பட்டாம்பூச்சிகள்......கவிதைகளாக சிறகடிக்க! என்ற தலைப்பில் இடம்பெற்ற எனது ஓவியத்திற்கு கவிதை எழுதசொல்லி கேட்டிருந்தேன். என் வார்த்தையினை ஏற்று நிறைய நண்பர்கள் அழஅழகான கவிதைகளை படைத்திருந்தீர்கள். உங்கள் அனைவரின் கவிதைகளுக்கு பக்கத்தில் நான் வரைந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவு அருமையாக எழுதிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களுக்குள் இருக்கும் கவித்திறனை என் ஓவியங்கள் வெளிக்கொண்டு வருமானால் அதில் எனக்கு சந்தோஷமே...
அதனால் மீண்டும்... எங்கே, கொஞ்சம் உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்! கவிதையாகதான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை... சாதாரணமான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
சரி சொல்லுங்கள்...
இந்த காதல்கிளிகள் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?
35 comments:
ஹி ஹி...,
நெக்ஸ்ட் மீட் பண்றேன்
படம் அழகோ அழகு.!
இத்தன அழகா படம் வரஞ்ச உங்களுக்கு கற்பனை எப்டி? நீங்க ஒரு முயற்சி பண்ணுங்களேன்?
ப்ரியாவின் கை வண்ணத்தில் பாரேன்: நம் அழகு, பல வண்ணங்களில் மெருகேறி தெரிகிறது.
படமே ஒரு அழகான கவிதை போல் இருக்கு பிரியா... கவிதைக்கு முயற்சிக்கிறேன்...
மண்டு கூடு இல்லையே என்று அழுதாயே
இந்த இளஜ்ஜோடிகளின் வீடே நமக்காகத்தான்...
வா இவர்களோடு சேர்ந்து
ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு போவோம்...
கொஞ்சமாக
கொஞ்சி வைப்போம்
இவர்கள் வேறு
ஒட்டு கேட்கிறார்கள் !
பெண் கிளி: ஏன் அப்படி பாக்கறிங்க,எனக்கு வெக்கமா இருக்கு
ஆண் கிளி: ம்ஹும்....அடியேய், கிளைய போட்டு அழுத்தாதேடி, என்னால பேலன்ஸ் பண்ண முடியல!
அழகா வரைஞ்சிருக்கிங்க, வெரி நைஸ்:)
கலக்குறீங்க போங்க .
ஓவியம் ரொம்ப நல்லாயிருக்குங்க...
ஆண்கிளி:
நீ வெட்கத்துடன் தலைகுனிந்தபடி
தரையைப் பார்க்கும்போது
உன் மௌனம்கூட,
வார்த்தைகளின்றி கவிதை பேசுகின்றன.
என் எண்ணத்தில் நிறைந்த உன்னை
வண்ணத்தில் காட்டிய கைகளுக்கு வந்தனம்
-
DREAMER
nalla irukkanga...
விரைவில் சந்திப்போம் பேநா மூடி !
நன்றி அன்புடன் அருணா!
அண்ணாமலையான்....
மௌனத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும்
காதல் என்பதால்
அங்கே பேச்சுக்கள் மொழியிழந்தது(அப்புறம் எங்கேயிருந்து கிளிகள் பேசிக்கொள்வது)எப்படி???
நன்றி Chitra!
கவிதைக்கு நன்றி seemangani!அழகா எழுதி இருக்கிங்க.
சரியா சொல்லி இருக்கிங்க ஜெனோ! (பாவம்தான், கொஞ்சம்(கொஞ்சி மகிழ) கூட ப்ரைவேசி இல்லாமல் தவிக்கிறதோ இக்கிளிகள்:)
நல்லா இருக்கு ரகு!
நன்றி பனித்துளி சங்கர்!
DREAMER, காதலில்தானே மெளனம்கூட கவிதையாகுகிறது! அழகான கவிதை!!
மிக்க நன்றி!!!
நன்றி சூர்யா!
என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்து விட்டு, உங்கள் தளம் வந்தேன். உங்கள் ஓவியங்கள் அசர வைக்கின்றன. நானும் கொஞ்சம் வரைவேன். பென்சில் ட்ராயிங் மட்டுமே. உங்கள் அழகான படத்துக்கு DREAMER ன்
கவிதையும் அழகு. இனி தொடர்கிறேன்.
படம் அழகோ அழகு..
ஒரு மரக் கிளையில்
ஒன்றாய் நாம் இருப்போமென
பிறந்த போது தெரிந்திருக்கவில்லை..
என் எண்ணங்களில் வண்ணம்
உன்னால்தானடி வந்தது..
முகம் சாய்த்து நீ இருந்தால்
என் அகம் வாடிப் போகும்
நிமிர்ந்து பாரடி செல்லம்..
என்னிடம் சொல்லாமல்
வேறெவரிடம் சொல்லக் கூடும்
உன் காதலையும்..
கவலைகளையும்..
