொண்டவள்...
புன்னகையில்
ஹாய்
சொல்லும்
தேவதை
இவள்.
தூரச்சென்று
திரும்பி
பார்க்கும்
தேவதை
இவள்!!!
படம்:3
பிரிந்தவனை
எண்ணி
உருகும்
கிராமத்து தேவதை இவள்...
படம்:4
கடக்க
போகும் பாதையை
எதிர்
நோக்கும்
என்னவள்
இவள்...!!!
ஓவியம்
பென்சிலில்...
தீட்ட பட வேண்டிய
காவியமாய்
இருக்குங்க...
அருமையா இருக்கு ப்ரியா!
அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான் என்று நீங்கள் சொல்வதற்கு ஒரு பெண்ணாக நானும் சந்தோஷப்படுகிறேன்.
அத்தனைப் படங்களும் அவ்வளவு அழகு!
புன்னகை தேவதை
ஒரு சொட்டு புன்னகையில்
ஓராயிரம் கதை சொல்லும்
உன் இதழ்கள்...
************************
துப்பட்டா தேவதை
துப்பட்டா என்னும்
என் தேவதையின் சிறகுகள்
பறக்கத்தானே செய்யும்...
************************
இடையழகி
கொசுவம் வைத்த
புடவைக்காரி இவளின்
இருபத்தி நாலில்
என் இருபத்தேழும்
கரைந்தே போனது...
********************
காதல் தேவதை
இவள் ஒரு தேவதை
என்ற பொழுதும்
கேட்ட வரம் தராதவள்
என்னை ஆளும்
காதல் தேவதையிவள்...
அருமையான அழகான ஆழமான ஓவியம்!
பெண்ணை போற்றியதற்கு நன்றி!
பாவையின் பார்வையிலே
பொய் கோபம் தெரியுதடி
கோவலன் நானிலையோ
கோபிக்க மாட்டாயோ
வாங்க மேடம் உங்க பிஸியான படிப்புகளின் இடையே இந்த அக்காவை நினைத்து என் வலைப்பக்கத்தை பார்வையிட்டதை குறித்து சந்தோஷம்.
//then the fourth drawing.......i think that u drew it by seeing u in mirror isn't it? because it looks like u//...
"நான் போகிறேன் மேலே மேலே......." பாடலை முனுமுனுக்க வைக்கிறாய். இரு இரு கீழே வந்துடுறேன். தேங்க்ஸ் டியர்!
மிக்க நன்றி!
........எல்கே!
.......அன்பரசன்!
.....சரவணன்!
...மேனகா!
....சுசி!
//சொல் ப்ரியா !//...ஹிஹிஹி நீங்களே சொல்லிடுங்களேன் ஹேமா!
....நன்றி இர்ஷாத்!
//உங்க தங்கை சொன்னது நிஜம்தானா?;)//... விடுங்க விடுங்க மகி, ஏதோ அக்கா மேலே உள்ள பாசத்தில அப்படி சொல்லியிருப்பா போலிருக்கு:)
.....நன்றி சித்ரா!
....நன்றி பாலாஜி!
//அந்த படத்த என் ப்ளாக்குல போட்டுக்க உங்க அனுமதி கிடைக்குமா?//...தாராளமாக!My pleasure!
....மிக்க நன்றி சிவா!
நான்கு படங்களுக்கும் எழுதிவை நன்றாக இருக்கிறது.
....நன்றி Sriakila!
....வசந்த்!
குட்டி குட்டி கவிதைகள் நான்கும் மிக அற்புதம். அதற்கேற்ற தலைப்புகள் சிம்பிளி சூப்பர்ப். தேங்க்யூ சோ மச்!
....நன்றி gunalakshmi!
வாவ்.. சூப்பர் dineshkumar!
எல்லா ஓவியங்களுக்கும் பொதுவாய் ஒரு கவிதை
குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்
தேன் இனிக்கும் உதட்டில்-தீந்
தமிழ் நழுவும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்
காற்றிலே சேலை
வானவில்லான போதும்
நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
நான் இரு மாபோடு
அவளை ரசிக்கிறேன்
பொய் - அவள் அழகு
அசத்தல் அழகு
படங்கள்
அன்பான வாழ்த்து
துரிகை பிடித்த
கரங்களுக்கு!
மிக அருமையான ஓவியங்கள் பாராட்டுக்கள் ப்ரியா
எனக்குப் பிடித்தது இரண்டாவது துப்பட்டா போட்ட ஓவியப் பெண்! அதற்கான மனதில் எழுந்த வரிகள்.
துப்பட்டாவில் படபடக்குதென் உசிரு
உன் பார்வை பட்டு(ப்) புள்ளியானேன்
கட்டிக் கொள்ளு இல்லைக் கண்ணை மூடு! :)
1."கனவு கன்னிகையோ"
உந்தன் விழி அசைவால்
உறக்கம் தொலைத்தேன்
சிறு புன்னகையால்
பல நேரம் சிலையானேன்
பிறகு
கனவு எப்படி வரும்?
