Subscribe:

Pages

Thursday, December 24, 2009

ஸ்பெஷ‌ல் கேக்!!!

                ல்லோருமே ஃபெஸ்டிவிட்டி மூட்ல இருப்பீங்கன்னு நினைகிறேன். இதோ நாளை கிறிஸ்துமஸ், தொடர்ந்து ஒரு வாரத்தில் புதுவருடம் என்று ஜாலிதான்! இவற்றை கொண்டாடிட உலகெங்கு பலவிதமான ஏற்பாடுகள்....  சந்தோஷத்துடன் புத்தாடைகள் வாங்குவதில் ஆரம்பித்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிப்ட்ஸ் வாங்குவதும், ஸ்டார், சீரியல் லைட்ஸ்...எல்லாம் கொண்டு வீட்டை அலங்கரிப்பதும், last but not least... என்பதை போல கடைசியில் விதவிதமான சாப்பாட்டு வகைகளோடு இனிதே முடிவுக்கு வருகிறது.... இந்த இனிய விழாக்கள்!!!

நானும் என் ப‌ங்குக்கு எல்லாம் முடித்து, இறுதியாக‌ இன்று கிறிஸ்தும‌ஸ் ஸ்பெஷ‌லாக‌ ர‌வை கேக்கும் செய்தாகிவிட்ட‌து. சுல‌ப‌மான‌ அந்த‌ குறிப்பை கீழே கொடுத்துள்ளேன், ட்ரை பண்ணிபாருங்க‌!


தேவை :

ரவை - 500g
சர்க்கரை - 500g
வெண்ணெய் - 250g
முட்டை  - 8 
வெண்ணிலா(பவுடராக) - 8g
 பேக்கிங் சோடா - 10g
முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்               
ரம் - 15cl



செய்முறை :

  • முந்திரி திராட்சை வெண்ணிலா சேர்த்து ரம்மில் ஒரு ஐந்து நாட்கள் முன்பே ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

  • முதலில் ரவையை உருக்கிய வெண்ணையில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் முன்பே ஊற வைத்துவிட‌வும்.


  • முட்டைகளை மஞ்சள் தனியாகவும் வெள்ளை தனியாகவும் பிரித்துக்கொண்டு, வெள்ளையை மட்டும் நன்றாக நுரைத்துவரும் வரை அடித்துக்கொள்ளவும்.
  • மஞ்சள் முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு, அவற்றுடன் சர்க்கரை, வெண்ணெய், ஊறவைத்த முந்திரி திராட்சை ரம், மற்றும் வெண்ணிலா,  பேக்கிங் சோடா, தட்டிய ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  • இவற்றுடன் ரவை கொஞ்சம் வெள்ளை முட்டை கொஞ்சம், என்று இரண்டையும் மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை ஓவனில் சரியாக 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து bake செய்து எடுத்தால் சூப்பரா ஒரு ரவை கேக் ரெடி!(நிச்சயமா இந்த கேக்கில் ரம் வாசனை வராது)!!!



கிறிஸ்துமஸ் கொண்டாடும் அணைவருக்கும்
என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!

23 comments:

malarvizhi said...

superb clicks and nice receipe

சாருஸ்ரீராஜ் said...

very nice . happy New year

அன்புடன் அருணா said...

அட புதுசா இருக்கே!

அண்ணாமலையான் said...

இதே மாதிரி ஒரு கேக் வாங்கி சாப்டுட்டு நானும் சொல்றேன்... ”எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” வாங்க சேந்து கொண்டாடுவோம்....

Paleo God said...

என்ன சொல்லுங்க இந்த குறிப்பெல்லாம் படிக்கறத விட அத அப்படியே சாப்பிடறதுல இருக்கற ருசி தனிதான்...(நோவாம நோம்பு கும்புடறது ::)) ) ஹாப்பி XMAS.

Raghu said...

