Subscribe:

Pages

Thursday, May 20, 2010

கலைஞர்களுக்கு என்று ஓர் ஊர்... St.Remy!



தோ மீண்டும் ஒரு விருது! இந்த விருதை எனக்களித்த Jaleela அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்படும் பொழுது முதல்முறை வாங்குவதை போன்றே ஓர் உணர்வு.... அவ்வளவு சந்தோஷம். அந்த சந்தோஷத்துடனே சென்ற பதிவின் தொடர்ச்சியாக என் பயணம் தொடர்கிறது.


            ஒக்ளிஸில்(Vaucluse) இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் St. Remy de Provence.



யற்கை வளம் நிறைந்த‌ நிலப்பகுதி என்பதால் சாலை இருபுறமும் Peech மற்றும் Cherry மரங்கள்  என்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.





ரம்பத்திலேயே தென்பட்ட மிக பெரிய ஏரியில் சிறிது நேரம் சுற்றி கொண்டு இருந்தோம். அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களின் நடுவில் சில பெரியவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். லேசாக தூர ஆரம்பித்தும் அதை யாரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. குளிர ஆரம்பித்ததால் என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து ஊருக்குள் செல்ல...... நுழையும் போதே ஏதோ ஒரு கலை உணர்வு ஏற்படத் தொடங்கியது.





மே தினம் என்பதால் அந்த ஊர்மக்கள் சில கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர் . பிரான்ஸின் ஒவ்வொரு ஊரின் பாரம்பறிய உடை அனிந்து, ஊரின் மையப்பகுதியில் உள்ள வீதிகளில் அனிவகுப்பு நடத்தினர்.





ந்த ஊருக்கு ஒரு சிற‌ப்பு அம்சம் இருக்கின்றது என்று சொல்லி இருந்தேனே........ அது இந்த ஊருக்கு கிடைத்து இருக்கும் பெயர்தான். அதற்கு காரணமாக இருந்தவர் உலக புகழ் பெற்ற ஓவியர் Vincent Van Gogh அவர்கள்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் பிறந்ததென்னவோ நெதர்லேன்டில்.... ஆனால் தன் இறுதி காலங்களில் அவர் பிரான்ஸில்தான் இருந்து இருக்கிறார். அதிலும் அவர் வரைவதற்காகவே இந்த ஊருக்கு வந்தவராம். அமைதியான ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வரைய இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இங்குதான் அவர் 150 பெயின்டிங்ஸும் 100 டிராயிங்ஸும் வரைந்திருக்கிறார். இவரை தொடர்ந்து இந்த ஊரில் நிறைய ஆர்டிஸ்ட்டுகள் உருவாக தொடங்கி உள்ளனர். தெருவுக்கு தெரு பார்க்கும் இடமெங்கும் ஆர்ட் கேலரிகள். ஒவ்வொரு பெயின்டிங்கும் 1000, 2000 யூரோக்கள் என்று விற்கப்படுகிறது. (நம்மூர் மதிப்புக்கு 60ஆயிரம், லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்.....) பெயின்டிங்ஸை தொடர்ந்து கண்ணாடியில் வரைவது, பீங்கான் பொருட்களில் வரைவது.... என்று பலத்தரப்பட்ட கலைஞர்கள் இருப்பதால் The village of Artists என்ற சிறப்பு பெயர் பெற்று விட்டது…. இந்த ஊர் !

பல புகழ்பெற்ற‌ கலைஞர்களையும் அவர்கள் படைப்புகளையும் பார்த்து விட்ட வந்த சந்தோஷத்தில் (நீண்ட நாட்களாக வரையாமல் இருந்த எனக்கு) மீண்டும் வரையும் ஆர்வம் வந்துவிட்டது. விரைவில் புதியதாக வரைந்த படத்துடன் வருகிறேன்.

40 comments:

எல் கே said...

அருமை. படங்களும் உங்கள் விவரிப்பும் நன்றாக உள்ளது. இங்கு இதுபோல் ஏதேனும் ஊர் உள்ளதா

Kousalya Raj said...

இரண்டு பதிவிலும் உள்ள படங்களையும் பார்த்தேன், உண்மைய சொல்லணும்னா உங்கள் கண்கள் மேல் ரொம்ப பொறாமையா இருக்கிறது தோழி! அந்த கண்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறதே இந்த அழகை ரசிப்பதற்கு...!!