பகிர்தலில் உள்ள சுகம்
வேறெதில் உண்டு..
காலத்தின் பக்கங்களில்
பதிந்திருப்போம்
அழியாத வண்ணமாய்!
நீண்ட நாளுக்கு பின் சந்தித்ததால் நோ பேச்சு. ஒன்லி மவுனம்.
மிக்க நன்றி அம்பிகா!
அருமையா இருக்கு ரிஷபன்!
//பகிர்தலில் உள்ள சுகம்
வேறெதில் உண்டு..//இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நன்றி!
//நீண்ட நாளுக்கு பின் சந்தித்ததால் நோ பேச்சு. ஒன்லி மவுனம்//...கரெக்டு;-)
நன்றி ஜெய்லானி!
//காதல் கிளிகள் என்றார் என்னவர். அதையும் நானே வரைந்துக்கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, அப்படி அவர்களுக்காக வரையப்பட்டதுதான் நீங்கள் பார்க்கும் இந்த ஓவியம்.//
ரொம்ப பிரமாதமா இருக்கே ப்ரியா... பெரிய ஓவியர் தான் நீங்க...
//வழக்கம்போல் இதுவும் ஆயில் பெயின்டிங்குதான். மிக சுலபமாக இருந்ததினால் வரைவதற்கு வெறும் இரண்டு மணி நேரங்கள்தான் ஆனது. இன்றும் அந்த நண்பரின் வீட்டு வரவேற்பரையில் இந்த கிளிகள் பேசிக்கொண்டிருக்கிறது.//
2 மணி நேரத்தில் ஒரு அழகான உயிரோட்டமுள்ள ஓவியம் வரைந்த உங்களுக்கு பாராட்டுக்கள்...
//இந்த காதல்கிளிகள் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?//
கிளி 1 : ஏய்.... உன்ன விட நான் தான் அழகு...
கிளி 2 : நீ தான் ரொம்ப அழகுன்னு நீயே சொல்ல கூடாது... நான் சொல்லணும்...
கிளி 1 : அப்படின்னா நீயே சொல்லு... நான் அழகுன்னு...
கிளி 2 : இதோ கேட்டுக்கோ .... நான் தான் அழகு... அழகு... அழகு.... போதுமா...
கிளி 1 : !!!?????
R.Gopi.....
உங்க பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!
//கிளி 2 : இதோ கேட்டுக்கோ .... நான் தான் அழகு... அழகு... அழகு.... போதுமா...//அப்போ நிச்சயம் இது பெண்கிளிதான் !
//கிளி 1 : !!!?????//.......;-)
அழகான ஓவியம். காதல் கிளிகள் இரண்டும் உங்கள் கை வண்ணத்தில் மிக மிக அழகு ப்ரியா....
நன்றி ஜெயா!
ஒவிய திறமையும் அபாரம்..
நன்றி வினோத்கெளதம்!
எப்படிங்க இரண்டு மணி நேரத்தில்?? சூப்பர்! கிளிகள், அதன் பின்னால் தண்ணீரின் நிறம் சான்ஸே இல்லை.
ஆண் கிளி:
"நம்மை வண்ணங்களாய் தீட்டிய தூரிகைகளின்
காதல் தான் நம்மையும் காதலாய் தீட்டியுள்ளது"
பெண் கிளி:
"உன்னை தீட்டிய தூரிகை என்னை தீண்டிய போது
தான் என் பெண்மைக்கு நாணத்தின் வண்ணம் வந்தது"
வாவ் அசத்தல்! மிக்க நன்றி அப்பு சிவா.
kiligal
pesum varthigal
enna thiriuma
mounam...
athivida airam kavithai
pesum kongal..
alagana oviyam..
nan oru ambanaiyaga erunthal enta oviyathai neengal keekum thogiku vangi erupen..
oviyam migavum pidikum
nandri
u r my one of the greatest artist.
valga valamudan.
ஓவியமே பேசுவதால் கிளிகள் இரண்டும் மௌன விரதத்தில்
பிரியா ஓவியம் அற்புதம்
மிக்க நன்றி சூரியா!
அப்படியா சரவணன் சொல்லுறிங்க!
மிக்க நன்றி!
பார்த்துகொண்டெ இருந்தால் எப்படி கண்ணா வா இருவரும் சிரகடித்து பரந்து இந்த உலகை மேலும் அழகாகக்குவொம்.............
g.aruljothiKarikalan ம்ம்... நல்லா இருக்குங்க, நன்றி!
என்ன காதல் கிளிகள் என்றால் கொஞ்சி கொண்டிதிருக்க வேண்டுமே...இது ஒன்றை ஒன்று முறைத்து கொண்டிருக்குதே ...நான் சொல்வது சரி தானே ....
Maybe,காதல் கிளிகளுக்குள் ஊடல்:)நன்றி Murugan!
அற்புதமான ஓவியம்!!
உங்க ப்ளாக்கே ஒரு கவிதை மாதிரி அழகா இருக்கு ப்ரியா!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி maha!
Post a Comment