2. "காதல் தேவதையோ"
தேவதைக்கு இறகு இருக்குமாம் - பறக்க
ஆனால் பார்தவர்கள் யாரும் இல்லை
இன்று
உன் வண்டியில் நீ வரும் போது
காற்றில் பறந்த உன் துப்பட்ட - என்
கண்ணுக்கு தெரிந்தது அது இறகாக
:-))
வெட்கம்...
வெட்கம் சிவப்பாம்!!!
யார்?? சொன்னது...
பார் கருப்பு வெள்ளையிலும்
கிறங்கடிக்கிறது உன் வெட்கம்...
*****************
துப்பட்டா..
ராத்திரி வானின் ஒரு துண்டை
ரகசியமாய் திருடிவந்து
துப்பட்டா செய்திருக்கிறாய் காற்றில்
துடித்து பகல் வானத்திடம்
ஒழுங்கு காட்டுகிறது உன் துப்பட்டா..
***************************
சொல்லிவிடு...
நீ கண்ணகியோ மாதவியோ
கயவர்களால் களவாடப் பட்டவளோ
கரணம் ஏதும் சொல்லவேண்டாம்
எதை எரிப்பாய் என்று
எனக்கு மட்டும் சொல்லிவிடு
என்னவளை எங்கேனும் ஒழித்து
வைத்துவிடுகிறேன்...
********************************
அதிர்வு...
நீ என்னவோ அமைதியாகத்தான்
அலைகிறாய் உன் அழகுதான்
அதிர்வை ஏற்படுத்தி ரிக்டர்
அளவுகளில் ஆயிரம் காட்டுகிறது...
************************
ப்ரியாவின் படங்களை பார்த்துவிட்டு கவிதை வரவில்லைஎன்றால் கவலை பட்டிருப்பேன்....படத்துக்கு நன்றி ப்ரியா
//காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!//
அழகான கவிதை வரிகள்...
அப்புறம் கவி எதற்கு?
வாவ்... ரொம்ப சூப்பர்-ஆ இருக்குங்க பிரியா..
ஓவியத்தில் பெண்ணை
வரைவதாய் எண்ணி....
ஒரு காவியமே வரைந்து
விட்டீர்களே தோழி... :-)))
(சாரிப்பா... ஆண் நண்பர்களை, கவிதை எழுத சொல்லி இருந்தீங்க..
உங்க ஓவியம் என்னை எழுத வைத்து விட்டது.. :-)))) உண்மையில் அழகு ப்ரியா.. தேங்க்ஸ் )
ஒ பெண்ணே எனக்கு மட்டும்
உயிர் கொடுக்கும் சக்தியிருந்தால்
நொடியில் உன்னை என்னவளாக
மாற்றியிருப்பேன் .காலந்தோறும்
கவிபாடியிருப்பேன் இப்படி ஒற்றை
கவியில் புலம்ப வைத்து விட்டாயே..!!
அப்பப்பா... என்னமா எழுதி இருக்கீங்க யாதவன். மிக்க நன்றி!
சோ ஷார்ட் & ஸ்வீட்! நன்றி வேங்கை!
மிக்க நன்றி நிலா மகள்!
பாலன் உங்களை கவர்ந்த துப்பட்டா பெண்ணுக்காக எழுதிய கவிதை சூப்பரா இருக்குங்க, நன்றி!
கலக்கலா இருக்கு புதுவை சிவா, நன்றி!
கனி
கவிதை ஒவ்வொன்றும் அழகு! நன்றி!
//ப்ரியாவின் படங்களை பார்த்துவிட்டு கவிதை வரவில்லை என்றால் கவலை பட்டிருப்பேன்....//.... அது சரி:)
சே.குமார்
//அழகான கவிதை வரிகள்...
அப்புறம் கவி எதற்கு//..... நோ... நோ, எஸ்கேப்;)
//ஓவியத்தில் பெண்ணை
வரைவதாய் எண்ணி....
ஒரு காவியமே வரைந்து
விட்டீர்களே தோழி... :-)))//.... அதிகமாவே புகழுறிங்க ஆனந்தி:)
ஜெய்லானி
சித்திர பெண்ணிற்கு உயிர் கொடுக்க நினைக்கும் கவி வாழ்க!
மிகவும் தத்துரூபமான படங்கள் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது.. சகொதரி கோபிக்கக் கூடாது இயற்கையுடன் ஒப்பிடுகையில் அண் பால் தானே அழகானது.. ஒரு தம்பியின் சீண்டலாக நினைத்தக் கொள்ளுங்கள்...
என் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்... என் தளத்திற்கும் தங்களை அன்புடன் அழைக்கிறேன்
mathisutha.blogspot.com
யாருமே மொக்கை போடாத ஒரு ப்ளாக் .... first டைம் பார்கிறேன் வாழ்த்துக்கள்...அதுக்காகவே இந்த கவிதை
1.நார்த் இந்தியன்
ஸ்லீவ்லெஸ் சிட்டு
நீ சிரிச்சா பட்டு
எனக்கு கெலண்டுடிச்சு நெட்டு
முறைக்கிறான் உன் அண்ணன் "சேட்டு"
2.கேரளா
உன்னுள் என்னை தேடி
நான் தொலைந்தேன் ...
நீ யாரை தேடுகிறாய் ?
நானோ உன்னுள்!!!
3.கர்நாடகா
நீ சிரித்தல் காவேரி ...
இதுக்கு மேல வரமாட்டேங்குது ....:)
இதற்க்கு தான் சோகமோ!!!
4.தமிழ் நாடு
நீயே ஒரு கவிதை
உனக்கு ஏன் கவிதை....
அப்பாடா.....(.)(?)(!) எல்லாம் இருக்கு அப்ப கவிதை தான்...யாராவது சொல்லுங்களேன்...
வருகைக்கு மிக்க நன்றி ம.தி.சுதா!
//சகொதரி கோபிக்கக் கூடாது இயற்கையுடன் ஒப்பிடுகையில் அண் பால் தானே அழகானது.. //... ச்ச ச்ச கோபிக்க மாட்டேன் எதுவாகினும் தைரியமா சொல்லலாம். இந்த சித்திர பெண்களும் (ஒருவேளை)அழகாக தெரிந்தால் ஹாஜகான் படத்தில் கதாநாயகியை கண்டதும் விஜய்க்கு சந்தேகம் தீர்ந்ததை போல எனக்கும் தீர்ந்துவிடுமல்லவா, அதுதான்:)
//யாருமே மொக்கை போடாத ஒரு ப்ளாக் .... first டைம் பார்கிறேன்//... நிஜமாவா!!!!
நார்த் இந்திய கவிதை நகைச்சுவையாய்...
கேரளத்து கவிதை அழகாய்...
கர்நாடக கவிதை சோகமாய்...
தமிழ் நாட்டு (பெண்தான்) கவிதை கவிதையாய்....
வாவ், நான்கு கவிதையும் சூப்பரா இருக்கு GSV.
//நீயே ஒரு கவிதை
உனக்கு ஏன் கவிதை....//... இப்படி சொல்லியே தமிழ்நாட்டு பெண்களை ஆஃப் பண்ணிடுறிங்க:)
//அப்பாடா.....(.)(?)(!) எல்லாம் இருக்கு அப்ப கவிதை தான்...யாராவது சொல்லுங்களேன்...//...ம்... இதுக்கு யாராவதுதான் பதில் சொல்லனும்!
Super talent Priya... honestly, I evny you... hats off
Thank u so much அப்பாவி தங்கமணி!
அற்புதம் பிரியா ,படங்களும், கவிதைகளும்.
//காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!//
சான்ஸே இல்லீங்க... என்னமா ஃபீல் பன்னி எழுதியிருக்கீங்க... சிந்திக்க தூண்டிய வரிகள். இந்த வரிகளைப் படித்ததுமே உங்களை பின் தொடர ஆரம்பிக்கிறேன்.
நன்றி.
//அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!//இதுதாங்க கவிதை........
எனக்கு கவிதை எல்ல்லாம் எழுத தெரியாது....
ஆனா நல்ல ரசிப்பேன்.....
உங்க paintings ரொம்ப நல்லா இருக்கு.... எனக்கு பிடிச்ச கவிதை மாதிரி....
மலர் முகமும், மார்பளவும் என ஓவியங்களில் ஆண் பார்வையே வியாப்பித்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் இதழ்களில் உள்ள படங்களை முன்மாதிரியாகக் கொண்டமையினால் இருக்கலாம்.
வட்ட பொட்டுக்காரி....!
----------------------------------------
கரு கரு கண்ணழகி..
வில் வித்தை புருவழகி..
வெண் முத்துப் பல்லழகி..
குயில் ராக குரலழகி..
கொக்கரிக்கும் (கொழி)ச்சிரிப்பழகி..
குதிரை நடையழகி..
கடுகுத்துண்டு இடையழகி..
கோவில் சிற்ப்பச் சிலையழகி...!
சிணுங்கும் சிலையே..!
உம்மை கண்டு
சொக்கி மரமென
நிற்கும் பக்த்தன்.......!
அவிந்தன் அடங்காதவன்
9843847478
அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்! <3
Super Priya
Thanks and I have a super proposal: How Much Home Renovation Cost home bathroom remodel
Post a Comment