Unknown said...

உள்ளதை கொள்ளையிடும் இயற்கை
புகைப்படத்தில் பார்த்த எனக்கே வரைய தோணுது

ஜெய்லானி said...

படத்தை பார்க்கும் போதே நேரிலும் பார்க்க ஆவல் வருது. அந்த அளவுக்கு படங்கள் அழகு.

விருதுக்கு வாழ்த்துக்கள் .

Unknown said...

பயணக் கட்டுரை படங்களுடன் அழகாக உள்ளன நாமும் சேர்ந்து பயணித்தது போல் இருந்தது, நீங்கள் வரையும் சித்த்ரமும் பார்க்கும் ஆவல் அதிகமாக உள்ளது, பாராட்டுக்கள் ப்ரியா!

Unknown said...

உங்களிற்குக் கிடைத்த விருதிற்கும் எனது வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!! அருமை,தெரியாத பலதகவல்களை தெரிந்துக்கொண்டேன்.நன்றி!!

Paleo God said...

படத்திற்காக ஆவலுடன்! :)

செ.சரவணக்குமார் said...

Excellent. படங்களும் விவரிப்பும் மிக அருமை ப்ரியா. விருதுக்கு வாழ்த்துகள்.

சீமான்கனி said...

விருதுக்கு வாழ்த்துகள்...படங்கள் எல்லாம் அருமை உங்கள் புது ஓவியத்திற்காக காத்திருக்கிறேன்....வாழ்த்துகள்...

ஜெய் said...

சூப்பர்.. இந்த மாதிரி இடமெல்லாம் நாங்க wallpaper-லதான் பார்த்துருக்கோம்..

Chitra said...

so cute and picturesque...... Thank you.

Chitra said...

Congratulations, Queen!

ஹேமா said...

விருதுக்கு வாழ்த்துகள் பிரியா.
தொடரும் புகைப்படங்கள் அசத்துகின்றன.

A N A N T H E N said...

படங்கள் நீங்களே எடுத்திங்களா? தெளிவான காட்சிகள். உடனே அங்கு சுற்றி பார்க்க தூண்டுது... நன்றி

கவி அழகன் said...

அருமை வாழ்த்துகள்

GEETHA ACHAL said...

அழகு..படங்கள் அனைத்து கொள்ளை அழகு...சூப்பர்ப்...

ஜெனோவா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் !

இந்த பயணக் கட்டுரையும் , புகைப்படங்களும் மிக அழகு பிரியா !

அய்யோ , vincent vangagh !! இவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு நான் கொஞ்சம் அமைதி இழந்தேன் . வாழ்க்கை முழுக்க குழப்பமாகவே இருந்த கலைஞன் .காதலால் சபிக்கப்பட்டவன் . ஒரு கட்டத்தில் தான் மிகவும் நேசித்த வரையும் கலையையே வெறுக்க தொடங்கியவன் .என்னைப்பொறுத்த வரையில் நல்ல கலைஞன் . அவருக்கு ஏதாவது memorial வைத்திருக்கிறார்களா ?

சீக்கிரம்.. சீக்கிரம் அடுத்த படத்துக்காக waiting .

வாழ்த்துக்கள் !

r.v.saravanan said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

புகைப்படங்கள் அனைத்தும் அருமை பிரியா
உலக புகழ் பெற்ற ஓவியர் Vincent Van Gogh தகவலுக்கு நன்றி

இந்த இடங்களுக்கு எப்பொழுது செல்வோம் என்று தோன்றுகிறது

ஓவியம் பார்க்க காத்திருக்கிறோம்

athira said...

பிரியா, விருதுக்கு வாழ்த்துக்கள். படங்களும் விளக்கமும் நன்றாக உள்ளது.

அம்பிகா said...

அருமையான படங்கள். விருதுக்கு வாழ்த்துக்கள் Queen.

ஜெயா said...

விருதுக்கு வாழ்த்துக்கள். பதிவும் படங்களும் அழகு.

Priya said...

கண்டிப்பா அப்படி ஏதாவது ஒரு ஊர் இருக்கனும் LK...அதுதான் கலைஞர்களுக்கு செய்ற மரியாதை.

