எனக்கு இதுதான் பிடிக்கும்… இது என்னுடையது… என்றிருந்தேனே.
என் பொருட்களை நான் உபயோகிப்பதை வேறு யார் தொட்டாலும் பிடிக்காதே… அத்தனை பிடிவாதமும் எங்கேயேடா சென்றது?
விவரம் அறிய ஆரம்பித்த வயதிலிருந்தே நான்… எனது… என்றிருந்த வார்த்தைகள் இன்று நாம் என்று மாறிப்போனதேனடா?
என் சோப்பில் குளித்துவிட்டு வந்த தம்பியுடன் சண்டைப் போட்டேனே..... இன்றோ எனது உனது என்றில்லாமல் ஒரே சோப்பாக மாறிப்போனதேனடா?
வம்பு சண்டைப் பிடிக்கவே என் துண்டோடு குளியலறையில் இருந்து வெளியே வரும் தம்பியை காத்திருந்து கோபித்துக்கொள்வேனே.....
இன்று குளித்துவிட்டு வரும் உன்னிடம் என் துண்டினை எடுத்துக்கொடுக்கிறேனே..... எப்படியடா?
பாதி கடித்துதரும் மிட்டாயினை என் தங்கையிடமிருந்தே என்றாலும் வாங்கிக்கொள்ள மறுப்பேனே......
இன்றோ நீ சாப்பிடுவதை தயக்கம் சிறிதுமின்றி சுவைத்து சாப்பிடுவது பிடித்திருக்கிறதே..... ஏனடா?
எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு… இதுதான் வேண்டும்… என்று வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆடைதேர்வில்தான் எத்தனை எத்தனை பிடிவாதம் அம்மாவிடம்!
இன்று உனக்கு பிடிச்சிருக்கா என்று கேட்டு உன் விருப்பதையே முன் நிறுத்தி என் ஆடைகளை தேர்வு செய்கின்றேனே...... எங்கே சென்றதடா என் பிடிவாதம்?
மனதிலோ உடலிலோ நான் சந்தித்த சின்ன சின்ன மாற்றங்களையும் வலிகளையும் மட்டுமில்லாமல் எதையும் பகிர்ந்துக் கொள்ள உற்ற தோழியான என் அம்மாவைதானே நாடுவேன்...... அவர்களிடமே சொல்லத் தயங்கி இன்று என் மனம் முதலில் உன்னைதானே தேடுகிறதே.... ஏனடா?
என் வாழ்வின் முதல்ஆண்... என்னை உயிராய் நேசிப்பவர் என் அப்பாதான்... அவரை போல் வேறொரு ஆண்மகன் என்னை கவரமுடியுமா என்பேனே..... இன்றோ உன் நேசத்தால் என் உயிராகி... அவரை வென்று என்னை முழுவதுமாய் எப்படியடா கவர்ந்தாய்?
எப்படியடா இதெல்லாம்...!
இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் கொண்டேனடா......உன்னால்!
நீ என்பது வெறும் நீ என்றில்லாமல்… இவை அத்தனையும் இங்கு நானே நீயாகிப் போனதால் வந்த மாற்றங்கள் ஆனதோ...!
21 comments:
இன்று போல காதலில் சிறந்து என்றும் வாழ்க. படமும் ரொம்ப பொருத்தம். உங்கள் பதிவும் அருமை.
ஒன்றும் ஒன்றும்
ஒன்றாகட்டும்
ப்ரியத்தின்
விழுதுகளோடு
நன்றாகி நலம்
வாழட்டும்..:))
நன்றாக உள்ளது
பதிவு அருமை!!
கொஞ்சம் கொஞ்சம் எங்கேயோ படித்த மாதிரி இருக்கு பிரியா!நல்லாருக்கு!
இந்த அன்பு என்றும் தொடர்ந்து நலமே வாழ வாழ்த்துக்கள்***
//இதுதான் வேண்டும்…
எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு…//
எனக்கும் பிடிச்சிருக்கு....பிடிச்சிருக்கு....பிடிச்சிருக்கு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்... நல்லா இருக்கு
உங்க வலைப்பூவில் மட்டும் ரெண்டு ரெண்டு தடவ பின்னூட்ட வேண்டியிருக்கு , வேறென்ன காதல் மயக்கத்துல எழுத்துக்களெல்லாம் முதல் தடவ மயங்கி ரெண்டாம் முறையே முழிக்கிறது ;-)
நடத்துங்க தோழி !
வாழ்த்துக்கள்
;)
ரொமான்ஸ் துள்ளுது இந்த பதிவில், இன்று போலவே என்றும் வாழ வாழ்த்துக்கள்:))
படத்தின் கீழே உங்க பேரை பாத்ததும்தான் தெரிஞ்சுது, இதை நீங்கதான் வரைஞ்சிருக்கீங்கன்னு, எதிர்பாக்கவேயில்ல, அசத்தியிருக்கீங்க, வெரி நைஸ்:))
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கு நன்றி!
//அன்புடன் அருணா said... கொஞ்சம் கொஞ்சம் எங்கேயோ படித்த மாதிரி இருக்கு பிரியா!//....
ஆஹா அப்படியா!
இதில் எழுதிய அனைத்தும் திருமணத்திற்கு முன்னும் பின்னுமாக என்னுள் நான் கண்ட மாற்றங்கள்!
//ஜெனோவா said... உங்க வலைப்பூவில் மட்டும் ரெண்டு ரெண்டு தடவ பின்னூட்ட வேண்டியிருக்கு , வேறென்ன காதல் மயக்கத்துல எழுத்துக்களெல்லாம் முதல் தடவ மயங்கி ரெண்டாம் முறையே முழிக்கிறது ;-)//...... ஹஹஹா!
//ரகு said... படத்தின் கீழே உங்க பேரை பாத்ததும்தான் தெரிஞ்சுது, இதை நீங்கதான் வரைஞ்சிருக்கீங்கன்னு, எதிர்பாக்கவேயில்ல//.......
இந்த படத்தை நான் கல்லூரிப் படிக்குபோது வரைந்தேன். இப்போதான் அதன் அர்த்தம் முழுதாக புரிந்தது, இதில் எழுதியவைக்கு இந்த படம் பொருந்தும் என்று நினைத்தேன்!
Hmmm.. It's a pure girl thing :)
superb..
ஒரு மகத்தான அறிமுகமாகக் கருதுகிறேன்...( நன்றி: ஜெர்ரி மாமா & வலைச்சரம்)
ஓவியங்கள் அற்புதம்...
உங்கள் கைகளை இன்ஷ்யூர் பல லட்சங்களுக்கு இன்ஷ்யூர் செய்துகொள்ளலாமே... தூரிகையையும் பேனாவையும் திறம்பட இயக்கும் வல்லமை கொண்டதல்லவா.... Great!!
ஆரம்பத்தில் B&Wஆக தெரிந்த உங்கள் ஓவியம், பதிவை படித்துமுடித்து மறுபடியும் ஸக்ரால் செய்து பார்த்தால் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கிறது.
நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
பிரபு . எம்.....
மிக்க நன்றி!
நன்றி ஹரீஷ்!
இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானி!
ஓவியங்கள் அற்புதம்
நன்றி நிலாரசிகன்!
மிகவும் ரசித்துப் படித்தேன். ஓவியம் சொல்ல வார்த்தைகளில்லை. creative and smart.
Post a Comment