Subscribe:

Pages

Monday, February 8, 2010

வாழ்க்கை சுவாரஸியமாக இருந்திட.......

மெடிகல் ஸ்டடிஸ் சொல்வது இதைதானே...... நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தியானமோ உடற்பயிற்சிகளோ அவசியமில்லை... காதல் நிறைந்த ஆரோக்கியமான உறவு இருந்தாலே போதும்....நீண்ட நாள் இளமையோடு வாழலாம்!


நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்களால் கூட வாழ்க்கையை சுவாரஸியமானதாக‌ மாற்றிவிட முடியும். சோ, சில ரொமான்டிக் டிப்ஸ்..... நான் கண்டதும் கேட்டதுமாக.....(அனுபவங்களாகவும்)! • காதலுடன் உறவாடுவதில் பூக்களுக்குதானே முதலிடம். அதிலும் காதல் சின்னமான அந்த ஒற்றை சிகப்பு ரோஜா... இது ஒன்றே போதுமே I Love You என்று சொல்லாம‌ல் சொல்ல.

 • ஒரு டசன் ரோஜா பூக்கள்...... அதில் 11 சிகப்பு ரோஜாக்களுடன், ஒரே ஒரு வெள்ளை ரோஜாவையும் சேர்த்து "In every bunch there's one who stands out - and you are that one." என்று எழுதிக்கொடுக்கலாம்.

 • ரோஜாக்களை விடுத்து மற்ற பூக்களினாலும் காதலை சொல்லலாம். Stevie Wonders பாடலைப் போல் சூரியகாந்தி பூங்கொத்துடன் "You are the sunshine of my life” என்று எழுதிக்கொடுக்கலாம்.

 • Tulips பூக்களுடன் "I've got two-lips waiting for you!" ....இப்படி எழுதி உங்க ஆசையை தெரிவிக்கலாம்.

 • காரணங்கள் ஏதுமின்றிக்கூட‌ பூக்களை ப‌ரிச்சளிக்கலாம் (well, the reason is love).

 • பொதுவாக எல்லோருமே கொடுக்க விரும்பும் பரிசு வாட்சாகத்தான் இருக்கும். சாதாரணமாக தெரியும் ப‌ரிசுடன் "I'll always have time for you."... என்று எழுதினால், உங்கள் துணைக்காக‌வே உங்களது நேரம் என்பதை அழ‌காக வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்!

 • உங்கள் துணை விரும்பிப்படிக்கும் நாவலில் "The story is great but our own love story is the best" என்று எழுதிவைத்து அசத்துங்கள்! (எச்சரிக்கை: அது ரொமான்ஸ் நாவல்தானா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்)

 • உங்கள் பிலவ்டை நீங்கள் விரும்பும் "101 Reasons Why You're the Greatest" லிஸ்டு தயார் செய்து ஒவ்வொரு காரணத்தையும் தனித்தனி தாள்களில் எழுதி அழகான ஃபேன்ஸி கிஃப்டு பாக்ஸில் வைத்து கொடுங்கள். நம்மை பற்றி இத்தனை விஷயம் தெரிந்துள்ளதே என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்! (1001 reasons கூட எழுதலாம்...பொறுமை இருந்தால்)

 • இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து ஃபோட்டோ ஆல்பம் செய்து, சில காலிப் பக்கங்களையும் விட்டு “to be continued” என்று எழுதிக் கொடுக்கலாம்.

 • உங்கள் பிலவ்டுக்கு பிடித்த நடிகர்/ ந‌டிகை நடித்த படத்தின் சிடியோ அல்லது பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தையோ வாங்கிவந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.

 • முதல்முதலாக சந்தித்த நாளை Anniversary டேவாக கொண்டாடி, அன்று உங்களுக்குள் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழலாம்.

 • உங்களுக்குள் நடந்த சில இனிமையான த‌ருணங்களின் புகைப்படங்களுடன், கொடுத்து கொண்ட பரிசுகளையும் புகைப்படங்களாக்கி Scrap book உருவாக்கலாம்.

 • உங்கள் பிலவ்டை நினைத்து எழுதிய கவிதைகளை தொகுத்து புத்தகமாக்கியோ அல்லது ஆடியோ கேசட்டில் நீங்களே பதிவு செய்தோ பரிசாகக் கொடுக்கலாம்/அவர்களுக்கு பிடித்த மெண்மையான வார்த்தைகள் கொண்ட‌ காதல் பாடல்களையும் ரெக்கார்ட் செய்தும் கொடுக்கலாம்.

 • காதல் உணர்வை தூண்டும் விதமாக எத்தனையோ பரிசுகளை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. வானவில்லை காண்பது, மழையினை ரசிப்பது, நிலவொளி வெளிச்சத்தில் கடற்கரை மணலில் நடந்துச்செல்வது.... இப்படி ரம்மியமான சூழ் நிலைகளை இருவரும் சேர்ந்து ரசித்துப் பாருங்கள்.