ரசிக்கும் என் கண்கள் மேல் பொறாமையா.. ஹாஹாஹா:) ந‌ம்மை சுற்றி நிறைய அழகு கொட்டி கிடக்குதுங்க Kousalya... நாமதான் வேகமான உலகத்தில எதையும் ரசிப்பதில்ல;(

நீங்களும் வரைவீங்களா கலாநேசன்?

ஆமா ஜெய்லானி படத்தில இப்படின்னா நேரில இன்னும் சூப்பரா இருந்திச்சு.

வரைஞ்சிட்டேன் பாலன், அடுத்த வாரம் போஸ்ட் பண்ணிடுறேன்.

தெரியாத தகவல்களை தெரிஞ்சிக்கிட்டீங்களா.. சந்தோஷம் Mrs.Menagasathia !

ஆவலை அதிகமாக்க விரும்பல ஷ‌ங்கர்.. வெகு விரைவில்!

நன்றி செ.சரவணக்குமார் !

வரைந்த படத்தை பதிவிட்டதும் பார்த்திட்டு சொல்லுங்க கனி!

அப்படியா ஜெய்!!!

ஆமா சித்ரா நானும் ராணி ஆயிட்டேன்ன்ன்ன்ன்ன்!

எனது புகைப்படங்கள் பிடிச்சிருக்கா ஹேமா ? நன்றி!

ஆமாங்க A N A N T H E N நான் எடுத்த புகைப்படங்கள்தான் !

நன்றி யாதவன் !

ரசித்த உங்களுக்கு நன்றி Geetha Achal !

ஆமா ஜோ நான் கூட அவரைப்பற்றி படித்த போது வருத்தப்பட்டேன். மன அமைதி இல்லாததினால் தான் அவர் பல‌ ஊர்களில் வாழ்ந்து இருக்கிறார். Memorial இல்லாமலா.. இதே ஊரிலதான் இருக்கு.

என் ஓவியத்தை பார்க்க காத்திருக்கிங்களா, அடுத்த பதிவில பாருங்க சரவணன்!

நன்றி அம்பிகா!

நன்றி ஜெயா!

சுசி said...

அருமையான பதிவு.. அழகான படங்களுடன்..

அண்ணாமலை..!! said...

புகைப்படமும், தகவலும்
அழகாக உள்ளது.
உங்க ஒவ்வொரு ஓவியமும்,
அவ்..ளோ.. அழகு!!!!!!!!!!!!

Raghu said...

எப்ப‌வும் ஏதாவ‌து ஒரு ப‌ட‌ம் ரொம்ப‌ புடிச்சுபோயிடும், ஆனா இந்த‌ ப‌திவுல‌ எல்லா புகைப்ப‌ட‌ங்க‌ளுமே மிக‌ அழ‌கு! க‌ல‌க்குறீங்க‌ ப்ரியா :)

Ahamed irshad said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... படங்கள் அருமை...

Admin said...

வாழ்த்த்துக்கள் அருமையான படங்கள்.

puduvaisiva said...

விருது பெற்றமைக்கு வாழ்துகள் தோழி

அந்த பாரம்பறிய உடை புகைப்படம் மிக அருமை

மற்றும்,

ஓவியர் Vincent Van Gogh அறிமுகத்துக்கு நன்றி.

Priya said...

சுசி
அண்ணாமலை..!!
ர‌கு
அஹமது இர்ஷாத்
சந்ரு
♠புதுவை சிவா♠ ......உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
insight said...

alaga irukkunga

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ஸாதிகா said...

படம் தத்ரூபமாக உள்ளது.பாராட்டுக்கள்.

அப்பாதுரை said...

brilliant!

Nithya said...

Wow.. simple superb. Arumaya vandhurukku. :)

Idhu than en mudhan murai indha thalathukku. Good to have seen it. Nice painting and nice clicks too.

Nithya
www.nitsarts.blogspot.com
www.4thsensecooking.com

Priya said...

insight
www.thalaivan.com
ஸாதிகா
அப்பாதுரை.... மிக்க ந‌ன்றி!

Thanks Nithya...உங்க டிராயிங்ஸையும் பார்த்தேன், வாவ் அமேஸிங்!

SUFFIX said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

படங்கள் அனைத்தும் அருமை.

Priya said...

நன்றி Jaleela Kamal!

Post a Comment