சிம்பிளா, ப‌ட‌ங்க‌ளோட‌ அழகா சொல்லிகுடுத்துட்டீங்க‌, அப்ப‌டியே பார்ச‌ல் ப‌ண்ணி கொரிய‌ர்ல‌ அனுப்பிடுங்க‌

என்ன‌து செஞ்சு பாத்து சொல்ல‌வா? அ..நெக்ஸ்ட் மீட் ப‌ண்றேன்!

Anonymous said...

priya ton gâteau super bon!

Ryan xavier

Priya said...

malarvizhi......
Thanks a lot!

sarusriraj.......
Thanks & wish u the same!

அன்புடன் அருணா........
ரொம்ப நன்றி!

அண்ணாமலையான்......
சமையலறை பக்கமே போகறதில்லைன்னு புரியுது, இதுல கேக்கையா ட்ரை பன்னுவீங்க‌.. ரொம்ப நன்றி!

பலா பட்டறை......
சரிதான், சாப்பிடறதுல இருக்க ருசி வேறு எதில இருக்கு....Happy Xmas!

குறும்ப‌ன்.........
ஓகே டன், கொரியர் கொஞ்சம் லேட்டாகும், வெயிட் பன்னுங்க‌!

//என்ன‌து செஞ்சு பாத்து சொல்ல‌வா? அ..நெக்ஸ்ட் மீட் ப‌ண்றேன்!//....ட்ரை பன்னுறதுன்னா எஸ்கேப்பு, சாப்பிடனும்னா ம்ம்...முதல‌:-)

Xavi........
//priya ton gâteau super bon//...Merci Mon coeur!
(இவரு டேஸ்ட் பன்னிட்டு சொல்லிட்டாரு)

suvaiyaana suvai said...

looks nice Happy new year!!!

Priya said...

suvaiyaana suvai........
Thank you & Wish you the same!!!

திவ்யாஹரி said...
This comment has been removed by the author.
Priya said...

ஹாய் திவ்யா, ரொம்ப நன்றி... நான் மெயில் அனுப்புறேன்!

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியா

ரவை கேக் .,புகைப்படம் .,மிஸ் ப்லாகர் என்று அசத்தலா இருக்கு உங்க வலைத்தளம்

welldone மா

:-)

Priya said...

thenammailakshmanan.........
நன்றி, உங்களுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

அடிக்கடி கேக் செய்யும் வழக்கம் உண்டு. இந்த செய்முறைக்கு நன்றி!

Priya said...

ராமலக்ஷ்மி........
நன்றி!செய்து பாருங்க,நல்லாயிருக்கும்!

Jaleela Kamal said...

ரவை கேக் ரொம்ப அருமையா இருக்கு பிரியா. பார்த்ததும் உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு

Priya said...

Jaleela.....
மிக்க நன்றி!

Anonymous said...

இன்று வரை எந்த கருத்துக்களும் சொன்னதில்லை. இவ்வளவு பேர் நல்லாயிருக்கிறது என்று சொல்லுவதற்கு மேல் நாம் என்ன சொல்வது என்று நினைப்பேன். அதை விட ஃபோலோ அப் பண்ணுவது அடிக்டிவ் ஆகுமோ என்ற பயம் வேறு. எனிவே, படங்களை பெரிதாக போட்டால் நன்றாக இருக்கும். ஃபுட் புளொக்ஸ் அளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது உங்கள் படங்கள். வெல் டன்

Priya said...

அனாமிகா துவாரகன்.....
//அதை விட ஃபோலோ அப் பண்ணுவது அடிக்டிவ் ஆகுமோ என்ற பயம் வேறு//...இதுக்கு ஏன் பயம், இதன் மூலம் நமக்கெல்லாம் ஒரு நட்புவட்டம் கிடைக்கிறதே என்று சந்தோஷம் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

r.v.saravanan said...

என் வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட்டு பார்த்து சொல்கிறேன் நன்றி

Priya said...

செய்து சாப்பிட்டதும் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க சரவணன்.

culinary tours worldwide said...

dear priya vv nice ur recipes

Post a Comment