 • மின்சாரமற்ற இரவினைக்கூட மெழுகுவத்தியின் வெளிச்சம் ரம்மியமானதாக மாற்றிவிடும். ஒருமுறையாவது அந்த ரம்மியமான வெளிச்சத்தில் எதிரெதிரே அமர்ந்து கண்ணோடு கண் நோக்கி பேசிப்பாருங்கள்... இதைவிட ரசனையான நிமிடங்கள் இருக்க முடியாது........ "The eyes are the window to the soul".

 • எப்பொழுதும் புன்னகைத்துப் பேசுங்கள்.... முடிந்தால் தனிமையில் நீண்ட தூரம் கைக்கோர்த்து நடந்துச்செல்லுங்கள்... நம் துனையின் விரல்களோடு விரல்கள் சேர்த்துப் பிடித்து கொண்டாலே போதும், “நான் இருக்கிறேன் உனக்கு” என்று சொல்லாமல் சொல்லும் ஒர் உணர்வை ஏற்படுத்தும்.

28 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர் பதிவு!!

ஷங்கர்.. said...

சூப்பர்..:))
ஆனா நான் டாவடிச்ச பொண்ணு செம பீட்டர் ..

sending roses and your silly dreams
really just a waste of time..

ன்னு ஜாக்சன் பாட்ட சொல்லிட்டு போய்ட்டா மிஸ்..:((
---------
பதினாலாம் தேதி எப்பவரும்னு வழிமேல விழி வைத்து காத்திட்டிருக்கீங்க போல..

வாழ்த்துக்கள். தலைவருக்கும் உங்களுக்கும்.:)

அண்ணாமலையான் said...

நல்ல வேள எனக்கு இதுக்குலாம் அவசியமே இல்லாம போயிட்டு

அன்புடன் அருணா said...

பூப்பதிவுக்குப் பூங்கொத்து!

நிலாரசிகன் said...

எப்போதும் உன்னிடம்
பேசிக்கொண்டிருக்க பிடிக்கும்
அதைவிட அதிகம் பிடிக்கும்
பேசாமல் உன்
பொன்முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பது

இது என் ஸ்டைல் :)

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

suvaiyaana suvai said...

super!!

DREAMER said...

nice post...

Chitra said...

enjoy ......... Priya! Happy Valentine's Day!

seemangani said...

Tulips பூக்களுடன் "I've got two-lips waiting for you!" ....இப்படி எழுதி உங்க ஆசையை தெரிவிக்கலாம். இது சூப்பர்...
காதல் காதல் காதல்

இனியாள் said...

bayangara romantic tips priya..... nice.

ர‌கு said...

முடிய‌ல‌‌! அங்க‌ ப‌னி ம‌ழை பொழியுதா, ரொமான்ஸ் ம‌ழை பொழியுதா? ரொமான்ஸுக்கு ஒரு காலேஜ் ஆர‌ம்பிச்சா நீங்க‌தாங்க‌ ப்ரின்ஸிப‌ல்...:)

//ஒரு டசன் ரோஜா பூக்கள்...... அதில் 11 சிகப்பு ரோஜாக்களுடன், ஒரே ஒரு வெள்ளை ரோஜாவையும் சேர்த்து "In every bunch there's one who stands out - and you are that one." என்று எழுதிக்கொடுக்கலாம்//

ம‌த்த‌ 11ம் யாரு(க்கு)ன்னு கேட்டா என்ன‌ங்க‌ சொல்ற‌து?!

Jaleela said...

//ஒரு டசன் ரோஜா பூக்கள்...... அதில் 11 சிகப்பு ரோஜாக்களுடன், ஒரே ஒரு வெள்ளை ரோஜாவையும் சேர்த்து "In every bunch there's one who stands out - and you are that one." என்று எழுதிக்கொடுக்கலாம்//

நல்ல பகிர்வு. அருமையாக இருக்கு பிரியா

Priya said...

Mrs.Menagasathia......
மிக்க நன்றி!

அண்ணாமலையான்......
//நல்ல வேள எனக்கு இதுக்குலாம் அவசியமே இல்லாம போயிட்டு//......ஏன் ஏன் ஏன்?

அன்புடன் அருணா......
பூங்கொத்திற்கு நன்றிகள் பல‌!

நிலாரசிகன்......
//இது என் ஸ்டைல் :)//.......
நல்லா இருக்கு உங்க ஸ்டைல்.(ஆனா எவ்வளவு நேரம்தான் பாத்துக்கிட்டே இருப்பீங்க)

Priya said...

ஷங்கர்.......
//ஆனா நான் டாவடிச்ச பொண்ணு செம பீட்டர் ..

sending roses and your silly dreams
really just a waste of time..

ன்னு ஜாக்சன் பாட்ட சொல்லிட்டு போய்ட்டா மிஸ்..:(( //.........
விடுங்க... ரசனை இல்லாத பெண் போலிருக்கு!(இருந்தாலும் எத்தனை நாள்தான் வெறும் பூக்களையே கொடுத்துக்கொண்டிருப்பதுன்னு நினைச்சிருப்பாங்களோ:))

ஷங்கர்,என்னால உங்க blogக சுலபமா திறக்க முடியல,(உங்க blog மட்டும்தான் அப்படி செய்யுது) ரொம்ப நேரம் ஆகுது, ஏன்னு தெரியல. மூணு நாளா கமெண்ட் போட ட்ரை பண்ணுறன், எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கான்னு தெரியல.

Priya said...

ராமலக்ஷ்மி......
suvaiyaana suvai.....
DREAMER.......
Chitra.......
seemangani.......
இனியாள்......
Jaleela......

தேங்க் யூ ப்ரென்ட்ஸ்!!!

ஷங்கர்.. said...

அஹா அப்படியா?? இப்போதுமா?? லின்க் மூலமாக இல்லாமல் palaapattarai.blogspot.com திறந்து பாருங்கள். பிரச்சனைகள் இருப்பின் palaapattarai@gmail.com இல் மின் அஞ்சல் செய்யுங்கள் சகோதரி.. (பிரான்ஸ் தேசத்தில் தெரியவில்லை என்றால் மிகுந்த ஆபத்தல்லவா..:( )

Priya said...

ர‌கு.......
//ரொமான்ஸுக்கு ஒரு காலேஜ் ஆர‌ம்பிச்சா நீங்க‌தாங்க‌ ப்ரின்ஸிப‌ல்...:)//......டீச்சரா இருக்க எனக்கு ப்ரின்ஸிபலா promotion கிடைச்சா சந்தோஷமே;-)

//ம‌த்த‌ 11ம் யாரு(க்கு)ன்னு கேட்டா என்ன‌ங்க‌ சொல்ற‌து?!//.......
ரூம்போட்டு இப்படியெல்லாம் யோசிப்பிங்களா:-)?

பேநா மூடி said...

எப்போங்க காலேஜ் ஓபன்??????

ஜெயா said...

வாழ்க்கை சுவாரஸியமாக இருக்க நல்ல ரொமன்ஸ் டிப்ஸ் .. இளையோருக்கு ரொம்பவே பயன் உள்ள பதிவு, ப்ரியா போட்டோவில் இருப்பது எனது தங்கையின் பொண்ணு.

Priya said...

ஷங்கர்.....
Direct linkல உங்க blog திறக்க முடியுது, இருந்தாலும் மத்த ப்ளாஸவிட கொஞ்சம் லேட்டாதான் ஆகுது.
பதில தந்தமைக்கு நன்றி!

பேநா மூடி....
//எப்போங்க காலேஜ் ஓபன்??????//........
உங்க நேர்மை சாரி உங்க ஆர்வம் எனக்கு பிடிச்சிருக்கு:-)

நன்றி ஜெயா
So cute உங்க தங்கை பொன்னு!

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி

தமிழன்-கறுப்பி... said...

//சின்ன சின்ன செயல்களால் கூட வாழ்க்கையை சுவாரஸியமானதாக‌ மாற்றிவிட முடியும்//

செய்துடுவோம் :)

Priya said...

தமிழன்-கறுப்பி...
மிக்க நன்றி!

revathi said...

அடடடா ! romance மேத்துக்கு நல்ல நல்ல ஐடியாவா கொடுக்கிரிங்களே!..
very nice..

Priya said...

நன்றி revathi!

ரிஷபன் said...

மின்சாரமற்ற இரவினைக்கூட மெழுகுவத்தியின் வெளிச்சம் ரம்மியமானதாக மாற்றிவிடும். ஒருமுறையாவது அந்த ரம்மியமான வெளிச்சத்தில் எதிரெதிரே அமர்ந்து கண்ணோடு கண் நோக்கி பேசிப்பாருங்கள்... இதைவிட ரசனையான நிமிடங்கள் இருக்க முடியாது........ "The eyes are the window to the soul".

எப்பொழுதும் புன்னகைத்துப் பேசுங்கள்.... முடிந்தால் தனிமையில் நீண்ட தூரம் கைக்கோர்த்து நடந்துச்செல்லுங்கள்... நம் துணையின் விரல்களோடு விரல்கள் சேர்த்துப் பிடித்து கொண்டாலே போதும், “நான் இருக்கிறேன் உனக்கு” என்று சொல்லாமல் சொல்லும் ஒர் உணர்வை ஏற்படுத்தும்.

அருமை..

Priya said...

நன்றி ரிஷபன்!

Post a Comment